
செய்திக் கட்டுரை :- ஜெயஸ்ரீ எம்.சாரி
ஹைதராபாத்திலிருந்து இயங்கும் காவிய காமுதி சர்வதேச கவிஞர்கள் குழுமம் கடந்த ஆண்டு முதல் ஜூம் மூலமாக பல இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறது. இந்த குழுமத்தின் ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை முன்னிட்டு சமீபத்தில் காவிய காமுதி இன்டர்நேஷனல் மல்ட்டி-லிங்க்வல் மியூசிகல் ஈவினிங் என்ற கண்கவர் நிகழ்ச்சியை நடத்தியது.
இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ் இந்த நிகழ்ச்சியை வழங்கியது.டாக்டர் குமுத் பாலா, தலைவர், காவிய காமெடி குழுமம், தன்னுடைய உரையில் குழுமத்தின் மூலமாக ஒரு ஆண்டு காலமாக நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பற்றி தொகுத்து வழங்கினார்.
சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பல முன்னணி இசைக் கலைஞர்கள் பங்குகொண்டனர். முதலாவதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ டி பிலண்கர் பழைய திரைப்படப் பாடல்களை ஒன்றரை மணி நேரம் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். அவருடைய கணவர் டி பிலண்கர் ஹிந்தி மற்றும் மராட்டிய பாடல்களை பாடினார். அதன் பின்னர் நடைபெற்ற பகுதியில் சிதார் கலைஞரான புது தில்லியைச் சேர்ந்த அனுப்ரத்தன் முகர்ஜி தன்னுடைய அருமையான வாசிப்பினால் அனைவரையும் கவர்ந்தார்.
‘நைட்டிங்கேல் ஆப் ஹைதராபாத்’ என்றழைக்கப்படும் தீப்தி சார்யா தன் இனிமையான குரலால் தமிழ் ஹிந்தி தெலுங்கு பாடல்களை பாடி நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார். இதனையடுத்து, காவிய காமுதி குழுவிலிருந்த கவிஞர்கள் தங்களுடைய இசைத் திறமையும் இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.
டாக்டர்.ஹசினாஸ் சுல்தான்- அஸ்ஸாம், ராஜீவ் மூத்தேடாத்- பெங்களூரு, டாக்டர்.மைதிலி தேவி- மங்களூர், உதயஸ்ரீ- ஹைதராபாத், அருந்ததி முகர்ஜி-கோல்கட்டா, ஸ்வப்னா பெஹரா-புவனேஷ்வர், பத்மாவதி- ஹைதராபாத், டாக்டர். புட்டபர்த்தி நாகபத்மினி- ஹைதராபாத் மற்றும் எஸ். ரிதிகா- மும்பை ஆகியோர் தங்கள் இசைத் திறமையையும் வெளிப்படுத்தினர்.
கொல்கட்டாவின் குமார் சானு என்றழைக்கப்படும் பிவாஷ் பட்டாச்சார்யா தன் சக இசைக் கலைஞர்களான மஉ பட்டாச்சார்யா மற்றும் அபராஜிதா பாஸுவுடன் சேர்ந்து வழங்கிய அற்புதமான லைவ் பாண்ட் இசை நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.
டாக்டர்.த்ரீஷிதா முகர்ஜியின் தன் அருமையான வர்ணனையால் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். டாக்டர் குமுத் பாலா நன்றியுரை வழங்கினார். ‘டக் லைன் கிங்க்’ என்றழைக்கப்படும் லெக்ஷ்மிநாராயண் ஆலாபாடி- ஹைதராபாத், டாக்டர் ஹசினாஸ் சுல்தான்-அஸ்ஸாம், டாக்டர் ரமா பஹீத்-ஹைதராபாத், சபிதா சாஹு- ஒடிஷா, ஸ்வப்னா பெஹரா- ஒடிஷா, டாக்டர் ரஞ்சனா ஷரன் சின்ஹா- நாக்பூர், ஹரீஷ் மசந்த்- கனடா, சீமா ஜெயின்-ஜலந்தர், நிவேதிதா ராய்-பஹ்ரைன், டாக்டர் கே.தேஜஸ்வனி – ஹைதராபாத், உதயஸ்ரீ- ஹைதராபாத், டாக்டர் ரூபாலி சிர்கார் கௌர், மீரட், மாயா சௌஹான் மற்றும் நிஹாரிகா சிப்பெர்- யூ.எஸ்.ஏ ஆகியோர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உதவினர்.