சென்னை மாநகர பஸ் ஒருநாள் டிக்கெட், மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்வு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னை:
தமிழகம் முழுதும் பஸ் கட்டணங்கள் அண்மையில் உயர்த்தப் பட்டன. இருப்பினும் மாதாந்திர சீசன் டிக்கெட் குறித்து தகவல் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், சென்னையில் ஒரு முறை பயணச் சீட்டு பெற்று, விருப்பம் போல் நாள் முழுதும் பயணிக்கும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. அதுபோல், மாதாந்திர பயணச் சீட்டு பாஸ் கட்டணமும் உயர்த்தப் பட்டுள்ளது.

ஒரு நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட் ரூ.50 இல் இருந்து ரூ.80 ஆகவும், மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1000 இல் இருந்து ரூ.1300 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டண நடைமுறை சென்னையில் வரும் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.