Home Blog Page 117

கள்ளழகருக்குச் சென்ற ஆண்டாள் மாலை!

srivilliputhur andal malai to srirangam ranganathar - 2026

ஆண்டாள் சூடிய மாலையை கள்ளழகருக்குச் சாற்றுவது ஒரு பாரம்பரிய வழிபாடு. மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அழகருக்கு சாற்றுவது வழக்கம்.

இந்த ஆண்டு, மே 12-ம் தேதி அழகருக்கு நடக்கும் சிறப்பு அலங்காரத்துக்காக, முந்தைய நாளான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து மாலை கொண்டு செல்லப்பட்டது.

இந்த வழக்கத்தின் படி, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை கள்ளழகருக்கு சாற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, அழகருக்கு சாற்றுவதற்காக, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அழகருக்கு மாலை சூட்டி கொடுக்கும் ஆண்டாளுக்கு, அழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளும் போது அணிந்திருந்த பச்சை நிற பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும்,

கெஞ்சிய பாகிஸ்தான்; தாக்குதலை நிறுத்துவதாக இந்தியா அறிவிப்பு!!

vikram misry team - 2026

பதற்றத்தைத் தணிக்க நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில், அமைதியைப் பேண இந்தியா முன் வந்ததாகவும், அதன் படி, இன்று மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் இரு தரப்பிலும் நிறுத்தப்படும் என்றும் முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். 

இந்திய பாகிஸ்தான் இரு தரப்பு ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நிலவியது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதே நேரம் பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைக் குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து நிலை குலைந்த பாகிஸ்தான், இரண்டு நாட்களாகவே இந்தியா தாக்குதலை நிறுத்த வேண்டும், அதற்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும், இந்தியாவை தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று கெஞ்சத் தொடங்கியது. 

இந்நிலையில், இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரி ஜி7 நாடுகள் கூட்டறிக்கை வெளியானது. மேலும்  அமெரிக்க மற்றும் சீன வெளியுறவு துறை செயலர், செய்தித் தொடர்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு உதவுவதாகக் கூறினர். தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா பேசியதாகவும் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூகத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடி முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசுஅதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், உளவுப்பிரிவு தலைவர்கள் அனைவருடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். மேலும், தற்போது எழுந்துள்ள சூழல்கள் குறித்தும், இதனை  எவ்வாறு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில்,  வருங்காலத்தில் இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் அனைத்தும் போராகவே கருதப்பட்டு, அதற்கு ஏற்ப பதிலடி கொடுக்கப்படும் என அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அப்போதே, இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்திக் கொள்ளப்படலாம் என்று அனுமானிக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று மாலை பாரத வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், இரு தரப்பு தாக்குதல்கள் நிறுத்தம் பற்றி அறிவித்தார். 

அதன்படி, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்துப் பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்திக் கொள்வது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 

இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொய்களை மட்டுமே பரப்புகிறது பாகிஸ்தான்! அவற்றை நம்ப வேண்டாம்! : விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

vikram misry team - 2026

பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை இன்று இந்திய அரசு உறுதிப் படுத்தியது. இன்று அதிகாலை போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் விமானப்படைத் தளமான நூர் கான், ரஹாமி யார் கான், ரஃபிகி, முரித், சியால்கோட் மற்றும் இரண்டு ரேடார் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத ஒழிப்புப் போரில் இந்தியா இறங்கியுள்ளது. கட்நத ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து துல்லிய தாக்குதலை மேற்கொண்டது. தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளில் உள்ள பொதுமக்களையும் ராணுவ நிலைகளையும் நோக்கி தாக்குதல் தொடுக்க இப்போது இது போராக மாறியுள்ளது. 

இந்நிலையில், இரு தரப்பு ராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் ராணுவத்தின் சார்பில் விங் கமாண்டர் ஆகியோர் தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

 அவ்வாறு மே.10 இன்று காலை வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தபோது குறிப்பிட்டதாவது…

”பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். போர்ப் பதற்றத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தான் பாகிஸ்தான் எடுத்து வருகிறது; பொறுப்பான முறையில் இந்தியா பதிலடி கொடுக்கிறது. 

பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்! 

எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது. இந்தியாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் வதந்திகளைப் பரப்புகிறது. எல்லைப் பகுதியில் ராணுவத்தை பாகிஸ்தான் அதிக அளவில் குவித்து வருகிறது.

பொதுமக்களைத் தாக்குவதே பாகிஸ்தானின் முக்கிய நோக்கம்!

இந்திய ஆயுதப்படைகள் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன. பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பதுதான் பாகிஸ்தானின் பிரதான நோக்கம்.  பாகிஸ்தான் இன்று அதிகாலை அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு பஞ்சாப் விமானப்படை தளத்தை தாக்க முயன்றது. மதத் தலத்தில் இந்தியா ஏவுகணைகள் வீசியதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது – என்றுஅவர் கூறினார்.

மிகுந்த கவனத்துடன் பதிலடி!

தொடர்ந்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்த போது, “பாகிஸ்தான், அதிவேக ஏவுகணையைப் பயன்படுத்தி விமானப்படைத் தளத்தைத் தகர்க்க முயற்சி மேற்கொண்டது. மருத்துவமனை, பள்ளிகளிலும் தாக்குதல் நடத்தியது. பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பது அவர்களது நோக்கம். ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. மிகுந்த கவனத்துடன் பதிலடி கொடுத்து வருகிறோம். எஸ்-400 பாதுகாப்பு கவசம் தாக்கப்படவில்லை. பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. 

பாகிஸ்தான் தனது வான் பரப்பை தவறாகப் பயன்படுத்துகிறது. எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. சியால்கோட்டில் உள்ள ராணுவத் தளம் மீது இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகள் தாக்கப்பட்டன. பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை சீண்டுகிறது. பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் – என்று சோபியா குரேஷி கூறினார்.  

நம் விமானத் தளம் பாதுகாப்பாக உள்ளது!

விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்தபோது, “இந்திய விமானத் தளங்கள் உள்ள உதம்பூர், பதான்கோட் பகுதிகளில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராணுவத் தளவாடங்கள் இருக்கும் பகுதிகளை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 

நம் விமான தளம் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான்  ஊடகங்களில் பொய் கூறுகிறது. ஆனால் நம் விமானத் தளம் பாதுகாப்பாக உள்ளது” என்று வியோமிகா சிங் குறிப்பிட்டபோது,  இந்தியாவின் சூரத்கர் விமானப்படைத் தளம் பாதுகாப்பாக இருப்பதை நிரூபிக்கும் வகையில், ‘டைம்ஸ்டாம்ப்’ உடன் கூடிய படங்களை, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார்.

பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல் மற்றும் தீவிரப்படுத்தலை உருவாக்கியுள்ளன என்று நான் ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா பொறுப்பான மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றியுள்ளது. – என்று, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பின் போது விளக்கம் அளித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் தரும் பலன்!

operation sindoor contrinue - 2026

— ஆர். வி. ஆர்

பஹல்காம்: ஆபரேஷன் சிந்தூர் தரும் பலன் என்ன?

சென்ற ஏப்ரல் 22ம் தேதி, பாகிஸ்தான் அரவணைக்கும் 4 பயங்கரவாதிகள் இந்தியாவின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்தனர். அதற்குத் தற்போது இந்தியா பதிலடி கொடுக்கிறது – ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்.

ஆபரேஷன் சிந்தூரின் முதற் கட்டமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 வெவ்வேறு இடங்களில் நிறுவப் பட்டிருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகளை ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி அழித்தது இந்தியா. அதில் ஒரு இடம் 82 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது, இன்னொன்று 15 ஏக்கர். அந்த அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப் பட்டனர்.

இந்தியாவால் கொல்லப் பட்ட பயங்கரவாதிகள் பலரின் உடல்களின் மீது பாகிஸ்தானின் கொடியைப் போர்த்தி, பாகிஸ்தானின் ராணுவ வீரர்களே அவற்றைச் சுமந்து அடக்கம் செய்ய உதவியது அந்த நாடு. “எங்கப்பன் பயங்கரவாத முகாமில் இல்லை” என்பது போல்.

பாகிஸ்தான் எதற்காகப் பயங்கரவாதக் கட்டமைப்புகளையும் பயிற்சி முகாம்களையும் தனது நாட்டிற்குள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அமைய அனுமதித்தது – அதாவது பாகிஸ்தான் நாடே அவற்றை அமைத்தது?

பாகிஸ்தான் உருவாக்கும் அந்தப் பயங்கரவாதிகள் ஒரு எதிரி நாட்டில் அவ்வப்போது புகுந்து நாசவேலைகள் புரியட்டும், படுகொலைகள் செய்யட்டும், என்று பாகிஸ்தான் கெடுதலாக நினைப்பதுதான் அதற்கான காரணம். பாகிஸ்தான் கூறு கெட்டு பாவிக்கும் ஒரே எதிரி நாடு இந்தியா. ஆகையால் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றத் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ ரீதியாக இந்தியாவுடன் நேருக்கு நேர் பெரிய அளவில் மோதினால், பாகிஸ்தானை இட்லிப் பொடியாக அரைத்து விடும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. அது அந்த நாட்டிற்கும் தெரியும். ஆகையால் பாகிஸ்தான் வேறு ஒன்றைச் செய்கிறது. அதாவது, பாகிஸ்தான் நிர்வகிக்கும் நிலத்தில் பயங்கரவாதிகளுக்கான முகாம்களை அமைத்து, அவற்றில் பயங்கரவாதிகளை உருவாக்கிப் பயிற்சி அளித்து, ஆவர்கள் மூலம் இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தியப் பொதுமக்கள் மீது அவ்வப்போது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது அந்த நாடு.

