ஹிந்து கடவுளரை இழிவுபடுத்தும் ‘தர்மபிரபு’ படத்தை தடை செய்யக் கோரி போராட்டம்!

Published:

Dharma Prabhu Tamil Movie - 2026

கடந்த வாரம், சிரிப்பு நடிகர் யோகி பாபு என்பவர் நடிக்க, தர்மபிரபு என்ற படம் வெளியானது. இதில், ஹிந்து மத தெய்வங்கள் இழிவுபடுத்தப் பட்டிருப்பதாக கண்டனங்கள், எதிர்ப்புகள் வெளியாகி வருகின்றன.

மேலும், சினிமாவில் நடித்து நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்த சோ ராமசாமியின் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் அதே சாயலுடன் தோன்றும் வகையில் பெயர் கொடுத்து, அதே சினிமாத்துறையைச் சேர்ந்தார்கள் இழிவு படுத்தியிருக்கிறார்கள்.

இதற்கும், நாடகக் கலைஞர்கள், திரைத்துறையை சேர்ந்த ஓரிருவர்  தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Dharma Prabhu Tamil Movie6 - 2026

இந்நிலையில், தர்மபிரபு படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி, இந்து முன்னணி சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.

Dharma Prabhu Tamil Movie1 - 2026இது குறித்து இந்து முன்னணியினர் கூறியவை…

சிவ பெருமானையும் விநாயகர் முருகனையும் அவதூறாக கேலபடுத்தும் பிற மத கடவுள்களை உயர்வாகவும் காட்டி மத மோதலை தூண்டும் தர்மபிரபு திரைப்படத்தை தடை செய்ய கோரி இன்று 2.7.19. செவ்வாய் மாலை 5.30 மணிக்கு நெல்லை பூர்ணகலா திரையரங்கு முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்  கா.குற்றாலநாதன் முன்னிலையில் நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டத்தில், நெல்லை கோட்ட செயலர்  தங்கமனோகர் மற்றும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவதை இனியும் பொறுத்து கொள்வதா ?
எதிர்ப்பு காட்ட கூட அருகைதையற்று போனதல்ல இந்து சமுதாயம்!
இறைவனை இழிவு படுத்துவதை வேடிக்கை பார்த்து இது வேண்டும் அது வேண்டும் என வேண்டுவதல்ல பக்தி!
கற்றுணைபூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே
இறைவனை இழித்தால் எதிர்ப்போம்
நாயன்மார் வாழ்க்கை நமக்கு சொன்ன பாடம் அதுவே!

எனவே இந்து இளைஞர்கள், சிவ பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் அணி திரண்டு வரவேண்டும் என்று நெல்லை மாநகர  இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img