கனமழை காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி – கல்லூரிகள் விடுமுறை: தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர் பள்ளி-கல்லூரிகள் விடுமுறை: தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று (08.11.2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் விடுமுறை; தொடர் மழை காரணமாக இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
பள்ளிகள் விடுமுறை; தொடர் மழை காரணமாக தஞ்சை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு
இன்று விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
பள்ளிகள் விடுமுறை; தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை,நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு
இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை; தொடர் மழை காரணமாக அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, நாகை, திருப்பத்தூர், கரூர் மாவட்டங்களில்ல் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கடலூர்: தொடர் மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இன்று (08.11.2021) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆக்ய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப் பட்டுள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.