சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் தினகரன் அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பழனிபாண்டியன், நடராஜன், மேலூர் சுப்பிரமணியன், வெள்ளத்துரை, கருணாகரன், அருளானந்தம், விவேகானந்தம் உட்பட தினகரன் அணியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தினகரன் அணியினர் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



