Home Blog Page 118

தவிடுபொடியான பாகிஸ்தானின் விமானங்கள்! பின்னணியில் இருந்தது இந்த இந்த்ரஜால்!

indrajaal - 2026

— ஜெய்ஹிந்த் ஸ்ரீராம் —

மாயாஜால் : இந்திய ராணுவத்தின் இந்திர ஜாலம்!

ஆப்ரேஷன் ஸிந்தூருடன் இந்தியா நிறுத்திக் கொள்ளலாம் என நினைத்து கொண்டு இருந்தவர்களுக்கு…. பாகிஸ்தான், ராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறோம் என விதண்டாவாதம் பேசி….நேற்றைய தினம் இரவு ஒரு சம்பவம் செய்தது. அத்துமீறி இந்திய பகுதியில் உள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

முன்கூட்டியே இதனை அவதானித்த காத்திருந்தவர்களுக்கு இது நல்வாய்ப்பாகி போனது .

உலக நாடுகளின் கவனத்திற்கு தீவிரவாதிகளுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது… தற்சமயம் தாக்குதல் நடத்துவது வரை மொத்தமாக விளக்கி சொன்னவர்கள் உலக நிதி அத்தனையும் நிறுத்தி வைக்க கேட்டுக் கொள்ள உலக வங்கி தற்சமயம் இதனை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதனிடையே அந்த பக்கி சொல்லி வைத்தார் போலே… சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. பொற்கோவில் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஏவுகணையை ஏவவும் செய்தது.

ஆனால் அவற்றை எல்லாம் ஒன்று விடாமல் நம்மவர்கள் பதம் பார்த்து இருக்கிறார்கள். இது பலத்த ஆச்சரியங்கள் ஏற்படுத்தியது.

உலகத்தவரின் கண்களுக்கு வேறோர் விஷயமும் கவனத்திற்கு வந்துள்ளது.

அது நம்மவர்கள் வழங்கி இருந்த ஆதாரங்களில்…‌ செயற்கை கோள் புகைப்படங்கள் இடம்பெற்ற இருந்ததில்…. அச்சு பிசங்காமல் மிக துல்லியமாக தாக்குதல் நடத்தி இருக்கும் விவரங்கள் அவர்கள் மலைக்க வைத்திருந்தது என்றே சொல்லலாம். எல்லை தாண்டாமல் இருந்த இடத்தில் இருந்தே வான் பரப்பில் இருந்து மிக துல்லியமாக தாக்கி இருப்பது தெரியவந்திருக்கிறது அவர்களுக்கு.
இரண்டு புகைப்படங்கள் தொகுப்பும் வழங்கப்பட்டிருக்க….. அதில் தாக்குதலுக்கு முன்., தாக்குதலுக்கு பின் என வகைப்படுத்தி இருந்தனர் நம்மவர்கள். அவற்றிலிருந்து தான் மேற்கொண்ட தரவுகள் எல்லாம் இருந்திருக்கின்றன.

பிபிசி நேற்று தினம் இந்திய தாக்குதலில் ஓர் மருத்துவமனை தாக்கப்பட்டதாக சொல்ல…..‌ நம் இந்திய தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட ஆதாரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் சமயத்தில் தான் மேற்படி விஷயங்கள் எல்லாம் வெளியே வந்திருக்கிறது. பிறகு வழக்கம் போல அந்த செய்தி ஊடகம் நம்மூர் தி ஹிந்து போல பம்மி நழுவி விட்டது மன்னிப்பு கேட்டு.

அடுத்ததாக நம் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்29k தாக்குதலுக்கு இலக்கானதாக சொல்ல அதுவும் தவறான செய்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

விமானப் படை மாத்திரமே இந்த தாக்குதலில் ஈடுபட்டதா என்றால் அது தான் இல்லை.

பிறகு…… தரைப் படை ராணுவத்தினரும் தங்கள் பங்குக்கு சிலவற்றை ராஜஸ்தானில் இருந்து சிறப்பான சம்பவம் செய்து இருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் பிரமோஸ் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது அதிரடி போதாதென்று அடுத்ததாக நம் இந்திய தரப்பில் உருவான… உருவாக்கப்பட்ட சில ஏவுகணைகள் இந்த சமயத்தில் அடங்கி இருக்கிறது.

முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட DRDO வால் தயாரிக்கப்பட்ட ரோடேடிங் லேசர் கைடட் பாட் களும் இதில் அடங்கும்.
அதாவது gps வழிகாட்டுதல் ஏவுகணை வேறு இது …. இந்த ரகம் வேறு.

இவை ரேடியோ சிக்னல் மற்றும் காந்த புல நுண்ணறிவு திறன் கொண்ட மின்காந்த அலைகள் மூலமும் கட்டுப்படுத்தக்கூடிய அதி நவீன ஏவுகனை ரகம் என்கிறார்கள்.
இது ஒரு மீட்டர் சுற்றளவுக்குள்ளாக தாக்குதல் வீச்சு கொண்டு இருக்கிறது. அதாவது நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து இலக்கை ஒரு மீட்டர் சுற்றளவுக்குள் தாக்க முடியும்.

இது மிக மிக துல்லியமாக வேலை செய்து அசரடித்திருக்கிறது என்பதில் தான் விஷயமே தங்கி இருக்கிறது.
இது இரண்டாவது அதிர்ச்சி.

இந்த அளவுக்கு மெய்ப்பிக்கப்பட்ட துல்லிய தாக்குதல் உலக அளவில் நாம் மட்டுமே மேற்கொண்டு இருக்கிறோம்.இஸ்ரேலிய தயாரிப்பு 2.5 மீட்டர் சுற்றளவு கொண்டது பயன் படுத்தி இருக்கிறார்கள். ஆன போதிலும் அதன் இயங்கு தளம் வேறு.

தீவிரவாத அமைப்பின் கூடாரங்கள் கட்டிடங்களை தவிர்த்து மறந்தும் பிற இடங்களில் தாக்குதல் நடக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்த பிறகே நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார்கள்.

பதில் நடவடிக்கைகளில் இயக்குகிறேன் பேர்வழி என பாகிஸ்தான் இன்று ஏவுகணை வீசி தாக்குதல் திட்டமிட்டு சுமார் பதினைந்து இடங்களுக்கு ஏவுகணையை அனுப்பி வைக்க அவற்றை வானில் வைத்தே பஸ்பம் ஆக்கி இருக்கிறார்கள் நம் தரப்பில்…. எப்படி முடிந்தது இது.

அது தான் இந்தரஜால். நம் பாரதப் பிரதமரால் முன்னெடுக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் செயல் வடிவம் பெற்ற ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவன தயாரிப்பு இது. 2019 ஆம் ஆண்டில் இதற்கான வேலை தொடங்கப்பட்டது….. இன்று பலன் தந்திருக்கிறது. தற்போதைய நிலையில் முழு விபரமும் இங்கு பகிர்ந்து கொள்வது சரிவராது. ஆனாலும்….. இன்றைய தினம் நாம் காணும் அத்தனையும் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கும் திட்ட பயன்கள்.

பாகிஸ்தான் அனுப்பிய எதுவும் நம் இந்திய எல்லையை…. நூறு மீட்டர் தொலைவை கூட தாண்டிடவில்லை. அதுபோலவே வானில் நூறு மீட்டருக்கு கீழே எதுவும் இறங்கவில்லை….. எல்லாம் பஸ்பம் ஆயின.

இதற்கு நம் இந்திய தரப்பில் இருந்து உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. அங்கு விடாமல் சங்கு ஊதிய வண்ணம் இருந்தது. எச்சரிக்கைக்கு மாத்திரமே அல்ல…. பலருக்குமே தான் என பிறகு தெரியவந்துள்ளது.

