பாஜக., மாநிலத் தலைவர்… நயினார் நாகேந்திரன்?!

nainar nagendran bjp - 2026
file picture / கோப்பு படம்

தமிழக பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்? என்ற பரபரப்பான கேள்விகள் இப்போது பாஜக.,வினரிடையே எழுந்து வருகிறது.

பாஜக மேலிட அழைப்பின்பேரில் இன்று காலை தில்லி சென்றார் நயினார் நாகேந்திரன். இதனையடுத்து தமிழக பா.ஜ.க தலைவராக அவர்‌ நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

தமிழக பாஜக.,வுக்கு தலைவராக வெகுநாட்கள் இருந்துவிட்ட டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டார். இதன் பின்னர், தமிழக பாஜக.,வுக்கு தலைவர் நியமிக்கப் படாமலேயே இருந்தது. இந்த நிலையில், பாஜக.,வுக்கு தலைவராக வருவதற்கு சிலர் போட்டி போடுவதாகவும், மேலிடம் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் பகிரப் பட்டன.

தற்போது ஒருபகுதி உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக.,வுக்கு தலைவரை நியமித்தாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக., மேலிடம் இருப்பதால், மேலிடத்தின் பார்வை தமிழகத்தில் பதிந்துள்ளது.

கடந்த வாரம் கட்சி செயல் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்திருந்தார். அப்போதும் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டுள்ளார். ஏற்கெனவே தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் என இரு தரப்பு மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறப் பட்டது. அதே நேரம் கட்சியை பாஜக.,வின் அதிமுக பிரிவு, பாஜக.,வின் திமுக., பிரிவு என இரு திராவிட கட்சிகளின் சார்பு இல்லாமல், தேசிய பாஜக.,வை தமிழகத்தில் துடிப்புடன் வளர்ப்பார் என்று ஹெச்.ராஜாவை சிலர் முன்னிறுத்தினர்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

கட்சிக்குப் புதியவர் என்று கூறப் பட்டு வந்த நயினார் நாகேந்திரனை சிலர் முன்னிறுத்தினர். ஆனால் அவருக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. ஏற்கெனவே திருநாவுக்கரசரை நம்பி கட்சியை ஒப்படைத்து, அதனால் கட்சி பெருமளவு பாதிக்கப் பட்டதும், திராவிட பாணி அரசியல் பாஜக.,வில் தலைதூக்கியதும் மூத்த நிர்வாகிகளால் நினைவுகூரப் பட்டு வருகிறது.

அது போல், அதிமுக., அணியில் இருந்து பாஜக.,விற்கு வந்த நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் குழு ஒருபுறம் பாஜக.,வில் மீண்டும் அதே போன்றதொரு அதிமுக., பாணி அரசியலை பாஜக.,வில் முன்னிறுத்தக் கூடும் என்று கருதப் படுவதால், நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு இல்லை என்று கருதப் பட்டது.

இந்த நிலையில், தற்போது அவர் கட்சி மேலிடத்தால் அழைக்கப் பட்டுள்ளார் என்றும், இன்று தில்லியில் மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேசும் அவரே பின்னர் மாநிலத் தலைவராக அறிவிக்கப் படக் கூடும் என்றும் பாஜக.,வில் செய்தி பகிரப் பட்டு வருகிறது.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories