Home Blog Page 172

அரசியலில் இளைஞர்களுக்கு ஆர்வம்! விண்வெளித் துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள்!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல், 113ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்:  25.08.2024
தமிழ் ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்
தமிழாக்கம்/குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே.  21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன.  எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம்.  நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான் – 3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.  கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான் -3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.  பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

          நண்பர்களே, தேசத்தின் இளைஞர்களுக்கு விண்வெளித் துறை சீர்திருத்தங்களாலும் கணிசமான ஆதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதால், நாம் ஏன் இன்று மனதின் குரலில் விண்வெளித் துறையோடு தொடர்புடைய நமது இளைய நண்பர்களோடு உரையாடி மகிழக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.  ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட் அப்பான, கேலக்ஸி ஐயின் குழுவினர் என்னுடன் இணைந்திருக்கிறார்கள்.  இந்த ஸ்டார்ட் அப்பினை ஐஐடி மதராஸின் முன்னாள் மாணவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.  இந்த இளைஞர்கள் அனைவரும் இன்று நம்மோடு தொலைபேசி-வழித் தொடர்பில் இணைந்திருக்கிறார்கள் – சூயஷ், டேனில், ரக்ஷித், கிஷன், பிரணீத் ஆகியோர்.  வாருங்கள் இந்த இளைஞர்களின் அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பிரதமர் – ஹெலோ

அனைத்து இளைஞர்களும் – ஹெலோ

பிரதமர் – வணக்கம்ங்க

அனைத்து இளைஞர்களும் – வணக்கம் சார்

பிரதமர் – நல்லது நண்பர்களே, ஐஐடி மதராஸில ஏற்பட்ட உங்களுடைய நட்பு, இன்றைக்கும் கூட பலமானதா இருக்கறத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.  இதனால தான் நீங்க எல்லாருமா இணைஞ்சு GalaxEyeஐ ஆரம்பிக்க முடிவு செஞ்சீங்க. இன்னைக்கு நான் மேலும் இதுபத்தி தெரிஞ்சுக்க விரும்பறேன்.  கூடவே உங்க தொழில்நுட்பத்தால தேசத்துக்கு எந்த அளவுக்கு நன்மை ஏற்பட இருக்குன்னும் சொல்லுங்க.

சூயஷ் – ஐயா என் பேரு சூயஷ்.  நீங்க சொன்னா மாதிரி, ஐஐடி மதராஸில சந்திச்சோம், அங்க நாங்க எல்லாரும் எங்க படிப்பை முடிச்சோம், ஆனா வேறவேற வருஷங்கள்ல எங்க பொறியியல் படிப்பை நிறைவு செஞ்சோம்.  அப்பத்தான் நாங்க என்ன நினைச்சோம்னா, ஹைப்பர்லூப்னு ஒரு ப்ராஜக்ட் இருக்கு, இதை நாம ஒண்ணா சேர்ந்து செய்யலாமேன்னு தோணிச்சு.  இதன்படி நாங்க ஆவிஷ்கார் ஹைப்பர்லூப்னு ஒரு குழுவை உருவாக்கினோம், இது தொடர்பா நாங்க அமெரிக்காவுக்கும் பயணிச்சோம்.   அந்த ஆண்டு அமெரிக்காவுல போட்டியில பங்கெடுக்கப் போன ஒரே ஆசிய அணி நாங்க தான். அங்க நம்ம நாட்டோட கொடியை நாட்டினோம். உலகத்தில சுமார் 1500 அணிகள்ல நாங்க தலைசிறந்த 20 அணிகள்ல ஒண்ணா இருந்தோம்.

பிரதமர் – சரி, நீங்க மேல தொடர்றதுக்கு முன்னால நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.

சூயஷ் – ரொம்ப ரொம்ப நன்றிங்க.  இந்த சாதனைக்குப் பிறகு எங்களோட நட்பு மேலும் ஆழமாச்சு, இந்த மாதிரியான கடினமான, சிரமங்கள் நிறைஞ்ச திட்டங்களை செய்யத் தேவையான தன்னம்பிக்கை ஏற்பட்டுச்சு.  மேலும் இந்த வேளையில தான் ஸ்பேஸ் எக்ஸை பார்த்தோம். விண்வெளித் துறையை அப்ப நீங்க திறாந்து விட்டீங்க. அதில தனியார் பங்களிப்பை உறுதி செய்யற வகையில 2020ல நீங்க ஒரு திருப்புமுனையான தீர்மானத்தை மேற்கொண்டீங்க.  இது எங்களுக்கு ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்திச்சு.  இப்ப நாங்க என்ன உருவாக்கிட்டு இருக்கோங்கறதையும், அதனால என்ன பயன் அப்படீங்கறது பத்தியும் பகிர்ந்துக்க ரக்ஷித்தை உங்ககூட உரையாட அழைக்க விரும்பறேன்.

ரக்ஷித் – ஐயா, என் பேரு ரக்ஷித்.  இந்தத் தொழில்நுட்பத்தால நமக்கு எப்படி ஆதாயங்கள் கிடைக்கும்ங்கறது பத்தி நான் பதில் சொல்றேன்.

பிரதமர் – ரக்ஷித், நீங்க உத்தராகண்டில எங்கிருந்து வர்றீங்க?

ரக்ஷித் – சார் நான் அல்மோடாவிலேர்ந்து வர்றேன்.

பிரதமர் – ம்ம், அப்ப நீங்க பால் இனிப்புக்காரங்கன்னு சொல்லுங்க.

ரக்ஷித் – ஆமா சார், ஆமா சார்.  பால் இனிப்புத் தான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சமானது.

பிரதமர் – நம்ம லக்ஷ்ய சேன் இருக்காருல்ல, அவரு தான் அப்பப்ப எனக்கு பால் இனிப்பைத் தருவாரு.  சரி ரக்ஷித் சொல்லுங்க.

ரக்ஷித் – எங்களோட தொழில்நுட்பத்தால, விண்வெளியிலிருந்து, மேகங்களைத் தாண்டிப் பார்க்க முடியும், இரவிலயும் கூட இதால பார்க்க முடியும்.  இதனால தேசத்தின் எந்த ஒரு மூலையா இருந்தாலும், அது மேலிருந்து ஒரு தெளிவான படத்தை எடுக்க முடியும்.  மேலும் இப்படி கிடைக்கக்கூடிய இந்தத் தரவுகளை வெச்சு, இரண்டு துறைகள்ல மேம்பாட்டை ஏற்படுத்த முடியும்.  முதலாவதா, பாரதத்தோட பாதுகாப்பை உறுதி செய்யறதுல.  நம்மளோட எல்லைப் பகுதிகள், நம்மோட கடல்பகுதிகள், இவை மேல நம்மால கண்காணிப்பை ஏற்படுத்த முடியும்.  மேலும் எதிரிகளோட செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம், நம்ம இராணுவத்துக்குத் துப்புகளைக் கொடுக்கலாம். இரண்டாவதா, பாரதநாட்டு விவசாயிகளை மேலும் சக்தி படைத்தவர்களா ஆக்கலாம்.  ஏற்கெனவே நாங்க உருவாக்கியிருக்கற ஒரு பொருளைக் கொண்டு, விண்வெளியிலிருந்து, இரால் வளர்ப்புல ஈடுபட்டிருக்கற விவசாயிகளோட குளங்கள்ல இருக்கற நீரோட தரத்தை, தற்போது இதுக்கு ஆகற செலவுல பத்துல ஒரு பங்கு செலவுல கணக்கிட முடியும். மேலும் நாங்க என்ன விரும்பறோம்னா, உலகத்துக்குச் சிறந்த தரமான செயற்கைக்கோள் படங்களைப் பிடிச்சு, உலகளாவிய பிரச்சனைகளான உலக வெப்பமயமாக்கம் போன்ற சிக்கல்களோட போராடத் தேவையான சிறந்த தரம்வாய்ந்த செயற்கைக்கோள் தரவுகளை அளிக்க விரும்பறோம்.

பிரதமர் – அப்படீன்னா உங்க குழு ஜவானுக்கும் ஜய் போடுவீங்க, கிஸானுக்கும் ஜய் போடுவீங்க இல்லையா?

ரக்ஷித் – ஆமாம் சார், கண்டிப்பா.

பிரதமர் – நண்பர்களே, நீங்க இத்தனை பணிகளை செஞ்சிக்கிட்டு இருக்கீங்களே, உங்களோட இந்தத் தொழில்நுட்பத்தோட துல்லியம் எந்த அளவுன்னு சொல்றீங்களா?

ரக்ஷித் – சார், நாங்க 50 செ.மீ. resolution அதாவது பிரிதிறன் வரைபடங்கள் இருக்கும்.   மேலும் ஒரேஒரு முறையில எங்களால சுமார் 300 சதுர கி.மீ. பகுதியோட படத்தைப் பிடிச்சுட முடியும்.

பிரதமர் – நீங்க சொல்றதை எல்லாம் நம்ம நாட்டுமக்கள் கேட்கும் போது அவங்க எவ்வளவு பெருமிதப்படுவாங்கன்னு நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.   சரி இப்ப நான் மேலும் ஒரு கேள்வியைக் கேட்க விரும்பறேன்.

ரக்ஷித் – சொல்லுங்க சார்.

பிரதமர் – விண்வெளி சூழலமைப்புங்கறது ரொம்பவே துடிப்பானதா ஆயிட்டு வருது.  இப்ப உங்களோட குழு, இதில என்ன மாற்றங்களைப் பார்க்கறீங்க?

கிஷன் – என் பேரு கிஷன் சார், நாங்க இந்த GalaxEyeஐ தொடங்கின பிறகுல இருந்தே நாங்க  IN-SPACe வர்றதை பார்த்தோம், நிறைய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுறதைப் பார்த்தோம். எடுத்துக்காட்டா ஜியோ ஸ்பேஷியல் டேடா பாலிஸி, அதாவது புவியியல் சார்ந்த தரவுக் கொள்கை,  இந்திய விண்வெளிக் கொள்கை.  மேலும் நாங்க கடந்த மூன்றாண்டுகள்ல நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதைப் பார்த்தோம், நிறைய செயல்முறை மாற்றங்கள், நிறைய கட்டமைப்பு மாற்றங்கள், நிறைய வசதிகள், இஸ்ரோவால இவையெல்லாம் நல்ல முறையில செய்யப்பட்டிருக்கு. இப்ப நாங்க இஸ்ரோவுக்குப் போயி எங்க வன்பொருளை ரொம்ப சுலபமா பரிசோதனை செய்ய முடியுது.  மூணு வருஷங்களுக்கு முன்னால இந்தச் செயல்முறைகள்லாம் இந்த அளவுக்கு இருக்கல. இதெல்லாம் எங்களுக்கு மட்டுமில்லை, மேலும் பல ஸ்டார்ட் அப்புகளுக்கு ரொம்பவே உதவிகரமா இருக்கு.  மேலும், அண்மைக்கால அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் காரணமா, இந்த வசதிகள் கிடைக்கறது காரணமா, நிறைய ஸ்டார்ட் அப்புகள் உருவாகவும் ஊக்கமா இருக்கு, இப்படிப்பட்ட ஸ்டார்ட் அப்புகள் வந்து ரொம்ப சுலபமா, பொதுவா மேம்பாட்டை ஏற்படுத்தறதுக்கு அதிக செலவும் நேரமும் ஆகற துறைகள்ல கூட நல்ல மேம்பாடு ஏற்படுத்த முடியும். ஆனா தற்போதைய கொள்கைகள் காரணமாவும், IN-SPACe வந்ததுக்குப் பிறகும், ஸ்டார்ட் அப்புகளுக்கு நிறைய விஷயங்களைச் செய்யறது சுலபமாகியிருக்கு.  என் நண்பன் டேனில் சாவ்டாவும் கூட இது தொடர்பா பகிர்ந்துக்க விரும்பறாரு.

பிரதமர் – டேனில் சொல்லுங்க.

டேனில் – சார், நாங்க ஒரு விஷயத்தை கவனிச்சோம், அது என்னென்னா, பொறியியல் படிக்கற மாணவர்களோட சிந்தனைக் கண்ணோட்டத்தில ஒரு மாற்றத்தை கவனிச்சோம்.  முன்ன எல்லாம் அவங்க வெளிநாட்டுக்குப் போயி விண்வெளித் துறையில மேற்படிப்பை படிக்க விரும்புவாங்க, அங்க வேலை பார்க்க விரும்புவாங்க, ஆனா இப்ப இந்தியாவுலேயே ஒரு விண்வெளி சூழலமைப்பு ரொம்ப நல்லமுறையில வளர்ந்திட்டு இருக்கற நிலையில அவங்க எல்லாம் திரும்ப வந்து இந்தச் சூழலமைப்போட ஒரு அங்கமா ஆக விரும்பறாங்க.  இது ஒரு நல்ல பின்னூட்டம் நமக்குக் கிடைக்குது, எங்க கம்பெனியிலேயே கூட, இந்தக் காரணத்தாலேயே சிலர் திரும்ப வந்து வேலை பார்த்திட்டு இருக்காங்க.

பிரதமர் – நீங்க ரெண்டு பேரும் சொன்ன கண்ணோட்டங்கள், அதாவது கிஷனும் சரி, டேனிலும் சரி சொன்ன கருத்துக்கள் மேல பலரோட கவனமும் ஈர்க்கப்பட்டிருக்கும் அப்படீன்னு நான் கண்டிப்பா நம்பறேன்.  மேலும் ஒரு துறையில சீர்திருத்தம் செய்யப்படும் போது, சீர்திருத்தம் காரணமா எத்தனை வகையான பலன்கள் ஏற்படுது, எத்தனை பேர் ஆதாயம் அடையறாங்க அப்படீங்கறது பத்தி எல்லாம் நீங்க விவரமா எடுத்துச் சொன்னீங்க.  ஏன்னு சொன்னா நீங்க அந்தத் துறையிலேயே இருக்கீங்க, அதை உன்னிப்பா கவனிச்சிருப்பீங்க, இதோட கூட நம்ம நாட்டோட இளைஞர்களும் இப்ப இந்தத் துறையில, நம்ம நாட்டிலேயே தங்களோட எதிர்காலத்தை அமைச்சுக்கறாங்க. தங்களோட திறமைகளை இங்க பயன்படுத்த விரும்பறாங்கன்னும் சொல்லி இருக்கீங்க. இது ரொம்ப அருமையான ஒரு கவனிப்பு.  இப்ப நான் மேலும் ஒரு கேள்வி கேட்க விரும்பறேன். இப்ப ஸ்டார்ட் அப்புகள் மற்றும் விண்வெளித் துறையில வெற்றியடைய விரும்பற இளைஞர்களுக்கு நீங்க தெரிவிக்க வேண்டிய செய்தி என்னவா இருக்கும்?

பிரணித் – நான் பிரணித் பேசறேன், இதுக்கான விடையை நான் அளிக்கறேன்.

பிரதமர் – சொல்லுங்க பிரணித்.

பிரணித் – சார், என்னோட சில ஆண்டுக்கால அனுபவத்திலிருந்து நான் ரெண்டு விஷயங்களைத் தெரிவிச்சுக்க விரும்பறேன்.  முதலாவதா, யாராவது ஸ்டார்ட் அப்பை தொடங்க நினைச்சாங்கன்னா, அதுக்கான நேரம் இது தான்.  ஏன்னா, உலகம் முழுவதிலயும், இந்தியா தான் மிகவும் வேகமாக வளர்ந்திட்டு வர்ற பொருளாதாரம். இதோட அர்த்தம் என்னன்னா, உங்க கிட்ட ஏராளமான வாய்ப்பு இருக்குங்கறது தான்.  அடுத்த வருஷம் எங்களோட ஒரு செயற்கைக்கோள் ஏவப்படும்னு நினைச்சு எப்படி நான் 24 வயசுல பெருமைப்படுறேன் இல்லையா, அந்த மாதிரி.  இந்த அடிப்படையில நம்ம அரசாங்கம் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கும். அதில எங்களோட ரொம்ப சின்ன பங்களிப்பும் ஒண்ணா இருக்கும்.  இப்படி தேசிய அளவுல தாக்கம் ஏற்படுத்தும் சில திட்டங்களோட இணைஞ்சு பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைச்சுது.   இது எப்படிப்பட்ட துறை, என்ன மாதிரியான நேரம் இது அப்படீன்னு பார்க்கும் போது, இது இன்னைக்கு, இப்பக்கூட துவங்கிட்டு இருக்குன்னு சொல்லலாம்.  நான் என்னோட இளைய நண்பர்கள் கிட்ட சொல்ல விரும்பறதெல்லாம், இந்த வாய்ப்பு தாக்கம் தொடர்பானது மட்டுமில்லை, அவங்களோட தனிப்பட்ட நிதி வளர்ச்சி பத்தினது. உலக அளவிலான ஒரு பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவது பத்தினது. நாங்க பரஸ்பரம் என்ன பேசிக்குவோம்னா, சின்ன வயசுல எல்லாம் என்ன ஆகணும்னு நினைக்கும் போது, பெரிய நடிகராகணும், விளையாட்டு வீரரா ஆகணும், இப்படி ஏதாவது நினைப்போம் இல்லையா?  ஆனா இன்னைக்கு யாராவது வளர்ந்த பிறகு விண்வெளித் துறையில வேலை பார்க்க விரும்பறேன், பெரிய தொழில்முனைவோரா ஆக விரும்பறேன்னு சொன்னா, அது தான் எங்களுக்குப் பெருமையான தருணம். இந்த மொத்த முழு மாற்றத்தில ஒரு சின்ன அங்கமா நாங்க இருக்கோம்.

பிரதமர் – நண்பர்களே, ஒரு வகையில பிரணித், கிஷன், டேனில், ரக்ஷித், சுயஷ் உங்களோட நட்பு எந்த அளவுக்கு ஆழமானதோ, அதே அளவுக்கு உங்க ஸ்டார்ட் அப்பும் ஆழமானது.  இதனால தான உங்களால இத்தனை அருமையா பணியாற்ற முடிஞ்சிருக்கு!  சில ஆண்டுகள் முன்னால ஐஐடி மதராஸ் போகக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சுது. அந்த அமைப்போட சிறப்புத்தன்மையை நானே அனுபவிச்சிருக்கேன்.  மேலும் ஐஐடி தொடர்பா உலகம் முழுவதிலயுமே கூட ஒரு மரியாதை கலந்த உணர்வு இருக்கு.  அங்கிருந்து படிச்சுட்டு வெளியேறும் மாணவர்கள், பாரதத்திற்காக பணியாற்றும் போது கண்டிப்பா நல்லதொரு பங்களிப்பை அளிக்கறாங்க.  நீங்க எல்லாருக்கும் சரி, விண்வெளித் துறையில பணியாற்றக்கூடிய எல்லா ஸ்டார்ட் அப்புகளுக்கும் சரி என்னோட பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவிச்சுக்கறேன். நீங்க ஐந்து நண்பர்களோடயும் பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு.  பலப்பல நன்றிகள் நண்பர்களே!!

சுயஷ் – தேங்க்யூ சோ மச்.

          எனதருமை நாட்டு மக்களே, அரசியல் பின்புலம் ஏதும் இல்லாத ஒரு இலட்சம் இளைஞர்களை, அரசியலமைப்போடு இணைப்பது குறித்த விஷயமாக, இந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என்னுடைய இந்த விஷயம் குறித்து நிச்சயம் எதிர்வினை ஏற்பட்டிருப்பதை அறிகிறேன்.  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க விரும்புகிறார்கள் என்பதுதான்.  அவர்கள் அதற்காக சரியான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக நாடெங்கிலுமிருந்து இளைஞர்கள் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள்.  சமூக ஊடகங்களில் பலமான பதிலுரைகள் கிடைத்திருக்கின்றன.  பலவகையான ஆலோசனைகளை மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள்.  தங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றும் சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.  தாத்தா அல்லது தாய்-தந்தை என எந்த உறவும் இல்லாத காரணத்தால், விரும்பியும் கூட அவர்களால் அரசியலுக்கு வர இயலவில்லை.  கள அளவில் பணியாற்றிய நல்ல அனுபவம் தங்களிடம் இருப்பதால், பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண்பதில் உதவிகரமாக இருக்க முடியும் என்று இளைஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள்.  குடும்ப அரசியல் என்பது புதிய திறமைகளை அழித்து விடுகிறது என்று சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.  இதுபோன்ற முயற்சிகளால் நமது ஜனநாயகம் மேலும் பலமடையும் என்றும் சிலர் கருத்து  தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தங்கள் ஆலோசனைகளை அளித்த அனைவருக்கும் நான் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இப்போது நமது சமூக அளவிலான முயற்சிகளால், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இத்தகைய இளைஞர்கள் அரசிலுக்குள் பிரவேசிப்பார்கள், அவர்களுடைய அனுபவம், அவர்களுடைய உற்சாகம் ஆகியன தேசத்திற்குப் பயன்படும்.

          நண்பர்களே, சுதந்திரப் போரின் போது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலிருந்தும் பலர் முன்வந்து பங்கேற்றார்கள், இவர்களுக்கு எந்த விதமான அரசியல் பின்புலமும் இருக்கவில்லை.  இவர்கள் தாங்களே முன்வந்து பாரதத்தின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தார்கள்.  இன்றும் கூட வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, மீண்டும் ஒருமுறை இதே உணர்வு தேவைப்படுகிறது.  நீங்கள் இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் என்னுடைய அனைத்து இளைய நண்பர்களிடமும் வேண்டிக் கொள்கிறேன்.  உங்களுடைய இந்த அடியெடுப்பு, உங்கள் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்ற வல்லது. 

          எனக்குப் பிரியமான நாட்டு மக்களே, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி – இந்த இயக்கம் இந்த முறை முழுவீச்சில் நடந்தேறியது.  தேசத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் இந்த இயக்கத்தோடு தொடர்புடைய அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன. நமது வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்து இடங்களிலும் மூவண்ணக்கொடி!  மக்கள் தங்கள் கடைகளில், அலுவலகங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார்கள்.   தங்கள் கணிப்பொறிகளில், செல்பேசிகளில், வண்டிகளில் மூவண்ணக் கொடியைப் பறக்கச் செய்தார்கள்.  மக்கள் அனைவருமாக இணைந்து இப்படிப்பட்ட உணர்வினை எப்போது வெளிப்படுத்துகிறார்களோ, அப்போது அது அந்த இயக்கத்திற்கு மகுடம் சூட்டி விடுகிறது.  இப்போது நீங்கள் உங்கள் டிவி திரையில் காணும் படங்கள், இவை ஜம்மு-கஷ்மீரத்தைச் சேர்ந்தது.  இங்கே 750 மீட்டர் நீளம் கொண்ட மூவண்ணக் கொடியோடு கூடிய ஒரு மூவண்ணப் பேரணி நடத்தப்பட்டது, மேலும் இது உலகின் மிகவும் உயரமான சினாப் ரயில்பாலத்தின் மீது நடந்தது.  யாரெல்லாம் இந்தப் படங்களைப் பார்த்தார்களோ, அவர்களுடைய மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நிரம்பின.  ஸ்ரீநகரின் டல் ஏரியிலும் கூட மூவண்ணக்கொடி யாத்திரையின் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களை நாம் அனைவரும் கண்டோம்.  அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமேங்க் மாவட்டத்திலும் கூட 600 அடி நீளமான மூவண்ணக் கொடியோடு யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.  தேசத்தின் பிற மாநிலங்களிலும் கூட இதைப் போலவே, அனைத்து வயதினரும், இப்படிப்பட்ட மூவண்ணக்கொடிப் பேரணிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  சுதந்திரத் திருநாள் இப்போது ஒரு சமூகத் திருநாளெனவே ஆகி வருகிறது. இதனை நீங்களுமே கூட உணர்ந்திருப்பீர்கள். மக்கள் தங்களுடைய இல்லங்களையும் கூட மூவண்ண மாலைகளால் அலங்கரிக்கின்றார்கள்.  சுய உதவிக் குழுக்களோடு இணைந்த பெண்கள், இலட்சக்கணக்கான கொடிகளைத் தயார் செய்கின்றார்கள்.   இணையவழி வர்த்தகத் தளங்களில் மூவண்ணம் நிரம்பிய பொருட்களின் விற்பனை அதிகரிக்கின்றன.  சுதந்திரத் திருநாளின் போது தேசத்தின் நீர்-நிலம்-வானம் என அனைத்து இடங்களிலும் நமது கொடியின் மூன்று நிறங்கள் பளிச்சிட்டன.  இல்லந்தோறும் மூவண்ணம் இணையதளத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தங்கள் படத்தையும் தரவேற்றம் செய்திருந்தார்கள்.  இந்த இயக்கமானது தேசம் முழுவதையும் ஓரிழையில் இணைத்தது! இது தானே ஒரே பாரதம், உன்னத பாரதம்!!

          என் மனம்நிறை நாட்டு மக்களே, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான அன்பு பற்றி எத்தனையோ திரைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்!!  ஆனால் ஒரு நிஜக் கதை இப்போது அசாமிலே நடந்து வருகிறது.  அசாமின் தின்சுகியா மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமமான போர்குரியில், மோரான் சமூகத்தவர் வசிக்கிறார்கள். இதே கிராமத்தில் தான் ஹோலோ பந்தர் என்று இங்கே அழைக்கப்படும் ஹூலாக் கிபன் வசிக்கிறது.  இந்த கிராமத்தவருக்கும் ஹூலாக் கிபனுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். கிராமவாசிகள் இன்றும் கூட, தங்களுடைய பாரம்பரியமான நற்பண்புகளைப் பின்பற்றி வருகிறார்கள்.  ஆகையால் இந்த கிப்பன் குரங்குகளோடு இருக்கும் உறவுகள் மேலும் பலப்படும் வகையில் அனைத்துச் செயல்களையும் செய்திருக்கிறார்கள். இந்த கிப்பன்ஸ் குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் பிடிக்கும் என்று உணர்ந்த போது, உடனடியாக வாழை சாகுபடியை ஆரம்பித்தார்கள்.  இதைத் தவிர, எப்படி தங்களைச் சேர்ந்தவர்களுக்குச் செய்வார்களோ, அதைப் போலவே கிப்பன்ஸ் குரங்குகளின் பிறப்பு-இறப்போடு தொடர்புடைய அனைத்துச் சடங்குகளையும் செய்தார்கள்.   இவர்கள் கிப்பன்ஸ் குரங்குகளுக்குப் பெயர்களையும் சூட்டியிருக்கிறார்கள்.  தற்போது மின்கம்பிகளால் இவற்றுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதறிந்து இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள், விரைவாக இதற்கான தீர்வும் காணப்பட்டது.  இப்போதெல்லாம் படங்களெடுத்தால் அவற்றுக்கு ஏற்ப இந்த கிப்பன்ஸ் குரங்குகள் போஸ் கொடுக்கின்றன என்று எனக்குச் சொன்னார்கள். 

