
காந்திபுரம் மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் செல்போனில் சீரியல் பார்த்தபடி வாகன ஓட்டி ஒருவர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகிவிட்ட நிலையில் அதனை மிஞ்சும் வகையில் கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாகன ஓட்டி ஒருவர் ஆபத்தை உணராமல் தனது செல்போனில் சீரியல் பார்த்து ரசித்தபடி இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கியுள்ளார்.
இதனை சக வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து தனது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று ஆபத்தை உணராமல் பயணம் மேற்கொள்வது அவருக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பேராபத்தை தரும் என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும்.
பைக்கில் இரண்டு பக்கமும் கண்ணாடி இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்கிறது! அதாவது ஓட்டுபவரின் கவனக்குறைவால் பின்னால் வரும் வாகனங்கள் குறித்த அறியாமை காரணமாக விபத்து ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறது. இப்படி சீரியல் மோகத்தில் தமிழகம் சிக்கி இருப்பது பெரும் ஆபத்து pic.twitter.com/4GHp9s9bFL
— Senkottai Sriram | செங்கோட்டை ஸ்ரீராம் (@SenkottaiSriram) July 31, 2021



