December 7, 2025, 3:17 AM
24.5 C
Chennai

கலையம்ச பெண் சிலையை காமத்தில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து படத்தைப் பகிர்ந்தவர் கைது!

statue in tanjore - 2025

தஞ்சாவூர் பெரிய கோயில் பெண் சிற்பங்களுடன், பெண்களுடன் சல்லாபம் செய்வதைப் போல சித்திரித்து, இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, மதுரை ஒத்தகடையை சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவரைக் கைது செய்தனர். திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த முஜிபுர் ரகுமான் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் திருச்சியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட சில படங்கள் காண்போரை கதி கலங்க வைப்பதாக இருந்தன.

facebook boy - 2025தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்ற முஜிபுர் ரஹ்மான் அங்குள்ள பழங்காலச் சிற்பங்களை வக்கிர எண்ணத்துடன் அணுகியுள்ளார். சிலைகளை கட்டிப் பிடிப்பது, சிலைகளுக்கு முத்தம் கொடுப்பது, பெண் சிற்பங்களை பாலியல் வக்கிர ரீதியாக வெளிப்படும் படி காண்போரை மோசமாகத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அதனை படங்களாகவும் எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பலர் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அக்கால மனிதர்கள் வாழ்ந்த சூழ்நிலை, தமிழர்களின் வாழ்வியல் கலை, மன்னர்களும் மக்களும் வாழ்ந்த நடப்பியல் சூழல் இவற்றை சிற்பங்களாக அந்த அந்தக் கால கட்டங்களில் செதுக்கி வைத்தார்கள். அவற்றை காமத்துடன் அணுகுவது, மனிதனின் வளர்ப்பில் கோளாறு என்று கருத்துகள் பகிரப் பட்டன.

துணிக்கடையில் சேலை கட்டியிருக்கும் பொம்மையை ஒருவன் இப்படி அணுகினால் அவனது வக்கிர எண்ணம் எப்படி இருக்கும் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

facebook boy1 - 2025இதனைச் செய்தவன் ஒரு இஸ்லாமியன். அதனால்தான் கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருக்கிறார்கள்… என்று சிலர் கருத்திட்டனர்.

ஒரு கல்லையும் பொம்மையையுமே இப்படி காமக் கண் கொண்டு அணுகி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிரும் வக்கிரம் படைத்தவர்கள் முன், பெண்கள் எப்படி தைரியமாக நடமாட முடியும்?! என்று கேள்வி எழுப்பினர் சிலர்.

திராவிடர் கழகம், ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆகியோரின் கருத்துகளை பகிர்ந்து, இவர்களால்தான் இத்தகைய கீழ்த்தரமான எண்ணம் இந்த இளைஞர்களுக்கு வருகிறது என்று சிலர் சாடியிருந்தனர்.

இந்நிலையில் இந்தப் படங்களை எடுத்துப் பகிர்ந்த முஜிபுர் ரஹ்மான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பேஸ்புக் அக்கவுண்டில் உள்ள முகவரி மூலமாக திருச்சியில் உள்ள அவனது சகோதரி வீட்டில் அந்த இளைஞன் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கே சென்ற போலீசார் அவனைக் கைது செய்தனர்.

விளையாட்டுத்தனமாக செய்தததாகவும், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் முஜிபுர் ரஹ்மான் கூறிய போதும், உள்நோக்கம் வெளிப்பட செய்த செயல் என்றும், அதன் விளைவுகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்தும் கூறிய போலீஸார், முஜிபுர் ரகுமானைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories