Home Blog Page 116

The three letters ‘DAV’ have left a lasting imprint in the sands of time …

0
DAV School ReUnion group picture with Teachers and Students of 1986 batch - 2026
DAV School Reunion group picture with Teachers and Students of 1986 batch

A visit to the Alma Mater is always a wonderful experience, getting to meet many old Teachers is an icing on the cake; being able to share such an occasion with old classmates is a boon and when such a combination of blessings happens on the doorstep of a Ruby Anniversary it is Heavens’ gift.

The batch of DAV students who passed out in the year 1986 had such a wonderful once-in-a-lifetime opportunity on the 15th of March 2025. We were, in all, 48 classmates (Science and Commerce Groups put together) who now came from 4 continents with 12 of our teachers, some of whom also travelled from other cities, who lived this unforgettable reunion at our School Auditorium in the Girls School premises. This campus was the only school then, when we studied and the school was still DAV Higher Secondary School. Some of us had the proud privilege to witness the launch of the other group schools and be a part of the inauguration Haven programmes in the 1980’s.

It was the first time that we met after completing school, when we last walked the classes, the corridors and the campus of our school as students, preparing to step into the real world as young adults; yet, when we reunited and with our teachers joining us, it felt as though time had not passed at all.  We were all dressed in white shirts and trousers which was a close cousin of Khaki in colour, most sticking to some shade of beige. We had also recreated the School badge as it existed then and all of us proudly pinned them on; one of our classmates had even saved his old school belt and wore the same on that day. In all, it was such a festive atmosphere recreating old times.

The memories, the nostalgia and the emotions that went through our minds as we entered the school in a familiar place with some not-so-familiar additions adding a new look to the campus, like this auditorium itself, was an amazing experience. The excitement and anticipation were palpable and the day was pregnant with the promise of replaying and reliving countless memories.

The classrooms where we learned and played pranks, the rooms named Takshashila and Nalanda, the labs where we experimented and broke test tubes and pipettes or disfigured Vernier Calliper equipment, the playground where we had shared laughs and games, where we had our NCC parades, the basketball court which groomed many of our players, the corridors where we had walked with youthful energy and sat on the floor to have our lunch, the notice boards which we broke while playing cricket and almost all these places where we kneeled down for punishments —they all held a special place in our hearts and this day was an occasion when all such memories played out in front of us as if they happened just yesterday.  This had been our second home for many years, under the watchful eyes of our teachers, Vice Principal and Principal, all of whom nurtured our growth.

Amongst us, there were so many changes with grey hair, receding hairlines and expanded midriffs, however, what has not changed is the warmth and friendship, which will last this lifetime. The faces of our teachers brought out many emotions – some of them still had their bright smiles and eyes full of wisdom while some had changed what with their many years of teaching. Not often do teachers get to see the outcome of their hard work. On this day, though, looking around at the diversity of achievements, accomplishments, successes, growth and the heights that we have all scaled, the teachers witnessed how the seeds that they had sown had grown leaps and bounds.

We began the event by paying homage to a few of our classmates who had passed away in recent years. We then invited and escorted our teachers one by one on stage with students taking turns in sharing a lot of memories, anecdotes and learnings. We even gathered the courage to recall some of the tough messages and punishments that the teachers had given us, including caning received from our then Principal Mr Ram Kalia. The energy, excitement and love in the room was infectious. What made this even more memorable was the affectionate recall of many instances that our teachers had of many of us, even after several years have passed, reflecting their personal involvement in shaping not just our minds but our character and values.

The clock was set back not just when we were addressed as children but well and truly, when our Kindergarten teacher Mrs Sudha Rathna, sang the “Smile” nursery rhyme and all of us with childish enthusiasm played back the “Ha-Ha-Ha” with our hands up, tears rolling down our cheeks. At the group photograph session, we even sang the full School prayer without any mistakes, which, though seemed ritualistic then, carried so much more meaning now for us.

We ended the morning session with a sumptuous “Elai Sappadu” lunch with teachers which we had organised at Hotel Maris. We promised to stay in touch, not just amongst ourselves but with our Teachers, too. As we bade our goodbyes, there was a wonderful feeling of belonging amongst our friends along with a deep sense of gratitude for the School and the teachers who had left such a lasting impact on our lives. The reunion was not just a recall of the past, it was also a firm reminder of the enduring power of education, the lasting value systems inculcated by the Institution, the profound influence of teachers and the timeless connection between those who teach and those who learn.

We bow our heads in reverence to the teachers who made it to the event despite their advancing age – Mr Balaguru (Physical Training), Mr Suriya Narayanan (Physics and NCC), Mr Asokan, (Engineering Drawing), Mr. N Kumar (Electrical Gadgets), Mr Varadarajan (Tamil), Mrs Mahalakshmi (Tamil), Mrs Saroj Bagga (Primary School) , Mrs Soumithri (English), Mrs Geetha Balachandran (Economics), Mrs Jayashree Pillai (Mathematics), Mrs Urmila Vaidyanathan (English, History & Civics) and Mrs Sudha Rathna (Kindergarten). We have also connected with many other teachers who, owing to advanced age and other limitations have not been able to join us and we met them at their residences – Mr T T Varadakutti (Mathematics), Mr. Satish (Commerce), Mr. R Venkateswaran (Chemistry), Mrs  Vimala Srinivasan (Physics), Mrs Meera Ramadoss (English, History & Civics), Mrs Pramila Bai (Biology), Mrs. Ganga Krishnan (Biology).

We also owe a special thanks to the DAV Alumni Office – Mr Bhanu Kumar (President), Mr Megh Kalyanasundaram, Mrs Anuradha for their extensive support in making this event a grand success.

The three letters “DAV” have left a lasting imprint in the sands of time and will continue to stand as a timeless beacon of strong value systems and quality education.

ஆபரேஷன் சிந்தூர்: என்ன நடந்தது? எப்படி நடந்தது? முப்படைகளின் சார்பில் விளக்கம்!

dgmo press meet - 2026

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முப்படைகளின் சார்பில் அவற்றின் டிஜிஎம்ஓ.,க்கள் கலந்து கொண்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். 

“பயங்கரவாத கட்டமைப்புகளை முற்றாக அழிக்கவே ஆபரேஷன் சிந்தூர்” என தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. “ஆபரேஷன் சிந்தூர்” தெளிவான இராணுவக் குறிக்கோளை கொண்டே திட்டமிடப்பட்டது. பயங்கரவாதத்தை திட்டமிட்டவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மீது தக்க பழிவாங்கும் நோக்கத்துடன், அவர்களின் பயங்கரவாத அடைக்கலம் மற்றும் கட்டமைப்புகளை முற்றாக அழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  மீண்டும் மீண்டும் கூறப்படுவது ஒன்றே ஒன்று தான்.  இந்தியாவின் தீர்மானமும், பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தமாக சகிக்காத நியாயமான மனநிலையும் தான்” என்று இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் மே. 11 இன்று மாலை  விளக்கம் அளித்தனர். இந்திய முப்படைகள் தரப்பில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில், ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர். 

அப்போது, இந்தியாவின் துல்லியமான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் சேதம் அடைந்தது குறித்த வீடியோவை விமானப்படை ஏர் மார்ஷல் ஏகே பாரதி வெளியிட்டு, எவ்வாறு துல்லியத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என்பது குறித்து விளக்கினார்.  மேலும், இந்தியாவின் தாக்குதலில், முரிட்கே மற்றும் பஹவல்பூரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த வீடியோக்களையும் வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் பேசியபோது, பஹவல்பூர் மற்றும் முரிட்கேவில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமானப்படைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, பாதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு, துல்லியமாகத் தாக்கப்பட்டது. மே 9 – 10 ஆகிய நாட்களில் பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் நமது எல்லைக்குள் வந்தன. அவற்றால், நமது ராணுவ கட்டமைப்புகளை தாக்க முடியவில்லை.

கடந்த 9ம் தேதி இரவு 10:30 மணி அளவில், நமது நகரங்களில் ஏராளமான ட்ரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறந்தன. தரையிலும், எதிரிகள் நிர்ணயித்த இலக்குகளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக வான் பாதுகாப்பு கவசம் தயார் நிலையில் இருதப்பட்டது. ஜம்மு, உதம்பூர், பதன்கோட், அமிர்தசரஸ், ஜெய்சால்மர், டல்ஹவுசி ஆகிய நகரங்களில் இந்த ட்ரோன்கள் பறந்தன. அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

பயங்கரவாதிகளை மட்டும்தான் தாக்கினோம் என்பதற்கான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளோம்.  பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. பயங்கரவாதிகளை மட்டுமே தாக்குவதை உறுதியாகக் கொண்டோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை தெரிவித்துள்ளோம் . ஏப்.22ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் உங்களுக்கு தெரியும். பயங்கரவாதத்தை தண்டிக்க தெளிவான ராணுவ நோக்கத்துடன் நடத்தப்பட்டது ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. 

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த 100 பயங்கரவாதிகள் வரை கொன்றிருக்கிறோம்  என்றார் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய்.

தாக்குதல் நடக்கும்போதே பயணிகள் விமானங்கள் பறக்கவும் பாகிஸ்தான் அனுமதித்தது. பின்னடைவு இருந்தாலும், கவனத்தோடு தாக்குதலை இந்திய தரப்பில் முன்னெடுத்தோம். எந்த ஒரு பயணிகள் விமானமும் இந்திய தரப்பிலிருந்து தாக்கப்படவில்லை. நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பாகிஸ்தான் மக்களுக்கு பாதிப்பின்றி பதிலடி கொடுத்தோம் என்று மீண்டும் கூறினார் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.

சரியாக குறிவைத்து, முருட்கே பயங்கரவாத பயிற்சி மையத்தில் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாத முகாம்கள் தவிர, வேறெந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை. பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.   பாகிஸ்தானின் ஆளில்லா விமானம், ட்ரோன் மூலம் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி செய்தது. இந்திய நிலைகள் மீதான அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்தோம். என்று உறுதியாகத் தெரிவித்தார் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.

எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்தோம். மே 7 முதல் 10 வரை 40 வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டது. பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது இந்தியா தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. நமது தாக்குதல் பயங்கரவாதிகள் மீது மட்டும்தான், ராணுவத்தின் மீது அல்ல என்பதை மீண்டும் உறுதியாகத் தெரிவிக்கிறேன் என்றார் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.

கடற்படை விழிப்போடு இருந்தது என்று விளக்கம் அளித்தார் கடற்படை அதிகாரி ஏ.என். பிரமோத் மேலும் அவர், அரபிக் கடலில் இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருந்தது. ராணுவம், விமானப்படையோடு இணைந்து, ஒருங்கிணைந்த கண்காணிப்பை நடத்தினோம். தாக்குதல் நிறுத்தம் இருந்தாலும், இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருக்கிறது என்று தெரிவித்தார் கடற்படை அதிகாரி ஏ.என். பிரமோத்.

செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது, 

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில், நாம் மீண்டும் லாகூர் மற்றும் குஜ்ரன்வாலாவில் உள்ள கண்காணிப்பு ரேடார் மையங்கள் மீது இலக்கு வைக்கப்பட்டது. காலை வரை ட்ரோன் தாக்குதல் தொடர்ந்தது. லாகூர் அருகே இருந்து ட்ரோன்களை ஏவிய போதும், பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை பறக்க பயணித்தது. தங்கள் நாட்டு விமானத்தை மட்டும் அல்லாமல் சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி அளித்தது. ஆனாலும் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டுடன் செயல்பட்டது.

நமது வான் பாதுகாப்பு அமைப்பு எந்த அச்சுறுத்தலையும் சமாளித்ததுடன், ராணுவ அமைப்புகள் மற்றும் சிவிலியன் மணடலங்களை பாதுகாத்தது.இந்தியா கட்டுப்பாட்டுடன் தாக்குதல் நடத்தியது.

ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்தால் அதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பது என முடிவு செய்தோம். சக்லாலா, ரபிக்கி, ரஹீம்யார் கான் விமான படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தி, அத்துமீறலை பொறுத்து கொள்ள முடியாது என்ற தெளிவான செய்தியைஅனுப்பினோம். இதனைத் தொடர்ந்து சர்கோடா, புலாரி மற்றும் ஜகோபாபாத்திலும் தாக்குதல் நடத்தினேம்.

எந்ததளத்திலும் எந்த அமைப்பையும் தாக்கும் திறன் நம்மிடம் உள்ளது. பயங்கரவாத கட்டமைப்புகள் மட்டுமே நமது இலக்கு. துல்லியமாக தாக்குதல் நடத்தி இதனை நிறைவேற்றினோம். ஆனால், 7 ம் தேதி பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள், டுரோன்களை அனுப்பியது. அவை பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டன. 3 மட்டும் தாக்கினாலும், சிறிய அளவில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது. 

நாம் பயங்கரவாதிகள் மீது மட்டும் தான் குறி வைத்தோம். ஆனால், பாகிஸ்தான் அப்பாவி மக்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்தது. இதற்கு கடுமையான பதிலடி கொடுத்தோம். பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லாகூர் மற்றும் குஜ்ரன்வாலாவில் ரேடார் அமைப்புகளை சேதப்படுத்தினோம். பதற்றத்தை அதிகரிப்பது நமது நோக்கம் கிடையாது. பயங்கரவாதிகளுடன் மட்டுமே நமது மோதல். பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகளுடன் கிடையாது என்றார் ஏ.கே.பார்தி. 

ரகசியங்கள் பொது வெளிக்கு வருவது அவசியமல்ல!

indrajaal - 2026
  • சக்கரவர்த்தி மாரியப்பன்

பாகிஸ்தான் உக்ரைனுக்கு விற்று பணம் பெற்றதாகச் சொல்லப்படும் இரண்டு முக்கிய ஆயுதங்கள்.
● M109 Howitzers – ஹோவிட்சர்கள்
● BM 21 Grad – Boyevaya Mashina ராக்கெட் லாஞ்சர்கள்.

இவை இரண்டும் 1960-70 காலத்திய ஆயுதங்கள். இவை தவிர இதில் பயன்படுத்தும் 122 மி.மீ ராக்கெட்டுகள்.

ஹோவிட்சர்கள் பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட வகையின என்று அழைக்கப்படுகின்றன.

M109 அமெரிக்க தயாரிப்பு. நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகளை அனுப்பும் வல்லமை கொண்டது. சுமார் 250 முதல் 300 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இவை 45° கோணத்தில் குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் என்று இலக்கை திசை மாற்றிச் சுடும் வகையினது.

NATO நாடுகளுக்கு வடிவமைக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை பழைய ஆயுதங்கள் என்றும் இவற்றின் நவீன வடிவங்கள் வந்துவிட்டன என்றும் தெரிந்து கொள்ளலாம்.

BM 21 – Combat Vehicle Hail என்று பொருள். ரஷ்யா தயாரிப்பான இந்த இயந்திரம் மிக வேகமாக ராக்கெட்டுகளை அனுப்பும் திறன் கொண்டது. துல்லியமான தாக்குதல் செய்வது இதனால் முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இடைவிடாமல் குண்டு மழை பொழிய இது உதவும். ஒரு விசையில் 720 கணைகளை ஏவும் வல்லமை பெற்றது. காலம் காலமாக எதிரிகளை பயமுறுத்தும் ஆயுதம்.

இந்த போர்க் கருவிகளை மட்டுமே பாகிஸ்தான் விற்றதாகத் தகவல்கள் உள்ளன. அதே வேளையில் துருக்கியிடம் இருந்து டிரோன்களும், சீனாவிடம் இருந்து பெரும்பான்மையான ஆயுதங்களையும் அது இறக்குமதி செய்துள்ளது. போர் நடந்தால் நான்கு நாட்களுக்கு மட்டுமே ஆயுதங்கள் அதனிடம் உள்ளன என்பது சரியான வாதம் இல்லை.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ரஷ்யா ஆயுதங்களையே பாகிஸ்தான் வழங்கியது மற்றும உக்ரைனைக்கு ஆதரவான ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது இரு தரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நிலை என்பதை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் எடுத்துள்ளன. OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு நமக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை நாம் நம்ப முடியாது. #OperationSindoor விபரங்களை பொது வெளியில் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் பாக்.கின் பாதிப்பு என்ன என்பது தெரியாமல் இங்கு பலர் நாம் பின் வாங்கி விட்டோம் என்று நினைக்கிறார்கள்.

இரகசியங்கள் பொது வெளிக்கு வருவது அவசியமல்ல.

எந்த வகையிலும் இந்த முடிவு நல்லதே!

modi in meeting operation sindoor - 2026
  • ‘துக்ளக்’ சத்யா

இந்தியா பாகிஸ்தான் மோதல் எந்த வகையில் முடிக்கப்பட்டிருந்தாலும், முடிவுக்கு வந்தது நல்லதுதான்.

இந்திய ராணுவம் தன் வலிமையை பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்குமே நிரூபித்து விட்டது. அப்படியே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்தும் பாகிஸ்தானைத் துரத்திவிட்டு நம் வசமாக்கியிருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. காஷ்மீர் நமதே என்பதால், பாஜக அரசுக்கும் அந்த இலக்கு உண்டு.

ஆனால், மத்தியஸ்தம் செய்ய முயன்ற அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏனோ அதை விரும்பாததால் இந்தியாவும் தன் எண்ணத்தை தற்காலிகமாக விட்டுக் கொடுத்துள்ளது.

இந்திய ராணுவம் வலிமை வாய்ந்ததே தவிர, இந்தியா யுத்தத்தை விரும்பும் எண்ணம் கொண்டதல்ல.

எந்த இரு நாடுகள் மோதினாலும்,உலகின் மற்ற நாடுகள் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படும் என்பதால், சமரச முயற்சிக்கு மோடியும் இடம் கொடுத்தார். இது அமெரிக்காவின் வெற்றியல்ல. இந்தியாவின் சாத்வீக உணர்வின் அடையாளம்.

அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதால் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களைத் தாக்கியது இந்தியா. ஆனால், தங்கள் நாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதால் தாக்குதலில் இறங்கியது பாகிஸ்தான். இந்த வித்தியாசம் எல்லா நாடுகளுக்கும் தெரியும்.

சண்டை தொடர்ந்திருந்தால், மீள முடியாத பேரழிவை பாகிஸ்தான் சந்தித்திருக்கும். அதனால்தான், இந்தியாவைக் கட்டுப்படுத்தும்படி அமெரிக்காவிடம் அந்நாடு கெஞ்சியது.

அமைதியை ஏற்படுத்தி விட்டோம் என்ற பெருமையை அமெரிக்கா விரும்பியது. அந்நாட்டுடனான சுமுக உறவு தொடர்வது இந்தியாவுக்கு நல்லது என்பதால் மோடி அதற்கு இணங்கியிருக்கிறார். எனவே அறிவிக்கப்பட்டது போர் நிறுத்தம்.

தோல்வியில் முடியக் கூடாதே என்ற வீம்பிற்காக, போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் கொஞ்சம் தாக்குதலில் இறங்கி அற்ப மகிழ்ச்சி அடைந்தது பாகிஸ்தான். அதற்கும் உடனே பதிலடி தரப்பட்டு விட்டது.

பேச்சு வார்த்தைக்கே லாயக்கற்ற நாடு பாகிஸ்தான். தன்னால் வெல்ல முடியாது என்று தெரிந்தும் மூர்க்கத்தனத்தைக் காட்டுவது அதன் இயல்பு. அதற்கான பலனையும் அது அடைந்து விட்டது.

பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. இன்னொரு முறை இந்தியாவுடன் மோதினால் தாங்க மாட்டோம் என்று அதற்கு தெரிந்து விட்டது. அந்த வகையில் இந்தியாவுக்கு இது வெற்றிதான்.

சர்வதேச அழுத்தத்துக்கு பணிந்து இந்தியா போர் நிறுத்தத்துக்கு சம்மதித்து விட்டதாக செய்யப்படுகிற பிரசாரம் பொறுப்பற்றது.

எதற்கும் பணிய வேண்டிய நிலையில் இந்தியா இல்லை. சிந்து நதி ஒப்பந்த ரத்து அப்படியேதான் உள்ளது. விசா ரத்து திரும்பப் பெறப்படவில்லை. இன்னும் பல விஷயங்கள் பேசப்பட வேண்டியுள்ளது. அதன் விளைவுகள் பின்னரே தெரியும்.

உள் நாட்டிலேயே ஒரு மினி பாகிஸ்தான் இருப்பதை பலரது பேச்சும் நடவடிக்கைகளும் உணர்த்தியுள்ளன. மோடி போன்றவர்களின் ஆட்சியில்தான் அத்தகையவர்கள் ஓரளவாவது அடங்கியிருப்பார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவருடைய கை ஓங்கியிருப்பது நல்லது.

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (51): அந்த கோலாங்கூல நியாய:

samskrita nyaya - 2026

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் – 51

தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

அந்த கோலாங்கூல நியாய:
அந்த: = பார்வையற்றவன், கோலாங்கூலம் = காளையின் வால்.

துஷ்டர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் துன்பத்தில் சிக்க வேண்டி வரும் என்ற நீதியைப் போதிக்கும் நியாயம் இது. 

ஒரு வழிப்போக்கன் காதில் கடுக்கன், கழுத்தில் சங்கிலி, கையில் கங்கணம், விரல்களுக்கு மோதிரம் எல்லாம் அணிந்துத் தன் உறவினரின் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தான். நடுவழியில் ஒரு காட்டைத் தாண்ட வேண்டி வந்தபோது வழி தவறியதை உணர்ந்து அழத் தொடங்கினான்.

தீயவன் ஒருவன் அவனுடைய அழுகையைக் கேட்டு அங்கு வந்தான். வழிப்போக்கனின் உடலில் இருந்த பொன் நகைகளின் மேல் அவன் பார்வை சென்றது. “ஐயோ ஏன் அழுகிறாய்? என்னோடு வா. உன்னுடைய உறவினரின் வீட்டுக்கு வழி காட்டுகிறேன்” என்று கூறி அவனை நம்பச் செய்தான். சரி என்று கூறிய வழிப்போக்கன் களைப்போடு சற்றுநேரம் கண்ணயர்ந்தான். தீயவன் அவனுடைய கண்களில் விஷ இலைகளின் சாரைப் பிழிந்து அவனைக் குருடனாக்கி நகைகளைத் திருடிச் சென்றான்.  

அப்பாவியான அந்த வழிப்போக்கனின் கையில் ஒரு காளை மாட்டின் வாலைக் கொடுத்து, “இதைப் பிடித்துக் கொண்டு மாடு எங்கு போகுமோ நீயும் அதே வழியில் போ. அது உன்னை உறவினரின் வீட்டுக்கு இட்டுச் செல்லும்” என்றான். வழிப்போக்கன் அவனுடைய சொற்களை நம்பி வாலைப் பிடித்துக் கொண்டு மாடு போகும் வழியில் சென்றான்.

காளை அவனை முட்களிலும் புதர்களிலும் இழுத்துச் சென்றது. அந்தக் குருடன் வாலை விடாமல் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தானே தவிர சேர வேண்டிய வீட்டைச் சென்றடையவில்லை. இவ்விதம் தீயவர்களின் அறிவுரையை நம்பினால் ஆபத்து நேரும் என்று கூறும் சந்தர்ப்பங்களில் இந்த நியாயத்தை எடுத்துக் காட்டுவார்கள்.  

“நாய் வாலைப் பிடித்துக் கொண்டு கோதாவரியைத் தாண்டுவது போல” என்று சுமார் இதே பொருளைத் தரக் கூடிய பழமொழி ஒன்று தெலுங்கு மொழியில் உண்டு. “அல்ப சகவாசம் பிராண சங்கடம்” என்று கூறுவது போல. அற்பமான சாதனங்கள் நம்மை இலக்கில் சேர்க்காது. அற்பர்களாலும் தீயவர்களாலும் காரிய சாதனை நிகழாது. அதோடுகூட, நம்பிக்கை ஊட்டி அடைக்கலம் அளிக்கும் மனிதனிடம் கள்ளம், கபடம், மோசம், தீய நோக்கம் போன்ற குணங்கள் இருந்தால் அதோகதிதான். 

ஆசை காட்டி மோசம் செய்யும் இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளுக்குப் பிறரை நம்ப வைக்கும் திறமை பிறவியிலேயே இருக்கும். அவர்களை நம்பி ஏமாந்தவர்களின் கதைகள் பலப்பல. இன்றைக்குச் செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் நம்பிக் கெட்டவர்களின் சம்பவங்களே மிகுந்துள்ளன. பேராசையால் பெட்டிங் ஆப்களில் பணத்தைப் போட்டு ஏமாந்து, தற்கொலை செய்து கொண்டவர்களும், மோசக்காரர்களின் வலையில் சிக்கி கடனில் மூழ்கி அழிந்தவர்களும், வீட்டு மனை வாங்கும் ஆசையால் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் சினிமாவில் வாய்ப்புக்காக வாழ்க்கையை இழந்தவர்களும் கணக்கற்று உள்ளனர்.

இந்த நியாயம் அப்படிப்பட்டவர்களின் கையில் சிக்காமல் கவனமாக இருக்கச் சொல்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சரணடைந்து உலக மக்களைக் கரை சேர்ப்பவராகவும் நாட்டுக்கும் சனாதன தர்மத்திற்கும் மேலும் புகழை ஈட்டித் தருபவராகவும் விளங்குகிறார் சுவாமி விவேகானந்தர். உயர்ந்த குருமார்களை அடைக்கலம் புகுந்தவர் உயர்வைச் சாதித்தனர். அதற்கு மாறாகத் தீயவர்களை நம்பியவர் ஏமாந்தனர்.  

அரசியலில், சுயநலமின்றி தேசபக்தியோடு வாழ்ந்து, வாழ்க்கையை தேசத்திற்கே அர்ப்பணித்த சிறந்த மனிதர்களும் அமைப்புகளும் இந்தியாவில் பல தோன்றின. மறுபுறம் சுயநலத்தோடும் அதிகார தாகத்தோடும் பதவி மோகத்தோடும் தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் மனிதர்களும் அமைப்புகளும் இல்லாமல் இல்லை. மத வெறியும்  பயங்கர வாதமும் தேசத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று அறிந்தும் அவற்றில் இணைந்து செயல்படும் மனிதர்களும் அமைப்புகளும் உள்ளன.

தவறான சிந்தனையோடும் சாதிக்கச் சாத்தியமில்லாத இலக்குகளோடும் நல்லனவற்றைத்  தடுத்தும் தீயனவற்றை இறுகப் பிடித்தும் தேசத்திற்கும் தனி மனிதனுக்கும் கேடு விளைக்கும் வர்க்கங்கள் உள்ளன. அவர்களுடைய கோட்பாடுகளை மெச்சி, அவர்களை நம்பி ஏமாந்தவர்களும் இல்லாமல் இல்லை. மனிதர்களை நம்பி ஏமாந்தது போலவே சில பெரிய தேசங்களை நம்பிச் சிறிய தேசங்கள் ஆபத்தில் சிக்கிய கதைகளையும் கேட்டு வருகிறோம். 

‘அந்த கோலாங்கூல’ நியாயம், “தீயவர்களின் அறிவுரையைக் கேட்காதே. கெட்டவர்களிடம் சென்று உதவி கோராதே” என்று உரக்கச் சொல்கிறது. 

OPERATION SINDOORக்குப் பிறகு செயல்படுத்த வேண்டியது OPERATION INDOOR

msme - 2026
  • OPERATION SINDOORக்குப் பிறகு இப்போது நம் அரசு செய்லபடுத்த வேண்டியது – OPERATION INDOOR

உள்நாட்டு துரோகிகளை களையெடுக்க வேண்டியதை அரசு அமைப்புகள் கவனித்துக் கொள்ளட்டும்!

வெளிவிவகாரத் துறை / வணிகத் துறை இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது – 

  1. வருங்காலங்களில், துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகளுக்கான இந்தியர்களின் சுற்றுலாவை பாரதம் நிறுத்த வேண்டும். 
  1. சீனாவின் பொருள்கள் இந்தியாவில் குவிவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். 

அமேசான், பிளிப்கார்ட் போன்றவை வெளிநாட்டு நிறுவனங்களாயிற்றே என்று, மீஷோ (Mera shopping என்பதன் சுருக்கமாம்)  போன்ற உள்நாட்டு ஆப்களில் பொருள்கள் வாங்கத் தொடங்கினேன். அதிலும் மிகவும் தேடி, சைனா பொருள் இல்லையா, எந்த தயாரிப்பு நிறுவனம் அல்லது மார்கெடிங் செய்கிறான் என்றெல்லாம் பார்த்து, விலை சற்று முன்னேபின்னே இருந்தாலும் ஆர்டர் போடுவேன். 

ஆனால் வீட்டுக்கு வரும் பொருள்களைப் பார்த்தால்…தெரிந்து கொண்டது –  எல்லாம் சீனா பொருள்கள் தான். சாதாரண பிளாஸ்டிக் பொருள்கள் தான் இந்தியாவில் தயாராகி வருகிறது.. 

முக்கியமாகப் பார்த்தால், எல்லாமே ஒரே மாதிரியான தயாரிப்பு பொருள்கள் தான்! ஒட்டுமொத்தமாக ரொம்ப ரொம்ப மலிவு விலையில் கண்டெய்னர் கண்டெய்னர்களாக இறக்குமதி செய்து, அதை இந்தியாவில் உள்ள பல்வேறு மார்கெடிங் நிறுவனங்கள் அவர்களின் பெயரை அச்சிட்டு, அல்லது பெயரில்லாமல் தங்கள் நிறுவனத்தின் இன்வாய்ஸில் – ஓரளவு மார்ஜின் வைத்து விற்கிறார்கள்… என்பது புரிந்தது. இதை எப்படி நிறுத்துவது என்பதை அரசு யோசிக்கட்டும்! 

ஆத்ம நிர்பார் பாரத் என்பது ஒரு திட்டமாக இருந்தாலும் திடமாக இதனை விரிவு படுத்த வேண்டும். இங்கே சிறு குறுந்தொழில் ஊக்குவிப்புக்கு நிறைய நிதி ஒதுக்குகிறார்கள். MSMEல் இருந்து எனக்கும் நிறைய மெயில்கள் வருகின்றன. கடன் ஊக்குவிப்பு, தொழில்கள் விரிவாக்கம் என… ஆனால் இதனை எத்தனை பேர் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் சந்தேகம் இருக்கிறது. 

சாதாரண செல்போன் உதிரி பாகங்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் வகையறாக்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், ஹேன்ட்ஸ்ஃப்ரீ, மைக்ரோபோன், வீட்டு உபயோக பொருள்கள், பசை, ஒட்டும் டேப், சிலிகா அடிப்படை பொருள்கள் என எக்கச்சக்கம்… சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுக்கான தேவைகள் இந்திய சந்தையில் அதிகம். நாம் உற்பத்திக்கு இலக்கை நிர்ணயித்து, குறைந்த பணியாளர்களுடன், மலிவு விலையில், இதே போன்ற ஆப்கள் மூலம் அதை மார்கெடிங் – விற்பனை செய்யலாம். நியாயமான லாபமும் பெறலாம் என்ற சிந்தனை நம் இளைய தலைமுறையிடம் வளரட்டும்! ஒரு பொருள் சந்தைக்கு வரும்போதே அதை எப்படி நாமும் மலிவாகத் தயாரித்து போட்டியாளர் ஆக வேண்டும் என்பதை துடிப்புடன் யோசிப்போமே! 

அதற்கு சாதாரண தொழில்நுட்பம் சார்ந்த தரவுகளை ஐஐடி போன்றவை அரசுத் துறைகளுடன் இணைந்து அளித்து, பயிற்சியும் முயற்சியும் மேற்கொள்ளட்டும்! 

அதாவது – தொழில்நுட்பம், முதலீடு, சந்தை வாய்ப்பு இவற்றை ஏற்படுத்திக் கொடுத்து, உற்பத்தியாளரை உருவாக்கும் பணியில் அரசுத் துறைகள் இன்னும் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு, தற்சார்பை உருவாக்க வேண்டும் என்பது நம் குறிக்கோள்!

நாமே உற்பத்தி! நாமே சந்தை! மீண்டும் ஒரு சுதேசியச் சிந்தனையை பள்ளிப் பிள்ளைகளில் இருந்து உரமிட்டு வளர்ப்போமே!

ஆபரேஷன் சிந்தூர்: இதுவே வெற்றி!

operation sindoor contrinue - 2026

இதுவே வெற்றி!

ஆபரேஷன் சிந்தூர் :- 90 நிமிடங்களில் பாகிஸ்தானின் பல விமான தளங்களை குறிவைத்து தாக்கியது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துல்லிய, முன்னெச்சரிக்கை தாக்குதல் பாகிஸ்தான் விமானப் படையின் பலத்தை, தேசிய பாதுகாப்பின் ஒருங்கிணைப்பை, எதிர் தாக்குதலுக்கான தயார் நிலையை பலவீனமாக்கியதோடு, ராணுவத்தின் உறுதியை குலைத்தது.

1. நூர் கான் (ராவல்பிண்டி) :

இஸ்லாமாபாத்திற்கு அருகேயுள்ள இந்த விமான தளத்திலிருந்து தான் வான் தாக்குதல் மற்றும் ராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், ராணுவ தளவாடங்கள் போக்குவரத்து, மிக முக்கிய நபர்களின் நடமாட்டம் ஆகியவை இந்த விமான தளத்தை பலவீனமாகியதால் தடைபட்டது.

2. ரஃபிக்கி விமான தளம் (பஞ்சாப்) :-

மத்திய பஞ்சாபிலிலுள்ள இந்த விமானதளத்தின் ஓடுதளத்தை இந்திய விமானங்கள் தாக்கி அழித்ததால் இந்த விமானதளத்திலிருந்து எதிர்வினையாற்ற முடியாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

3. முரித் விமான தளம் (சக்வால் மாவட்டம்)

9000 அடி ஓடுபாதையை கொண்ட இந்த விமானதளத்தை தாக்கியதன் மூலம் ஆளில்லா வான் வழி தாக்குதலை மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தானின் திட்டம் தவிடு பொடியாகியது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் இந்த விமானதளத்தை சீர்செய்ய பல காலம் பிடிக்கும்.

4. சுக்கூர் விமான தளம் (சிந்து) :-

சமீபத்தில் திறக்கப்பட்ட விமானதளத்திலிருந்து தான் 19 படைப்பிரிவு மற்றும் செயல்பாட்டு மாற்றப் பிரிவையும் கொண்டுள்ள இந்த தளத்திலிருந்து தான் F-16 A/B பிளாக் 15 ADF விமானங்களை பாகிஸ்தான் இயக்குகிறது. இந்த தளத்தை இந்தியா தாக்கியதால் தெற்கு திசையிலிருந்து பாகிஸ்தானை தாக்க முடியவில்லை. மேலும் ஆயுதங்களின் போக்குவரத்து தடைபட்டது.

