Home Blog Page 165

16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

cellphone in hall - 2026

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒரு வயதுக் குழந்தைகள் தொடங்கி 18 வயது நிரம்பாத சிறார்கள் வரை தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ 250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில், பெற்றோரின் அனுமதியின்றி சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

“ஏனென்றால் சமூக ஊடகங்களில் சில, தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது. இது உலகளாவிய பிரச்னை. இதில் தீர்வு காண உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன” என்று கூறினார்.

இதை அடுத்து, ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது.

Thejas foundation arranged for a Gana and Jata parayanam in Chennai on Dec. 10th

0
tejas jata parayaran - 2026
#image_title

Thejas Foundation, a prominent organization dedicated to preserving Tamil and Sanskrit literary heritage, is set to celebrate its 10th anniversary on Sunday, 15 December 2024. The milestone event will feature a grand Vedic recital and cultural program, reflecting the foundation’s decade-long commitment to promoting Indian traditions and culture. The event will include Gana Parayanam and Jata Parayanam recitals by eminent Vedic scholars, alongside a Special Ganapathi Pooja. The celebrations aim to raise awareness about climate change, improve agricultural productivity, and foster global well-being (Loga Kshemam).

Speaking about the foundation’s journey, Trustee Kizhambur S. Sankarasubramanian highlighted several key initiatives undertaken over the years. These include the documentation of over 50 rare literary works, such as Thirukkural Moolapaadam, and the organization of significant conferences on themes like Aadhi Sankara’s Shanmadham, Murugan Bhakthi Literature, and Shri Rama’s Bhakthi Literature. The foundation has also hosted marathon talks on Thirukkural, conducted in Chennai, Trichy, and Alwarkuruchi, each lasting seven hours and attracting wide participation from academia, students, and the general public.

The Thejas Foundation has been instrumental in organizing large-scale Vel Poojas, and Ganga Poojas, and even distributed the National Flag during India’s 75th Independence Anniversary, honoring lesser-known freedom fighters’ families.

“As we step into the Tenth year of Thejas Foundation, we plan to effectively celebrate the same in a befitting manner on Sunday, the 15th of December 2024.

Even though you are already aware about the existence of Thejas Foundation, I still wish to express a few thoughts for your consumption. One of the prime activities of Thejas Foundation, which has been handled all along by the Founder Trustee Shri. PT Thiruvenkata Rajan; had been to highlight the Literary works in Tamil and Sanskrit languages.

We have so far documented some of the rare works numbering to over fifty including Thirukkural Moolapaadam. Till date; we have organized three Conferences in Chennai on Aadhi Sankara’s Shanmadharm, Murugan Bhakthi Literature, Shri Rama’s Bhakthi Literature for which we had good response from the people who attended it in a large scale. We have also organized three Marathon talks on Thirukkural spanning to about seven hours continuously in a calendar day and that too on three occasions and in three different locations as well.

One was done in Chennai in the presence of Hon’ble Judges, Industrialists, Writers and Poets besides general Public. Another was in the National College, Trichy in front of the Academia and the Student Fraternity. The Third one was for the Children in Sri Parama Kalyani High School in Alwarkuruchi.

All the aforesaid activities were performed by me in my individual capacity based on the research done spanning over fifteen years. That apart, we have performed Vel Poojai in a large scale besides Ganga Pooja, which culminated in the distribution of Ganga Water to the Devotees,

In a similar fashion, as part of the celebration of the Seventy Fifth Anniversary of India’s Freedom we distributed the National Flag to a multitude of Citizens; including many VIPs, besides honouring a host of family members belonging to the lessor known Freedom Fighters. And apart, now with an intention to impact Climate Change and enhance Agricultural Produce, aside augmenting Loga Kshemam, we intend to organize a Vedhic oriented event, involving the Recital of Gana Parayanam and Jata Parayanam by a set of Vedhic Pundits, along with a Special Ganapathi Poojai following the Ganesh Chathurthi celebrations the previous day.

Apart from we inviting yourself for this function much before hand, we also utilize this opportunity to seek liberal donation from your side, and this happens to be the first time that Thejas Foundation is going in for a Fund mobliation initiaviate in order to motivate ourselves to take up a few more such operations in the days to come. ” said Thejas Foundation Trustee, (Kizhambur S Sankarasubramanian.

Call for Support

For the first time in its history, the foundation is seeking public donations to expand its cultural and social impact. Contributions will enable the foundation to organize more events and preserve India’s rich heritage. The donation details are as follows:

Account Name: Thejas Foundation
Account Number: 12820200107255
Bank Name: Federal Bank
Branch: Royapettah
IFSC Code: FDRL0001282
Account Type: Current Account

The foundation invites the public to participate in the event and contribute generously to its cause.

தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த புயல்? எச்சரிக்கும் வானிலை நிலவரம்!

cyclone 27th nov - 2026
#image_title

முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்

வானிலை அறிக்கை 27.11.2024

அதிகாலை 0600 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து 26 நவம்பர் 2024 அன்று இரவு 2330 மணி அளவில் அட்சரேகை 7.5° வடக்கு மற்றும் தீர்க்கரேகை 82.6° கிழக்கு, திருகோணமலையில் இருந்து தென்கிழக்கே சுமார் 190 கி.மீ. தொலைவிலும் மற்றும் சென்னையிலிருந்து சுமார் தெற்கு-தென்கிழக்கே 670 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது,

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும்.

காரைக்கால் டாப்ளர் வெதர் ராடார் மூலம் இது தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறது.

கணினி வழிகாட்டுதல்கள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மத்திய அழுத்தம் 1001 hPa மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகபட்ச நீடித்த காற்றின் வேகம் மணிக்கு 44 கிமீ முதல் 65 கிமீ வரை. தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கைக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 27 நவம்பர்/0000 UTC வரை கடல் நிலை மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

இது 27/1200 UTC முதல் நவம்பர் 29 வரை கடல் கொந்தளிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. நவம்பர் 29-ம் தேதி வரை தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையோரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

சமீபத்திய செயற்கைக்கோள் படங்களின்படி, அமைப்பின் தீவிரம் டி 2.0 என வகைப்படுத்தப்படுகிறது.

26.11.2024 காலை 0830 மணி முதல் மாலை 1930 மணி வரை பெய்துள்ள மழையளவுகள்

நாகப்பட்டினம் 13; மகாபலிபுரம் 7, எண்ணூர், NIOT பள்ளிக்கரணை 7, YMCA நந்தனம் 5, சத்தியபாமா பல்கலைக்கழகம் 5 LMOIS கொளப்பாக்கம் 4, சிதம்பரம் 5, வி ஐ டி சென்னை 3, சாயிராம் இன்ஸ்டிட்யூஷன்ஸ் 3, ஹிந்துஸ்தான் பல்கலைக் கழகம் 3, விருத்தாசலம் 3, ஏ சிஎஸ் மருத்துவக்கல்லூரி 2;

எச்சரிக்கை:

படம்:
* ventusky இணையதள வானிலை முன்னெச்சரிக்கைப் படம் சென்னையில் 27.11.2024 இரவு தொடர் மழை தொடங்கும்
* தற்போதைய செயற்கைக்கோள் வரைபடம் (27.11.2024/காலை 0530 மணி)
* அடுத்த 10 நாள்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைச் சொல்லும் வானிலை முன்னெச்சரிக்கை!

வங்கதேசத்தில் இந்து சந்யாசி கைது; இந்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

hindumunnani - 2026

வங்கதேசத்தில் தொடரும் சிறுபான்மை இந்துக்களின் மீதான தாக்குதல். அமைதி வழியில் போராடிய இந்து சன்யாசி கைது. மத்திய அரசு உடனே தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா c. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரது அறிக்கை:

வங்கதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு சம்பந்தமான மாணவர்கள் போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. பிறகு அந்தப் போராட்டம் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலாக வடிவெடுத்து , மாபெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் கலவரமாக வெடித்தது. இந்துக்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.இந்துக்கள் பொதுவெளியில் தாக்கப்பட்டனர். இந்து பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர் . அங்கே இந்துக்கள் வாழவே வழியின்றி ஒடுக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.

கலவர நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகும் கூட மீண்டும் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது மதரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை அடையாளம் காண வேண்டும் என குரல் கொடுத்து அமைதி வழியில் போராட்டம் நடத்திய இஸ்கான் அமைப்பின் சன்யாசி சின்மோய் கிருஷ்ண பிரபு வங்கதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத படி தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி வன்முறையாளர்களை அடையாளம் காண வேண்டும் என
கூறியவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்திருப்பது வங்கதேசத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது.

அவரை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும் வழியில் ஏற்பட்ட கலவரத்தில் பல இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சன்யாசியை ஜாமினில் எடுக்க முன்வந்த வழக்கறிஞரும் மத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மீண்டும் இந்துக்கள் மீது வன்முறையாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு அளவிட முடியாததாகும்.இந்திய வங்கதேசத்தின் பொருளாதாரப் பரிவர்த்தனைகள் நன்றாக நடந்து கொண்டிருந்த வேளையில் மாணவர் போராட்டத்தை மதக் கலவரமாக மாற்றி சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறின.

வங்கதேசத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கு அங்குள்ள இந்துக்களை மிகவும் பாதிப்படையை செய்துள்ளது. மதப் பிரிவினைவாதிகளால் நடத்தப்படும் இந்த
கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.

நமது தேசத்தில் உள்ள ஆன்மீக அமைப்புகள் அரசியல் கட்சிகள் சமுதாய அமைப்புகள் ஒன்றாக இணைந்து வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்திற்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.

அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்கான் தலைவரை பாரத நாட்டோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக தேச துரோக வழக்கு பதிவு செய்ததை உடனடியாக வங்கதேச அரசு வாபஸ் பெற வேண்டும் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

வங்கதேசத்தில் இஸ்கான் செயலர் கிருஷ்ணதாஸ் கைது; இந்தியாவில் வலுக்கும் கண்டனங்கள்!

hindu monk isckon bangaladesh - 2026
#image_title

வங்கதேசத்தில் இஸ்கான் பொதுச் செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டது, அங்கு இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியா, சின்மய் கிருஷ்ணதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

முகமது யூனுஸ் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் சூறையாடப்பட்டு, சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இந்துக்கள் மீது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சுமார் 2 ஆயிரம் இந்துக் குடும்பங்கள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 150க்கும் மேற்பட்ட குடும்பங்களின் உடைமைகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்து பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்கான் பொதுச்செயலாளர் கைது: 

வங்கதேசத்தின் மக்கள்தொகை சுமார் 17 கோடி. இதில் சுமார் 15 கோடி பேர் முஸ்லிம்கள். சுமார் 1.3 கோடி இந்துக்களும், 10 லட்சம் புத்த மதத்தினரும், சுமார் 5 லட்சம் கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்துக்கள் மட்டுமன்றி புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மீதும் கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை கண்டித்து வங்கதேச இஸ்கான் அமைப்பின் பொதுச்செயலாளர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி தலைமையில் வங்கதேசம் முழுவதும் அமைதி வழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற இந்துக்கள் மீது ராணுவம் மற்றும் போலீஸார் மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மாச்சாரி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சின்மயி கிருஷ்ணதாஸ் பிரச்மாச்சாரியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

அவரை விடுதலை செய்யக் கோரி சிட்டகாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு பெருந்திரளான இந்துக்கள் திரண்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பின்னர் அவர்கள் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். சின்மய் கிருஷ்ணதாஸை விடுதலை செய்யக் கோரி வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா கண்டனம்: 

இந்தச் சூழலில் இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேசத்தில் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது. இதை கண்டிக்கிறோம். வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையிர் மீது சமூகவிரோத கும்பல்கள் பல்வேறு தாக்குல்களை நடத்தி வருகின்றன. சிறுபான்மையினரின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. அவர்களின் உடைமைகள் சூறையாடப்படுகின்றன. இந்து கோயில்கள் சேதமப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால் அமைதி வழியில் போராடும் இஸ்கான் பொதுச்செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது கைதை எதிர்த்து அமைதி வழியில் போராடும் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை மிக முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறோம். வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள், இதர சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்” என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.


ஹெச்.ராஜா கண்டனம்

வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு…

Bangladesh National Party கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்காளதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்களை நடத்துவதையும், இந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்வதையும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள், இந்துக்களின் வணிக நிறுவனங்கள் மீது தீவைத்து இரையாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை கண்டித்து வந்தவர் ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள்…

இந்துக்கள் அமைதியாகவும், பிரிந்தும் இருந்தால் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே ஒட்டுமொத்த இந்துக்களும் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களும், கொலைவெறி தாக்குதல்களும் உலகின் பார்வைக்கு தெரியவரும் என இந்துக்களை உணர வைத்து லட்சக்கணக்கான இந்துக்கள் வங்க தேசத்தில் ஒன்று திரண்டு வீதிக்கு வந்து போராடும் சூழ்நிலையை ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் உருவாக்கினார்.

இந்துக்களிடையே ஒற்றுமையையும், போராடும் குணத்தையும் அவர் உருவாக்கிய காரணத்தால் அவர் மீது ஆத்திரம் கொண்ட வங்கதேச அரசாங்கம் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளது .

ஒருகாலத்தில் பாரதத்தின் ஒரு அங்கமாக இருந்ததே இன்றைய பாகிஸ்தானும் அதிலிருந்து பிரிந்து உருவான வங்கதேசமும். ஆனால் பெருந்தன்மையோடு இஸ்லாமியர்களுக்கு தனிநாடு கொடுத்த இந்துக்களுக்கு அவ்விரு நாடுகளிலும் நிகழ்ந்து வரும் கொடூர சித்ரவதைகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரையிலும், இந்துக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரையிலும், இந்துக்கள் அதிகாரத்தில் இருக்கும் வரையிலும் தான் இந்து சமூகத்திற்கும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் முதல் வாழ்வியல் உரிமைகள் வரை பாதுகாப்பாக இருக்கும்.

EK Hai To Safe Hai என பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முழங்குவதும், Patenge To Katenge என உத்தர பிரதேச முதல்வர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் முழங்குவதும் வெறும் வார்த்தைகள் அல்ல…

அதை நாம் உறுதியாக, முழுமையாக பின்பற்றுவதில் தான் இந்துக்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.

இல்லையேல் இன்று பங்களாதேஷிலுள்ள இந்துக்களுக்கு நிகழ்வது நாளை பாரதத்திலுள்ள இந்துகளுக்கும் நிகழும் சூழ்நிலை உருவாகும்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்களுக்கு ஆதரவாக நாம் அனைவரும் குரல் கொடுப்போம்.

காஸாவுக்காக, பாலஸ்தீனுக்காக, லெபனானுக்காக இங்கு குரல் கொடுத்தவர்கள் வங்கதேசத்தில் ஜிகாதிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வரும் இந்துக்களுக்காக குரல் கொடுப்பார்களா பார்ப்போம்..!!

  • H ராஜா

ஜக்கி வாசுதேவ் கண்டனம்

வங்கதேசத்தில், ஹிந்து சமூகத்தினர் எதிர் கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய, இஸ்கான் அமைப்பின் தலைமை துறவியை கைது செய்ததற்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சத்குரு வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஒரு ஜனநாயக நாடு எவ்வாறு சிதைந்து மதவாத மற்றும் சர்வாதிகார நாடாக மாறுகிறது என்பதை பார்க்க மோசமானதாக உள்ளது. சுதந்திரமான ஜனநாயகத்தின் மதிப்புகளை புரிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. மதம் அல்லது மக்கள் தொகை பலவீனத்தின் அடிப்படையில் நடக்கும் ஒடுக்குமுறை எந்த விதத்திலும் ஜனநாயக நாடுகளின் வழி அல்ல.

துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு ஜனநாயக கொள்கைகளில் இருந்து விலகிவிட்டது. அனைத்து குடிமக்களுக்கும் தேவையான உரிமைகள் மற்றும் அவரவர் தேவை மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்புடன் இருக்கும் ஒரு ஜனநாயக நாட்டினை கட்டமைப்பது ஒவ்வொரு வங்கதேச குடிமகனின் பொறுப்பாகும்.

ஹாலிவுட்டுக்குச் செல்லும் யோகி பாபு!

trapcity copy - 2026
#image_title

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் ‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு

நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கே. கணேசன், தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார்

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட‌ டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக‌ உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

கணேசனின் முயற்சிகள் சர்வதேச அரங்கில் இந்திய திறமைகளை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்ற‌ன. பிரபல தமிழ் நடிகர் நெப்போலியனை ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அவர், புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரையும் ஹாலிவுட்டிற்கு தனது திரைப்படங்கள் மூலம் அழைத்து சென்றார்.

அவரது அடுத்த படைப்பான‌ ‘டிராப் சிட்டி’யில், தமிழ் நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபுவை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் ஹாலிவுட்டுக்கு கணேசன் அறிமுகப்படுத்துகிறார். இதில் யோகி பாபு ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும். தமிழ்த் திறமைகளின் பெருமையை பரப்புவதற்கும் கலாச்சாரக் கதை சொல்லலை வளர்த்தெடுப்பதற்குமான‌ டெல் கே.கணேசனின் அர்ப்பணிப்பை இந்த முயற்சிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

trapcity yogi babu - 2026
#image_title

டெல் கணேசன் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அடி எடுத்து வைக்கும் ‘ட்ராப் சிட்டி’ படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே “ஜீஸி” ஜென்கின்ஸ், யோகி பாபு, நெப்போலியன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைத்துறையின் பின்னணியில் நல்லதொரு கருத்தை சொல்லும் படமாக இது உருவாகி வருகிறது.

சவாலான இசை துறையில் ஒரு இளம் கலைஞனின் போராட்டத்தை திரைப்படம் காட்டுகிறது. அழுத்தமான கதைசொல்லல் மற்றும் தேர்ந்த நடிகர்களின் பங்களிப்போடு உருவாகி வரும் ‘ட்ராப் சிட்டி’ பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

லியாம் நீசனின் தி மார்க்ஸ்மேனை இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு சென்றதில் டெல் கணேசன் முக்கிய பங்கு வகித்தார். இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு-டப்பிங் பதிப்புகளில் 700+ திரைகளில் பரவலாக வெளியிடப்பட்டு, பிராந்திய சந்தைகளுக்கான அணுகலை உறுதி செய்கிறது.

திருச்சியில் ஜூன் 11, 1967ல் பிறந்த டெல் கே.கணேசன், YWCA பள்ளியிலும், செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியிலும் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். அமெரிக்கா செல்வதற்கு முன், சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் உள்ள‌ வேய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதுகலைப் பட்டத்தையும், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஸ்டீபன் எம். ராஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏவையும் முடித்தார்.

கிரைஸ்லர் நிறுவனத்தில் வெற்றிகரமாக‌ பணியாற்றிய‌ டெல் கணேசன், மிச்சிகனை தலைமையிடமாகக் கொண்ட கைபா இன்க் நிறுவனத்தை நிறவினார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற கைபா, கணேசன் தலைமையின் கீழ், கைபா பிலிம்ஸ் மூலம் திரைப்பட தயாரிப்பு உட்பட பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளது.

தவறை மூடி மறைக்க, மக்கள் மீது பழி போடும் அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும்!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்து சமய அறநிலையத்துறையின் தவறை மூடி மறைத்து பொதுமக்கள் மீது பழிபோடும் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகவேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களை முறையாக பராமரிப்பது, சரியான காலத்தில் குடமுழுக்கு செய்வது உள்ளிட்ட பல அடிப்படை பணிகளைக் கூடச் செய்யாமல் இந்து சமய அறநிலையத்துறை தோல்வியடைந்துவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாபுராஜன்பேட்டை விஜய வரதராஜர் கோவிலை சீரமைக்க 2020ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கூட இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்றாததால் தற்போது நீதிமன்றம் இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து உடனே சீரமைப்பு பணியை தொடங்க உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குன்றக்குடி கோவில்யானை இறப்பு,பழனி கோவில் யானை இறப்பு, திருச்செந்தூர் யானை தாக்கி பாகன்கள் இறப்பு என்று தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் கையாலாகாத்தனம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதில் ஒரு படி மேலே போய் ஆளும் கட்சியின்‌ மற்றொரு அமைச்சராகிய பொன்முடி அவர்களும் இந்து சமய அறநிலையத்துறையின் குளறுபடிகளை பொது வெளியில் விமர்சித்துள்ளார்.

ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களோ திட்டமிட்டு சங்கிகள் பொய் பரப்புவதாக பேட்டி கொடுக்கிறார். அமைச்சர் தன் தவறை மறைக்க பொதுமக்கள் மீது குற்றங்களை சுமத்துகிறார்.

தொடர்ந்து நீதிமன்றமும்,பொதுமக்களும் பல வகைகளில் கண்டித்த பிறகும் அறநிலையத்துறையிடம் எவ்வித மாற்றமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை.

எனவே நிர்வாக திறமையற்ற அறநிலையத்துறையின் அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் பதவி விலக வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

டோலி.. டோலி… முன்னாள் விவசாயிகளின் மறுபக்கம்!

toly in sabarimalai - 2026
#image_title

டோலி.. சபரிமலை சென்றவர்கள் அனைவருக்கும் பரிச்சயமானதுதான் டோலி..டோலி…என்கின்ற வார்த்தை.

பம்பை வரை வாகனங்களில் வருபவர்கள் யாராக இருந்தாலும் ஐந்து கிலோ மீட்டர் துாரத்தில் ,மலை உயரத்தில் உள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு நடந்து சென்றுதான் சுவாமி ஐயப்பனை தரிசிக்க வேண்டு ம்.

அதிலும் நீலிமலை மற்றும் அப்பச்சி மேடு ஆகிய பகுதிகள் கிட்டத்தட்ட செங்குத்தாக ஏறுவது போல இருக்கும், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது நிறைய மூச்சு வாங்கும்.

நல்ல உடல் நிலையில் திடகாத்திரமாக இருப்பவர்களே நின்று நின்று நிறைய ஒய்வு எடுத்தே ஏறுவர். இந்த நிலையில் வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் உடல் நிலை பிரச்னை காரணமாக நடக்க இயலாதவர்கள், எல்லாம் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு உள்ள ஒரே வழி ‛டோலி’தான்.

இரண்டு பக்க கம்புகளால் இணைக்கப்பட்ட பிரம்பு நாற்காலியில் சம்பந்தப்பட்டவர்களை உட்காரவைத்து பம்பை நதிக்கரையில் இருந்து சன்னிதானம் வரை சுமந்து செல்வர், தரிசனம் செய்து முடிந்த பிறகு மீண்டும் சுமந்து வந்து பம்பை நதி அருகே இறக்கிவிடுவதுதான் இவர்களது வேலை, தொழில் எல்லாம்.

மலையேறுபவர்கள் ஒரு பாட்டில் தண்ணீரை சுமந்து கொண்டு ஏறுவதைக்கூட சிரமம் என்று கருதி அடிவாரத்திலேயே தண்ணீர் முழுவதையும் குடித்துவி்ட்டு பாட்டிலை துாக்கி எறிந்துவிட்டு செல்லும் நிலையில் ,கிட்டத்தட்ட நுாறு கிலோ வரையிலான உடல் எடை கொண்ட பக்தர்களை அவர்களது இருமுடி கட்டுகள் உள்ளீட்ட சிறிய சுமைகளுடன் சுமப்பது சாதாரண வேலை இல்லை உடம்பெங்கும் உயிர் போவது போல வலிக்கும்.

வேர்வை கொட்டும் என்பதால் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருப்பர் போவதற்கு இரண்டு மணி நேரமும் வருவதற்கு இரண்டு மணி நேரமும் எடுத்துக் கொள்வர், இடையிடையே பத்து நிமிடம் டோலியை இறக்கிவைத்துவி்ட்டு ‛நாராங்க ஜூஸ்’ என்று சொல்லக்கூடிய எலுமிச்சைப் பழச்சாறு அருந்தி தங்கள் களைப்பை போக்கிக் கொள்வர்.

கொட்டும் மழையானாலும்,கொளுத்தும் வெயிலானாலும் பக்தர்களை சுமந்து சென்று திரும்புவர், எவ்வளவு கூட்டம் என்றாலும் ‛டோலி டோலி’ என்ற வார்த்தையை கேட்டால் கூட்டம் விலகிவழிவிடும்.

வேர்க்க விறுவிறுக்க மூச்சு வாங்க கம்புகளை தலையில் தாங்கியபடி இவர்கள் பக்தர்களை துாக்கி்க் கொண்டு வருவதைப் பார்க்கும் யாருக்குமே மனதில் பரிதாபம் தோன்றும், இவர்கள் மூலமாக ஐயப்பனை தரிசித்தவர்கள் கிழே இறங்கியதும் ஐயப்பனுக்கு அடுத்து கும்பிடுவது இவர்களைத்தான்,

அந்த அளவிற்கு இவர்களது பணி சிரமமானது. இந்த சிரமமான பணியினை பார்ப்பதிலும் போட்டி இருக்கிறது கிட்டத்தட்ட 500 டோலிகள் இருக்கின்றன 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் டோலி சுமக்கும் தொழிலாளர்களாக உள்ளனர் இவர்களில் தொன்னுாறு சதவீதத்தினர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். யாரைக்கேட்டாலும் ஊரில் விவசாயம் சரியில்லை குடும்பத்தை காப்பாத்தணும் அதான் இங்க வந்து இந்த வேலையை பார்க்கிறோம் ஆனால் நாங்கள் இந்த வேலையை பார்ப்பது குடும்பத்தினர் பலருக்கு தெரியாது தெரிந்தால் ரத்த கண்ணீர் வடிப்பர்.

இங்கே நாங்கள் தங்குவதற்கு இடம் கிடையாது சரியான சாப்பாடு கிடையாது,கப்ப கஞ்சியை குடித்துவிட்டு கையை தலைக்கு வைத்து கிடைத்த இடத்தில் படுத்துக் கிடப்போம் ‛ஏம்பா டோலி’ என்ற வார்த்தையை எந்த நேரத்தில் கேட்டாலும் அடித்து பிடித்து கிளம்பிவிடுவோம் ஒரு நாளைக்கு ஒருவரையாவது சுமந்து சென்று திரும்ப வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மட்டுமல்ல ஊரில் உள்ள எங்கள் குடும்பத்தினரின் நிலையும் பரிதாபம்தான்.

ஒரு பக்தரிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் வசூலித்துக் கொள்ள தேவஸ்தானம் அனுமதி வழங்கியிருக்கிறது 4 பேர் இந்த நான்காயிரம் ரூபாயை பிரித்துக் கொள்வோம் , 62 நாட்கள்தான் எங்களுக்கு வேலையிருக்கும் ஒரு நாளைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலே திருப்திதான் எங்களுக்கே இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் முதல் வாய்ப்பு கூட கிடைக்காதவருக்கு அந்த வாய்ப்பை நாங்களே கொடுத்துவிடுவோம் அவுங்களும் பாவம்ல என்றனர்.

