ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவர் என்றும் பினாமி என்றும் கூறப்பட்ட வாசன் ஐ கேர் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் அருண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆக இருந்தவர் முருகையா. இவரின் மகன் அருண் முருகையா. இவர் ஏபிசி மருத்துவமனை, வாசன் மெடிக்கல்ஸ், வாசன் ஐ கேர் உள்ளிட்டவற்றின் முன்னாள் நிர்வாக இயக்குனராக இருந்தவர்.
இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் நெருங்கிய தொடர்பில் அருண் இருந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களுக்கு இடையில் சொத்து தொடர்பான பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அண்மைக் காலமாக அருண் வௌிநாடுகளில் மாதக் கணக்கில் இருந்து வந்த நிலையில் சென்னை வந்த அவர் தற்போது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப் படுகிறது. நிதி தொடர்பான பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.