பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதில் நான் பெருமைகொள்கிறேன். இங்கு மதச்சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல், கோயில்களை சூறையாடுவது நிறுத்தப்பட வேண்டும் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன் என பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
கராச்சியில் உள்ள ராஞ்சூர் லைன் பகுதியில் கடந்த 20ம்தேதி இந்து கோயிலை ஒன்றை சிலர் அடித்து சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கடும் கண்டனத்தை ட்விட்டரில் பதவி செய்துள்ளார்.
அவர் பதிவிட்ட வீடியோவில் கூறுகையில் ‘ பாகிஸ்தானில் இந்துவாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
சனாதன தர்மம் என்பது அனைவருக்கும் அப்பாற்பட்டது. அதேநேரம், நான் ஒவ்வொரு மதத்தையும் மதிக்கிறேன். பாகிஸ்தான் எனக்கு அதிகமான அன்பையும், ஈர்ப்பையும் வழங்கியுள்ளது.
அதேசமயம், கோயில்கள் தாக்கப்படும் நான் இதுபோன்ற விஷயங்களைக் கண்டு திகைக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, பாகிஸ்தானின் நன்மதிப்பை இது குலைத்துவிடும்.
இந்த விஷயத்தில் பிரதமர் இம்ரான் கான் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். மதரீதியான சுதந்திரத்தை ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது.
சிறுபான்மை மதத்தினரைப் பாதுகாக்கவும், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்கவும் கடும் சட்டங்கள் அவசியம். இந்துவாக இருப்பதால், என்னுடைய மதத்தைக் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் நான் செய்யமுடியுமென்றால், அது எனக்கும் என் சமூகத்துக்கும், என்னுடைய மத்ததுக்கும் சிறந்ததாக இருக்கும்.’ இவ்வாறு கனேரியா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்அணிக்காக கடந்த 2000 முதல் 2010ம் ஆண்டுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கனேரியா 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கனேரியா கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் கனேரியா 4-வது இடத்தில் உள்ளார்.