          நண்பர்களே, விலங்குகளிடம் நேசத்தோடு இருப்பதிலே நமது அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.  அருணாச்சலைச் சேர்ந்த நமது சில இளைய நண்பர்கள், 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.  ஏன் தெரியுமா?  ஏனென்றால், கொம்புகளுக்காகவும், பற்களுக்காகவும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை இவர்கள் தடுத்து அவற்றைக் காக்க விரும்புகிறார்கள்.  நாபம் பாபு, லிகா நானா ஆகியோரின் தலைமையின் கீழ் இந்தக் குழுவானது, விலங்குகளின் பல்வேறு பாகங்களை 3டி பிரிண்டிங் செய்கிறது. விலங்குகளின் கொம்புகளாகட்டும், அவற்றின் பற்களாகட்டும், இவையனைத்தும் 3 டி பிரிண்டிங்கால் தயார் செய்யப்படுகின்றன.  இவற்றைக் கொண்டு மீண்டும் உடைகள் மற்றும் தொப்பி போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.  இந்த வித்தியாசமான மாற்றுக்களைத் தயாரிப்பதில் மக்கும் தன்மையுடைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இப்படிப்பட்ட அற்புதமான முயற்சிகளுக்கு எத்தனை ஆதரவளிக்க முடியுமோ அத்தனையும் அளிக்க வேண்டும்.  அதிக அளவிலான ஸ்டார்ட் அப்புகள் இந்தத் துறையிலே முன்வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதனால் நமது விலங்கினங்கள் பாதுகாக்கப்படும், நமது பாரம்பரியமும் வளப்படும்.

          என் உளம்நிறை நாட்டு மக்களே, மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவாவிலே மிக அருமையான ஒரு விஷயம் நடந்து வருகிறது, இதை நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அங்கே நமது துப்புரவுப் பணியாள சகோதர சகோதரிகள் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.  இந்த சகோதர சகோதரிகள், கழிவுப் பொருட்களிலிருந்து செல்வம் ஈட்டுதல் என்ற விஷயத்தை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.  இந்தக் குழுவானது ஜாபுவாவின் ஒரு பூங்காவில் சேரும் குப்பைகளைக் கொண்டு, அற்புதமான கலைப்படைப்புக்களை உருவாக்கியிருக்கின்றது.  தங்களுடைய இந்தப் பணிக்கான அக்கம்பக்கத்திலிருந்து நெகிழிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், டயர்கள், குழாய்கள் ஆகியவற்றைத் திரட்டியிருக்கிறார்கள். இந்தக் கலைப்படைப்புக்களில் ஹெலிகாப்டர்கள், கார்கள், பீரங்கிகள் போன்றவை அடங்கும்.  அழகான தொங்கும் பூஞ்சட்டிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள்.  இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் டயர்கள், ஓய்வெடுக்கும் இருக்கைகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  துப்புரவுப் பணியாளர்களின் இந்தக் குழு, Reduce, Reuse, Recycle, அதாவது குறைவாய் பயன்படுத்தி, மீள்பயன்படுத்தி, மறுசுழற்சி செய்தல் என்ற மந்திரத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறது.  இவர்களுடைய முயற்சிகளால் பூங்கா மிகவும் நேர்த்தியாகக் காட்சியளிக்கிறது.  இதைக் காண வட்டார மக்களோடு சேர்ந்து அக்கம்பக்க மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள்.

          நண்பர்களே, நமது தேசத்தின் பல ஸ்டார்ட் அப் குழுக்களும் கூட சுற்றுச்சூழலுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.   e -Conscious என்ற பெயருடைய ஒரு குழுவானது, நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்தி, சூழலுக்கு நேசமான பொருட்களைத் தயாரித்து வருகிறது.  நமது சுற்றுலாத் தலங்கள், குறிப்பாக மலைப் பகுதிகளில் பரவியிருக்கும் குப்பைக்கூளங்களைப் பார்த்த பிறகுதான் இப்படிச் செய்வதற்கான எண்ணமே இவர்களுக்கு வந்ததாம்.  இப்படிப்பட்ட மனிதர்களின் மேலும் ஒரு குழுவானது, Ecokaari என்ற பெயருடைய ஒரு ஸ்டார்ட் அப்பைத் தொடங்கியிருக்கிறது.  இந்த நெகிழிக் கழிவுகளைக் கொண்டு பலவகையான அழகான பொருட்களைத் தயாரிக்கின்றார்கள். 

          நண்பர்களே, பொம்மைகளை மறுசுழற்சி செய்வதும் கூட, நாமனைவரும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு துறை தான்.  குழந்தைகள் பலர் விரைவாகவே பொம்மைகளிடம் சலித்துப் போய் விடுகின்றனர். அதே நேரத்தில், பொம்மைகளோடு விளையாட மாட்டோமா என்ற ஏக்கக் கனவுகளைக் காணும் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எந்தப் பொம்மைகளோடு உங்கள் குழந்தைகள் விளையாடுவதில்லையோ, அவை எங்கே பயனாகுமோ அத்தகைய இடங்களில் நீங்கள் அளிக்கலாமே!!  இதுவுமே கூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு நல்ல வழியாகும்.  நாமனைவரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டால் தான் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும், தேசத்தை முன்னேற்றவும் முடியும்.

          எனக்குப் பிரியமான நாட்டு மக்களே, சில நாட்கள் முன்பாக, நாம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று ரக்ஷாபந்தன் நன்னாளைக் கொண்டாடினோம். அந்த நாளன்று உலகம் முழுவதும் உலக சம்ஸ்கிருத தினமும் கொண்டாடப்பட்டது.  இன்றும் கூட நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சம்ஸ்கிருதத்தின்பால், மக்களுக்கு சிறப்பானதொரு ஈர்ப்பு தென்படுகிறது.  உலகின் பல நாடுகளில் சம்ஸ்கிருத மொழி தொடர்பாக பல வகையான ஆய்வுகளும், சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன.  மேலும் நாம் தொடர்வதற்கு முன்பாக உங்களுக்காக நான் ஒரு சிறிய ஒலிக்குறிப்பை இசைக்க விரும்புகிறேன்.

