வீட்டில் இருக்கும் பொருளை கொண்டே உடனடி இனிப்பு: ஶ்ரீகண்ட்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
srkant-1
srkant-1

ஶ்ரீகண்ட்

தேவையான பொருட்கள்: கொஞ்சம் புளிச்ச தயிர். 1கப்
பொடித்த சர்க்கரை. 1/2கப்
ஏலக்காய் பொடி. 1/4 ஸ்பூன்
குங்குமப்பூ. 1பின்ச்
பாதாம் பிஸ்தா துருவல். சிறிது
சாரப்பருப்பு. சிறிது.

செய்முறை
முதலில் தயிரை ஒரு மஸ்லின் துணி அல்லது ஒரு கர்ச்சீப்பில் இறுக கட்டி ஐந்து மணி நேரம் தொங்க விடவும். சர்க்கரையை நன்கு பொடித்துக் கொள்ளவும். பிறகு அந்த கெட்டியான தயிரை சேர்த்து ஒரு போர்க் கொண்டு நன்கு அடித்து வெண்ணெய் போல கலந்து வைக்கவும். இரண்டு மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து பாதாம் பிஸ்தாதுருவல்,சாரப்பருப்பு குங்குமப்பூ,ஏலக்காய் பொடி போட்டுபரிமாறவும்.விரும்பினால் கலர்சேர்த்துக்கொள்ளலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.