தமிழக மக்கள் சமூகங்களில் இடம்பெறும் நகரத்தார்களும், தமிழ் பிராமணர்களும் மிக முக்கியமான தொலைநோக்கு மாநாடுகளை ஒரே நேரத்தில் நடத்தியுள்ளனர்.
சென்னையில் ஜூலை 19 முதல் 21 வரை “நகரத்தார்களின் உலக வர்த்தக மாநாடு” (International Business Conference of Nagarathar 2019) நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு நகரத்தார்கள், நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் ஆற்றிய பங்கினை வெகுவாகப் பாராட்டி குறிப்பிட்டுப் பேசினார்.
கேரள மாநிலம் கொச்சி நகரில் “தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு” (Tamil Brahmins’ Global Meet 2019) ஜூலை 19 முதல் 21 வரை நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தொழிலதிபர்கள், தற்போது பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஒப்பீட்டளவில் தமிழக மக்கள் தொகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள நகரத்தார்களும் தமிழ் பிராமணர்களும் இத்தகைய சமூக மாநாடுகளை நடத்தியுள்ளனர்.