சென்னையின் முக்கிய பகுதிகள் மெட்ரோ ரயிலால் இணைக்கப்பட்டுள்ளன.
இதில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் பல செயல்களை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான பயண அட்டையை அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாக, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை பயணிகள் மிக எளிதில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக பயண அட்டையை அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாக, விற்பனை செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மெட்ரோ ரயில் பயண அட்டையை விற்பனை செய்ய முகவா்களுக்கு 5 சதவீதம் கமிஷன் வழங்கப்படும்.
மேலும், பயண அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டண தள்ளுபடியும் அளிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகவா்களுக்கான விண்ணப்ப படிவத்தை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவைகளை பூா்த்தி செய்து பயண அட்டைக்கான இருப்புத் தொகையையும் செலுத்தி, பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் பிறகு பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கைப்பேசி செயலியிலேயே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
முகவா்களாக விருப்பம் உள்ளா்கள் உதவி எண் 18604251515 மற்றும் 9445196185 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.