இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் ஐந்து வாசல் ஐயனார் விவசாயிகள் நலச் சங்கத்தில் விவசாயிகளுக்கு தென்கரை கிராமத்தில் காந்தி கிராம பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகள் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, நாற்றங்கால் மேலாண்மை, உர வேளாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கி வருகின்றனர்.
இதே போல் இங்கு உள்ள தென்னையின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கு அரசு அளிக்கும் மானியம் பற்றியும், இப்போது தென்னையில் அதிகரிக்கும் வெள்ளை ஈயை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றியும், தென்னை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றுவதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினர். வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு மஞ்சள் ஒட்டும் பொறி குறித்து செயல் விளக்கமும் செய்து காட்டினர்.
விவசாயிகளுக்கு போர்டாக்ஸ் கலவை குறித்து செயல் விளக்கம் குறித்து முக்கியத்துவம் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும், போர்டாக்ஸ் கலவை எந்தெந்த பயிர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கினர்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். தேசிய ஊட்டச்சத்து வாரம் குறித்து விழிப்புணர்வு ஊத்துக்குளி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்து முக்கி தத்துவம், கார்போ ஹைட்ரேட் பற்றியும், புரதம் பற்றியும், ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் பிரச்சினைகள் பற்றியும் விளக்கினர்.
ஊட்டச்சத்து மிகுந்த சத்துமாவு புட்டு அவித்த கொண்டைக்கடலை முளைகட்டிய பச்சைப் பயிறும் இங்குள்ள மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். விவசாயிகளுக்கு முட்டை மிதப்பு முறை குறித்து செயல் விளக்கம் விவசாயிகளுக்கு முட்டை மிதக்கும் முறையின் மூலம் தரமான விதைகளை பிரித்து எடுக்கும் முறை பற்றியும், இதன் பயன்கள் பற்றியும் எடுத்துக் கூறி பேசினர். இதன் விளக்கமும் செய்து காட்டினர்.
இதில் பங்கேற்று, பேரா ஜெயிந்த், இந்துராணி, பபிதா, முத்துலட்சுமி, கோமுகி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
பாட்டாலே வையத்தைப் பாலிக்க வந்ததோர் தலைவன் - தங்கத் தலைவன் - தம் ஏட்டாலே தீயவர் கூட்டத்தை ஓட்டிய புலவன் - சிங்கப் புலவன் - அவன் பதந்தொட்டு பண்பான நெறிபட்டு என்றுமே வாழ்வோம் - மண்ணில் வாழ்வோம் - மிக்க இடர்பட்டு நொந்தாலும் இன்னலால் வெந்தாலும் வீழோம் - நாங்கள் வீழோம் - அந்தத் தலைவன்தான் தங்கத் தலைவன்தான் சிங்கப் புலவன்தான் - அவன் யாரு? பாரதி பாரதி பாரதி பாரதி பேரு - அவன் பேரு.
நாட்டின்மேல் பாசத்தை நன்றாக வைத்திடச் செய்தான் - நம்மைச் செய்தான் - நம்ம வீட்டிலும் வெளியிலும் பெண்களைப் போற்றிடச் செய்தான் - நன்மை செய்தான் - அவன் பேச்சாலும் மூச்சாலும் தமிழ்மொழி ஒங்கிடச் செய்தான் - தவம் செய்தான் - அவன் எழுத்தாலும் கருத்தாலும் தீமைகள் நீங்கிடச் செய்தான் - விதி செய்தான் - அந்தத் தலைவன்தான் தங்கத் தலைவன்தான் சிங்கப் புலவன்தான் - அவன் யாரு? பாரதி பாரதி பாரதி பாரதி பேரு - அவன் பேரு.
தூக்கத்தில் மூழ்கிய பாரதம் எழுப்பிய தீரன் - கவிதை வீரன் - நல்ல ஆக்கத்தில் நம்மவர் சிந்தை செலுத்திய ஆர்யன் - சுத்த வீர்யன் - கெட்ட வேற்றுமை பேசியே கெடுதிகள் செய்வோர்க்கு காலன் - காக்கும் வேலன் - மக்கள் ஒற்றுமை ஓங்கவே தம்வாழ்வைத் தந்திட்ட நேசன் - சக்தி தாசன் -அந்தத் தலைவன்தான் தங்கத் தலைவன்தான் சிங்கப் புலவன்தான் - அவன் யாரு? பாரதி பாரதி பாரதி பாரதி பேரு - அவன் பேரு.
மானசீக குருநாதர் மகாகவி பாரதியின் நினைவுநாளை ஒட்டி எனது கவிதாஞ்சலி.
பாரதத்தில் அண்மைக் காலமாக ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் அதிகரித்திருப்பது கவலை தரத்தக்க ஒன்று. இது குறிப்பாக, குறி வைத்துத் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதச் செயல்களாக வெளிப்படுவது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டுகிறது. இவ்வாறு எண்ணுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
கடந்த 3 மாதங்களில் ரயில்களைக் கவிழ்க்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை 18 முறை ரயிலைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடந்துள்ளதாகவும், ரயில்களைக் கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்கள், சைக்கிள்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் சிமென்ட் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் மட்டும் 15 முறையும், செப்டம்பர் மாதம் முதல் பத்து நாட்களில் இதுவரை 3 முறையும் ரயிலைக் கவழ்க்க முயற்சிகள் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அதிகம் என்பது தெரியவந்துள்ளதால், இதன் பின்னணியில் எத்தகைய சதி வேலைகள், சதிவலைப் பின்னல்கள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும் பணியும் உளவுத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ளன. உ.பி.க்கு அடுத்த படியாக, பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ம.பி.,ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்துள்ளன. குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில் இத்தகைய முயற்சிகள் நடப்பது, மிகப் பெரும் கவலைகளை நாட்டில் ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் சபர்மதி ரயில், கான்பூர் அருகே தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்ட பாறாங்கற்களைப் போன்ற கனமான பொருளின் மீது மோதியதில் 22 பெட்டிகள் தடம்புரண்டன. அதிர்ஷ்டவசமாக இதில் பயணிகள் எவரது உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிலர் லேசான காயங்களுடன் தேறினர்.
இது நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தற்போது கான்பூரில் மீண்டும் பயணிகள் செல்லும் ரயிலை கவிழ்க்கும் நோக்கில், தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன் தினம், அதே கான்பூர் பகுதியில் தற்போது தண்டவாளத்தில் காஸ் சிலிண்டருடன், பெட்ரோல் கேன்கள், தீப்பெட்டிகள் இவற்றுடன் அபாயகரமான பொருள்களும் வைக்கப்பட்டு ரயிலைக் கவிழ்க்கவும் பெரும் விபத்து ஏற்படச் செய்யவும் முயற்சி நடந்துள்ளது.
உ.பி.,யின் பிரயாக்ராஜில் இருந்து ஹரியானாவின் பிவானிக்கு, காலிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு, வேகமாக சென்று கொண்டுஇருந்தது. கான்பூருக்கு அருகே, சிவ்ராஜ்பூர் என்ற இடத்திற்கு வந்த போது, ரயிலின் ஓட்டுநர் தீவிரக் கண்காணிப்புடன் ரயிலை இயக்கியபோது, ரயில் பாதையில் கேஸ் சிலிண்டர் உள்பட சில பொருள்களை கண்டு அதிர்ச்சி அடைந்து. சமயோசிதமாக செயல்பட்டு ரயிலை உடனடி பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனால் வேகமாக வந்து மோதி அதனால் ஏற்படும் மிகப்பெரும் விபத்தும் சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது. உடனடி பிரேக் மூலம் ரயில் மெதுவாக வந்து தண்டவாளத்தில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில் காஸ் சிலிண்டர் துாக்கி வீசப்பட்டது. சிலிண்டர் வெடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிலிண்டர் மீது லேசாக இடித்து கீழே தள்ளியதால் பெரு விபத்து ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கும் கான்பூர் உள்ளூர் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து, உ.பி., சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல் கமிஷனர் ஹரிஷ் சந்திரா தெரிவித்தபோது, தண்டவாளத்தில் சமையல் காஸ் சிலிண்டர் இருப்பதை பார்த்தவுடன், ரயில் டிரைவர், ‘எமர்ஜென்சி பிரேக்’ போட்டார். எனினும், சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. அதிர்ஷ்டவசமாக, சிலிண்டர் வெடிக்கவில்லை. அந்த சிலிண்டரை பறிமுதல் செய்துள்ளோம். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் குண்டுகள், தீப்பெட்டிகளை கைப்பற்றினோம்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதித் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. எனினும் அவர்களின் இந்த திட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த நிலையில், சுவீட் பாக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதை வைத்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ரயில்வே போலீசார், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். மேலும், தனிப்படை போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதில் சில குறிப்பிட்ட மத அமைப்பைச் சேர்ந்தோரிடம் விசாரிக்க உள்ளோம். இந்த நாசவேலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – என்று அவர் கூறினார்.
இது நாள் வரையில் சிறுவர்கள் விளையாட்டுக்காக வைக்கப்பட்டது மனநிலை சரியில்லாதவர்கள் கற்களை வைத்திருக்கிறார்கள்; Youtube வீடியோக்கள் ரிலீஸ்காக யாரோ இளைஞர்கள் சிலர் இவ்வாறு ரயில் பாதைகளில் அபாயகரமான பொருட்களை வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகளில் கூறப்பட்டு வந்ததை இப்போது நாம் தூசு தட்டி அவற்றின் பின்னணியை குறித்து ஆராய வேண்டியுள்ளது. ஏனென்றால் இவை ஒரு குறிப்பிட்ட ரீதியில் முக்கியமாக ரயில்களை குறி வைத்து ஒரு குறிப்பிட்ட கும்பலால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல் என்ற அனுமானத்துக்கு வர வேண்டி உள்ளது.
வந்தே பாரத் ரயில்களின் மீது கற்களை வீசும் போது அவ்வாறு கற்களை வீசியவர்களை பிடித்து கடுமையான தண்டனைகள் அளித்து அதனை பெரிய அளவில் செய்திகளில் பரப்பி விட்டிருந்தால் மற்றவர்களுக்கு அது குறித்த அச்ச உணர்வு சிறிதேனும் வந்திருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் மென்மையான போக்கை கடைபிடித்தது, இது போன்ற தேச துரோக செயல்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாகவே அமைந்து விடும் என்பதையே, ரயில் பாதைகளில் தற்போதைய கான்கிரீட் ஸ்லாப்புகள் வைக்கப்படுவதும் சிலிண்டர்கள் வைக்கப்படுவதும் நமக்குக் காட்டுகிறது.
ஏற்கெனவே ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடக்க கட்ட விசாரணையில் இதுபோன்று ஏதோ ஒரு சதி செயல் என்றவாறு வெளிவந்திருந்ததையும், ஆனால் அதன் பின்னர் விசாரணை குறித்த தகவல்கள் முழுமையாக வெளிவராமல் போனதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முக்கியமாக ரயில்வேயில் பணிபுரியும் சிலரின் நிர்வாகத் தவறு எனும் வகையில் செய்தி வெளியானாலும், பலரது உயிரிழப்பு தந்த பாடமும் இது போன்ற பயங்கரவாதப் பின்னணியில் அல்லது தொடர்பில் உள்ளவர்கள் ரயில்வே துறையில் பணியாற்றுவதால் சில சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பானதே!
இவ்வாறு ரயில்களை குறி வைத்து தாக்குவது நிச்சயம் ஒரு தேசத்துரோக செயலே. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக நடத்தப்படும் பயங்கரவாத செயல்களுக்கு இம்மியளவும் குறையாத ஒரு பயங்கரவாத செயலே!
