To Read it in other Indian languages…

Home சற்றுமுன் கேளை ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை! வீடியோ!

கேளை ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை! வீடியோ!

வால்பாறை சாலையில் உலாவந்த சிறுத்தை ஒன்று கேளையாட்டை வேட்டையாடி அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை – ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டுமாடு மற்றும் அபூர்வ பறவையினங்கள் உள்ளன.

வால்பாறை பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வனத்தை விட்டு வெளியேறும் புலி மற்றும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து வேட்டையாடி வருகின்றன.

வனத்துறையினர் வால்பாறை பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைத்து வனவிலங்குகள் நடமாட்டம் கண்காணித்து பொதுமக்களுக்கு இரவில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு காரில் வால்பாறை சென்ற சுற்றுலா பயணிகள் கவர்க்கல் பகுதியில் சாலையில் சிறுத்தை ஒன்று இருப்பதை கண்டு வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்த, சிறுத்தையை தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, சாலையில் இருந்த சிறுத்தை திடீரென வனப்பகுதிகள் பாய்ந்து கேழை ஆட்டை பிடித்து வேட்டையாடும் வீடியோவை படம் பிடித்துள்ளனர்.

தற்பொழுது, இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. மேலும் வனத்துறையினர் கூறும் பொழுது, வால்பாறை சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.