பக்கத்து வீட்டு குளியல் அறைக்குள் எட்டிப் பார்த்தவர்! காது கிழிய அடி வாங்கிய உச்சம்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
pallavaram

சென்னையில் ஒரு பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த நபரை அந்த பெண்ணின் கணவர் காது கிழிய அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.

சென்னை பல்லாவரம் பம்மல் சரஸ்வதிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த மூர்த்தி(38) என்பர் வேலை செய்து வருகிறார்.

ஞாயிறு ஊரடங்கு என்பதால் கட்டிட வேலை இல்லாததால் மூர்த்தி அங்கயே படுத்து ஓய்வு எடுத்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் ஒருவர் குளிப்பது போன்று தண்ணீர் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கம் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட மூர்த்தி அந்த குளியல் அறையை எட்டிப் பார்த்துள்ளார்.

அங்கே ஒரு பெண் குளித்து கொண்டிருப்பதை பார்த்து ரசித்துள்ளார்.

அப்போது அந்தே பெண் எதேச்சையாக அந்த நபர் இருந்த பக்கம் திரும்ப அதிர்ச்சியில் அலறியுள்ளார். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி ஓரிரு மாதங்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை வந்து நடந்ததை பார்த்து அந்த நபரை பிடித்து காது கிழிய அடித்துள்ளார்.

பின்பு சங்கர் காவல் நிலையத்திற்கு மூர்த்தியை இழுத்து சென்று ஒப்படைத்துள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பெயரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.