2002 அக்ஷர்தாம் கோயில் குண்டுவெடிப்பு, பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு இவை போன்ற பயங்கரவாதச் செயல்களில் பின்னணியில் இருந்த பராதுல்லா கவ்ரி எனும் மத பயங்கரவாதி, இந்தியாவின் நாடி நரம்பாக இருக்கக் கூடிய அடிப்படைக் கட்டமைப்புகளைத் தகர்க்கும் சதிவேலைகளைச் செய்யுங்கள், ரயில்வே, ஆயில் பைப் லைன், கேஸ்பைப்லைன், மின்சார பைப்லைன் ரோடு நெட்வொர்க் இவை போன்றவற்றில் தடைகளை ஏற்படுத்துங்கள் என்று பகிரங்கமாக சொல்லி அவன் சார்ந்த மக்களுக்கு அழைப்பு விடுத்ததையும், இவற்றுக்கு பெரிய அளவில் ஆயுதங்கள் தேவையில்லை நாம் விரைவில் ஆட்சி அமைப்போம் என்று மத ரீதியாக அழைப்பு விடுத்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்க்கிறது.
ப்ரயாக் ராஜ் என்பது முக்கிய புண்ணியத் தலம், குறிப்பாக இந்துக்கள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். ஆன்மிக சுற்றுலாவாக பிரயாகைக்கு பயணிப்போர் அதிகம் உள்ள அந்த ரயிலைக் குறிவைத்து தாக்குதல் நடத்த சதிவேலையில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் ஒன்று. ரயில்களில் எல்லா தரப்பு மக்களும் பயணிப்பார்கள். இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் உள்பட அனைத்து மதத்தவர், ஏழைகள் பணக்காரர்கள், வணிகர்கள், நாட்டின் சட்டங்களை இயற்றும் எம்.பி. எம்.எல்.ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயணிப்பார்கள் அவர்களை மனதில் கொண்டு குறி வைத்து ரயில்கள் மீது தாக்குதல் தொடுப்பது இந்த நாட்டின் மீதான பெரும் தாக்குதலே.
ரயில்களில் இந்தியர்கள் தான் பயணிப்பார்கள் என்று சொல்ல முடியாது வெளிநாட்டவரும் சுற்றுலாவாக வருபவர்களும் ரயில்களில் பயணிக்கிறார்கள் என்பதால் இதனை அவ்வளவு எளிதில் கடக்க முடியாது. காளிந்தி விரைவு ரயிலில் நடந்த சதி வேலையில் தடய அறிவியல் துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது இந்த நிகழ்வின் விபரீதத்தையே நமக்கு காட்டுகிறது .
வாராணசி – சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் கிடந்த பாறையில்இடித்து
22 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ், கனமான பொருள் மீது இடித்திருக்கிறது. அந்தப் பொருளை எடுத்திருக்கிறோம். பாதுகாப்பு கருதி அது குறித்து தெளிவாக வெளியில் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்ததை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின்படி பார்த்தால் இது போன்ற குற்றங்களை செய்து அவர்களுக்கு உபா சட்டத்தின் பேரில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால் நம் நாட்டு நீதிமன்றங்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடும் போக்கே மிகப் பெரும் அளவில் இருந்து வருகிறது. நீதிமன்றங்கள் இதன் மீது இறுகிப் பிடித்தால் மட்டுமே சதிச் செயல்களால் திட்டமிட்ட வகையில் செய்யப்படும் குற்றங்கள் தடுக்கப்படும் என்பது மட்டும் உறுதி.
வெளிநாடுகளில் இதுபோன்று நாட்டின் பொதுக்கட்டமைப்பை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். அதுபோல் இங்கும் வா வேண்டும். நாட்டின் பொதுக் கட்டமைப்புகளை சேதப்படுத்துபவர்களை தண்டிப்பதற்கு என தனி சட்டம் வேண்டும். அதற்கான தனி கோர்ட் அமைக்கப்பட வேண்டும். இதில் பெயில் கொடுக்கக் கூடாது. க்ரிட்டிக்கல் இன்ஃப்ராஸ்டக்சர் பில் – கொண்டுவரப்பட வேண்டும் என்பதையே நாட்டின் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்கள் முன் வைக்கிறார்கள்.
ரயில்வே அமைசகமும் மத்திய அரசும் இந்த விஷயத்தின் தீவிரத் தன்மை கருதி விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம் . மேலும் இது போன்ற சதி செயல்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறித்த விவரங்கள் புகைப்படங்களுடன் வெளிப்படையாக ஊடகங்களில் பகிரப்பட வேண்டும். வெறுமனே நடிகைகள், நடிகர்களின் போட்டோக்கள் செய்திகளை மட்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்ற ஊடகங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கவனமும் பற்றும் கொண்டு யார் செய்கிறார்கள் என்ன பின்னணியில் செய்கிறார்கள் என்ற புகைப்படங்கள், தெளிவான விவரங்களையும் செய்திகள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
திருநெல்வேலி விருதுநகர் அருப்புக்கோட்டை வழியாக இயங்கும் புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஒரு சாதாரண படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டியும், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலில் ஒரு மூன்றடுக்கு குளிர் சாதன பெட்டிக்கு பதிலாக முன்பதில்லா பெட்டி ஒன்றும், ஒரு முன்பதிவு படுக்கை வசதி பெட்டி நீக்கப்பட்டு பொது பெட்டி மொத்தம் நான்கு சேர்க்கயிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.
புதுவை – குமரி விரைவு ரயிலில் 25.01.2025 முதலும், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலில் 18.01.2025 முதல் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
இதுபோல் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் மற்றும் சிலம்பு அதிவிரைவு ரயில் கூடுதல் பொதுப்பட்டிகள் இணைக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது கொல்லம் சென்னை எழும்பு கொல்லம் இடையில் 17 பெட்டிகளுடன் இயங்கும் விரைவு ரயில் கூடுதலாக இரண்டு புது பெட்டிகள் இணைத்து இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்
நாடு முழுதும் ரயில்களில் முன்பதிவில்லா இருக்கை (பெட்டிகள்) அதிகரிக்க கோரி சுமார் 3500 மனுக்கள், 2024,ஜுலை மாதத்தில் ரயில்வேவுக்கு அனுப்பிய நிலையில் அதன் பலனாக, தென்னக ரயில்வேயில் ஒவ்வொரு ரயிலிலும் 4 பொது இருக்கை பெட்டிகள் இருக்குமாறு செய்துள்ள ஏற்பாட்டை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, அமலாக்கம் செய்த ரயில்வே துறைக்கு பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்
சில நிமிடங்கள் அந்த 39 வருஷ கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.
ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ? ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ? இன்று அமரர் சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 123வது நினைவு தினம்.
பாரதியார் பாடிய கோமதி மஹிமை பாடலில் சங்கரன்கோவில் தல புராணம் மற்றும் அதன் பெருமையை போற்றிப் பாடியுள்ளார். ஆயினும், எட்டாவது பாடலின் கடைசி சில வரிகளுடன் முற்றுப் பெறாமலேயே அப்பாடல் நின்று விட்டது.
நான் எப்பொழுது சங்கரன் கோவில் சென்றாலும் இந்தப் பாடல் ஏன் முற்றுப் பெறாமல் போயிற்று என்று பல முறை யோசித்துள்ளேன். “அளவிடற்கரியது கோமதி மஹிமை என்பதாலோ என்னவோ அது முற்றுப்பெறவில்லை”.
முன்பு கோமதி அம்மன் சந்நிதி செல்லும் வழியில் இந்த கவிதையை எழுதி வைத்து இருந்தார்கள்… பார்த்ததுண்டு, பதினைந்து வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரம் (02.09.2024) சங்கரன் கோவில் சென்ற போது கவிதையினை தேடினேன், காணவில்லை ஒரு வேளை கோவில் கும்பாபிஷேகம் கொஞ்ச நாட்கள் முன்பு நடந்து முடிந்தது, அதில் எங்காவது வைத்து இருக்கலாமோ என்னவோ….
கோமதிமஹிமை முற்றுப் பெறாத பாரதியாரின் வரிகள்…
தாருக வனத்தினிலே – சிவன் சரணநன் மலரிடை யுளம்பதித்துச் சீருறத் தவம்புரிவார் – பர சிவன்புக ழமுதினை யருந்திடுவார் பேருயர் முனிவர்முன்னே – கல்விப் பெருங்கடல் பருகிய சூதனென்பான் தேருமெய்ஞ் ஞானத்தினால் – உயர் சிவனிகர் முனிவரன் செப்புகின்றான். (1)
வாழிய, முனிவர்களே, – புகழ் வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே. ஊழியைச் சமைத்தபிரான், – இந்த உலக மெலாமுருக் கொண்டபிரான், ஏழிரு புவனத்திலும் – என்றும் இயல்பெறும் உயிர்களுக் குயிராவான், ஆழுநல் லறிவாவான் – ஓளி யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான். (2)
தேவர்க் கெலாந்தேவன், – உயர் சிவபெருமான் பண்டொர் காலத்திலே காவலி னுலகளிக்கும் – அந்தக் கண்ணனுந் தானுமிங் கோருருவாய் ஆவலொ டருந்தவங்கள் – பல ஆற்றிய நாகர்க ளிருவர்முன்னே மேவிநின் றருள்புரிந்தான் – அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன். (3)
கேளிர் முனிவர்களே, – இந்தக் கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே, வேள்விகள் கோடி செய்தால் – சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால் மூளுநற் புண்ணியந்தான் – வந்து மொய்த்திடும் சிவனியல் விளங்கிநிற்கும்; நாளுநற் செல்வங்கள் – பல நணுகிடும்; சரதமெய் வாழ்வுண்டாம். (4)
இக்கதை யுரைத்திடுவேன், – உளம் இன்பறக் கேட்பீர், முனிவர்களே! நக்கபி ரானருளால் – இங்கு நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்; தொக்கன அண்டங்கள் – வளர் தொகைபல கோடிபல் கோடிகளாம்! இக்கணக் கெவரறிவார்? புவி எத்தனை யுளதென்ப தியாரறிவார்? (5)
நக்கபி ரானறிவான்; மற்று நானறியேன், பிற நராறியார்; தொக்க பேரண்டங்கள் – கொண்ட தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற தக்கபல் சாத்திரங்கள்; – ஓளி தருகின்ற வானமொர் கடல்போலாம்; அக்கட லதனுக்கே – எங்கும் அக்கரை யிக்கரை யொன்றில்லையாம். (6)
“ஆடுவோமோ– பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று” என இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திரம் அடைந்ததாக ஆனந்தமாக பாடிய தேசியக் கவிஞர் பாரதியார். தென் தமிழ்நாட்டில் சித்திரபாநு கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் (1882 டிசம்பர் 11) தோன்றிய அந்த சித்த புருஷர், திருவல்லிக்கேணியில் துன்மதி வருஷம் ஆவணி மாதம் 27ஆம் தேதி (1921 செப்டம்பர் 12) ஞாயிறன்று அதிகாலை 1.30 மணிக்கு புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை. சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன. அவர் மறைந்தாலும், அவரது கவிதைகள் இன்றைக்கும் நமக்கு தேசபக்தியை ஊட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்று மட்டுமல்ல தமிழ் இருக்கும் வரை பாரதியாரின் புகழும், அவரது கவிதைகளும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். (மஹாகவி பாரதி)
மதுரை ரயில்வே கோட்டத்தில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் இரயில்கள் இயக்க வேண்டும் என்று, பயணிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான மதுரை கோட்டத்தில் தான் அதிக அளவில் சரக்கு ரயில்கள் மூலமும், பயணிகள் ரயில் மூலமும் அதிக வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காலத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பின்பு, அத்தடை விலக்கிக் கொள்ளப்பட்ட போது, சாதாரண பயணிகள் ரயில்களாக இயக்கப்பட்ட வண்டிகள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
ஆனால், பயணிகள் ரயில்களுக்கான பெட்டிகள் தான் இந்த ரயில்களில் தற்போதும் உள்ளன. இதில் முன் பதிவுக்கான பெட்டிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
மதுரை ரயில்வே கோட்டத்தில் மதுரை முதல் நாகர்கோவில் வரை மின் மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளது. இவ்வழியே ரயில்கள் தாமதமின்றி விரைவாக சென்று வருகின்றன. எனவே, ஏராளமான பயணிகள் ரயில்களில் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு சென்று வர வேண்டுமென விரும்புகின்றனர். ஆனால், இரட்டை ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின்பும், போதிய ரயில்கள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்படவில்லையென புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக மதுரையிலிருந்து நெல்லைக்கு செல்ல காலை 11 மணிக்கு பின் பிற்பகல் 2.40 வரை ரயில்கள் இல்லை. இதேபோல், மாலை 6 மணிக்கு பின்பு இரவு 11 மணி வரை எந்த ரயில்களும் நெல்லை செல்வதற்கு இல்லை. இதன் காரணமாக பயணிகள் பலர் மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக செல்வதற்கு பயணிகள் ரயில் சேவை இல்லை. இதேபோல் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கும் போதிய ரயில் வசதி செய்து தரப்படவில்லை.
எனவே, திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் வரை இயங்கும் பயணிகள் ரயிலை கோவில்பட்டி, விருதுநகர் வழியாக மதுரை சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
கொல்லத்திலிருந்து செங்கோட்டை வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை மதுரை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டுமெனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரையிலிருந்து செங்கோட்டை வரை சென்று வர மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடைக்கு முன்பு 3 முறை இவ்வழியாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. தற்போது ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.
திருவனந்தபுரத்திலிருந்து கொச்சுவேலி, கொல்லம், புனலூர், செங்கோட்டை வழியாக மதுரைக்கு கூடுதலான பயணிகள் ரயில் சேவையையும், இன்டர்செட்டி அல்லது வந்தேபாரத் ரயிலை இவ்வழித்தடத்தில் இயக்கிட வேண்டுமெனவும் தென் மாவட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
புதிய ரயில்கள் :
இராமேஸ்வரம், பரமக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், இராஜபாளையம், தென்காசி வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் வகையில் புதிய ரயில் ஒன்றை இயக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ரமணமகரிஷி அவதரித்த இடம் திருச்சுழியாகும். எனவே, விருதுநகர்-மானாமதுரை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் திருச்சுழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். அங்கு டிக்கெட் முன் பதிவு மையம் ஏற்படுத்த வேண்டுமெனவும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீட்டிப்பு செய்ய வேண்டிய ரயில்கள் :
திண்டுக்கல் முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
இதேபோல் கோயம்புத்தூரிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் இன்டர்செட்டி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.
திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.
நாகர்கோவில் முதல் நெல்லை வரை இயங்கும் அனைத்து ரயில்களையும் மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
மதுரை-போடி நாயக்கனூர் வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்தி வேண்டும்.
நெல்லை-மேட்டுப்பாளையம், சென்னை-செங்கோட்டை வரை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ், செங்கோட்டையிலிருந்து விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளம்-வேளாங்கன்னி ரயில் ஆகியவற்றை தினசரி ரயில்களாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவோணம் பண்டிகை புரட்டாசி மாத பூஜை வைபவத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 13ஆம் தேதி மாலை நடை திறந்து செப்14முதல் பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
15-ந் தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் 14 15, 16. 17ஆகிய தேதிகளில் ஓண விருந்து (சத்யா) வழங்கப்படும்.
தொடர்ந்து புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தற்போது சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் மிக அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. பக்தர்கள் பம்பை நதிக்கரையோரம் வாகனங்களை நிறுத்தும் போது கவனமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் முக்கியப் பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. திருவனந்தபுரம், புனலூர், செங்கனூர், கொச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
ரயிலில் வரும் பயணிகள் சென்னையில் இருந்து செங்கோட்டை வழி கொல்லம் செல்லும் ரயிலில் புனலூரில் இறங்கினால் புனலூர் ரயில் நிலையத்திலிருந்து பம்பைக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம், மதுரை – குருவாயூர் ரயில்களில் புனலூர் வரை பயணித்து, புனலூரில் இருந்து பஸ் அல்லது டூரிஸ்ட் வாகனம் மூலம் பம்பைக்கு செல்ல வாகன வசதிகள் உள்ளது.
தெலுங்கில்: டாக்டர் கே கீதா தமிழில்: ராஜி ரகுநாதன்
“கொமஸ்தாஜ்?” ஸ்பானிஷ் மொழியில் “ஹௌ ஆர் யு?” என்றாள் மரியா.
கடையிலிருந்து வரும் வழியில் வெளி வராண்டாவில் அலீசியாவுடன் நின்று பேசிக்கொண்டிருந்த என்னை மரியா அன்பாக அணைத்துக் கொண்டாள். அலீசியாவின் பெரிய மகள் மரியா. அருகிலிருக்கும் ‘ஹோல் புட்ஸில்’ பணி புரிகிறாள்.
“இப்படி உள்ளே வந்து உட்கார்ந்து பேசுங்களேன்” என்று எங்களை அழைத்தாள் மரியா.
“அது உன் அதிர்ஷ்டம் ப்ரியா. நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யும் என்னைப் போன்றவர்களுக்குக் கிடைக்காத வாழ்க்கை உன்னுடையது” என்றாள் மரியா.
மீண்டும் அவளே, “ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம். மணிக்கு எட்டு டாலர்கள். ஞாயிறுகளையும் சேர்த்து வாரம் பூரா கஷ்டப்பட்டாலும் எங்கள் இரு குழந்தைகளின் மேற்படிப்புக்கு என்ன செய்வது என்று கவலையாக உள்ளது” என்றாள்.
“மரியாவையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு அவன் வேறொரு பெண்ணோடு போய் ஐந்து வருடங்கள் ஆகிறது. வெளியில் தங்கினால் இந்த குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லை என்பதால் எங்களோடு சேர்ந்து இருக்கிறாள். இவளுடைய வாழ்க்கையின் லட்சியம் இவளுடைய பிள்ளைகளைக் கல்லூரியில் சேர்த்து பட்டதாரி ஆக்க வேண்டுமென்பது” என்றாள் அலீசியா.
“அதென்ன? கல்வி இலவசமல்லவா இங்கே?” என்று கேட்டேன்.
“பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் இலவசம். அதற்கு மேல் கல்லூரிப் படிப்பு என்றால் எங்களைப் போன்றவர்களால் செலவு செய்ய முடியாது. ஆனாலும் எனக்கு ஆசை அதிகம்” என்று பெருமூச்செறிந்தாள் மரியா.
“என் பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தார்கள். நாங்கள் மட்டுமல்ல… எங்களைப் போல் இந்த தேசத்திற்கு வந்த எங்கள் உறவினர்கள், நண்பர்களின் பிள்ளைகள் அனைவரின் நிலையும் இதுவே” என்றாள் அலீசியா.
“பிள்ளைகள் சொந்தமாக வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படிப்பார்கள் என்று கேள்விப்பட்டேனே. உண்மையில் பதினெட்டு வயது வந்தவுடன் வீட்டில் தங்காமால் வெளியில் சென்று விடுவார்களாமே” என்று நான் கூறிக் கொண்டிருக்கும் போதே மரியா குறுக்கிட்டாள்.
“எல்லா குடும்பங்களும் அப்படி இருக்காது, ப்ரியா. அதிலும் கூட்டுக் குடும்பம் பழக்கமான மெக்சிகன் சமூகத்திருந்து வந்த எங்கள் வீடுகளில்” என்றாள் மரியா.
“உங்களுக்கும் எங்களுக்கும் பழக்க வழக்கங்களில் நிறைய ஒற்றுமை இருக்கிறதே” என்று வியப்போடு கூறினேன்.
மாலைச் சூரியனின் இறுதிக் கிரணம் கூட மறைந்து போகும் வரை எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
“பாவம். அவர்கள் வீட்டில் யாரும் இன்டர்மீடியட் தாண்டி படிக்கவில்லையாம்” இரவு உணவின் போது என் கணவன் சூர்யாவிடம் கூறினேன்.
“அது சரீ. நீ எதோ காலேஜில் சேர்ந்து படிக்கப் போகிறேன் என்றாயே. விவரங்கள் சேகரித்தாயா?” என்று கேட்டான்.
“இன்னும் இல்லை. நாளை ப்ரசாந்தி வருகிறாள். கேதரின் வீட்டுக்குச் செல்லலாமென்று இருக்கிறோம். அவள் படிக்கும் காலேஜ் பற்றி கேட்டறியலாம் என்று” என்றேன்.
“என்ன கோர்சில் சேரப் போகிறாய்?” என்று கேட்டான் சூர்யா.
“அது என்ன? நீதான் ஏற்கெனவே போஸ்ட் கிராஜுவேட் செய்துள்ளாயே? மீண்டும் டிகிரி எதற்கு?” என்றான்.
“அதுதான் பாயின்ட். நான் படித்த என் தாய் மொழியில் பிஹெச்டிக்கு அப்ளை செய்யலாமென்றால், ஏதாவது யுனிவர்சிட்டி ஆஃபர் செய்கிறதா என்ன? இல்லாவிட்டால் போனால் போகிறது, வேறு எதாவது பிஜி செய்வோமென்றால் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் என்னவோ? அப்படியே படித்தாலும் இங்கு வேலை கிடைக்குமோ கிடைக்காதோ” என்றேன் நான்.
“ஓஹோ, அதுவா சங்கதி? இங்க பாரு ப்ரியா, வேலையில் சேர்வதுதான் முக்கியம் என்று நினைத்து படிக்கும் யோசனையை விட்டு விடு. உனக்கு எந்த சப்ஜெக்ட் பிடிக்குமோ அதையே படி” என்றான் சூர்யா.
“அது என்ன? புரியும்படித் தான் சொல்லேன். சரி சரி. எங்க ஆபீசில் யாரிடமாவது விசாரித்து சொல்கிறேன்” என்று ஆதரவாகக் கூறினான்.
சூர்யாவிடம் ஒரு நல்ல குணம் உள்ளது. என் முகத்தில் மகிழ்ச்சி குறைந்தால் உடனே பேச்சை மாற்றி விடுவான்.
“சொல்ல மறந்து விட்டேன். இந்த வீகெண்ட், லாங் வீகெண்ட். சாந்தா க்ரூஜ் போவோமா? அங்கே உனக்கு பிடித்தமான கடல் இருக்கு” என்றான்.
கடல் என்று சொன்னவுடன் என் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பார்த்து, “ம்ம். இப்படி இருக்கணும். ஹாப்பியா” என்றான்.
கேதரின் போனில் கிடைக்கவில்லை. இமெயில் அனுப்பினேன். அவள் இந்த வாரம் பிசியாக இருப்பதாகக் கூறி, கல்லூரி விவரங்கள் வெப் சைட்டில் பார்க்கச் சொல்லி லிங்க் அனுப்பினாள்.
கோர்சுகளை விட ஃபீஸ்களைப் பற்றி அறிய ஆர்வத்தோடு என் விரல்கள் வெப் சைட்டில் தேடின. அதிலிருந்த எண்களைப் பார்த்ததும் என்னைப் பெரும் திகில் பற்றிக் கொண்டது. செமெஸ்டருக்கு ஃபாரின் மாணவர்களுக்கு பத்தாயிரம் டாலர்களை விட அதிகம். இன்னும் தகுதிப் பட்டியலில் கட்டாயம் ஆங்கில மொழித் தேர்ச்சியை நிர்ணயிக்கும் டோஃபெல் பாஸாக வேண்டும். இன்னும் என்ஜினியரிங்குக்கு SAT அலல்து ACT பரிட்சைகள், MBA க்கு வேறொன்று, வேறு ஏதாவது கோர்ஸ் என்றால் மற்றொன்று.
மதியம் ப்ரசாந்தி வந்தாள்.
“காலையிலிருந்து வெப் சைட்டில் காலேஜ் விவரங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.
“அதுதான் தெளிவாக உன் முகத்திலேயே தெரிகிறதே” என்றாள் என் ஏமாற்றத்தைக் கண்டு.
“ஆமாம். ஏகப்பட்ட ஃபீஸ். எங்களால் நிச்சயம் கட்ட இயலாது” என்றேன் முணுமுணுப்பாக.
“பார்க்கலாம். நிராசை அடையாதே” என்றாள் பிரசாந்தி என் தோளைத் தட்டி.
“கம்யூனிட்டி காலேஜில் ஃபீஸ் மிகவும் குறைவாக இருக்குமாம், விசாரித்தேன்” என்றாள்.
“அப்படியா? நல்ல விஷயம் சொன்னாய்” என்றேன் சந்தோஷமாக. “நான் போய் தேநீர் போட்டு எடுத்து வருகிறேன். நீ அதற்குள் வெப் பேஜ் ஓபன் செய்து பார், ப்ரசாந்தி” என்று கூறி எழுந்தேன்.
அவள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாவ். செமஸ்டர் கட்டணம் சுமார் முன்னூறு டாலர் குறைவு” என்றவள், “ஆனால் நமக்கு ஃபாரின் கட்டணம் ஒவ்வொரு ஆண்டுக்கும் சேரும், தெரியுமா?” என்று கேட்டாள்.
புரியவில்லை என்பது போல் தலையை அசைத்து, “அது எப்படி?” என்று கேட்டேன்.
“நாம் ‘சார்ந்து இருப்பவர்கள்’ அதாவது டிபென்டென்ட். ஆனாலும் கூட நம் பெயர் மீது டாக்ஸ் ஐடென்டிடி நம்பர் வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு ஒரு ஆண்டு டாக்ஸ் பே செய்தோமென்றால் நாம் இங்கு ரெசிடென்ட்ஸ் ஆகி விடலாம். சுமார் எல்லா காலேஜிலும் இங்கு ரெசிடென்ட்சுக்கு ஃபாரின் ஃபீஸில் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்திலேயே அட்மிஷன் கிடைக்கும்” என்றாள்.
“அப்படியென்றால் நாம் வரும் ஆண்டிலேயே சேர்ந்து படிப்பது நல்லது. அதுவுமின்றி இப்போது நாம் பார்த்த இந்த ஃபாரின் ஃபீஸ் அதாவது பன்னிரெண்டு மாதங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு கட்டினால் போதும்” என்று கூறிவிட்டு, கிடுகிடுவென்று கணக்கு போட்டுப் பார்த்து, “அதாவது ஒரு செமெஸ்டருக்கு நான்காயிரம். அம்மாடியோ, அது கூட அதிகம்தான். எங்களால் கட்ட முடியாது” என்றேன்.
எனக்கு திடீரென்று மரியாவின் திகிலான முகம் நினைவுக்கு வந்தது. அவள் ஏன் அத்தனை வருத்தப்பட்டாள் என்பது இப்போது புரிந்தது.
“பார்த்தாயா? ஸ்டான்போர்ட் போன்ற புகழ்பெற்ற பிரைவேட் யுனிவர்சிடியிலில் என்றால் ரெசிடென்ட் ஃபீஸே செமெஸ்டருக்கு பதிமூன்று ஆயிரத்துக்கும் மேல். யாரால் படிக்க முடியும்? எப்படிப் படிப்பார்கள் இந்த தேசத்த்தில்?” என்றாள் பிரசாந்தி.
“ஸ்காலர்ஷிப்ஸ், கேம்ப்பஸ் வேலை வாய்ப்புகள், இதெல்லாம் நமக்கு இல்லை. இங்கும் நமக்கு வழிகள் அடைப்பட்டு விட்டன போலிருக்கிறது” என்று உதட்டை பிதுக்கினேன்.
அதற்குள் கேதரின் போன் செய்தாள்.
“ஹாய் ப்ரியா, நான் இன்று சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டேன். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பார்க்குக்கு வருவேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டாள்.
“ப்ரசாந்தி கூட இங்கே இருக்கா” என்றேன்.
“இன்னும் என்ன? நல்லதாப் போச்சு. இருவரும் வாங்க. நல்லா பேசலாம்” என்றாள் கேதரின்.
நான் என் மகள் நிதியையும் உடன் அழைத்துச் சென்றேன். பிள்ளைகள் பூங்கா மணலில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். கடற்கரை மணல். நைசாக இருந்ததால் விளையாட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
“அவர்களைப் போல் விளையாட முடியாவிட்டாலும் காலை மணலில் அளைந்து கொண்டே உட்காரலாம்” என்று சொன்னேன். மூவரும் சிரித்துக் கொண்டே அமர்ந்தோம்.
ஜூன் மாத மாலை வெளிச்சம் மர இலைகளின் இடையிலிருந்து ஆகாய தீபத்திற்கு துளைகள் விழுந்ததா என்று நினைக்கும்படியாக அங்கங்கே துண்டு துண்டாக பூமியில் படர்ந்திருந்தது.
காற்று வடமேற்கு திசையாக வீசிக் கொண்டிருந்தது. குளிரோ வெயிலோ அதிகம் இல்லாமல் சுகமாக இருந்தது. வீட்டில் யோசித்து யோசித்து வெப்பமாகிப் போன என் தலைக்கு அந்தக் காற்று இதமாக இருந்தது.
“யு ஸீ ப்ரியா, எங்கள் காலேஜில் ஐம்பது வயதுள்ள பெண் ப்ரொபசர் இன்னும் தன் கல்லூரி படிப்புக்காக வாங்கிய கடனை அடைத்து வருகிறார்” என்று கேதரின் எங்கள் ஃபீஸ் ஆராய்ச்சி பற்றி கேட்டவுடன் கூறினாள்.
மேலும், “இந்த தேசத்து துரதிருஷ்டங்களில் இதுவும் ஒன்று. கட்டுப்பாடின்றி அதிகமாகி வரும் காலேஸ் ஃபீஸ்களை தடுப்பது யாராலும் முடியவில்லை. முழு நிர்வாகமும் ஊழலில் ஊறிப் போயிருக்கு. கடந்த பத்தாண்டுகளில் பப்ளிக் காலேஜ்களில் கட்டணம் இருமடங்கு பெருகியுள்ளது. ப்ரைவேட் காலேஜ்களில் எப்போதுமே கட்டணம் ஆகாயத்தில் ஒளிரும் நட்சத்திரங்களை தொட்டிருக்கும். அவையும் இப்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இனி மீதி உள்ள கம்யூனிட்டி காலேஜ்கள் போன்றவை இவற்றோடு ஒப்பிட்டால் சீப்தான். ஆனால் அவை நான்கு ஆண்டு டிகிரி அளிக்காது. வெறும் இரு ஆண்டு டிப்ளமா போன்ற கோர்சுகளை ஆஃபர் செய்யும். வேண்டுமானால் அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று, நான்கு ஆண்டுகளை வேறெங்காவது பப்ளிக் யுனிவர்சிடியில் டிரான்ஸ்பர் செய்து கொண்டு டிகிரி பூர்த்தி செய்யலாம். ஆனால் நல்ல கல்லூரியில் படித்தவர்களின் கல்வியறிவின் மீதே அனைத்து கம்பெனிகளும் குறி வைக்கின்றன. வேலை உடனே கிடைக்க வேண்டும் என்பதற்காக பணம் அதிகம் செலவானாலும் பரவாயில்லை என்று ‘நல்ல கல்லூரி’ என்று பெயர் பெற்ற பணக்கார கல்லூரிகளில் சேர வேண்டியுள்ளது” என்றாள்.
“சாரி. ரொம்ப பயமுறுத்திடேனா?” என்று கேட்ட கேதரின், “உங்கள் தேசத்தில் கல்வியின் நிலைமை என்ன?” என்று வினவினாள்.
“இந்தியாவில் காலேஜ் ஃபீஸ் இப்படி இருந்திருந்தால் நாங்கள் இருவரும் பிஜி படித்திருக்கவே முடியாது” என்றோம் நாங்கள் இருவரும்.
“நான் முப்பத்தைந்து வயது வரும் வரை வெறும் பட்டப்படிப்பு கூட படிக்க முடியாமல் போனேன் என்றால் இவையே காரணம். விக்டரை திருமணம் புரிந்து கொள்ளும் வரை நான் படிக்கும் ஆசையையே விட்டிருந்தேன். ஹைஸ்கூல் படிப்போடு திருப்தியடைந்தேன். நீண்ட காலம் பலப்பல இடங்களில் வரவேற்பாளராக பணி புரிந்தேன்” என்றாள் கேதரின்.
“இதற்கு உங்கள் அரசாங்கம் என்ன செய்கிறது? மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டாள் பிரசாந்தி.
புன்னகை செய்த கேதரின், “மாணவர்கள் செய்வதை மாணவர்கள் செய்வார்கள். அரசாங்கம் செய்வதை அரசாங்கம் செய்யும்” என்றாள் விட்டேத்தியாக.
“எந்த நாடாக இருந்தாலும் இது போன்ற விஷயங்களில் ஒன்று போலவே நடந்து கொள்கின்றன” என்று பெருமூச்செறிந்தாள் பிரசாந்தி.
“விக்டர் வரும் நேரமாகி விட்டது. ஆறு, ஆறரைக்கெல்லாம் டின்னர் ரெடி செய்யாவிட்டால் மறுநாள் முழுக்க கஷ்டமாகிவிடும்” என்று கூறிக் கொண்டே எழுத்தாள் கேதரின்.
“நாங்கள் இன்னும் பன்னிரண்டு மணிக்கு லஞ்ச், ஆறு மணிக்கு டின்னருக்கு பழக்கமாக வில்லையாதலால் இன்னும் சற்று நேரம் இங்கேயே அமர்ந்திருந்து விட்டுச் செல்வோம்” என்று கூறினோம்.
பூங்காவில் நிதி மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள். எத்தனை முறை மணற்கோயில் இடிந்து விழுந்தாலும் விடாமல் மீண்டும் கட்டிக் கொண்டிருந்தாள் நிதி.
“தண்ணீர் இல்லாமல் வெறும் மணலால் கோயில் கட்டினால் நிற்காதுடா, கண்ணா” என்றேன்.
ஏதோ புரிந்தாற்போல் பிரசாந்தி என்னைத் திரும்பிப் பார்த்து சிரித்தாள். “அனுகூலமில்லாத சூழ்நிலையிலும் முயற்சியைக் கைவிடாத சிறந்த குணம் இல்லாவிட்டால் மனிதன் புதுப்புது கண்டுபிடிப்ப்புகளை செய்திருக்க மாட்டானோ என்னவோ” என்றாள்.
(அமெரிக்காவைப் பற்றி கேள்விப்படுவதற்கும் நேராக அங்கு வாழ்வதற்கும் இடையில் இருக்கும் கோட்டினை தெளிவாகச் சுட்டும் முயற்சியே இந்தக் கதைகள் என்று தன் ‘சிலிக்கான் பள்ளத்தாக்கு சாட்சியாக’ என்ற தொகுப்பில் கதாசிரியை முனைவர். கே. கீதா தெரிவிக்கிறார்).
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் பெரிய விநாயகர் சிலை கிராமத்தில் சார்பாக வாங்கப்பட்டு அதற்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து சுண்டல், பொரிகடலை, ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், வாழைப்பழம், வெற்றிலை பாக்குடன் சுவாமி முன் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கிராமத்தினருக்கு பூஜை பொருள்கள் வழங்கப்பட்டது.. பின்னர், கிராமத்தின் சார்பாக வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் வந்து அய்யூர் பிரிவு அருகே உள்ள கம்மாய் தண்ணீரில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை, பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.
சோழவந்தானில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மூன்று நாட்கள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. வழி நேடுகே கிராம மக்கள் விநாயகரை வரவேற்று அபிஷேகம் பூஜைகள் செய்தனர்.
இதில் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் தனசேகரன், நிர்வாகிகள் சுரேஷ்,பாபு,காசி உள்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி அருகே, விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு – 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, மலைப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதூர்த்தி விழாவை வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, இக் கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த ஆண்டு விநாயகர் கையில் லட்டு இருக்கும் அமைப்பிற்காக ஒரிஜினல் லட்டை கையில் வைத்து பூஜைகள் நடைபெற்றன. இன்று சிலையை, எடுத்து அருகில் உள்ள கண்மாய் பகுதியில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லும் முன், சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலமாக விடப்பட்டது.
இந்த ஏலத்தில் அதே ஊரைச் சேர்ந்த மூக்கன் என்பவர் இந்த ஒரே ஒரு லட்டை 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் எனவும், இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு ஏல தொகை கட்டும் போது 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் என, கிராம மக்கள் அறிவித்துள்ளதும், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரே ஒரு லட்டு 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் ஏலம் எடுத்த மறுநொடியே லட்டு, பூந்தியாகி அனைவராலும் உண்ணப்பட்டது நெகிழ்ச்சியின் உச்சமாக அனைவராலும் பேசப்படுகிறது.