புதுமணத் தம்பதியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

stalin darna - 2026

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தின. அப்போது, ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்த புதுமண தம்பதிகளுடன் போராட்டம் நடத்தினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தின் 100வது நாளில் வன்முறையாளர்கள் உள் கலந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. தூத்துக்குடி பனிமய மாதா சர்ச்சில் இருந்து துவங்கிய ஊர்வலம் கடந்த செவ்வாய்க் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தீயிட்டுக்  கொளுத்தி, ஸ்டெர்லைட் குடியிருப்யில் வாகங்களைத் தீக்கிரையாகி, வீடுகளுக்கு தீவைத்து, போலீஸாரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கல்லெறிந்து வன்முறை தலைவிரீத்தாடியது. இதனால், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், தமிழக அரசின் இந்தக் கொடூரச் செயலுக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து, சென்னையில் மறியல் போராட்டம் நடத்தின.

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இதில் மதுராந்தகம் பகுதியில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக.,வைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு, நேரடியாக மணக்கோலத்தில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஸ்டாலினும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கே வந்த போலீஸார் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட  ஸ்டாலின் மற்றும் தொண்டர்களைக் கைது செய்தனர். புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர்.

3 thoughts on “புதுமணத் தம்பதியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின்!

  1. இந்த குடும்பம் வாய் வைக்காத இடமே இல்லை எனலாம். தம்பதிகளுக்கு எவ்வளவு கொடுத்து அழைத்து வந்தாரோ ….அல்லது இதுவும் செட் அப் தானோ…….தமிழகத்தில் எரிந்து கொண்டு இருக்கும் பிரச்னைகள் ஆயிரம் இருக்க. டெபாசிட் இழந்த கட்சிக்கு வேறு பிழைப்பே இல்லையா………கோடி கோடி கோடி கோடி அடித்த கொள்ளையுடன் எங்கேயாவது வெளி நாட்டுக்கு பொய்த்தோலைவதுதானே……………..பாவமன்னிப்புகளுக்கு ஏஜெண்டாக இருந்து இன்னும் சம்பாதிக்க வேண்டுமா. ……தமிழர்களை இனியாவது நிம்மதியாக வாழ விடலாமே…….இந்த கழகங்கள் எதுவுமே வேண்டாம். தமிழகம் தானாக தலை நிமிரும்……எத்தனை எத்தனை பிரச்னைகள்…..தண்ணீர், கல்வி, வழிபாடு, சாலை, பசுமை……எதையுமே எந்த பிரச்னையும் முக்கியமில்லை. எவனோ ஒரு துரோகிக்கு எடுபிடியாக இருந்து வேலை பார்ப்பது ஒரு அரசியலா…

  2. குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.