5. சியால்கோட் விமான தளம் (கிழக்கு பஞ்சாப்)

இந்திய எல்லைக்கருகே அமைந்துள்ள முதன்மையாக வீழ்த்தப்பட்ட விமானதளம் இது. இந்தியாவின் ஜம்மு மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஏவுகணைகளை செலுத்தி வீழ்த்த வியூகம் வகுத்த நிலையில், இந்திய விமானப்படை சாகசம் புரிந்து சியால் கோட் விமான தளத்தை பதம் பார்த்தது.

6. பஸ்ரூர் வானூர்தி ஓடுபாதை : (பஞ்சாப்)

சிறியதாக இருந்தாலும், அவசரகால நிலைக்காக உருவாக்கப்பட்ட ஓடுபாதை இது. அதை முற்றிலுமாக இந்திய விமான படை தாக்கியதால் செயலிழந்து போனது.

7. சுனியன் தொலைக் கண்டுணர்வு தளம் (Radar/ Support Installation)

இந்த தளத்தை தாக்கியதால் வான்வெளி கண்காணிப்பை தொடர முடியாமல் தவித்தது பாகிஸ்தான். ஆகையால் இந்திய விமான வான் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே கணித்து, எச்சரிக்கை விடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தாக்க முடிந்தது.

8. சர்கோதா விமான தளம் : –

இந்த விமான தளத்தின் மீதான தாக்குதல் மிகவும் முக்கியமானது. போர்திறஞ்சார்ந்தது. இங்கு தான் வான் வெளி தாக்குதலுக்கான பல்வேறு பயிற்சிகள், முன்னெடுப்புகள், முக்கிய தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானின் வான்வெளி தாக்குதல்களுக்கான கட்டமைப்பை இந்தியா தகர்த்தது.

9. ஸ்கார்டு விமான தளம் (கில்கிட் – பால்டிஸ்தான்)

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ள விமான தளம் இது. இந்திய எல்லைக்கருகே அமைந்துள்ள இந்த இடத்தை இந்திய விமானப்படைகள் நிர்மூலமாக்கியதோடு இல்லாமல், இமயமலையில், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள வான்வெளி செயல்பாட்டு இணைப்பை துண்டித்தது. இந்த நடவ்டிக்கையானால் அப்பகுதியில் இந்தியா பலம் பெற்றது.

10. போலாரி வான் தளம் (கராச்சி).

வான் வழி தாக்குதல் மற்றும் கடல் வழித்தாக்குதலுக்கு பயன்படும் இந்த தளத்தை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானின் எதிர்பார்ப்புகளை முறியடித்தது இந்திய விமான படை. கடல் வழி தாக்குதலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

11. ஜகோபாபாத் வான் தளம் (சிந்து-பலுச்சிஸ்தான்)

இந்த தளத்தின் மீதான தாக்குதலால் மேற்கு பாகிஸ்தானின் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

மேற்கண்ட விரைவான நடவடிக்கை மற்றும் தாக்குதல்கள் தான் ஆபரேஷன் சிந்தூரின் சாதனைகள். நாங்கள் பலசாலிகள் என்று விமானப்படையின் பலத்தை தம்பட்டம் அடித்து கொண்டிருந்த பாகிஸ்தானின் குகைகளுக்குளே சிங்கம் போல் நுழைந்து அழித்து ஒழித்து சாதித்தது இந்திய விமானப்படை. தொலைகண்டுணர்வு தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை தளங்கள் என பாகிஸ்தானின் வான் வெளி நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது இந்திய விமானப்படை. இன்றும் எதிர்காலத்திலும் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தானின் விமானப் படை.

இந்தியாவின் திறன், தொழில்நுட்பம், நவீன ஆயுதங்கள், கருவிகள், திட்டமிடுதல் ஆகிய அனைத்தும் ஆசியாவின் மிகப்பெரிய சக்தி இந்தியா என்பதை உணர்த்தியுள்ளது. இந்தியாவை சீண்டினால் அதன் விளைவுகள் எதிரிகளை அழித்து விடும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியுள்ளது.

பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை இந்தியா நிறுத்தியிருந்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்கினாலோ, பயங்கரவாதிகளுக்கு துணை புரிந்தாலோ, அது இந்தியாவின் மீதான போர் என்பதாக தான் கருதப்படும் என்றும் தீவிர தாக்குதலை இந்தியா மேற்கொள்ளும் என்று இந்தியா குறிப்பிட்டிருப்பது தற்போதைய நிலை என்பது புரிந்துணர்வு தான் போர் நிறுத்தம் அல்ல என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.

வாழ்க இந்தியா! வெல்க இந்தியா!

  • நாராயணன் திருப்பதி,
    மாநில துணைத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி.

What a poignant sight!

0
operation sindoor explained - 2026

Narasimhan Vijayaraghavan

Col Sofia Qureshi and Wing Commander Wyomilka Singh from the Army and Air Force are now household names. What presence! Whoever conceptualists this team with Foreogn Secretary Vikram Misri at the helm and Commodore Raghu Nair too was spot on, like the nine strikes on the terror camps in Pakistan on 7th May,2025. It was a strategic Operation Sindhoor with young women officers at the Press Meets with a secular finesse.

Modi’s New India is distinct and different. The enemy ‘now’ knows that cross border terrorist misadventures will not be met with just strong statements of intent but firm and decisive action. After 2016-Surgical Strikes and 2019- Balakote Strike- Pahalgam did not get a similar response. Operation Sindhoor was more focused and on a wider scale to terminate 100 plus terriers literally attached as regiment of the Pakistan Army.

The two young ladies sat and stood tall as they read out vernacular and English versions of the Armed Forces actions on the ground. Just as our Operation was ‘measured and non excalatory’ the read outs were pointed and professional with not a shred of any jingoistic element. It was technical but sharp shooting as the air action was.

While Pakistani briefings were peddling lies as ‘ 5 Rafles downed’ ( proof from their Defence Minister was to refer to wild and imaginary social media posts). And destruction of Airbases in Haryana, Punjab ‘ demolished as false with contemporary photographic evidence from the two women’ made secure and joyful viewing. One felt proud to be Indian!

Operation Sindhoor is a proud moment in India’s military history. It is an ongoing exercise notwithstanding the ‘understanding’ over ‘stoppage of firing’ while the Directors General of Medical Operations engage in interaction come 12th May,2025 at 12 noon.

We have not seen the last of these two ladies yet. Pakistan can never ever be trusted to keep its word. We have lived with their everlasting perfidy for decades on end. The breaches in ‘understanding’ within hours of its going Live was typical of that nation. We were therefore ready not complacent.

There is so much to wax eloquent about our Armed Forces’ unified action. Operation Sindhoor was no one-off strike. It is unique and hugely impactful. Bharat put Pakistan in its isolated place and space. That the terrorists are part of the Pakistan army has been exposed for the world to see.And the two girls on stage every day added to the uniqueness of a resonating New India!

A poignant sight that shall remain etched in our memories for ever to come. Bravo ladies! You have given us more to cheer than just the efficacious Air Defence Systems and the accuracy of our missives.

In such an evolving scenario with uncertainty writ large with Pakistan’s untrustworthy state with a weak government and rogue army at the helm under a Mad Maulana, we in India owe it to our Armed Forces and two ladies symbolizing it, to feel safe and secure!

பற்றி எரியும் பாகிஸ்தான்! அமைதி நடவடிக்கையை மீறியதால் தொடரும் இந்தியத் தாக்குதல்!

operation sinthoor - 2026

அமெரிக்காவின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக இந்தியத் தரப்பு தெரிவித்திருந்த நிலையில்,  அமைதியைச் சீர்குலைக்கும் வகையில், சொன்ன வாக்கை மீறி இன்று மாலை பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்து நடத்தியது. இதை அடுத்து இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.  

துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும். – இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் சமூகத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார் .

தாக்குதல் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறீத் தாக்குதல் நடத்தியது, இது இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்திய ராணுவம்  கொடுத்த பதிலடியில், பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ ரீதியான தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்குப் பிறகு முடிவுக்கு வரும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார். இதனிடையே, பாகிஸ்தான் கெஞ்சியதன் அடிப்படையில் அமைதி ஏற்படுத்தும் விதமாக, தாக்குதல்களை இந்தியா நிறுத்திய நிலையில், முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் தமது பதிவில் “சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

ராணுவ ந்டவடிக்கையை நிறுத்தும் அறிவிப்புகள் வெளியான அடுத்த 3 மணி நேரத்துக்குள், ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலைத் தொட்ர்ந்தது.  கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடர்ந்தன.  பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதாகத் தகவல் வெளியானது. 

பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. ஜம்மு, ரியாஷி ,ஸ்ரீநகர், ரஜோரி, கந்தர்பால் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, மாதா வைஷ்ணவி தேவி கோயில், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையக,ம் ஆகியவற்றையும்  பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. ஆர்எஸ்புரா பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால், உடனே மின்சாரம் நிறுத்தப்பட்டது. 

அதேபோல் குஜராத்தின் கட்ச் பகுதியில் பல ட்ரோன்கள் வந்துள்ளது.   இதில் 3 டுரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாபின் மோகா மாவட்டத்திலும் ட்ரோன் தாக்குதல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  பசில்கா, பாட்டியாலாவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இதனிடையே, பாகிஸ்தான் அத்துமீறிய நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசின் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறியபோது,  இன்று  மாலை போடப்பட்ட தாக்குதல் நிறுத்த நடவடிக்கையை பாகிஸ்தான் மீறியது. அதற்கு தகுந்த பதிலடியை ராணுவம் கொடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.  

இந்நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

குருவித்துறை, சோழவந்தான் கோயில்களில் குருப் பெயர்ச்சி பூஜை!

gurupeyarchi kuruvithurai - 2026
#image_title

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி முன்னேற்பாடுகள்!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்திரை ரத வல்லப கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குரு பகவான் சன்னதியில் வருகின்ற 11ஆம் தேதி காலை 11 மணியளவில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்: மேஷம் மிதுனம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியது முக்கியமாகும். விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்வர் குரு பெயர்ச்சி நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில் குரு பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள் அமைத்து தருதல் மற்றும் குருவித்துறை முதல் குருபகவான் கோவில் வரை மற்றும் மதுரை மாவட்ட எல்லையான சித்தாதிபுரம் முதல் கோவில் வரை அனைத்து பகுதிகளிலும் குடிநீர் ஏற்பாடுகள் அமைத்தல் காவல் துறையினருக்கு வெப்பத்திலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் வகையில் நிழல் செட்டுகள் அமைத்தல் கோவில் பகுதியில் தடையின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தல் முக்கியமாக கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருதல் மருத்துவ உதவிகள் அவசரகால மருத்துவ வானங்களை நிறுத்துதல் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குரு பகவான் சந்நிதி வரை தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து, வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோருடன் எம்.எல்.ஏ வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.

சோழவந்தான் விசாக நட்சத்திரக் கோவிலில்…

மதுரை மாவட்டம், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாதசாமி ஆலயத்தில் மே.11.ம் தேதி மாலை 4.30..மணிக்கு குருப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறுகிறது.

இக் கோயிலில் ஸ்தல நாதர் ராகுவுக்கு அதிபதியாவார். ஸ்தல மூர்த்தி சனீஸ்வரலிங்கம், சனி,ராகு குருபகவான் இணைந்த புனித திருக்கோயில் ஆகும். இக் கோயிலில் பல ஆண்டுகளாக, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி யாக பூஜைகள் நடைபெறுகிறது.

மே.11..ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, குருபகவானுக்கு அபிஷேகமும், நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை  , தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில், கணக்கர் சி. பூபதி ஆகியோர்கள் செய்து வருகின்றனர்.

இதேபோல் மதுரை அண்ணாநகர் தாசில்தார் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் மே.11..ம் தேதி ஞாயிறு காலை 9.. மணிக்கு குருப் பிரீத்தி ஹோமம், நவகிரக ஹோமம், அபிஷேகம், பரிகார அர்ச்சணைகள் நடைபெறும். நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்