kuthuraivali kara dhosai
kuthuraivali kara dhosai

குதிரைவாலி கார தோசை

தேவையான பொருட்கள்:
குதிரைவாலி – 200 கிராம்,
துவரம்பருப்பு – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2,
சீரகம் – அரை டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 4 (தோலுரிக்கவும்), கறிவேப்பிலை – சிறிதளவு,
பூண்டு – 2 பல், எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

குதிரைவாலி, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கலந்துகொள்ளவும். மாவைத் தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சாமை, வரகு போன்றவற்றிலும் இந்த தோசையைச் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending