arun jaitley - 2026
Arun _jaitley

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன இது குறித்து அருண் ஜெட்லி குறிப்பிட்டபோது, பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி இலிருந்து வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்ஜி.எஸ்.டி.,யில் இருந்து பல பொருட்களுக்கு விலக்கு:

டிவி, டயர், சினிமா டிக்கெட், பவர் பேங்குகள், லித்தியம் அயர்ன் பேட்டரி, டிஜிட்டல் கேமராக்கள், வீடியோ கேமராக்கள், வீடியோ கேம்கள், விளையாட்டு சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி வாகனங்களுக்கான பாகங்கள் 28 லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

மார்பிள் ரப்பிள் மீதான ஜிஎஸ்டி 18 லிருந்து 5 சதவீத மாக குறைக்கப்பட்டுகிறது.

ஊன்றுகோல், ஹாலோ பிளாக்குகள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத் திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது.

இசை புத்தகங்கள் மீதான 12 சதவீத வரி ரத்தாகியுள்ளது.

சமைக்கப் படாத அல்லது தண்ணீரில் கொதிக்க வைக்கப்பட்ட காய்கறிகள், உறைந்த காய்கறிகள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

புதுப்பிக்கத்தக்க எரி சக்தி சாதனங்கள் மற்றும் அதன் உற்பத்தி பொருட் கள் மீது 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட் கட்டணங்கள் மீதான ஜிஎஸ்டி 18 லிருந்து 12 சதவீதமாகவும், ரூ.100க்கு மேல் உள்ள கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 28 லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான 3ம் நபர் காப்பீடு மீதான ஜிஎஸ்டி 18 லிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

சேமிப்பு கணக்கு மற்றும் ஜன்தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களிடம் வங்கிகள் வசூலிக்கும் ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும்.

யாத்திரிகர்களுக்கான சிறப்பு விமானத்தில். பொருளாதார வகுப்பு டிக்கெட் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாகவும், பிசினஸ் வகுப்பு கட்டணம் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

பணக்காரர்கள் பயன்படுத்தும் ஏசி, டிஸ்வாஷர்கள் ஆகியவை 28 சதவீத பட்டியலில் நீடிக்கும். வரிக்குறைப்பு வரும் ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி கூறினார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending