Home Blog Page 164

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்!

krishna vesham anusham madurai - 2026
#image_title

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை: திரளான பக்தர்கள் தரிசனம்.

மதுரை. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் கஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் மதுரை ஆண்டாள்புரம் , , விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது .

அனுஷ உற்சவம்மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம், மதுரை ஆண்டாள்புரம் விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ,மகாபெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத் திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப் பெற்றது.

தொடர்ந்து , ருத்ரா அபிஷேகம் ,மகா தீபாராதனை நடைப்பெற்றது.இந்நிகழ்வினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

எம்.எல்.ஏ., இல்ல விழாவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்., இணைந்து பங்கேற்பு!

ops ttv in a function - 2026
#image_title

இல்ல திறப்பு விழா: ஓபிஎஸ், தினகரன் பங்கேற்பு

உசிலம்பட்டி அருகே, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்று வாழ்த்தினர்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆ.கொக்குளம் கிராமத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் இல்ல திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்றனர்.
விழாவிற்கு வந்த ஒபிஎஸ், டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இல்ல திறப்பு விழாவில், ஒபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்தினர்.

தொடர்ந்து, இருவருக்கும் மீனாட்சியம்மன் சிலைகள் பரிசாக வழங்கப்பட்டது. டிடிவி தினகரனுக்கு எம்எல்ஏ சார்பில் ஒபிஎஸ் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

செங்கோட்டை: பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருவோண விழா!

IMG 20240915 WA0122 - 2026


செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி சுந்தரராஜபெருமாள் கோவிலில் திருவோண விழா.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பூமி நீளா சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண பண்டிகை விழா சிறப்பாக
நடப்பது வழக்கம் இந்தாண்டு நடந்த திருவோண விழாவில் காலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் வண்ண மலர்கள் கொண்டு அத்தப்பூ கோலமிடும் வைபவம் நடந்தது.

அதனைதொடா்ந்து 10.30மணிக்கு வாசனை திரவியங்கள் கொண்டு பூமி நீளா சமேத ஸ்ரீசுந்தரராஜபெருமாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. 11மணிக்கு சிறப்பு தீபாராதனை இரவு 7மணிக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

IMG 20240915 WA0115 - 2026

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவா் பணிநிறைவு பெற்ற ஆசிரியா் ஆறுமுகம், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பெரியசாமி, முருகன் மற்றும் கமிட்டி உறுப்பினா்கள் சிறப்பாக செய்திருந்தனா். பண்பொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தென்கரை அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!

kumbabhishekam in thenkarai akilandeshwari temple - 2026
#image_title

தென்கரை அகிலாண்டேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம்.

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க, மிகவும் பழமை வாய்ந்த பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடிய அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று இதற்கான மகா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணி அளவில் நடைபெற்றது.

இதற்கான பூஜை கடந்த 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை தொடங்கி முதல் கால யாக பூஜை, இரண்டாம் காலயாக பூஜை, மூன்றாம் காலையாக பூஜை நடைபெற்று இன்று அதிகாலை நான்காம் காலயாகபூஜை நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து மகா பூர்ணாஹதி நடந்தது சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை வந்து சுவாமி மற்றும் அம்பாள் உட்பட கோவில் உள்ள கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி உட்பட இங்குள்ள தெய்வங்களுக்கு மகா அபிஷேகம்,சிறப்பு அர்ச்சனை, சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை ஆதித்யா நிறுவன தலைவர் செந்தில் தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.

கும்பாபிஷே விழாவில் இந்து அறநிலை ஆட்சித்துறை உதவி ஆணையாளர் வளர்மதி, கோவில் செயல் அலுவலர் கார்த்திகைச் செல்வி, ஊராட்சி
மன்றத் தலைவர் மஞ்சுளா ஐயப்பன், உதவி தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முனியராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ், கோவில் பணியாளர்கள் நாகராஜ், மணி, நித்யா ,ஜனார்த்தன் உள்பட தென்கரை மற்றும் இப்பகுதியில் உள்ள கிராமமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 6:30 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு பஞ்ச மூர்த்திகள் திரு வீதி உலா நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், திருப்பணி குழுவினர், கிராம பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

தென்கரை ஊராட்சி சுகாதார ஏற்பாடு மற்றும் குடிநீர் வசதி, கூடுதலான திருவிளக்கு ஏற்பாடு செய்தனர். சோழவந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உட்பட போலீசார், சோழவந்தான் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் காவலர்கள், திருவேடகம் விவேகானந்த கல்லூரி என்.சி.சி மாணவர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பட்டிருந்தனர்.

அழகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.

மதுரை மாவட்டம், பாலமேடு தேவேந்திரகுல வேளாளர் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தொட்டிச்சி சோலை அழகி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்
பட்டது. விழா ஏற்பாடுகளை, பாலமேடு தேவேந்திர குல வேளாளர் பங்காளிகள் செய்து இருந்தனர்.

லட்சுமிஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை

மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், திருவோண நட்சத்திரத்தை யொட்டி, லட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சணைகளை அர்ச்சகர் காந்தன் செய்தார். இதன் ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகி முத்துக்குமார்,மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.

சிவகங்கை: ரிசர்வ் வங்கி 90வது ஆண்டு விநாடி வினா போட்டி அறிவிப்பு!

reserve bank of india rbi - 2026
#image_title

சிவகங்கை மாவட்டம் ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டை முன்னிட்டு,
நாடு முழுவதும் இளங்கலை மாணவர்களுக்கு, வருகின்ற 19.09.2024 முதல் 21.09.2024 வரை வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது என்று, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏப்ரல்1, 1935 இல் நிறுவப்பட்டது. இந்த ஆண்டு வங்கியின் செயல்பாடுகளின் 90வது ஆண்டைக் குறிக்கிறது.

இவ்வரலாற்று மைல்கல்லை நினைவு கூறும் வகையில் தொடர் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு, ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டை முன்னிட்டு, நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் இளங்கலை மாணவர்களுக்கு வருகின்ற 19.09.2024 முதல் 21.09.2024 வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 வரை வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது.

இவ்வினாடி வினா போட்டியானது, நான்கு நிலைகளில் நடைபெறவுள்ளது. அதில், நாடு தழுவிய ஆன்லைன் போட்டியில் மாணவர்கள் இருவர் கொண்ட குழுக்களாக MCQ வடிவ வினாடி வினா போட்டியில் பங்கேற்பார்கள். ஒரு கல்லூரியில் இருந்து பல அணிகள் பங்கேற்கலாம்.

அவ்வாறு, ஆன்லைன் போட்டியின் மூலம் தகுதி பெறும் அணிகள், மாநில அளவிலான சுற்றில் பங்கேற்றல் வேண்டும். மாநில அளவிலான சுற்றில், மாநில அளவில் வெற்றி பெறும் அணிகளைத் தீர்மானிக்க, நேரில் நடக்கும் வினாடி வினா போட்டியில் பங்கேற்றல் வேண்டும்.

அடுத்தக்கட்டமாக, மாநில அளவிலான வெற்றியாளர்கள் மண்டல அளவிலான சுற்றில் பங்கேற்றல் வேண்டும். இம்மண்டல அளவிலான சுற்றானது ஐந்து வெவ்வேறு மண்டலங்களுக்கிடையே நடைபெறும்.

அவ்வாறு, ஐந்து மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டியின் வெற்றியாளர்கள் இறுதிப்போட்டியான தேசிய இறுதிப்போட்டியில் சிறப்பு பரிசுகளுக்காக போட்டியிட வேண்டும்.

மேலும், இவ்வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.08 இலட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.06 இலட்சமும் வழங்கப்படவுள்ளது.

இப்போட்டி குறித்து, கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள QR ஐ ஸ்கேன் செய்து விவரங்கள் அறிந்து,
விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி: அமெரிக்காவிலும் அதே அசடு!

1854358 rahulgandhi1 1 - 2026

— ஆர். வி. ஆர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒரு விசேஷ குணம் உண்டு. என்னவென்றால்: தனது சிறுபிள்ளைத்தனம், முதிர்ச்சியின்மை இரண்டையும் மேடை போட்டுக் காட்சிப் படுத்துவார். அவர் கைப்பாவையான காங்கிரஸ் கட்சியும் அதைக் கொண்டாடும்.

சமீபத்தில் இதற்காகவே மூன்று நாட்கள் அமெரிக்கா சென்று வந்தார் ராகுல் காந்தி. சில பல்கலைக்கழக விவாத அரங்குகளில், வேறு சில இடங்களில், அவர் பேசினார். கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது, பிரதமர் மோடி வழிநடத்தும் இந்திய அரசை அவர் பல வகையில் குறை சொன்னார். அங்கு அவர் பேசியவற்றில் இவையும் உண்டு:

“இந்தியாவில் சீக்கியர்கள் டர்பன் அணிவதற்குப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்”. (ஓஹோ! மோடி மந்திரி சபையில் இருக்கும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி என்ற ஒரே சீக்கியர்தான் தற்போது இந்தியாவில் சுதந்திரமாக டர்பன் அணிகிறாரா?)

“இந்தியாவில் திறன்களை அழிப்பது அதிகம் நடந்துவருகிறது. அதை நிறுத்த வேண்டும். மேலும் திறன்களை வளர்க்க வேண்டும்.” (காங்கிரஸ் கட்சிக்குள் கூட சிறிதும் திறன் நுழையாமல் வளராமல் பார்த்துக் கொண்டது நீங்களும் உங்கள் அன்னையும்தானே, ராகுல்!)

“பல ஆண்டுகளாக பாஜக-வும் பிரதமர் மோடியும் மக்களிடையே பயத்தைப் பரப்பினார். ஆனால் 2024 தேர்தலுக்குப் பிறகு மக்களின் அச்ச உணர்வு மறைந்துவிட்டது” (காங்கிரஸ் இடம் பெற்ற ‘இண்டி’ கூட்டணிக்கு 2024 லோக் சபா தேர்தலில் மக்கள் பெரும்பான்மை அளிக்காதது, யார் மீதான அச்சத்தினால்?)

