2020ஆம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
வெள்ளம் திரைப்படத்தில் நடித்த ஜெயசூர்யா சிறந்த நடிகருக்கான விருதையும், கப்பெல்லா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை அன்னாபென்னுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்தில் இல்லறப் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளைக் குறித்து பேசிய தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை கப்பெல்லா திரைப்படத்தை இயக்கிய முஸ்தப்பாவிற்கு வழங்கப்படுகிறது. சிறந்த வெகுஜன சினிமாவிற்கான விருது அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.