மம்தா மீம்ஸ்… பிணையில் வந்த பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்! கூடாது பேச்சு சுதந்திரம் போச்சு: நெட்டிசன்ஸ்!

Published:

mamta banarjee priyanka chopra image - 2026 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து மீம்ஸ் வெளியிட்ட பிரியங்கா சர்மாவிற்கு உச்ச நீதிமன்றம், எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால், இது பேச்சு சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல் என்று நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற வித்தியாச உடை அணியும், ‘மெட்காலா’ நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அதில் அவர் அணிந்த உடையும் முடி அலங்காரமும் நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்கு உள்ளானது.

இந்நிலையில் மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடையில் அவருக்கு பதில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் முகத்தை மார்பிங் செய்து, பாஜக., யுவமோர்ச்சாவைச் சேர்ந்த பிரியங்கா சர்மா என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

பிரியங்காவின் பதிவுக்கு கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து திரிணாமுல் கட்சியை சேர்ந்த ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, ஹவுரா போலீசார், பிரியங்கா சர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிரியங்கா சர்மாவுக்கு ஜாமின் வழங்க தயார். அவர் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

அதற்கு, பிரியங்கா சர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது, பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது. இருப்பினும் அவரிடம் மன்னிப்பு கேட்க அறிவுரை வழங்குகிறேன்! அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறினார்.

இதை அடுத்து, பேச்சு சுதந்திரம் என்பது மற்றவரை அவமானப்படுத்துவதற்காக அல்ல எனக் கூறிய நீதிமன்றம், மீம்ஸ் வெளியிட்டதற்காக எழுத்துபூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பிரியங்கா சர்மாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.priyanka sharma - 2026

இருப்பினும் நெட்டிசன்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மோடிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்று பொங்குகின்றனர். ஒரு நாட்டின் பிரதமர் மோடியைக் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் சித்திரித்து மீம்ஸ்கள் கார்டூன்கள் வெளியிட்டனர். ஆனால் அது குறித்தெல்லாம் கவலைப்படாத கண்டுகொள்ளாத உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தன்னுடைய ஒரு தலைப் பட்சமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.

பிரியங்கா மன்னிப்பு கேட்கக்கூடாது என்றும், இது உச்ச நீதிமன்றத்துக்கு அவமானம், கேவலம் இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் தகர்த்தெறிந்துவிட்டது என்றும் கருத்துகளை பலரும் டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img