டேஸ்ட் பண்ணுங்க கோசுமல்லி கொழுக்கட்டை!

சற்றுமுன்
kosu kozhukkattai - 2026

கோசுமல்லி கொழுக்கட்டை

தேவையானவை:
மைதா – ஒரு கப்,
பாசிப்பருப்பு, கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை – தலா 4 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவில் உப்பு, எண்ணெய் விட்டு கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுக்கவும்.

இத்துடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து, சப்பாத்தி போல இட்டு, அதனுள் ஒரு டீஸ்பூன் அளவு பருப்பு – காய் கலவை வைத்து மூடி ஒட்டிவிடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.