இன்று மதிய வேளையில் பல ராணுவ நிலைகள் மீது இஸ்ரேலிய தயாரிப்பு தற்கொலை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் நம்மவர்கள்.உயிர் சேதம் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் சேதாரம்…..அது நிறையவே உண்டு என்கிறார்கள்.மஹுத் அஸார் நேற்றைய தாக்குதலில் தப்பியவனை குறி வைத்தே இத்தாக்குதலில் இறங்கி இருக்கிறார்கள் நம்மவர்கள்.

பாகிஸ்தான் ராணுவம் சீனா தயாரிப்பு ஏவுகணைகள் கொண்டு தான் இன்றைய தினம் தாக்குதல் நடத்த முயற்சிக்க ….அவற்றை நம் தரப்பினர் களீபரம் செய்ததோடு சீனா தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களை முற்றிலுமாக அழித்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு உள்நுழைந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

பலூசிஸ்தான் பகுதியில் இருந்தும் தாக்குதல் ஆரம்பித்துள்ளது.

இனி பாகிஸ்தான் தரப்பில் இருந்து பாலிஸ்டிக் ரக ஏவுகணையே பறந்தாலும்…. எல்லை தாண்டாது. தவிர நம் இந்திய தரப்பில் இருந்து கடற்படையினர் களத்தில் இறங்கி விடுவார்கள் என்கிறார்கள்.

இம்முறை தப்பிப் பிழைக்க வழி இல்லை அந்த பக்கிக்கு…. வசமாய் வந்து சிக்கி இருக்கிறார்கள். சின்னாபின்னமாகி விடுவது உறுதி. ஒரு மார்க்கமாய் அமைதி கொள்ளட்டும்.

எங்கே இருக்கிறது நல்லெண்ணம்? பாகிஸ்தானுக்கு இந்தியா சரமாரி கேள்வி!

operation sindoor explained - 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம், நட்பு அடிப்படையில்தான் ஏற்படுத்தப்பட்டது. எங்கே இருக்கிறது நல்லெண்ணம்? என்று, பாகிஸ்தானுக்கு இந்தியா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. நேற்று பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து நடந்த தாக்குதலுக்குப் பின்னர் விளக்கம் அளித்தது போல், இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் குறித்து விளக்கம் அளித்தார், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி. அப்போது அவர் பாகிஸ்தான் குறித்து சரமாரியாக சில கேள்விகளை எழுப்பினார்.

வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “ஐ.நா. பாதுகாப்பு சபையில் பஹல்காம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, ​​பாகிஸ்தான் டி.ஆர்.எஃப் (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) இன் பங்கை எதிர்த்தது. இந்தத் தாக்குதலுக்கு டி.ஆர்.எஃப் ஒரு முறை அல்ல, இரண்டு முறை பொறுப்பேற்ற பிறகு இது நடந்தது… இந்தியாவின் பதில் தீவிரமடையாதது, துல்லியமானது மற்றும் அளவிடப்பட்டது” என்று நேற்றும் இன்றும் கர்னல் குரேஷியும் விங் கமாண்டர் சிங்கும் தெளிவாகக் கூறினர். “எங்கள் நோக்கம் விஷயங்களை மேலும் தீவிரப்படுத்துவது அல்ல, மேலும் தீவிரப்படுதலுக்கு மட்டுமே நாங்கள் பதிலளிப்போம். எந்த இராணுவ இலக்குகளும் குறிவைக்கப்படவில்லை; பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மட்டுமே தாக்கப்பட்டுள்ளது.” என்று தெளிவாகக் கூறினார்கள்.

vikram misry shows a photo - 2026

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் எழுப்பிய கேள்விகளும் விளக்கங்களும்…

போர்கள் நடந்தபோதும், 60 ஆண்டுக்கும் மேலாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மதித்து செயல்படுத்தியது. ஆனால் பாகிஸ்தான் வேண்டும் என்றே பல இடையூறுகளை இந்தியாவுக்கு செய்தது.

மேற்கு நோக்கி பாயும் நதிகளில் இந்தியாவுக்கு ஒப்பந்தப்படி இருக்கும் உரிமையை பயன்படுத்தி விட முடியாத வகையில் இடையூறுகளை செய்தது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம், நட்பு அடிப்படையில்தான் ஏற்படுத்தப்பட்டது. இது அந்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் கூட இருக்கிறது. அதை அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.

ஐ.நா., பாதுகாப்பு சபையில் முழு விவரங்களை இந்தியா வழங்கும். பாகிஸ்தான் சார்பில் நிறைய பொய்த்தகவல்களை பரப்புகின்றனர்.

ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் என்பது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் ஒரு பினாமி அமைப்பு என்பதை உலகம் அறியும்.

ஒரு முறைக்கு இரண்டு முறை அந்த அமைப்பு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நிலையில் தான் பின்வாங்கினர்.

சர்வதேச பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்ததை உலகம் அறியும். அந்நாட்டு அமைச்சர்களே அதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல் குறித்த அனைத்து விவரங்களையும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வழங்கும்.

பாகிஸ்தானை நம்ப முடியாது!

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, குற்றவாளிகள், அவர்களை பாகிஸ்தானில் இருந்து இயக்கியவர்கள் பற்றிய அனைத்து விதமான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தோம். ஆனால், அந்த நாடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இடையூறு தான் செய்தது. இனி மேல் பாகிஸ்தான் கூறுவதை எந்த விதத்திலும் நம்ப முடியாது.

இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்துகிறது. ராணுவ அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். தேசிய கொடியை போர்த்தியதை ‘கூட பார்க்க முடிந்தது. – என்று, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்

பாகிஸ்தானின் முயற்சி முறியடிப்பு! சரியான முறையில் இந்தியா பதிலடி!

operation sindoor contrinue - 2026

பகல்காம் பயங்கரமாக தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை இந்திய ராணுவம் வான்வெளி தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தியது. அதற்கு பின்னர் நேற்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் சுட்டு தாக்குதல் நடத்தியதில் அப்பாவி மக்கள் குழந்தைகள் உயிரிழந்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காலை பாரத ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் வழி பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் நிர்மூலமானது.

இது குறித்த பாரத அரசின் அறிக்கையினை நாட்டின் பத்திரிகை தகவல் தொடர்பு துறை பிஐபி மூலம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….

2025 மே 07 அன்று, ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என இந்தியா தனது பதிலை விளக்கமாக எடுத்துரைத்துள்ளது. இந்திய ராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி வழங்கப்படும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. 

2025 மே 07-08 இரவு, பாகிஸ்தான், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா ஆதம்பூர், பட்டிண்டா. சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க முயன்றது. ஒருங்கிணைந்த எதிர் தடுப்பு அமைப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இவை தடுக்கப்பட்டன. பாகிஸ்தானின் தாக்குதல்களை நிரூபிக்கும் இந்த தாக்குதல்களின் சிதைவுகள் தற்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன. 

இன்று காலை இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. பாகிஸ்தானைப் போலவே இந்தியா களத்தில் பதிலடி அளித்தது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது. 

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள் உள்ள பகுதிகளில், பாகிஸ்தான், மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே தூண்டப்படாத துப்பாக்கிச் சூட்டை அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு காரணமாக மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட பதினாறு அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன. இங்கும். பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தும் வரை, பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை. இந்திய ஆயுதப்படைகள் மீண்டும் மேற்கொள்ளப்படும் என வலியுறுத்துகின்றன.

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி தோல்வி; இந்தியா தகுந்த பதிலடி: ராணுவம் அறிக்கை வெளியீடு!

operation sindoor contrinue - 2026

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தது குறித்தும், இந்தியா அளித்த தகுந்த பதிலடி குறித்தும் அரசுத் தரப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

“சிந்தூர்” என்ற பெயரில் இந்தியா மேற்கொண்ட செயல்பாடு குறித்து மே 7 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தபடி, இந்த பதிலடி குறியாகவும், கணக்கீட்டோடு செய்யப்பட்டதாகவும், மேலும் முற்றிலும் தற்காப்புக்குரியதாகவும் இருந்தது.

பாகிஸ்தான் ராணுவ அமைப்புகள் குறிவைக்கப்படவில்லை என்றும், இந்திய படைகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கண்டிப்பான பதிலடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

மே 7 மற்றும் 8 இரவுகளில் பாகிஸ்தான், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க முயற்சித்தது.

இது ஜம்மு, ஸ்ரீநகர், பாக்திந்தா, லூதியானா, புஜ் போன்ற நகரங்களை உள்ளடக்கியது. ஆனால் இந்தியாவின் ஏர் டிஃபென்ஸ் மற்றும் UAS எதிர்ப்பு அமைப்புகள் இந்த தாக்குதல்களை முற்றிலும் தேற்கத்தக்க வகையில் தடுத்தன.

இன்று காலை, இந்தியா பாகிஸ்தானில் உள்ள ஏர் டிஃபென்ஸ் ராடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து அதே அளவிலான தாக்குதலை மேற்கொண்டது. லாகூரில் உள்ள ஒரு ஏர் டிஃபென்ஸ் அமைப்பு அழிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் எல்லைக்கு அப்பால் இருந்து மோட்டார்கள் மற்றும் கனமான ஏர்டில்லரி தாக்குதல்களை அதிகரித்துள்ளது. குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மேந்தார் மற்றும் ராஜௌரி ஆகிய ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் இது கடுமையாக இருந்தது.

இந்த தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர், இதில் 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். இதனையடுத்து இந்தியா எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தாக்குதல்களை நிறுத்தியது.

இந்திய படைகள், தாங்கள் தன்னிச்சையான பதிலடியில் ஈடுபடவில்லை என்பதையும், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் நியாயமற்றவை என்பதையும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

விழிப்புடன் இருங்கள்; பொய்ச் செய்திகளை நம்பாதீர்கள், பகிராதீர்கள்!

fake news - 2026

STAY ALERY, STAY VIGILANT! – விழிப்புடன் இருங்கள். பொய்ச் செய்திகளை நம்பாதீர்கள். பொய்ச் செய்திகளை பரப்பாதீர்கள். இது இந்திய ராணுவத்தின் வேண்டுகோள்.

வரும் நாள்களில் உங்கள் சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரங்கள் பெருமளவில் பரவக்கூடும். ஒவ்வொரு தகவலையும் தெளிவாக ஆராய்ந்து பார்வையிடுவது மிகவும் அவசியம்.

இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் சந்தித்தால், உடனடியாக PIBFactCheck-இல் புகாரளிக்கவும்.
WhatsApp: ‪+91 8799711259‬
Email: factcheck@pib.gov.in #OperationSindoor – என்று மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகமான பிஐபி அறிவுறுத்தியுள்ளது.

பொய்ச் செய்திகளுக்காகவே PIB Fact Check எனும் பக்கத்தை நிர்வகித்து வருகிறது. அதில், பொய்யாக பரவும் வீடியோக்கள், பழைய வீடியோக்கள் குறித்து தெளிவான தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.  அந்த வலையில் இந்தியர்களாகிய நாம் விழ வேண்டாம். மத்திய அரசு மற்றும் ராணுவத்தால் உறுதிப்படுத்தப்படாத எந்த செய்தியையும் நம்ப வேண்டாம், பிறருக்கு அனுப்ப வேண்டாம். விழிப்புடன் இருப்போம். தேசம் காப்போம்.

மதுரை நகரில் கோயில்களில் நடைபெற்ற திருக்கல்யாணம்!

thirukkalyanam near madurai temples - 2026

மதுரை நகரில் பல்வேறு கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர், யாரைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் அழியாபதீஸ்வருக்கு அம்பாளுக்கும் திருக்கல்யாணம் மணி கண்டன் பட்டர் தலைமையில் நடைபெற்றது. கோயில் நிர்வாகிகள் முருகன், சிவா, சேது மூர்த்தி ஆகியோர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

இதேபோல் மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், ஞான சித்தி விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் காந்தன் பட்டர் தலைமையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் ஆகியோர்கள், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள்.

மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆன்மீக பெண்கள் குழுவினர் சீர்வரிசை யுகடன் கோயிலுக்கு வந்தனர்.

திருக்கல்யாணம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில் ருத்ர ஹோமங்களை சிவாச்சாரியார் நடத்தினர். இதையடுத்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் (விருந்து) நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மீனாட்சி கோயில் அருகே தடுப்பு வேலி; போலீஸார் கெடுபிடியால் மணமக்கள் ஒருபுறம் குடும்பத்தினர் மறுபுறம் என தவிப்பு!

madurai temple kalyana utsav devotees - 2026

மீனாட்சி கோவில் அருகே தடுப்பு வேலி ஏற்படுத்திய போலீசார்; ஒருபுறம் குடும்பத்தார் – மறுபுறம் புதுமண தம்பதிகள் என மாலை மாற்றி வேதனையுடன் சென்றனர். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம்: போலீசார் தடுப்பு ஏற்பாடு: பொதுமக்கள் வாக்குவாதம்.

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று மதுரையில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை நேரில் காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மதுரை ஆதீனம் மடம் பகுதி சித்திரை வீதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து, பொதுமக்களின் நுழைவை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனால், திருவிழாவுக்காக வெகுநேரம் காத்திருந்து வந்த பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்போதும் வழக்கம்போல சித்திரை வீதியில் அமர்ந்து தாலி பெருக்க விரைந்த பெண்கள், அனுமதி மறுக்கப்பட்டதால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், மதுரை வண்டியூரை சேர்ந்த புதுமண தம்பதிகளின் கிருஸ்ணமூர்த்தி – நாகஜோதி பெற்றோர்களை தடுப்புகளை தாண்டி செல்ல அனுமதிக்கத்தால், புதுமண தம்பதிகள் ஒரு புறமும் பெற்றோர்கள் மறுபுறம் என புது தாலி மாற்றி மாலை மாற்றியது இரு வீட்டார் இடையே அசாதாரணமாக சூழல் நிலவியது.

குறிப்பாக தடுப்பை தாண்டி சுமார் 500 மீட்டருக்கு காலியாக இருந்த நிலையில் தடுப்புகளை தாண்டி சிறிது தூரத்தில் இரு வீட்டாரையும் மட்டும் அனுமதித்து தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து இருந்திருக்கலாம் எனவும், போலீசாரின் செயல் வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

தொடரும் ஆபரேஷன் சிந்தூர்; ட்ரோன் தாக்குதலில் நிலை குலைந்த பாகிஸ்தான்!

operation sinthoor - 2026

நேற்று பாகிஸ்தான் மீது பாரத விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது. பாரத விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தி, 9 பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்தது. இதில் அந்த முகாம்களில் இருந்த பயங்கரவாதிகள் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று பாகிஸ்தான் மீது அதானி – இஸ்ரேல் தயாரிப்பில் உருவான ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இதில், மேலும் பல பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் மீது பாரதம் நடத்திய துல்லியமான ‘‘தற்கொலை ட்ரோன்கள்’ இன்று முற்பகல் லாகூரின் ராணுவ விமான நிலையத்தில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தின.

முன்னதாக, பாரதம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அவை அத்தனையையும் முறியடித்தது பாரதத்தின் எஸ் 400 என்ற, சுதர்ஷன சக்ர பாதுகாப்பு அமைப்பு.

இந்நிலையில், சீனாவிடம் இருந்து வாங்கிய ஹெச்-க்யு 9 வான் பாதுகாப்பு அமைப்பு, இந்திய விமானங்கள் எதையும் கண்டறியவோ, எதிர்த் தாக்குதல் தொடுக்கவோ இல்லை. இந்தியாவின் விமானங்களும் ட்ரோன்களும் பாகிஸ்தானை பலமாக பதம் பார்த்தன. ஆனால், பாகிஸ்தான் இன்றூ காலை ஏவிய ஏவுகணைகள், மூன்று விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு எஸ் 400 முறியடித்து, வானிலேயே அழித்தது.

