கடவுளின் சொந்த தேசம் கேரளாவில்விஷூ கனிகாணும் விழா நாளை ஏப் 15ல் ..

கடவுளின் சொந்த தேசம் கேரளாவில்
 சித்திரை மாதத்தில் மேஷம் முதல்நாள் கொண்டாடப்படும் விஷூ கனிகாணும் விழா நாளை ஏப் 15ல் கோலாகோலமாக கொண்டாடப்படுகிறது.
வீட்டுவாசலில் கொன்றைமலர் அலங்கரிக்க பூஜை அறையில் காய்கனிகள் பணம்வைத்து புத்தாண்டின் முதல் நாள் சூரிய உதயத்திற்கு முன்னதாக நடைபெறும் கனி காணும் விழா கேரளா தமிழகத்தில் குமரி நெல்லை தென்காசி கோவை மாவட்டத்தில் மிக பிரபலமானது

மலையாளத்தில் கனி என்பதற்கு முதலில் காண்பது என்ற பொருளாகும், விஷூக்கனி.என்றால் விஷூ அன்று முதலில் காண்பது என்று பொருள்படும்

விஷூவின் முன் தினமே உன்னதமான பொருட்களாகிய பூ, பழம், காய், புத்தாடை துணிகள்,பணம் மற்றும் வசதியுள்ளவர்கள் தங்க நாணயம் ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து விடுவார்கள்

விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர். பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு வந்தது. ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது அதாவது அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.

கொன்னைப் பூ கொண்டு கனி உருளி, படம் மற்றும் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கின்றனர். 
ஏற்றப்பட்ட பித்தளை நில விளக்கை இதற்கு அருகே வைத்து அதன் தங்க நிற ஒளிர்வை கனி பார்வைக்காக கூட்டுகின்றனர்.
பூஜை அறையில் நில விளக்கின் மகோன்னதமும், அதிலிருந்து உருளியில் பட்டு ஏற்படும் ஒளிச் சிதறல்களும், தங்க நிற கனி வெள்ளரி, தங்க ஆபரணங்கள், மஞ்சள் நிற கனி கொன்னை கொன்றை மலர்களின் அழகைக் கூட்டும் பளபளக்கும் பித்தளைக் கண்ணாடியும் மற்றும் இவை யாவும் சேர்ந்து உருவாக்கும் மஞ்சள் நிற ஆன்மீக ஒளிர்வு அந்த கிருஷ்ண பரமாத்மாவை நினைவுபடுத்தும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

தங்கம் விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.
தங்க மஞ்சள் நிறமுடைய கனிக்கொன்னை மலர்களைக் கொண்டு
பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். 
கனிக்கொன்னைப்பூ சூரியன் உச்சத்தில் உள்ள அதாவது விஷூ 
ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது. 

பூஜை அறையில் இப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது. தங்க நாணயம் அவரவரின் பொருளாதார நிலையையும் மற்றும் கலாச்சார ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது.அஷ்டமாங்கல்யமும் கனி உருளிக்குள் வைக்கப்படுகின்றது.

விஷூக்கை நீட்டம் எனப்படும் செல்வம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம். செல்வம் கொடுப்பவர்கள் தடையின்றி எல்லோருக்கும் கொடுக்க பெறுபவர்கள் மிக்க மரியாதையுடன் அதனைப் பெறுவர். விஷூ கனி காணும் விழா கேரளாவில் அனைத்து கோயில்களில் நடந்தாலும் குருவாயூர்,சபரிமலை,செங்கோட்டை திருவனந்தபுரம் வழியில் உள்ள குளத்துப்புழாவில் மிக பிரபலமான விழாவாக கொண்டாடப்படுகிறது.மேஷ விஷூ சித்திரை மாதப்பிறப்பு இன்று காலை 8.45க்கு பிறந்ததால் புத்தாண்டில் முதல் சூரியோதயம் நாளை ஏப் 15ல் வரும் என்பதால் நாளை கேரளாவில் விஷூ கனிகாணும் விழா நடைபெறுகிறது.

Vishu 1 - 2026
ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories