December 6, 2024, 9:23 AM
27.2 C
Chennai

ஆரோக்கிய சமையல்: வற்றல் சாதப்பொடி!

vatral podi
vatral podi

வத்தல் சாதப்பொடி
சுண்ட வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் சேர்த்து செய்யும் அற்புதமான, ஆச்சரியமூட்டும் சத்துக்கள் அடங்கிய சாதப்பொடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட நம் முன்னோர்கள் பின்பற்றிய அற்புத சக்தி, இயற்க்கை உணவு வகை இந்த பொடி செய்வதும் சுலபம், சேர்க்கும் பொருட்களும் குறைவே. சாதாரணமாக வத்தல் குழம்பில் சேர்க்கும் பொது பெரும்பாலும் அதை அகற்றி விட்டே உட்கொள்கிறோம் வத்தலின் முழுமையான சத்து நமக்கு உள்ளே சேருவது இல்லை இதன் அருமை தெரியாமல் நாம் அதன் சுவை கருதி அகற்றி விடுகிறோம் ஆனால் இதன் உண்மையான சத்துக்கள் நாம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது சில குறிப்புகள் இங்கே,

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைத் தவிர, உயர்தர புரதங்கள், இதன் உணவு இழைகள் அடர்த்தியாக நிரம்பியுள்ளன. இது இயற்கையாகவே கார்ப்ஸ், கலோரிகள், கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது, இது எடை இழப்பு உணவுகளில் இணைவதற்கு ஏற்றதாக அமைகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது

ALSO READ:  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது
நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது
மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது
இதய ஆரோக்கியம் தருகிறது
காய்ச்சலை திறம்பட எதிர்த்து நிற்கிறது
சிறுநீரக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது
நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு சக்தியை கொடுக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும்.

சூப்கள், கறி, பருப்பு போன்ற பல உணவுகளை சமைப்பதில் இதைப் பயன்படுத்தலாம், மேலும் உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் சுவையூட்டப்பட்ட உலர்ந்த வகையாகவும் உட்கொள்ளலாம். உங்கள் வழக்கமான உணவில் சேர்க்கவும், அது வழங்கும் அற்புதமான ஆரோக்கிய சலுகைகளை முழுமையாக பெறலாம்.

சாதப்பொடி :

பொடி வகையாக செய்யும் பொது உட்கொள்ளும் அளவு சற்று அதிகமாகும், முழுமையான சக்திகளையும் பெற உதவும் சற்று கசப்பு சுவைத்தான், எனினும் நெய்யோடு சேர்த்து உண்ணும் போது அதிகம் தெரியாது பாவற்காய் போன்றே இருக்கும்,

தேவைப்பட்டால் இங்கு குறிப்பிட்ட அளவிற்கு சற்று அதிகமாக பருப்பு சேர்த்துக்கொள்ளலாம் கசப்புத்தன்மையை குறைக்க உதவும்.

செய்யத்தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் – 50 கிராம்
(மிளகு தக்காளி வத்தல்)-25 கிராம்
மணத்தக்காளி வத்தல்-25கிராம்
உளுத்தம் பருப்பு-50 கிராம்
மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்-3,4
மிளகு-1/2 தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு பிடி
பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
உப்பு சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா!

செய்முறை:
வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம், வறுக்கவும் இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வருத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடி யாக அரைத்துக்கொள்ளவும்.

சூடான சாதத் தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடவும், ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திடவும்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.02 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் டிச.01 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.01ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...

ஃபெங்கல் புயல்: வட தமிழகத்தில் கன மழை! எச்சரிக்கை நடவடிக்கைகள்!

உதவி வேண்டுவோர் 1800 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உதவி கோரும் பெண்கள் 155370 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பஞ்சாங்கம் நவ.30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

‘அதானியைக் கைது செய்’ என்று சொல்லும் ராகுலிடம் சில கேள்விகள்!

கவுதம் அதானி ஒரு முன்னணி இந்தியத் தொழிலதிபர். அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்