இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) காலிப் பணியிடங்களை நிரப்புவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Office Assistant, Night Watchman & Driver பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE )
பணியின் பெயர்: Office Assistant, Night Watchman & Driver
பணியிடங்கள்: 05
வயது வரம்பு: 18 – 34
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: Office Assistant, Night Watchman பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Driver பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ரூ.19,500 முதல் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: நேர்காணல்
கடைசி தேதி: 30.03.2022
மேலும் விவரங்களுக்கு இந்த https://drive.google.com/file/d/1JkyS-Z2AiylawwUnuvdFYRVd42JLnFrG/view?usp=sharing லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பிரசார் பாரதி (அகில இந்திய வானொலி) ஆனது சில வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் காலியாக உள்ள நியூஸ் எடிட்டர், வெப் எடிட்டர், கிராபிக் டிசைனர், செய்தி வாசிப்பாளர், நியூஸ் ரீடர் கம் ட்ரான்ஸ்லேட்டர் போன்ற இடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்தெடுக்க உள்ளது.
1) நிறுவனம்:
பிரசார் பாரதி (அகில இந்திய வானொலி)
2) பணிகள்:
*நியூஸ் எடிட்டர்
*வெப் எடிட்டர்
*கிராபிக் டிசைனர்
*செய்தி வாசிப்பாளர்
*நியூஸ் ரீடர் கம் ட்ரான்ஸ்லேட்டர்
3) தகுதிகள்:
*விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி/ கிராஜுவேஷன்/ போஸ்ட் கிராஜுவேஷன்/ டிப்ளமோ ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
*மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு ஏற்ப சிறந்த மொழித்திறன் உடையவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ரேடியோ அல்லது டிவியில் பணியாற்றிய முன் அனுபவத்தினை பெற்றிருக்க வேண்டும்.
4) வயது வரம்பு:
மேற்கண்ட பணிகள் அனைத்திற்கும் 21 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
5) சம்பளம்:
தேர்வு செய்யப்படும் நபர்களின் திறமைக்கேற்ப மாத மாதம் ஊதியம் வழங்கப்படும்.
6) தேர்வு முறை:
எழுத்து தேர்வு, வாய்மொழித்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
7) விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ.300 கட்டணமும், எஸ்சி/எஸ்டி பிரிவினரை சார்ந்தவர்களுக்கு ரூ. 225 கட்டணமாக வசூலிக்கப்படும்.
8) விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
9) விண்ணப்பிக்க கடைசி தேதி:31/03/2022
10) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி:
துணை இயக்குனர்,
எண்.223, இரண்டாவது தளம்,
புதிய சர்விஸ் டிவிஷன்,
அகில இந்திய வானொலி,
புதிய ஒளிபரப்பு நிலையம்,
பாராளுமன்றம் தெரு,
நியூ டெல்லி-110001.