“நான் இந்தியாவில் 4000 கிலோமீட்டர் பாரத் ஜோடோ என்ற பெயரில் யாத்திரையாக நடந்தேன். காரணம், தொலைக் காட்சிகளும் மற்ற ஊடகமும் எங்கள் பேச்சுக்களை மக்களிடம் கொண்டு செல்லவில்லை. இந்தியாவில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் நான் நேரடியாகச் சென்று மக்களைத் தொடர்பு கொண்டேன்” (அப்படியா? நீங்கள் யாத்திரை போகமலே, அமெரிக்காவில் இப்படிப் பேசியது எப்படி இந்திய ஊடகங்களில் வந்தது?)

“பிரதமர் மோடியை நான் உண்மையில் வெறுக்கவில்லை. அவர்மீது எனக்கு அனுதாபம்தான் ஏற்படுகிறது.” (“தேசத்தின் காவலாளி மோடி ஒரு திருடர்” என்று முன்பு நீங்கள் பேசிவந்தீர்கள். அவர் மீதான அனுதாபத்தை நீங்கள் எப்படியெல்லாம் வெளிப்படுத்தினீர்கள்! மெய் சிலிர்க்கிறதே, ராகுல்!)

“இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை.” (சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்க மண்ணிலிருந்து கருத்து சொல்லும்போது, இந்திய சட்டசபைகள் மற்றும் அரசு வேலைகளில் நீடித்து வரும் இட ஒதுக்கீட்டை நீங்கள் நியாயப் படுத்தத் தயங்கினீர்கள். ஆகையால், இந்தியாவை ‘நியாயமில்லாத நாடு’ என்று நீங்கள் வெட்கமில்லாமல் குறிப்பிட்டு, இட ஒதுக்கீட்டில் நமது அநேக அரசியல் தலைவர்கள் ஆடும் கபட நாடகத்தை மறைத்து விட்டீர்களே, ராகுல்!)

நாம் அடுத்த வீட்டில் இருக்கும்போது, நமது வீட்டில் உள்ளவர்களைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசலாமா? கூடாது. அது பண்பற்றது. அப்படிப் பேசுவதில் உண்மை இல்லை என்றால் நம் வீட்டிலேயே கூட அப்படிப் பேசுவது தவறு. அசட்டுத்தனமும் கெட்ட எண்ணமும் சேர்ந்த ராகுலுக்கு இது புரியாது.

ஒரு நாட்டின் செயல்பாடுகள், அங்கு ஆட்சியில் உள்ள தலைவரின் பேச்சுக்கள், மற்ற சில நாடுகளின் மீது தாக்கம் ஏற்படுத்துகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த நாடுகளின் மக்களும் அதில் நாட்டம் கொள்ளலாம், அந்த விஷயம் பற்றிக் கருத்து சொல்லலாம். அதில்லை என்றால், ஒரு நாட்டுத் தலைவரின் பேச்சிலும் செயலிலும் மற்ற நாட்டு மக்களுக்கு என்ன ஆர்வம் இருக்கும்? அவருடைய நாட்டின் அரசியல் அக்கப்போரில் மற்ற நாட்டவர் வெட்டியாகக் கவனம் செலுத்துவார்களா?

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்தியாவுக்கு வந்து அந்த அந்த நாட்டை ஆளும் மற்ற கட்சிகளைப் பற்றி விமரிசனம் செய்ய வந்தால் தில்லியிலும் ஹைதராபாத்திலும் சென்னையிலும் உள்ளவர்கள் அதில் ஆர்வம் காட்டுவார்களா? ராகுலுக்கு இது ஏன் பிடிபடவில்லை? அவர் சிறுபிள்ளைத்தனம் மிக்கவர், முதிர்ச்சியற்றவர், என்றுதானே அர்த்தம்?

சரி, ராகுல் காந்திதான் அறியாதவர். அமெரிக்காவில் இருப்பவர்கள் – அவர்கள் பிறப்பால் இந்தியத் தொடர்பு உள்ளவர்களோ அல்லது அமெரிக்கர்களோ – ஏன் அசட்டு ராகுல் பேச்சைக் கேட்க வருகிறார்கள்? காரணம் இருக்கிறது.

ராகுல் காந்தி அரசியலில் அறியாதவராக, விளையாட்டுப் பிள்ளையாக, கிட்டத்தட்ட ஒரு கோமாளியாகவே கூட இருப்பதால், அவர் எங்கும் அப்படிப் பேசுவதால், அவருக்கான பிராபல்யம் அப்படி இருக்கிறது. அவரை இளக்காரத்துடன் பார்த்து ரசிக்க, அப்படிப் பொழுது போக்க, வெளிநாட்டிலும் சிற்சில மனிதர்கள் வரத்தானே செய்வார்கள்? இது போக, பிரதமர் மோடியை எதிர்க்கும் சில வெளிநாட்டுச் சக்திகள், இந்தியா பெரிய அளவில் வளர்வதை விரும்பாத அந்த சக்திகள், அவர்கள் நோக்கத்திற்காக அசட்டு ராகுலை முடிந்தவரை இப்படியெல்லாம் கூட உபயோகித்துக் கொள்ளலாம், யார் கண்டது?

பிரதமர் மோடி ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் புடினுடன் பேசுகிறார். பிறகு உக்ரைனுக்குச் சென்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசுகிறார். இரு நாட்டுத் தலைவர்களும் அந்த நாட்டு மக்களும், உலகின் மற்ற நாடுகளும் கூட, மோடியின் இந்தச் செயலை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஏன்? அவர் இரண்டு அண்டை நாடுகளுக்குச் சென்று ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் இடித்துப் பேசியதாலா? இல்லை, அந்த நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தன்னால் ஆனதை மோடி முயற்சிக்கிறார், அவர் முயற்சிக்கு உலகளவில் மதிப்பும் இருக்கிறது என்பதால் – முடிவு நம் கையில் இல்லை என்றாலும். ரெண்டாம் கிளாஸ் ராகுலுக்கு இதெல்லாம் பத்தாம் கிளாஸ் விஷயம்.

பாவமான ராகுல் காந்தி. பரிதாபமான அவர் கட்சி. இவரால், இவர் கட்சியின் லட்சணத்தால், பயனடைந்து அவரவர் வழியில் சுகிக்கும் அக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். இதுதானே, ரத்தம் சிந்திய காலத்துக் காங்கிரஸின் இன்றைய அவல நிலை?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

‘தகுதி’ இழந்த தொழிலதிபர்!

coimbatore annapoorna owner and nirmala seetharaman - 2026
#image_title

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார் தமிழக வியாபாரிகளிடம் ஜி.எஸ்டி வரி பற்றி விவாதித்த போது கோயமுத்தூர் அன்னபூர்னா உணவக உரிமையாளர் கேட்ட கேள்விகள் ஏதோ பராசக்தி வசனம் கேட்டது போல் உபிக்களுக்க்கு தோன்றலாம்

உரிமைகுரல் படத்தில் எம்ஜி.ராம்சந்தர் கேட்டது போல் அதிமுகவினருக்கு கேட்கலாம், இல்லை ரஷ்ய லெனின் போல கம்யூனிஸ்டுகளுக்கோ, அய்யா நேருவின் சீன போர் குரல் போல் காங்கிரசாருக்கும் கேட்கலாம்

அவர்கள் அப்படித்தான், அவர்கள் எதுவும் யோசிக்கமாட்டார்கள், ஜிஎஸ்டிக்கு எதிராக அன்னபூர்ணா அதிபரே பொங்கிவிட்டார் என குதிப்பார்கள்

சரி, விவகாரத்தை கவனிக்கலாம்

அன்னபூர்ணா உணவக அதிபர் கேட்டது, இனிப்பு பலகாரத்துக்கு ஜி.எஸ்டி இல்லை காரவகைக்கு உண்டு, பேக்கரிக்கு இன்னொருவரி இதெல்லாம் எப்படி எங்களுக்கு சரியாகும் என்பது

மேலோட்டமாக இது சரியாக தோன்றலாம் ஆனால் அன்னார் பல விஷயங்களை மறைத்தார் அல்லது மறந்தார்

அப்படியே பத்திரிகைகளும் மறைத்தன‌

ஜிஎஸ்டி என்பது ஒரு நிறுவணத்தின் தொழிலுக்கு அதாவது அந்த நிறுவணம் என்ன தொழில் செய்கின்றதோ அதற்கு விதிக்கபடும் வரி, அங்கு மாற்றமில்லை

இந்த குபீர் தாளிப்பு புரட்சிவாதி மூன்று தொழில்கள் அதாவது மூன்று நிறுவணங்களை பதிவு செய்துல்ளார்

அது அன்னபூர்னா உணவகம், அன்னபூர்னா ஸ்வீட்ஸ், அன்னபூர்னா பேக்கரி என மூன்று கடைகளை மூன்று பெயரில் மூன்று வேறு வேறு உரிமங்களில் நடத்துகின்றார்

ஆக அந்த வரிமுறைபடி மூன்றுக்கும் வேறு வேறு ரசீதுதான் வரும் வரமுடியும்

அன்னார் சொல்வது என்னவென்றால் இந்த மூன்றையும் நான் ஒரே வளாகத்தில் நடத்துவேன் ஒரே வரிமுறை வேண்டும் என்கின்றார்

இவர் ஒருவருக்காக தேசத்தின் மொத்த சட்டத்தையும் எப்படி மாற்றமுடியும்

உண்மையில் அவர் மூன்று பலகாரங்களை ஒரு வாடிக்கைகாளருக்கு கொடுத்தால் மூன்று ர்சீது கொடுக்கவேண்டும் அவரின் தொழில் உரிமை அது அதை மீறுவது சட்டமீறல்

ஆக சட்டமீறலை செய்து கொண்டே அதனை தனக்காக சட்டத்தை மாற்றவேண்டும் என்கின்றார்

இதெல்லாம் அந்த அவையிலே தண்டிக்கவேண்டிய விஷயம் அம்மையார் நிர்மலாவும் வானதியும் சபை நாகரீகம் காத்தார்கள்

நிச்சயம் மூன்று ரசீது கொடுக்காமல் அரசை ஏமாற்றுகின்றீரா என நிதி அமைச்சர் சீறியிருக்கவேண்டும், ஆனால் அவர் புனகைத்து கொண்டே விட்டுவிட்டார்

பின் தனியாக அமைச்சரை அய்யா சந்தித்திருக்கின்றார் அங்கே ஜிஎஸ்டி என்றால் என்ன? உணவக உரிமை என்றால் என்ன , தொழிலுக்கு ஒரு ஜிஎஸ்டி என விளக்கபட்டு அன்னார் மன்னிப்பும் கோரிவிட்டார்

சரி, நிதி அமைச்சர் முன்னால் இப்படி ஒரு தொழில் முனைவோர் பேசமுடிகின்றது விவாதிக்க முடிகின்றது

ஆனால் த்மிழக கனிமவள அமைச்சர் முன் ஒரு மணல்குவாரிக்காரன் இப்படி பேசமுடியுமா? அய்யா முத்துசாமி முன்னால் டாஸ்மாக் பார் உரிமையாளன் தன் குறை சொல்லமுடியுமா?

அவ்வளவு ஏன் இந்து அறநிலையதுறை அமைச்சர் முன் ஒரு இந்து பக்தன் தன் குறையினை சொல்லமுடியுமா?

அதையெல்லாம் பற்றி பேசினால் அவன் சங்கி…

மாணவியை தண்ணி அடிக்க அழைத்த பேராசிரியர்! அழிவை நோக்கி ஆக்ஸ்போர்ட் சிட்டி!

xaviers college palayamkottai - 2026
#image_title

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று புகழ்பெற்ற பாளையங்கோட்டையில் உள்ள கல்வி நிறுவனங்கள் இன்று அந்தப் பெயரை சிதைத்து சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக, ஆசிரியர் – மாணவர் என்ற புனிதமான உறவு நிலையைக் கடந்து பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் ஆசிரியர்கள் சிலரால் மாணவர்களிடையே பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பேராசிரியர்கள் இருவர் ஒரு மாணவியை சாராயம் குடிக்க அழைத்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாளையங்கோட்டையில் சேவியர் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி, இதே பெயரில் மேல்நிலைப் பள்ளிகள் எல்லாமே ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அருகருகே உள்ளன. இந்த நான்கு நிறுவனங்கள் மற்றும் சாராள் டக்கர் கல்லூரி பள்ளி ஆகியவற்றின் தன்னிகரற்ற செயல்பாடுகளால்தான் பாளையங்கோட்டைக்கு தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்ற பெயர் கிடைத்தது.

கடந்த வாரம் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை தகாத உறவுக்கு அழைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த சூடு ஆறும் முன் சேவியர் கல்லூரியில் மாணவிக்கு தொல்லை கொடுத்த இரண்டு பேராசிரியர்கள் சிக்கி இருக்கிறார்கள்

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின் (40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ்(40) ஆகியோர் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த நான்காம் தேதி இவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள விடுதி ஒன்றில் மது அருந்தி உள்ளனர்.

போதை தலைக்கேற பால்ராஜ் தன்னிடம் படிக்கும் முதுகலை வகுப்பு மாணவி ஒருவருக்கு செல்போனில் அழைப்பு விடுத்து அருவருக்கத் தக்க வார்த்தைகளை பேசி இருக்கிறார். ஜெபஸ்டின் ஒரு படி மேலே போய் நாங்கள் இருவரும் தண்ணி அடித்துக் கொண்டிருக்கிறோம். நீயும் வா என்று அழைத்திருக்கிறார்.

பேராசிரியர்களின் தொல்லை தாங்காமல் மாணவி போலீசில் புகார் செய்திருக்கிறார். ஆனால், பின்னர் ஏதோ நிர்பந்தம் காரணமாக மறுநாள் தனது புகாரை வாபஸ் பெற்றுவிட்டார். போலீசார் மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

மகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடும். எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், போலீஸாரின் மிரட்டலின் பேரிலேயே அந்த மாணவியை அழைத்து புகாரை வாபஸ் பெறச் செய்தார்கள் என்ற தகவலும் பரவியது.

இதையடுத்து இந்த மர்மமான நடவடிக்கையின் பின்னே உள்ள உண்மையைக் கொண்டு வர வேண்டும் என்று நெல்லை மாநகர இந்து முன்னணி அமைப்பு களம் இறங்கியது.

காவல்நிலையத்திற்கு வந்து முதலில் தைரியமாக புகார் கொடுத்தவர்கள் பின்பு புகாரை வாபஸ் பெறுகிறார்கள் என்றால் இடையில் நடந்தது என்ன? பாளையங்கோட்டை கல்லூரி விஷநரிகளால் மாணவி குடும்பத்தினர் மிரட்டப்பட்டனரா? பெண்களுக்கு எதிரான குற்றத்தில் புகார்தாரர்கள் புகாரை திரும்ப பெறும் நிலைக்கு நெல்லை மாநகர காவல்துறை  மெத்தனமாக காலதாமதமாக வழக்கு விசாரணை செய்கிறார்களா? பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்தவுடன் ஏன்  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை?

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் எல்லா புகார்களும் இது போல் திரும்ப பெற அனுதிக்கப்படுமா?  விஷநரிகள் ஆதிக்கத்திற்கு காவல்துறை கைகள் கட்டப்பட்டதா? ஆளுக்கொரு நீதி,  கல்லூரிக்கொரு சட்டமா? பெண்களுக்கு எதிரான இந்த அநீதியை மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றம் இதை தன்னிச்சையாக (Su-moto) விசாரித்தால் பல உண்மைகள் வெளிவருமா?  என்று நெல்லை மாநகர இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பினர்.

மேலும், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

பாளையங்கோட்டை கல்லூரியில் மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொந்தரவு விவகாரத்தில், புகார் கொடுத்த மாணவி மிரட்டப்பட்டாரா?  கொடுத்த புகாரை மகளின் படிப்பு பாதிக்கும் என பெற்றோர் சில மணி நேரத்தில் வாபஸ் பெற காரணம் என்ன? காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியவிடாமல் தடுத்தது எந்த சக்தி? 

விஷநரிகளால் மூடிமறைக்கப்பட்ட  பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க உள்ளது. மாண்புமிகு உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. நான்கு நாள் விடுமுறைக்கு பின் விடை கிடைக்கும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட உள்ளது அவர்கள் நேர்மையாக நடுநிலையோடு செயல்டுவார்கள் என நினைக்கிறோம்.  விஷநரிகள் கல்லூரியில் பாதிக்கப்பட்ட இந்து மாணவிக்கு நீதி கிடைக்கும் என நம்புவோம் என்று, இந்துமுன்னணி அமைப்பினர் சமூகத் தளங்களில் பரவலாக செய்தியைப் பரவவிட்டனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவரவே, உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்மாவட்ட விவகாரங்களைக் கவனித்து வரும் ஏ.டி.ஜி.பி. உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் நேரடி கவனம் செலுத்தி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகிய இருவரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது உறுதியானது. இதை அடுத்து நேற்று நள்ளிரவு தூத்துக்குடியில் தனது வீட்டில் தங்கி இருந்த ஜெபஸ்டினை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்து பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவாகிவிட்டார்.

பாளையங்கோட்டை போலீசார் இரு பேராசிரியர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேவியர் கல்லூரி,  இருபாலர் பயிலும் கல்லூரியாக மாறிய பின், அவ்வப்போது பாலியல் சீண்டல் புகார்கள் வருகின்றன. கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ், பேராசிரியர்களை அழைத்து கூட்டம் ஒன்று நடத்தியதாகவும், அந்தக் கூட்டத்தில், ‘மாணவியரிடம் தவறாக பேசினாலும் பாலியல் பிரிவுகளில் கைதாக நேரிடும். பேராசிரியர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பேராசிரியர் மீது புகார் நிரூபிக்கப்பட்டால் கல்லூரி நிர்வாகம் பாதுகாக்காது’ என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. 

தற்போது வழக்கில் சிக்கியுள்ள இருவரும் சுயநிதிப் பிரிவில் பேராசிரியர்களாக பணியாற்றினர். பால்ராஜுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. அதற்காகத்தான் அவர் சக பேராசிரியர்களுக்கு பாரில் விருந்து அளித்தார். இருவருக்கும் திருமணமாகி குடும்பங்கள் உள்ளன.

இத்தகைய சம்பவங்களால், ஆசிரியர சமூகம் வெட்கி தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்று சமூகத் தளங்களில் பலர் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதை அடுத்து இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இந்து முன்னணி அமைப்பின் கா.குற்றாலநாதன், பாளை சேவியர் கல்லூரியில் இந்து மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. மாணவி குடும்பத்தினரை மிரட்டி மூடி மறைக்க முயன்ற நிலையில் இந்துமுன்னணி கோரிக்கையை தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்த மாநகர காவல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி என்று கூறினார்.

அந்த விஷயத்தில் நாங்க பிஎச்டி., திருமாவளவன் எல்கேஜி.,: அன்புமணி பளிச்!

anbumani ramadoss - 2026
#image_title

மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய அன்புமணி ராமதாஸ், மது ஒழிப்பு விஷயத்தில் பாமக., பிஎச்டி., ஆனால் திருமாவளவன் இப்போதுதான் எல்கேஜி என்று குறிப்பிர்டார்.

மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது.

தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளை மூடி , மது விற்பனை நேரத்தை குறைக்க காரணமாக இருந்த கட்சி பாமக: பாமக மகளிரணியில் மட்டும் 15 ஆயிரம் பெண்கள் மதுக் கடைகளை உடைத்து சிறை சென்றுள்ளனர்…

  • மது ஒழிப்பில் பாமக Phd , திருமாவளவன் LKG : மாநாட்டிற்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் , மாநாடு நடத்தும் திருமாவளவனுக்கு எங்களது ஆதரவு உண்டு
  • மது ஒழிப்பில் திருமாவளனுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் முதலில் எங்களிடம்தான் வந்திருப்பார்: தமிழகத்தில் மதுவால் அதிகம் பாதிக்கப்பட்டோவோர் மக்கள் தொகையில் 40 சதவீதம் உள்ள வன்னியரும் பட்டியலினத்தவருமே
  • மது ஒழிப்பு குறித்து பேசும் திருமாவளவன் டாஸ்மாக் நிறுவனத்துக்கு 40 சதவீத மதுவை விநியோகிக்கும் மதுஆலை முதலாளிகள் டிஆர்.பாலு, ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தது ஏன்?

