
பாஜக., மாநில செயலர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கொடுத்த புகார்… எதிர்பாராத அதிரடியால் கதறும் ஸ்டாலின்!! அட மூல பத்திரம் எங்கேப்பா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
முரசொலி அலுவலகம் அமைந்த நிலம் பஞ்சமி நிலம் என்பது குறித்து தீர விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய பட்டியல் சமூக ஆணையத்திடம் பாஜக மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் கொடுத்த புகார் மனுவை கையில் எடுத்துள்ள தேசிய பட்டியல் சமூக ஆணையம், ஒரு வாரத்திற்குள் இது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் அறிவாலயம் ஆட்டம் கண்டுள்ளது. இதை அடுத்து, அரண்டுபோய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது அறைகூவலுக்கு பதிலளிக்காமல், ராமதாஸ் வாய் மூடி மவுனமானதாகவும், இந்நிலையில் ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் பாஜக., மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் மனு அளித்துள்ளார்.
ராமதாஸின் கூற்றை நம்பி, ஸ்ரீனிவாசன் அவருடைய நேரத்தை வீணடித்திருப்பதாகவும், இதற்குப் பதிலாக, அ.தி.மு.க. முன்னாள் தலைவி ஜெயலலிதாவால், பையனூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டால், ஏதாவது பலனாவது கிடைக்கும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
“பொய்மையை மூலதனமாக்கி அரசியல் வியாபாரம் நடத்தும் @drramadoss – கைப்பாவையாக செயல்படும் பாஜக மாநில செயலாளர் @profsrinivasan1:
பையனூர் பங்களாவுக்காக கையகப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்படும் பஞ்சமி நிலத்தை மீட்பார்களா?” – கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை. – என்று திமுக., அறிவாலயம் சார்பில் அதன் டிவிட்டர் பதிவில் இந்த அறிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கைக்கு, நெட்டிசன்கள் திமுகவை வறுத்தெடுக்க தொடங்கி உள்ளனர். இப்படி அறிக்கை விடுவதற்கு பதில், முரசொலி அலுவலகத்தின் கிரய பத்திரத்தை வெளியிடலாமே என்றும், உங்களுக்கு சொந்தமான நிலத்தின் மூல பத்திரம் உங்களிடம் தானே இருக்கும்; பின் ஏன் இந்த தயக்கம்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், இப்படி பக்கம் பக்கமாக அறிக்கை விட்டுக் கொண்டு அலறிக் கொண்டிருப்பதற்கு பதில், நிலத்தின் பத்திரத்தை வெளியிடலாமே என்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்த டிவிட்டர் பதிவுகள் சில…



