
டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவிகயிறு அறுந்ததால் உயிர் தப்பினார்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வரும் 18 வயது மாணவி தனது குடும்பத்துடன் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள நெய்தல் வளாக குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதிக நேரம் டி.வி. பார்ப்பதாக கூறி பெற்றோர் மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
சிறிது நேரத்தில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது மாணவி கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றதும், எடை தாங்காமல் கயிறு அறுந்ததால் மாணவி கீழே விழுந்து உயிர் தப்பியதும் தெரியவந்தது.
இதனையடுத்து மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



