Breaking News
முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டினா… காவல் துறை ‘கவனி’த்துக் கொள்ளும்: கடம்பூர் ராஜு சூசகம்
அப்போது அவர், ஜல்லிக்கட்டு என்ற தமிழா் உணா்வுப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போல், தமிழா் உாிமைப் போராட்டமான காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் வரை இந்த அரசு ஓயாது என்றார். மேலும், மத்திய அரசு நீதிமன்றத்தில் என்ன வாதம் வைத்தாலும் இறுதி முடிவு நீதி மன்றம் தான் எடுக்க வேண்டும்.
மதுரை ரயில் நிலையத்தில் சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் தொடங்கபபட்டுள்ள உண்ணாவிரதபோராட்டம் மதுரை ரயில் நிலையத்தில் வரும் மே 10 ம் தேதி வரை நடைபெறுகிறது.
பெரியகுளம் அருகே வெடித்த கலவரம்: பட்டியலின சமூகத்தவரின் தெருக்களை எரித்து இஸ்லாமிய அமைப்புகள் வெறிச் செயல்!
இதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் அங்கே சமூக விரோதிகளை ஒன்று திரட்டினர். தொடர்ந்து, பட்டியலின சமூகத்தவரின் கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர்.
கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடு நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு
நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் விசாரணை நிறைவு?
ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரணையில் இருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனிடம் தாம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறிய சந்தானம்,
16 ஆயிரம் கிராமங்கள்; 2022க்குள் வளர்ச்சி இலக்கு: நிர்மலா சீதாராமன்
விருதுநகர்: மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள் தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு சென்றடைகின்றனவா என்று ஆய்வு செய்ததாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் கிராம சுயேச்சை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர்...
நிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமியிடம் சந்தானம் குழு விசாரணை
நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இவர்கள் இருவரிடமும் விசாரணை முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப் படும் என்று கூறப் படுகிறது.
நிர்மலா தேவி விவகாரத்தில் வெளியான அசிங்க வீடியோ: அதிர்ச்சியில் போலீஸார்
கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல வழி நடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியிடம் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பின்னர் அவர், கிராமத்தைச் சேர்ந்த 3 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு வளையல்கள் அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து கூறினார்.
காவிரி விவகாரத்தில் வஞ்சனை இல்லை; வாஞ்சையுடன் நடக்கிறோம்: தமிழிசை
அதனால்தான், நான்கு மாநிலங்களையும் சேர்த்து வைத்து, கூட்டம் நடத்தி, ஒவ்வொருவர் கருத்தையும் கேட்டு, ஒரு நிரந்தர முடிவும் தீர்வும் எடுக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதனை தெரிவித்துள்ள தமிழிசை, பின்னர் ஏன் உடனடித் தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறினார் என்பது அவருக்கே புரிந்த உண்மை.
மக்களைப் பாதுகாக்கும் மீனாட்சி: நிர்மலா சீதாராமனுடன் புகைப்படம் பகிர்ந்து தமிழிசை டிவிட்!
இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில், காலை மதுரை மீனாட்சி கோயில் தரிசனம் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் மக்களைப் பாதுகாக்கும் அன்னை மீனாட்சியின் அருள்தரிசனம் - என்று குறிப்பிட்டிருந்தார்.
மதுரை கோயில் தீவிபத்து பகுதியை சீரமைக்க மத்திய அரசு உதவும்: நிர்மலா சீதாராமன்
இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய போது, மத்திய அரசு சீரமைப்புக்கான உதவிகளைச் செய்யும் என்றார்.