சென்னா புலாவ்
தேவையான பொருட்கள்
சென்னா – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பாசுமதி அரிசி – 2 1/2 கப்
பூண்டு – 3 பல்
நெய் – 3 மேசைகரண்டி
தேங்காய் பால் – 2 கப்
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
வறுத்து அரைக்க:
வெங்காயம் – 1/2
பூண்டு – 5 பல்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 5
தேங்காய் துருவல் – 2 மேசைகரண்டி
செய்முறை
ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணை விட்டு தேங்காயை தவிர மற்ற வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைக்கும் போது தேங்காயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சென்னாவை இரவே ஊறவைத்து,ஊறிய சென்னாவை குக்கரில் 1கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை வேக விடவும்.
அரிசியை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
தக்காளியை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் நெய் விட்டு முதலில் வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு வதக்கவும்.
பிறகு அரைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
மசாலா வதங்கியதும் அரைத்த தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், வேகவைத்த சென்னா, ஊறவைத்த அரிசியை போட்டு 2 கிளறு கிளறவும்.
பிறகு தேங்காய் பால்,தண்ணீர்,உப்பு சேர்த்து குக்கரில் விசில் போட்டு வேக விடவும்.ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
ப்ரஷர் அடங்கியதும், குக்கர் மூடியை திறந்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.