இதனிடையே, இன்று காலை லாகூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது யார் என்ற கேள்வி எழுந்தது. காரணம், இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக ட்ரோன் தாக்குதல் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அதே நேரம், பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் இன்னொரு புறத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு  பேசிய போது, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்றார்.

அப்போது அவர் குறிப்பிட்டதாவது: கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். அனைத்துத் தலைவர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்திய இந்திய ராணுவத்தினருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்கள். மேலும்  நாங்கள் மத்திய அரசுக்கும், ராணுவத்தினருக்கும் முழு ஆதரவு அளிப்போம் என்று கூறினார்கள். 

அதிகாரத்திற்காக மட்டும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடரும் என்றார் கிரண் ரிஜிஜூ. 

இதன் மூலம் ஆபரேஷன் சிந்தூர் என்பது தொடர்கிறது என்பது உறுதியானது. அதன்படி, இன்று காலை முதலே ட்ரோன்கள் மூலமான தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்; பக்தர்களுக்கு விருந்து!

madurai amman kalyana virundhu - 2026

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல் நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். திருக்கல்யாண விருந்தில் லட்சகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காலை 7:00 மணி முதல் நடைபெறும் திருக்கல்யாண விருந்தில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம் , வெஜிடபிள் பிரியாணி. தக்காளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்ட ஆறு வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. பத்து வரிசைகள் மூலம் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், குடிநீர் வசதி பக்தர்கள் உணவுக்கு பின் வெற்றிலை பாக்கு தாம்பூலம் , திருமாங்கல்ய கயிறு குங்குமம் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது. கல்யாண விருந்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருமணம் மொய் எழுதும் நிகழ்ச்சியில் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் திருமண மொய் எழுதினர்.

முன்னதாக, நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கபட்டு வருகிறது.

மதுரை பழமுதிர்ச்சோலை திருவருள் பக்தர் சபை சார்பில், தலைவர் தங்கிஸ்வரன் செயலர் வெங்டேசன்பொருளாளர் அரிமணிகண்டன் ஆகிய குழுவினர் கடந்த 25 ஆண்டுகளாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் விருந்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

திருக்கல்யாண அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பக்தர்களுக்கு 5 ஆயிரம் கிலோ அரிசி யில் சாம்பார் சாதம்,தக்காளி சாதம் வெஜிடபிள் , பிரியாணி, புளி சாதம் தயிர் சாதம் உள்ளிட்ட ஆறுவகையான உணவு வகைகள் வழங்கப்படுகிறது. மேலும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்கள் 800 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்குகின்றனர்.

கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்!

madurai meenaakshi thirukalyanam - 2026

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது

வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் தங்களின் மாங்கல்யத்தை மாற்றிக்கொண்டனர்.

முன்னதாக, மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து பல்லாக்கில் புறப்பட்டார் முருகன்.

அம்மையின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மகிழ்ச்சியுடன் பல்லாக்கில் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டார். உடன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரும் மதுரை நோக்கி புறப்பட்டனர்.

thirupparankundram murugan in meenakshi thirukkalyanam - 2026

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல்-29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரையை ஆளும் மங்கையார் அரசிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் உடன் நாளை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் இங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டனர். முருகன் வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பைப் பெற்று திருக்கல்யாண வைபோகத்திலும் மாலை பூ பல்லாக்கிலும் நாளை திருத்தேரோட்டத்திலும் பங்கேற்று சனிக்கிழமை இரவு மீனாட்சி அம்மன் கோவிலிலில் விடைபெற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் திருப்பரங்குன்றம் வந்தடைகிறார்.

முருகன் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்படும் போதும் மீண்டும் திரும்பும் போதும் வழி நெடியிலும் பக்தர்கள் அவருக்கு வரவேற்ப்பளிப்பனர்.