தற்போது மோடி பிரதமராகவும் அமித் ஷா உள்துறை அமைச்சராகவும் இருக்கும் இந்தியாவை பாகிஸ்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா இப்போது என்ன செய்தது என்றால்: ஆபரேஷன் சிந்தூரை ஆரம்பித்து வைத்து, தனது பதிலடி நடவடிக்கையை சற்று நிறுத்திப் பாகிஸ்தானைக் கவனித்தது இந்தியா – 9 பயங்கரவாத முகாம்களைத் தகர்த்த பின் பாகிஸ்தான் வாலைச் சுருட்டி சும்மா இருக்குமா என்று தெரிந்து கொள்ள.

ஆபரேஷன் சிந்தூரின் முதற் கட்ட நடவடிக்கையில் நூற்றுக்கும் மேலான பயங்கரவாதிகள் மடிந்த பின், எஞ்சியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தலைவர்கள் அந்த நாட்டு ராணுவத் தலைமையிடம் என்ன கேட்பார்கள்?

“இந்தியாவில் நாச வேலைகள் நடத்தவும் படுகொலைகள் செய்யவும் அந்த வேலைகளின் போது எங்களில் பலர் இந்திய ராணுவத்தால் சுடப்பட்டு மடியவும் தானே எங்களை வளர்த்து வைத்திருக்கிறீர்கள்? அப்படி மடிந்தால் அது புனிதம் என்றீர்கள், நாங்களும் அதை நம்பி இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய ரெடியாக இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தானில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், உள்ள எங்கள் முகாம்களை ஏவுகணைகள் அனுப்பித் தகர்த்து எங்களையும் நூற்றுக் கணக்கில் இந்தியா மேலோகம் அனுப்புவதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? இந்த மண்ணிலாவது எங்களைக் காக்க, நீங்கள் இந்தியாவின் மீது எதிர்த் தாக்குதல் நடத்துங்கள். இல்லாவிட்டால் நாங்கள் பயங்கரவாதிகளாக உங்கள் ராணுவத்திற்கு வேலை பார்ப்பதில் அர்த்தமில்லை.”

தனக்காகவும், தன் சேவகர்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றவும், பாகிஸ்தான் ஒன்று செய்தது. அதாவது, ஆபரேஷன் சிந்தூரின் முதற்கட்ட நடவடிக்கைக்கு எதிராக, மறுநாள் இந்தியாவின் 15 எல்லைப் பகுதி ஊர்களின் மீது, இந்தியாவின் சில விமானத் தளங்களின் மீது, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பித் தாக்குதல் நடத்த முனைந்தது பாகிஸ்தான். அவை அனைத்தையும் இந்தியா வெற்றிகரமாக வான்வெளியிலேயே தடுத்து வீழ்த்தியது. பாகிஸ்தானின் இந்த ஆரம்ப ராணுவத் தாக்குதல் முயற்சியில் அது ‘ஷேம் ஷேம்’ தோல்வி அடைந்தது.

இப்போது ஆபரேஷன் சிந்தூரின் அடுத்த கட்டத்திற்கு இந்தியா நகர வேண்டி இருந்தது. அதன்படி – வேறு வழி இல்லாமல் – பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தளங்களை இந்தியா ஏவுகணைகள் கொண்டு தாக்கியது. அந்த நாட்டில் பல இடங்களில் உள்ள வான்வழிப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் பலவற்றை – முக்கியமாக லாகூர் நகரின் வான்வழிப் பாதுகாப்புக் கவசத்தை – ஏவுகணைகள் மூலம் நாசம் செய்தது இந்தியா.

பயங்கரவாத முகாம்களை ஒன்பது இடங்களில் அடித்து நொறுக்கிய மறு நாளில், பாகிஸ்தானின் ராணுவத் தளங்கள் சிலவற்றையும் அழித்திருக்கிறது இந்தியா. பாகிஸ்தானிலோ, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலோ, இயங்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் நிஜத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் பினாமி முகாம்கள் தான். ஆகையால் இந்தியா அவற்றைத் துவம்சம் செய்தது, முகமூடி அணிந்த பாகிஸ்தானின் ராணுவ முகத்தில் குத்திய மாதிரி – இதில் முகமூடிக்குப் பின்னால் உள்ள அந்த ராணுவ முகத்திற்கு வலிக்கும். இதுபோக பாகிஸ்தான் நாட்டில் பல இடங்களின் வான்வழிக் கவசத்தை இந்தியா நொறுக்கியது, முகமூடி இல்லாத பாகிஸ்தானின் ராணுவ முகத்தில் நேராகக் குத்து விட்ட மாதிரி.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடையே ஒரு போர் ஏற்பட்டால், இந்தியாவின் கை ஓங்கி நிற்கும் என்பதை இந்தியா இப்போது பாகிஸ்தானுக்குத் தெளிவாக்கி இருக்கிறது, உலகத்திற்கும் புரிய வைத்திருக்கிறது. நாம் இதற்காக நமது ராணுவத்திற்கு ஒரு சல்யூட்டும் பிரதமர் மோடிக்கு ஒரு சல்யூட்டும் வைக்கலாம்.

இனி உலகம் இந்திய ராணுவ வலிமையின் மீது, அதன் போர்த் தந்திரங்களின் மீது, அறிந்து மரியாதை வைக்கும். அது நமது தேசத்தின் மீதான ஒட்டுமொத்த மதிப்பை, நமது வர்த்தக வலிமையை, உயர்த்தும். அதோடு இன்னும் ஒரு பலன் நமக்குக் கிடைக்கும்.

இந்தியாவைப் பார்த்து உதார் விடுவது பயனில்லை, இனி பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பினால் லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சி வரை பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்படும், என்பதெல்லாம் இப்போது பாகிஸ்தானுக்கு உறைக்கும். அதுபோக, சமீபத்தில் இந்தியா அறிவித்தது போல் இந்திய வழி நதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் செல்வதையும் இந்தியா நிறுத்தினால் – அதைச் செய்ய நாட்கள் பிடித்தாலும் – பாகிஸ்தானில் மக்களே அங்கு வீதிக்கு வந்து தண்ணீர் கேட்பார்கள். ராணுவம் மக்களை லத்தியால் அடித்தோ துப்பாக்கியால் சுட்டோ அவர்களின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்ற கவலையும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வரும். இதனால் பாகிஸ்தானுக்கு இந்தியா மீது ஒரு அச்சம் கலந்த மரியாதை ஏற்பட வழி உண்டு. அது ஏற்பட்டால், பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தை இந்தியாவில் பிரயோகிக்கத் தயங்கும்.

பைத்தியக்காரன் பத்தும் செய்வான், அதன் விளைவையும் ஏற்பான். அதனால் எந்தக் காலத்திலும் – இப்போது சில நாட்களில் கூட – பாகிஸ்தானின் ராணுவ அக்கிரமங்கள் அல்லது பினாமி பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் நிகழலாம். அவற்றை முதலில் எப்படி அளவோடு கையாள்வது, பிறகு பாகிஸ்தானை எப்படி அடிப்பது என்பதில் நம் நாட்டிற்கு அனுபவமும் ராணுவத் திறனும் உண்டு. பாகிஸ்தானுக்கு இன்னொரு நாடு என்றும் ஆயுதங்கள் தரலாம். தண்ணீர்?

எல்லாவற்றுக்கும் மேலாக, பாகிஸ்தானை அண்டை நாடாகக் கொண்டிருக்கும் இந்தியா தனக்கு இதைச் சொல்லிக் கொள்ள வேண்டும்: அடி உதவுவது போல் அடுத்த நாடு உதவாது!

Author: R. Veera Raghavan Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

காலத்தின் தேவை! சமூக ஊடகங்களின் பொறுப்புள்ள போக்கு!

operation sinthoor by india - 2026

ஆபரேஷன் சிந்தூர்’ – சமூக ஊடகங்களில் பொறுப்புள்ள போக்கு அவசியம்!

நாம் சமூக ஊடகங்களில் பதிவிடும்போது, இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம் ஆகியவற்றை எவ்வித தயக்கமும் இன்றி புகழும் அதே நேரத்தில், பாகிஸ்தானின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவதும் நல்லதே.! ஆனால் மிகவும் முக்கியமானது — நாம் பகிரும் வார்த்தைகள் பொறுப்புடன் இருக்க வேண்டியது.

உதாரணத்திற்கு, “இப்போது லாகூரை கைப்பற்றுங்கள்”, “அடுத்து இஸ்லாமாபாத்”, “மோடி இப்போது PoK-ஐ இணைக்க வேண்டும்” போன்ற பதிவுகள் வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவிர்க்கப்பட வேண்டியவை.

எல்லோருடைய பதிவுகளையும் ஆராய்ந்து பார்த்து அரசு நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை என்பதையும் நாம் நன்கறிந்திருக்கிறோம் — இதைத் தாண்டிய திட்டங்கள் மத்திய அரசுக்கு உள்ளன. ஆனால் அர்த்தமற்ற இந்த வகைச் செய்திகள் பாகிஸ்தான் சைபர் படை மற்றும் அவர்களது வழக்கமான சமூக ஊடக பிரச்சார வட்டத்தில் இருந்து எடுத்து கையாளப்படுகின்றன.

இந்தியாவில் கூட சிலர் பாகிஸ்தானின் கருத்து உருவாக்கத்திற்காக இவற்றை பயன்படுத்துகிறார்கள். பின்னர் “இந்தியா தேர்தல் இலாபத்திற்காக பதற்றத்தை ஏற்படுத்துகிறது” என்ற தவறான கண்ணோட்டத்தை (புரோபகண்டா) பாகிஸ்தான் உருவாக்குகிறது.

மேலும், போர் சூழ்நிலையில் பாகிஸ்தான் பொது மக்களுக்கு சேதம் ஏற்பட்டால் / இறக்க நேரிட்டால், (அதுவே ‘Collateral Damage’ என அழைக்கப்படுகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்று.) அந்த சமயத்தில், “சந்தோஷம்”, “இன்னும் வேணும்”, “72” போன்ற கருத்துகள் அல்லது நகைச்சுவை மீம்ஸ்களை போடாதீர்கள்.

இவை அனைத்தும் இந்தியாவின் நேர்மையான நோக்கங்களை பாகிஸ்தானால் எதிர்மறையாக கையாளும் வாய்ப்பை ஏற்படுத்தும். ஆகவே, வீரர்களை பாராட்டுங்கள். பகைவரின் சதியை வெளிக்காட்டுங்கள். பொறுப்புடன், சீரான முறையில் செயல்பட்டு, நாட்டின் நற்பெயரை காப்போம்…

குறிப்பு: இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் சந்தித்தால், உடனடியாக PIBFactCheck-இல் புகாரளிக்கவும்.

பதிவு: – ஜி.எஸ்.பாலமுருகன்.

பாகிஸ்தான் மேற்கொள்ளும் தகிடுதத்தங்கள்: வெட்ட வெளிச்சமாக்கிய இந்தியா!

vikram misry team - 2026

நேற்றைய பாகிஸ்தான் அத்துமீறல்கள் மற்றும் இந்தியா கொடுத்த பதிலடிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி. அவர் தெரிவித்ததாவது…

நேற்றிரவு சில இராணுவ இலக்குகளையும், கூடுதலாக இந்திய நகரங்கள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பைக் குறிவைத்தும் பாகிஸ்தான் எடுத்த ஆத்திரமூட்டும் மற்றும் தீவிரமான நடவடிக்கைகளுக்கு, இந்திய ஆயுதப்படைகள் விகிதாசார ரீதியாகவும், போதுமானதாகவும், பொறுப்புடனும் பதிலளித்தன.

பாகிஸ்தான் அரசு இயந்திரத்தால் பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல்களை அதிகாரப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் மறுப்பது, அவர்களின் போலித்தனத்திற்கும், புதிய ஆழங்களுக்கும் மற்றொரு எடுத்துக்காட்டு. அவர்கள் தவறான தகவல்களைத் தேடுவதில் ஈடுபடுகிறார்கள்

எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. நேற்று இரவு இந்தியாவின் 26 நிலைகளை குறி வைத்து தாக்க முயன்றது. பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது

பாகிஸ்தான் தரப்பு 300 முதல் 400 ட்ரோன் விமானங்களை பயன்படுத்தி தாக்க முயற்சி செய்தது.  பாகிஸ்தான் ராணுவம் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்தி ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது.

மதவாத பிரச்சினைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி:

பூஞ்ச் பகுதியில் குருத்வாரா ஒன்றை பாகிஸ்தான் தாக்கியது; சீக்கிய வழிபாட்டுத் தலங்களை இந்தியா தாக்கியதாக பொய்த் தகவலை பாகிஸ்தான் பரப்புகிறது. பொய்கள் மூலம் மதவாத பிரச்சினைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இந்தியா ஒற்றுமையோடு பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கிறது.

பாகிஸ்தான் தாக்குதலில் பூஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்தனர். – என்று,  வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

சிவில் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்தும் பாகிஸ்தான்!

மே 7 ஆம் தேதி மாலை 08:30 மணிக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய போதிலும், பாகிஸ்தான் தனது சிவில் வான்வெளியை மூடவில்லை. இந்தியா மீதான அதன் தாக்குதல் விரைவான வான் பாதுகாப்பு பதிலடியைத் தரும் என்பதை முழுமையாக அறிந்த பாகிஸ்தான், சிவில் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சர்வதேச எல்லை அருகே பறந்து கொண்டிருந்த சர்வதேச விமானங்கள் உட்பட சந்தேகத்திற்கு இடமில்லாத சிவில் விமானங்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல.

நாங்கள் இப்போது காட்டிய ஸ்கிரீன்ஷாட், பஞ்சாப் பகுதியில் அதிக வான் பாதுகாப்பு எச்சரிக்கை சூழ்நிலையில், பயன்பாட்டில் உள்ள விமான ரேடார் 24 இன் தரவைக் காட்டுகிறது. நீங்கள் பார்த்தது போல், நம் அறிவிக்கப்பட்ட வான்வெளி மூடல் காரணமாக இந்தியப் பக்கத்தில் உள்ள வான்வெளியில் சிவில் விமானப் போக்குவரத்து முற்றிலும் இல்லை. இருப்பினும், கராச்சி மற்றும் லாகூர் இடையே விமானப் பாதையில் பறக்கும் சிவில் விமானங்கள் உள்ளன.

மே 8-9க்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் இராணுவம், இராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்கும் நோக்கில், மேற்கு எல்லை முழுவதும் இந்திய வான்வெளியில் பல அத்துமீறல்களை மேற்கொண்டது. பாகிஸ்தான் இராணுவமும் எல்ஓசியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியது. சர்வதேச எல்லை மற்றும் எல்ஓசியில், லே முதல் சர் க்ரீக் வரை 36 இடங்களில் சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் ட்ரோன் ஊடுருவ முயற்சிக்கப்பட்டது.

இந்திய ஆயுதப்படைகள் இந்த ட்ரோன்களை வீழ்த்தின. இந்தப் பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல்களின் சாத்தியமான நோக்கம். வான் பாதுகாப்பு அமைப்புகளை சோதிப்பதும், உளவுத்துறையை சேகரிப்பதும் ஆகும்  – என்று, இந்த செய்தியாளர் சந்திப்பின் போது விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறினார்.

இப்படியே வளரவிடுவது நல்லதல்ல!

write thoughts - 2026
#image_title
  • ஜடாயு, பெங்களூர்

பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதத்தை நொறுக்கி அழிக்கும் ஆபரேஷன் சிந்தூர் போரில், இந்தியா முழுவதும் ஒன்றுதிரண்டு நமது தேசியத் தலைமையும், ராணுவமும் இணைந்து எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரே குரலில் தனது ஒட்டுமொத்த ஆதரவைத் தெரிவித்திருக்கின்றது, விதிவிலக்கான மிகச்சில தேசதுரோக அபஸ்வரக் குரல்கள் தவிர்த்து. வெளிப்படையான பாகிஸ்தானிய ஆதரவில் ஆரம்பித்து, போரைத் தவிர்ப்போம், அமைதி, மனித நேயம், இந்திய ராணுவத்தின் அத்துமீறல் என்று பலவிதமானவை இந்த அபஸ்வரங்கள்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த அபஸ்வரக் குரல்களின் நாராசம் தமிழ்நாட்டில் சற்று அதிகமான ஓசையுடன் உரத்து ஒலிக்கிறது. சீமான், வைகோ, திருமா, ஜகத் கஸ்பர், பா.ரஞ்சித் போன்ற வழக்கமான இந்திய தேசிய எதிர்ப்பு அரசியல், சினிமா பெருச்சாளிகளும், தமிழ் செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் உலாவும் சில்லறை தேசவிரோத பூரான்களும் தெரிவிக்கும் கருத்துக்கள் தான் எங்கு பார்த்தாலும் தென்படுகின்றன என்று விசனப் படுகிறார்கள் நண்பர்கள், தேசபக்த தமிழர்கள் (தினமலர் தவிர்த்து, தமிழ் ஊடகம் என்ற முடைநாற்றமெடுக்கும் சாக்கடைப் பக்கம் நான் அதிகம் போவதில்லை).

தமிழ்நாட்டின் அறிவுசீவிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் கூட்டாக கையெழுத்து போட்டு வெளியிட்டுள்ள அறிக்கை இன்னொரு அசிங்கம் (சுட்டி முதல் மறுமொழியில்). வண்ணதாசன், பவா செல்லதுரை, இமையம், ரவிக்குமார் எம்.பி., ஜி.குப்புசாமி, பெருமாள் முருகன், சாம்ராஜ், சுப்ரபாரதிமணியன், இளங்கோ கிருஷ்ணன் என்று நீங்கள் அறிந்த, அறியாத இலக்கிய மாஃபியா உறுப்பினர்களின் பெயர்கள் இதில் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் எத்தனைபேர் எழுதியிருப்பதை படித்துப் பார்த்தான்கள் தெரியவில்லை.

ஆட்டுமந்தைக் கூட்டம் போல பெயர் போட்டிருக்கவும் கூடும். எப்படியானாலும், இந்த தேசதுரோக கீழ்மகன்களின் பெயர்களை மறக்காமல் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். “இலக்கியம்” என்ற பெயரில் இந்த சனியன்கள் எழுதும் நச்சுக்கழிவை வாசிக்காவிட்டால் எந்தவிதத்திலும் நீங்கள் குறைந்துபோய்விடமாட்டீர்கள் என்பதை உணருங்கள்.

பல வருடம் முன்பு கோவை குண்டுவெடிப்பு கொடூரன் மதானியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் இதேபோல தமிழ்நாட்டின் இலக்கிய மாஃபியாவை சேர்ந்த ஒரு பெரிய கும்பல் கையெழுத்திட்டது. அந்த அவலட்சண “பாரம்பரியம்” இன்னும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்தக் கும்பலை சமரசமின்றி கண்டித்திருக்கும் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் போற்றுதலுக்குரியவர்.

தமிழ் இலக்கியத்தில் நேர்மையும், தேசபக்தியும், பண்பாட்டு உணர்வும் இன்னும் ஏதோ கொஞ்சம் ஜீவனுடன் உள்ளன என்பதற்கான சாட்சி அவர். இதில் கையெழுத்திடாமல் ஒதுங்கிக் கொண்ட பிற பிரபல எழுத்தாளர்கள், அறிவுசீவிகளும் அந்த நம்பிக்கையை மேலும் சற்று உறுதிப் படுத்துகிறார்கள்.

உண்மையில் தமிழ்நாட்டின் வெகுஜன மனநிலை இந்திய தேசியத்திற்கு எதிரானதல்ல. சொல்லப் போனால் தேசபக்தியிலும் ராணுவத்தின் மீதான மதிப்பிலும் தமிழர்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. ஆனாலும் ஏன் இப்படி நடக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் முதல் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்த மறுநாள், லக்னோவிலும், வாராணசியிலும், தில்லியிலும், மும்பையிலும், பெங்களூரிலும் மற்றும் பல நகரங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து தேசபக்த கோஷங்களுடன் அதைக் கொண்டாடினார்கள்.

ஆனால் கேவலம் ஒரு சினிமா நடிகனுக்காக தாம்தூம் என்று குதிக்கும் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரையில், இதற்காக எந்தக் கொண்டாட்டமும் நடந்தது பற்றிய செய்திகள் எதையும் நான் பார்க்கவில்லை. ஏன் இந்த நிலை? இதற்கும் குவார்ட்டரும் பிரியாணியும் கொடுத்து கூட்டிவரவேண்டும் என்ற நிலையில் தான் திமுக கொத்தடிமைகளின் சொர்க்கபூமியான தமிழ்நாடு உள்ளது போல.

பாஜகவும் மற்ற தேசபக்த சக்திகளும் இணைந்து இந்த வெட்ககரமான தமிழ்ச் சூழலை மாற்றியாக வேண்டும். இதை இப்படியே வளரவிடுவது தமிழ்நாட்டின் நலனுக்கும், பாரதநாட்டின் இறையாண்மைக்கும் சற்றும் உகந்ததல்ல.

போர் வேண்டாம்தான்! ஆனால்…

terrorism killed so many in india - 2026

போர் வேண்டாம்தான்..!
ஆனால்…
பங்கரவாதம் துளியும் வேண்டாமே!

வாழு; வாழ விடு!
என்றிருந்தால்
யுத்தங்கள் மூளப் போவதில்லை!

பிறரைக் கொல்வதே கடமையென்று
போதிக்கப்பட்ட ஈனப்
பிறவிகளுக்கு …

உயிரைக் கொல்வது தகாதெனும்
போதிமரத்தடி ஞானம்
புலப்படாதுதான்!

பிறரை வாழ விடாத போது
நீ வாழ்வதில்
உலகத்துக்கு பாரமே!

உலகம் அந்த பாரத்தை
நித்தமும் சுமந்தால்…
அது மகா பாதகம்!

உலக பாரத்தைக் குறைக்கவே
யுத்தமும் நடந்தால்…
அது மகா பாரதம்!

புயலுக்குப் பின்னே அமைதியாம்!
போருக்குப் பின்னும் அமைதிதான்!

அந்த
அமைதி மார்க்கத்தைக் காட்டும்
இது நவீன பாரதம்! 

கட்டுப்படுத்தப்படாத பயங்கரவாதம் போரை விடக் கொடியது!

operation sithoor 2 - 2026

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை தொடர்பாக, சில எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.