திருமாவளவன் தனது மது ஒழிப்பு மாநாட்டுக்கு கனிமொழிக்கு அழைப்பு விடுக்க வேண்டும்: மதுவால் அதிக விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்பதை கனிமொழி தனது அண்ணன் ஸ்டாலினிடம் கூற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்த வேண்டும்.

    முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மூலம் 19 நிறுவனங்கள் தமிழகத்தில் 7600 கோடி முதலீடு செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களைப் பொறுத்தளவில் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தை தோல்வியாகத்தான் பார்க்கிறோம்.

    மற்ற மாநில முதல்வர்கள் 5..6 நாளில் 30ஆயிரம் 50 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் 17 நாளில் 7600 கோடிக்குத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கூட போட்டுள்ளார்.

    மதுக்கடையை உடனடியாக மூடினால் தமிழகத்தின் சூழல் மோசமாகிவிடும் என்று பேசி மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தமிழக மக்களை கொச்சைப்படுத்தியுள்ளார்.

    திராவிடக் கட்சிகளின் 57 ஆண்டுகால ஆட்சியில் மது இல்லாமல் தமிழக இளைஞர்கள் இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்கியதுதான் திராவிட மாடல்.

    படிப்படியாகவேனும் மதுவிலக்கை கொண்டு வருவீர்களா என பாமக தொடர்ந்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி வருகிறது.

    2016 ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று பேசினார் , இன்று ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு குறித்து பேச மறுக்கிறார் , கனிமொழி யும் 3 ஆண்டுகளாக மவுனமாக உள்ளார்.

    மது இல்லாமல் ஆட்சி நடத்த முடியாதா.. இதை விட வேறு கேவலம் என்ன..? மதுவை விட மோசமான சூழலாக போதைப் பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. பள்ளிக் கூட மாணவர்களே கூல் லிப் பயன்படுத்துவது குறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.

    சென்னை அருகே செயல்படுத்தப்பட உள்ள கோவளம் ஹெலிகாப்டர் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் , தமிழகத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வரும் பகுதி சென்னைதான். சென்னையை சுற்றியுள்ள கும்மிடிபூண்டி , கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளில் பிற பகுதியை விட 3 மடங்கு அதிக பறவைகள் வருகிறது. கோவளம் ஹெலிகாப்டர் திட்டம் பறவைகளுக்கும் அங்கு வசிப்பவர்களுக்கு பதிப்பு ஏற்படுத்தும்

    பாமக சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி , 36 ஆண்டுகளாக 6 இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்துள்ளது பாமக , பட்டியலின மக்களுக்கு அகில இந்திய அளவிலும் , அருந்ததியர் ,இசுலாமியர் உள் ஒதுக்கீடுகளையும் , 115 சமூகங்களுக்கான MBC இட ஒதுக்கீடு , obc சமூகங்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடையும் பெற்றுத்தந்த கட்சி.

      திருமாவளவன் பாமகவை சாதிக் கட்சி என தொடர்ந்து இழிவு படுத்துகிறார் . திருவமாவளவன் அதை தவிர்க்க வேண்டும். எங்களாலும் அவரைப் போல் பேச முடியும் , பாமகவை இழிவு படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள் திருமாவளவன் , நீங்கள் மது ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டுமானால் நடத்தி கொள்ளுங்கள். மது ஒழிப்புக்காக யார் மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம் , மது ஒழிப்பு மாநாடு நடத்துவதற்காக திருமவளனையும் ஆதரிக்கிறோம் , அவர் எங்களை அழைக்காவிட்டாலும் பரவாயில்லை , ஆனால் மது ஒழிப்பில் பாமக PhD என்பதையும் திருமாவளவன் இப்போதுதான் Lkg என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

      மருத்துவர் ராமதாஸ் கட்சி தொடங்கும் முன்பே 1980லேயே மது ஒழிப்பு போராட்டங்களில் நடத்தினார். இன்று அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு குறித்து பேச காரணம் ராமதாஸ்தான் .

      மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பாமக வை சேர்ந்த 15 ஆயிரம் பெண்கள் சிறை சென்றுள்ளளனர் , தமிழகத்தில் 3321 மது கடைகளையும் இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும் சட்டப் போராட்டம் நடத்தி மூடியுள்ளோம். மது விற்பனை நேரத்தை குறைத்தோம் , சாராயக் கடைகளை உடைத்தோம் , அதற்காக இன்னும் வழக்குகள் எங்கள் மீது உள்ளது. நான் மத்தியில் அமைச்சராக இருந்தபோது தேசிய மதுக் கொள்கையை கொண்டுவந்தேன். மது ஒழிப்பு குறித்து ஐநாவில் தீர்மானம் கொண்டுவரப்பட காரணமாக இருந்தேன். ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம்

      திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க கனிமொழியை அழைக்க வேண்டும் , மது விற்பனை காரணமாக இந்தியாவில் அதிக விதவைகள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள் என அவரது அண்ணன் ஸ்டாலினிடம் சென்று கனிமொழியை பேச சொல்லுங்கள் . மது ஒழிப்பு என்பது வெறும் விளம்பர பிரச்சனை கிடையாது.

      மது ஒழிப்பில் திருமாவளவனுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் அவர் எங்களிடம்தான் வந்திருப்பார்.

