வலிமை படம் பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்றை சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.