தால் ரைஸ்
தேவையானவை:
அரிசி – ஒரு கப்,
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா கால் கப்,
பூண்டு பல் – 5,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், நெய் – தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
அரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பை கழுவி, தனித்தனியாக ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பூண்டின் தோலை உரித்து தட்டவும்.
குக்கரில் நெய் விட்டு உருக்கி… கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து… பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், அரிசி, பருப்பு வகைகள், உப்பு சேர்த்துக் கலந்து மூன்றரை கப் தண்ணீர் விட்டு மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நான்கு விசில் வந்த பின் இறக்கிப் பரிமாறவும்.