சென்னை

பாமக.,வின் ரயில் மறியல் போராட்டம்; மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்!

காவிரி விவகாரத்தில் பாமக., இன்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, திண்டிவனத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் ரஞ்சித், மின்சாரம் தாக்கி நடைமேடையில் தூக்கி வீசப்பட்டார்.

தமிழக போராட்டங்களால் கர்நாடக பேருந்துகள் நிறுத்தம்

சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் திம்பம் சோதனைச் சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன. அவை பாதுகாப்பு கருதி புளிஞ்சூர் சோதனைச் சாவடி வழியாக போலீசாரால் திருப்பி அனுப்பப் படுகின்றன.

காக்கிகளுக்கு எதிராகப் புறப்பட்ட கறுப்புகள்: களையெடுத்தால் தமிழகம் அமைதிப்பூங்காதான்!

உண்மையில் இது போன்ற மனோபாவம் வளர்வது, தமிழகத்தின் தன்மைக்கே கேடுதான்!! இதைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வைகோ, சீமான், அமீர் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்கள், மார்க்க நெறி வெளித்தெரியாமல் தமிழன் எனும் பெயரில் தலிபானிசத்தை வளர்க்கும் தமிமுன் அன்சாரி போன்றவர்கள் காவல் துறையால் நன்கு கவனிக்கப் பட வேண்டியவர்கள்!

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்ன சொல்கிறது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலையில் ஆண்டவர் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது,சில பக்த்தர்கள் கனவில் ஆண்டவன் சுட்சுமமாக சில பொருளை அவரின் உத்தரவின் மூலன் வைக்க சொல்லி அதன் மூலமாக...

ரண களமான சேப்பாக்கம் களம்: செருப்பு வீச்சு; கொடிகள் வீச்சு: 780 பேர் கைது!

மக்களின் உணர்வுகளை எந்த அளவிற்கு அரசுகள் அவமதித்துள்ளன என்பதை காட்டுகிறது, காவிரி பிரச்னையைவிட கிரிக்கெட் போட்டியை நடத்துவது அதிமுக அரசுக்கு முக்கியமாகிவிட்டது என்று கூறினார் முக. ஸ்டாலின்

தேசியம் பேசுபவர்களால் தண்ணீர் பெற்றுத் தர இயலவில்லை: பாரதிராஜா

தமிழர்களுக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செயல்பட வேண்டும்; தமிழகத்தில் பாஜக துளிர்க்க முடியாது என்று கூறினார்கள்.
- 2026

செல்போனுக்கு தடையில்லை; சேப்பாக்கம் மைதானத்தில் ஜாலி ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(ஏப்., 10) நடக்கும் சென்னை மற்றும் கோல்கட்டா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சேப்பாக்கம் சாலையில் நடந்து செல்பவர்களிடம் எல்லாம் போலீஸ் விசாரணை

சேப்பாக்கம் மைதானத்திற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன. எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். 

ஒன்றாம் வகுப்புக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது

ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ரூ 1 லட்சம் லஞ்சமாகப் பெற்ற சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னையில் ஐபிஎல்., போட்டிகள்: போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: ஏப்ரல் 10, 20, 28, 30 மற்றும் மே 5, 13, 20 ஆகிய நாட்களில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், ஏப்ரல் 10, 20, 28, 30, மே 20 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அன்றைய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது

தோனிக்கு அணி நிர்வாகம் விதித்த கட்டுப்பாடு…. பிடிச்ச விசயத்தில் கை வெச்சிட்டாங்க

சென்னையில் நடைபெறும் IPL போட்டிக்கு செருப்புகள் அணிந்து வருவதற்கு தடையில்லை.." பயன்படுத்துவோம் ".-செந்தில்பாலாஜி

கர்நாடகாவில் 12ஆம் தேதி பந்த் ரத்தானது ஏன்? வாட்டாள் நாகராஜும் பெ.மணியரசனும் சொல்லும் விளக்கங்கள்!

நீதிமன்றக் கட்டளையை செயல்படுத்த மறுத்த நடுவண் அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டது! மே மாதம் 3-க்குப் பிறகும் கர்நாடக அணைகளைத் திறந்து மூடும் அதிகாரம் படைத்த “ஒரு செயல் திட்டத்தை” இந்திய அரசு உருவாக்காது என்பது வெள்ளிடைமலை! - என்று கூறியுள்ளார்.
- 2026

Recent articles