October 15, 2024, 4:42 AM
25.4 C
Chennai

இரட்டை குழந்தைகளின் வரவு: மகிழ்ச்சியை பகிர்ந்த பிரபல நடிகை!

Preethi jinda
Preethi jinda

பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார்.
பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா.

பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார்.

பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் குட்இனஃப் (Gene Goodenough) என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

தற்போது பிரீத்தி ஜிந்தாவிற்கு 46 வயதாகிறது. இந்நிலையில், அத்தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தில் சே படத்தில், ஷாருக் கானுடன் நடித்திருந்தவர் நடிகை ப்ரீத்தி சிந்தா. அந்தப் படத்தில் ப்ரீத்தி நாயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

அந்தப் படம் தமிழில் ‘உயிரே’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன் நீண்ட கால நண்பரான ஜீன் குட்இனஃப் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் திருமணம் செய்து கொண்டார்.

ALSO READ:  ஆன்லைன் ரம்மியால் மேலாளர் தற்கொலை: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

இந்நிலையில், அத்தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “நானும், எனது கணவரும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம். எங்களது இதயம் மகிழ்ச்சியில் நிரம்பியிருக்கிறது. எங்களது குடும்பத்திற்கு ஜெய் ஜிந்தா குட்இனஃப் மற்றும் ஜியா ஜிந்தா குட்இனஃப் ஆகியோர் புது வரவாக வந்துள்ளனர்.

இந்தப் புது வரவால் எங்களது வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட டாக்டர்கள் மற்றும் வாடகைத்தாய்க்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/reel/CV1_uBiAJKI/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CWZ93DyrYZU/?utm_source=ig_web_copy_link
author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் அக்.15- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தில்… வெளுத்து வாங்கும் கனமழை! தத்தளிக்கும் தலைநகரம்!

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்யும் என்பதால்,

தபால் துறையில் 344 பணியிடங்கள்; வேலைவாய்ப்பு தவறவிட்டுடாதீங்க!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31.

10,12ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து

பஞ்சாங்கம் அக்.14 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...