மசால் வடை
தேவையானவை:
கடலைப்பருப்பு – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை – சிறிதளவு,
வெங்காயம் – ஒன்று,
இஞ்சி – சிறிய துண்டு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழையை பொடியாக நறுக்கவும்.
மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைக்கவும். இதனுடன் உப்பு, அரிசி மாவு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை சிறிய உருண்டை களாக்கி, தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.