பேபி கார்ன் 65
தேவையானவை:
பேபி கார்ன் – 10,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
அரிசி மாவு, மைதா மாவு – தலா 4 டீஸ்பூன், தயிர் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
கேசரி கலர் – ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பேபி கார்னை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும். சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை, கறிவேப் பிலை, பச்சை மிளகாயை சேர்த்து விழுதாக அரைக் கவும். அரைத்த விழுது, உப்பு, கேசரி கலர், அரிசி மாவு, மைதா மாவு, தயிர், எலுமிச்சைச் சாறு, இஞ்சி – பூண்டு விழுது ஆகிய வற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். பேபி கார்னை இதில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.