‘ பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மத அடையாளத்தை உறுதி செய்து கொண்ட பிறகே தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்பது பொய்த்தகவல், அதை இந்திய மக்கள் நிராகரித்து விட்டனர் ‘ என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த தீவிரவாத சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வர பாகிஸ்தான் தயாராக இருந்ததாகவும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இந்தியா ‘ ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டு விட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘ ஆபரேஷன் சிந்தூர் ‘ என்ற பெயரில் மதச்சார்பற்ற தன்மை வெளிப்படவில்லை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

‘ போரால் இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பார்கள். இது ஒரு சாதனையா? போர் மீளாத்துயர் தரும். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. மத ரீதியான மோதலுக்கும் வெறுப்பரசியலுக்கும் வழி வகுக்கும்…’ என்றெல்லாம் கவலை தெரிவித்துள்ளது அந்த அறிக்கை.

மத அடையாளம் கேட்டே தீவிரவாதிகள் சுட்டனர் என்று நாடு முழுவதிலிருந்து வெளியான பல பத்திரிகைகளும் குறிப்பிட்டுள்ளன. எல்லா பத்திரிகைகளும் ஒரே மாதிரியாக பொய் கூறிவிட்டன என்பதை விட பெரிய பொய் இருக்க முடியாது.

15 நாட்களுக்குப் பிறகே இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு துணை நின்று நடத்தும் , அதன் பிறகு அவர்களை விசாரணைக்கு அனுமதித்து, அவர்கள் சொல்லும் பொய்யை ஏற்க வேண்டும் என்றால், முழு மூடர்கள் இந்தியத் தலைவர்களாக இருந்தால்தான் சாத்தியம்.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மதச்சார்பின்மை இல்லை என்பதிலிருந்தே இந்த அறிக்கை யாருடைய குரல் என்று புரிந்து கொள்ள முடியும். இந்த ஏமாற்று வித்தையை பல ஆண்டுகளாக நாடு பார்த்து வருகிறது.

போர்க்கொடுமை, போரின் விளைவுகள் பற்றிய போதனையை பாகிஸ்தானுக்குத்தான் தர வேண்டும். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தி வந்த தீவிரவாத சம்பவங்களுக்கு அளவே இல்லை. இது போருக்கு வழி வகுக்கும் என்று தெரியாத பாகிஸ்தானுக்கு இந்த அறிக்கையை அவர்கள் அனுப்பலாம்.

கட்டுப்படுத்தப்படாத பயங்கரவாதம் போரை விடக் கொடியது.

மோடியையும் பாஜகவையும் பிடிக்கவில்லை என்றால் அரசியல் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் காரணமாக நாட்டுக்கு எதிரான மன நிலையை வளர்த்துக் கொள்வது ஆபத்தானது.

மத்திய அரசை ஆதரிக்க மனம் வராமல், ‘ இந்திய ராணுவத்துக்கு துணை நிற்போம்’ என்று கூறுவதற்கு அது போன்ற வக்கிர சிந்தனையே காரணம்.

மத்திய அரசு இல்லாமல் இந்திய ராணுவம் இல்லை. பிரதமர் சொல்லாத எதையும் இந்திய ராணுவம் செய்யப் போவதில்லை.

யார் என்ன சொன்னாலும், மத்திய அரசுக்கே துணை நிற்போம். நாட்டைக் காக்கும் மோடியின் முயற்சி வெல்லட்டும்.

  • ‘துக்ளக்’ சத்யா

IPL 2025: போர்ச்சூழலில் கைவிடப்பட்ட பஞ்சாப் (எ) டெல்லி போட்டி

dharmashala maidan - 2026

ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs டெல்லி – தர்மசாலா – 08.05.2025

ஆட்டம் கைவிடப்பட்டது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் கிங்க்ஸ் அணி (10.1 ஓவர்களில் 122/1, பிரியான்ஷ் ஆர்யா 70, பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழக்காமல் 50 ரன்) ஆட்டம் கைவிடப்பட்டது.

          பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (34 பந்துகளில் 70 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (28 பந்துகளில் 50 ரன், 7 ஃபோர்) இருவரும் அற்புதமான தொடக்கம் தந்தனர்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இரவில் பாகிஸ்தான் இராணுவம் இரவில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தத் தொடங்கியதால் தர்மசாலாவில் போர்க்கால நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே விளையாட்டுவீரர்கள், ஊடக நன்பர்கள், ரசிகர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்ப ஏதுவாக ஆட்டம் கைவிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

          விளையாட்டு வீரர்கள், ஊடகத் துறையினர் பத்திரமான பகுதிக்குச் செல்ல தர்மசலாவிற்கு அருகே உள்ள “உனா” என்ற இடத்தில் இருந்து ஒரு சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக BCCI அறிவித்தது.

அருகில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டதால், இனி வரும் ஆட்டங்கள் தர்மசாலாவில் நடக்க வாய்ப்பில்லை. இதில் ஒரு ஆட்டம் அகமதபாத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  

          ஒரு ஐபிஎல் ஆட்டம் போரால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.