வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள் தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வருமான வரித்துறையினர் கூறியிருப்பதாவது:
வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நேரிலும் தாக்கல் செய்யலாம். இன்று முதல் கவுன்டர்கள் செயல்படும். உரிய காலத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய தவறுவோருக்கு 5 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் வருவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். 2017- 18க்கான வருமான வரியை 31.03.19 க்கு பின்னர் தாக்கல் செய்ய முடியாது. வருமான வரியில் திருத்தம் செய்ய வரும் 2019 மார்ச் 31 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.