      ஏனென்றால் தமிழகத்தில் அதிகமாக மது அருந்தும் சமூகமாக மக்கள் தொகை 40 சதவீதமாக உள்ள வன்னியர் , பட்டியல் சமூகம்தினர்தான் இருக்கின்றனர்.

      மத்திய நிதி அமைச்சர் நல் எண்ணத்தில்தான் கோவையில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நடத்தினார். சந்திப்பிற்கு பிந்தைய சர்ச்சைகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்

      ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற திருமாவளவனின் பதிவு சரியாதுதான் , அவர் ஏன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க கூடாது . எல்லா கட்சியும் தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் கட்சி தொடங்கினர். திமுக கோபப்படும் என்பதால் அந்த பதிவை அவர் நீக்கியதுதான் தவறு.

      முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 4 லிருந்து 6 வது இடத்துக்கு சரிந்துள்ளது. நாடு முழுவதும் மது ஒழிப்பை கொண்டு வருவது குறித்து மத்திய அரசை வலியுறுத்துவோம். மது மாநிலப் பட்டியலில் உள்ளது. அனைத்து மாநிலங்களும் படிப்படியாகவேனும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.

      45 ஆண்டுகளாக மதுவின் பாதிப்பை நேரில் பார்த்தவர்கள் நாங்கள் . கள்ளக்குறிச்சியில் இறந்த 67 ல் 62 பேர் பட்டியலினத்தை சார்ந்தவர்கள். தமிழக அரசு மதுவை விற்கவில்லை , திணிக்கிறது.

      திருமாவளவனுக்கு மது ஒழிப்பில் ஆர்வம் இருந்தால் மது ஆலை முதலாளிகளான டி.ஆர்.பாலு மற்றும் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்தது ஏன்..? தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு தலா 20 விழுக்காடு மதுவை இருவரும்தான் மது ஆலை மூலம் சப்ளை செய்கின்றனர்… என்று பேசினார்.

      A Historic Tribute to Tamil Pride and India’s Freedom Struggle

      0
      andaman nicobar srivijayapuram - 2026
      #image_title

      ANS Prasad
      Tamil Nadu BJP Spokesperson

      Sri Vijayapuram: A Shining Testament to Tamil Nadu’s Glorious Heritage, Chola Dynasty’s Enduring Legacy, and Freedom Fighters’ Selfless Sacrifice – PM Modi’s Enduring Tribute to India’s Bravehearts

      A Historic Tribute to Tamil Pride and India’s Freedom Struggle

      As we celebrate the 78th anniversary of India’s independence, the people of Tamil Nadu and the entire nation are filled with immense pride and gratitude. Our Honorable Prime Minister, Narendra Modi, has bestowed upon us a historic gift – renaming Port Blair as Sri Vijayapuram. This monumental decision is a fitting tribute to the grandeur of the Chola Empire, the bravery of our freedom fighters, and the enduring legacy of Tamil Nadu.

      The Chola Empire, known for its maritime prowess, established a naval base in the Andaman and Nicobar Islands, which played a vital role in India’s ancient trade and cultural exchange with Southeast Asia. By renaming Port Blair as Sri Vijayapuram, Prime Minister Modi has acknowledged the significance of this historic naval base and the Chola dynasty’s contributions to India’s rich cultural heritage.

      The Andaman and Nicobar Islands hold a sacred place in India’s fight for freedom. It was here that Netaji Subhas Chandra Bose, the visionary leader of the Indian National Army (INA), hoisted the national flag, inspiring a nation to rise against colonial rule. The INA, forged through his vision, united thousands of brave Tamils and Indians in the fight for independence. By renaming Port Blair, Prime Minister Modi has paid a heartfelt tribute to Netaji’s legacy and the ultimate sacrifice of our freedom fighters.

      Veer Savarkar, a champion of India’s freedom struggle, spent years in isolation on the Andaman and Nicobar Islands, yet his spirit remained unbroken. His selfless sacrifice and unwavering commitment to India’s independence continue to inspire generations. This gesture serves as a lasting homage to his valor, patriotism, and selflessness.

      Tamil Nadu, the land of the ancient Tamils, has a rich cultural heritage that spans thousands of years. From the majestic temples of Thanjavur to the vibrant city of Chennai, our state is a testament to the resilience and creativity of the Tamil people. Prime Minister Modi’s decision to rename Port Blair as Sri Vijayapuram acknowledges the significant contributions of Tamil Nadu to India’s growth and development.

      This historic decision resonates with the spirit of unity and oneness, bridging linguistic, religious, and cultural divides. It embodies the unyielding resolve of the Indian people to rise above differences and unite for the glory of our great nation. As we celebrate this momentous occasion, we reaffirm our commitment to the values of freedom, courage, and patriotism.

      We salute Prime Minister Modi’s steadfast dedication to the nation’s progress and his relentless pursuit of excellence. His vision for a strong, prosperous, and united India has inspired a nation to strive for greatness. This historic decision is a testament to his unwavering commitment to honoring India’s rich heritage and the sacrifices of our freedom fighters.

      We express our deepest gratitude to Prime Minister Modi for this historic decision, which will forever be etched in our hearts, inspiring future generations to cherish and uphold the values of freedom, courage, and patriotism.

      Jai Hind!