இவர்கள் தொழிலாளர்கள் என்றாலும் தொழிலாளர் என்ற எந்த வரம்பிற்குள்ளும் வரமாட்டார்கள் அதற்கான எந்த வசதி வாய்ப்பும் கிடையாது.
தொழிலாளர்களின் அரசாங்கம் என்று சொல்லிக்கொள்ளும் கேரள அரசு இந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சமாக நிம்மதியாக துாங்குவதற்கும் சாப்பிடுவதற்குமாவது ஓரு இடத்தை பம்பையில் ஒதுக்கிதரலாம்.

இவர்களை சுமக்கவைத்த பாவத்திற்கு ஆளாகவிரும்பவில்லை ஆனால் அதற்கான கட்டணமான 4 ஆயிரத்தை வெகுமதியாக தரவிரும்புகிறேன் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர் டோலி துாக்கும் தொழிலாளர்கள் ஒரு அமைப்பை துவக்கினால் அந்த அமைப்பிற்கு இந்த பக்தர்களில் பலர் 4 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்க தயராக உள்ளனர் அதில் உணவு செலவு போன்றவைகளை பகிர்ந்து கொள்ளலாம்,செய்வார்களா?

எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னாள் விவசாயிகளாகவும் இன்னாள் டோலி தொழிலாளர்களாகவும் உள்ள இவர்களிடம் காதுகொடுத்து இவர்கள் சொல்வதை நம்மூரில் உள்ள விவசாயம் தொடர்பான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கேட்கவேண்டும்.

விவசாயம் பார்க்கமுடியாத வேதனையை, நீரின்றி பயிர்களுடன் தாங்களும் வாடும் கொடுமையை கண்ணீர்மல்க சொல்வர்.இவர்களின் சோகமான சொந்தக்கதையை கேட்டுவிட்டு கரம் நீட்டி இவர்கள் கண்ணீரை துடைக்க முயற்சிக்க வேண்டும் மேலும் இனியும் நம் விவசாயிகள் டோலி தொழிலாளர்களாக மாறாமல் காக்க வேண்டும்..

இலவச பாஸை ரூ.500க்கு விற்று கல்லா கட்டிய கும்பல்!

free pass sold out of rs 500 - 2026
#image_title

சென்னை அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்பட ப்ரமோஷன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது ..

நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட இலவச அனுமதி நுழைவு பாஸ்ஸை சில கும்பல் 500 ரூபாய் வரை விற்று கள்லா கட்டிய நபர்களின் வீடியோ வெளியாகி உள்ளது

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன் இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் ‘புஷ்பா தி ரைஸ்’ இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் பிரமோஷன் தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள சாய்ராம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது…

ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு கோல்ட் , சில்வர் என பல்வேறு பெரியோர்களாக அனுமதிச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

ஆனால் ஒரு கும்பல் இலவசமாக வழங்கப்பட்ட டிக்கெட்டை இசை வெளியீட்டு நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களுக்கு 500 ரூபாய் வரை விற்று கல்லா கட்டிய வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

இரண்டாம் சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் 108 சங்காபிஷேகம்!

108 sangabhishekam in madurai temles - 2026
#image_title

மதுரை மாவட்டத்தில், உள்ள சிவ ஆலயங்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் , சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, சிவபெருமானும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத்
தொடர்ந்து சிவனுக்கு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில், தொழில் அதிபர் எம். வி. எம் .மணி, கவுன்சிலர்கள் எம். வள்ளிமயில், டாக்டர் எம். மருது பாண்டியன், கோவில் நிர்வாக அதிகாரி ச. இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரி ஆலயத்திலும், தாசிலார் நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், சௌ
பாக்கிய விநாயகர் ஆலயத்திலும், மதுரை பாண்டி கோவில் ஜெ. ஜெ.நகர் அருள்மிகு வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்திலும் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது.