அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்!

Published:

inbathamizhan - 2026

முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமமுக.,வில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அதிமுக.வில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் 2001-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் 2006-ஆம் ஆண்டு திமுக.,வில் இணைந்த இவர் 2009-ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக.,வில் இணைந்தார்.

இந்நிலையில் அமமுக.,வில் இருந்த இன்பத்தமிழன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவல்..

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img