  • ஒலிக்குறிப்பு –

         நண்பர்களே, இந்த ஒலிக்குறிப்பு ஐரோப்பாவின் ஒரு நாடான லிதுவேனியாவோடு தொடர்புடையது.  அங்கே வைடிஸ் விடூனஸ் என்ற ஒரு பேராசிரியர், வித்தியாசமானதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார், இதன் பெயர் “சம்ஸ்கிருதம் ஆன் தி ரிவர்ஸ்” என்பதாகும்.  சிலர் அடங்கிய ஒரு குழுவானது அங்கே ஓடும் நேரிஸ் ஆற்றின் கரையிலே கூடி, அங்கே வேதங்கள் மற்றும் கீதையை ஓதினார்கள்.  இப்படிப்பட்டதொரு முயற்சி கடந்த சில ஆண்டுகளாக அங்கே நடந்து வருகிறது.  நீங்களும் கூட சம்ஸ்கிருதத்தைப் பெருக்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வாருங்கள். 

         எனதருமை நாட்டு மக்களே, நம்மனைவரின் வாழ்க்கையிலே உடலுறுதி என்பதற்கு மிகவும் மகத்துவம் உண்டு.  உடலுறுதியோடு இருக்க நாம் நமது உணவு, வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்.  உடலுறுதியின்பால் விழிப்புணர்வை  மக்களிடம் ஏற்படுத்த, ஃபிட் இண்டியா இயக்கம் தொடங்கப்பட்டது.  ஆரோக்கியமாக இருப்பதற்காக இன்று அனைத்து வயது, அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், யோகக்கலையைப் பயின்று வருகிறார்கள்.  மக்கள் தங்களுடைய உணவுத் தட்டுக்களில் இப்போதெல்லாம் அருமையான உணவான சிறுதானியங்கள், அதாவது ஸ்ரீ அன்னத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  இந்த அனைத்து முயற்சிகளின் நோக்கம் என்னவென்றால், அனைத்துக் குடும்பங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தான்.

       நண்பர்களே, நம்முடைய குடும்பங்கள், நமது சமூகம், நமது தேசம், இவை அனைத்தின் எதிர்காலமும் நமது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைச் சார்ந்தே இருக்கின்றன; குழந்தைகளின் நல்ல உடல் ஆரோக்கியத்தின் அடித்தளம் அவர்களுக்கு சரியான வகையிலான ஊட்டச்சத்து கிடைப்பது தான்.  குழந்தைகளின் ஊட்டச்சத்து தான் தேசத்தின் முதன்மை. அவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளின் மீது ஆண்டு முழுவதும் நமது கவனம் இருக்கிறது என்றாலும், ஒரு மாதம், தேசமானது இதன் மீது விசேஷ கவனத்தைச் செலுத்துகிறது.  இதன் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு இடையே ஊட்டச்சத்து மாதத்தைக் கொண்டாடுகிறது.  ஊட்டச்சத்து தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊட்டச்சத்து விழாக்கள், ரத்த சோகை தொடர்பான முகாம்கள், சிசுக்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிடுதல், கருத்தரங்குகள், இணையவழி கருத்துப் பரிமாற்றங்கள் போன்ற பல வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  பல இடங்களில் ஆங்கன்வாடிகள் மூலமாக தாய்-சேய் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  இந்தக் குழுவானது ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுக்களின் அன்னையரைக் கண்காணிக்கின்றது. தொடர்ந்து கவனிக்கின்றது. அவர்களுடைய ஊட்டச்சத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.  கடந்த ஆண்டு ஊட்டச்சத்து இயக்கம், புதிய கல்வித் திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது.  ஊட்டச்சத்தோடு சேர்ந்த படிப்பு என்ற இயக்கம் வாயிலாக, குழந்தைகளின் சமச்சீரான வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படுகிறது.  நீங்களும் கூட உங்கள் பகுதியிலே ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களோடு இணைய வேண்டும்.  உங்களுடைய ஒரு சிறிய முயற்சியால், ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் அதிக சக்தி கிடைக்கும்.

       எனதருமை நாட்டுமக்களே, இந்த முறை மனதின் குரலில் இவ்வளவே! மனதின் குரலில் உங்களோடு உரையாடியது எனக்கு எப்போதும் போலவே நன்றாக இருந்தது.  ஏதோ நான் எனது குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்து, மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தது போன்றதொரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது.  நான் என்றுமே உங்கள் மனங்களோடு தொடர்புடையவனாக இருந்திருக்கிறேன்.  உங்களுடைய பின்னூட்டங்கள், உங்களுடைய ஆலோசனைகள் ஆகியன எனக்கு மிகவும் மதிப்பானவை. அடுத்த சில நாட்களில் பண்டிகைகள் பல வரவிருக்கின்றன.  நான் உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  ஜன்மாஷ்டமி பண்டிகையும் வரவிருக்கிறது.  அடுத்த மாதத் தொடக்கத்தில் பிள்ளையார் சதுர்த்தியும் வரவிருக்கிறது.  ஓணம் பண்டிகையும் சில நாட்களில் வந்து விடும். மிலாத் உன் நபிக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

         நண்பர்களே, இந்த மாதம் 29ஆம் தேதியன்று தெலுகு பாஷா தினம் வரவிருக்கிறது.  இது உண்மையிலேயே மிகவும் அற்புதமானதொரு மொழி. உலகெங்கிலும் இருக்கும் அனைத்துத் தெலுகு மொழி பேசுவோருக்கும், தெலுகு பாஷா தினத்திற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

பிரபஞ்ச வியாப்தங்கா உன்ன,

தெலுகு வாரிகி,

தெலுகு பாஷா தினோத்ஸவ ஷுபாகாங்க்ஷலு.

         நண்பர்களே, நீங்களனைவரும் மழைக்காலத்தில் கவனமாக இருங்கள், மழைநீரைச் சேகரிக்கும் இயக்கத்தில் பங்கெடுக்கவும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.  ஒரு மரம், தாயின் பெயரில் இயக்கம் பற்றி உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  அதிக அளவிலான மரங்களை நடுங்கள், மற்றவர்களையும் நட ஊக்கப்படுத்துங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.   வரவிருக்கும் நாட்களில் பேரிஸ் நகரிலே, பேராலிம்பிக்ஸ் தொடங்க இருக்கிறது.  நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகள் அங்கே செல்லவிருக்கிறார்கள்.  140 கோடி பாரதீயர்கள், தங்களுடைய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கக்குரல் கொடுப்போம்.  நீங்களும் கூட #cheer4bharat என்பதோடு இணைந்து, நமது விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளியுங்கள்.  அடுத்த மாதம் நாம் மீண்டும் ஒருமுறை இணைவோம், பல விஷயங்கள் குறித்து உரையாடி மகிழ்வோம்.  அதுவரை, எனக்கு விடை தாருங்கள்.  பலப்பல நன்றிகள், வணக்கம்.

முதல் முறையாக செங்கோட்டையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்!

railway news - 2026
#image_title

செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து அருப்புக்கோட்டை மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது.

பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில்கள் மிகவும் குறைவு. பல லட்சம் பேர் ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் போதிய ரயில் வசதிகள் இல்லை. இதனால் முக்கியமான நாட்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில்., விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினங்கள், விடுமுறை தினங்கள் மொத்தமாக வருவதால் மைசூருல் இருந்து பெங்களூர் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதன்படி செப்டம்பர் 4ம் தேதியான புதன்கிழமை மற்றும் செப்டம்பர் 8ம் தேதியான சனிக்கிழமை ஆகிய நாட்களில் மைசூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கு இரவு ஒரு மணிக்கு வருகிறது. அதன் பிறகு பாங்கருபேட் குப்பம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்து சேலம், கரூர் திருச்சி வழியாக கரைக்குடி சென்று அதன்பிறகு மானாமதுரை, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், தென்காசி வழியாக வழியாக செங்கோட்டைக்கு வியாழக்கிழமை மற்றும் ஞாயிறு அன்று மாலை 4.50க்கு செல்கிறது.

இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு செல்லும் ரயில தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், மானமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், குப்பம், பெங்களுர் வழியாக மைசூருக்கு வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பிற்பகல் 2.20க்கு சென்றடைகிறது” இவ்வாறு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டைக்கு பெங்களூர் மார்க்கமாக மைசூரில் இருந்து இரு மார்கங்களிலும் சிறப்பு ரயில் இயக்கம் என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால் இதில் இரண்டு குறைகள் உள்ளன. முதலாவது திருச்சி புதுக்கோட்டை வழியாகச் செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகமாக உள்ளது. இரண்டாவது இரு மார்க்கங்களிலும் பெங்களூரைக் கடப்பது நேரம் கெட்ட நேரத்தில். எனவே இது பயணிகளுக்கு சிரமத்தைத் தருவதே என்று கூறுகின்றனர் பயணிகள் சங்கத்தினர் சிலர். எனினும் இந்த ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுவென நடந்து வருகிறது.

புண்ணியம் செய்த மாநிலம் தமிழ்நாடு!

Mudigonda Sivaprasad - 2026

ஹைதராபாத்தில் வசிக்கும் டாக்டர் ப்ரொபசர் முதிகொண்ட சிவபிரசாத் அவர்கள், ‘சாரித்ரிக நாவலா சக்கரவர்த்தி’ என்ற விருது பெற்றவர். இவர் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றவர். இவருக்கு எண்பத்து நான்கு வயதாகிறது. இதுவரை நூற்று நாற்பத்திரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார். இன்னும் எழுதுகிறார். ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு வெவ்வேறு தலைப்புகளில் டிக்டேஷன் செய்து எழுதச் செய்யும் ஆற்றல் கொண்டவர். அது தவிர மிகப் பல ஆண்டுகளாக தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து குறைந்தது இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதும் பழக்கம் கொண்டவர். தற்போது சிறிது கண்பார்வை குறைந்திருந்தாலும், இன்று வரை அந்த வழக்கத்தைத் தொடர்வதாகக் கூறுகிறார்.

ப்ரொபசர் முதிகொண்ட சிவபிரசாத் அவர்களின் சில கட்டுரைகளை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். அவை நம் தினசரி தளத்தில் வெளிவந்து பலருக்கும் உபயோகமாக இருந்தது. அண்மையில் அயோத்தி ராமர் கோவில் அமைக்க, சுதந்திர பாரதத்தில் நடந்த போராட்டங்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்தேன்.  தினசரி தளத்தில் வெளிவந்த அந்த கட்டுரையையும் அதற்கும் முன் வெளிவந்த அவருடைய  கட்டுரைகளையும் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு, அவரைச் சென்று பார்த்து வந்தோம்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறிய ஆர்வம் மிகுந்த கருத்துகளை அவருடைய அனுமதியோடு பதிவு செய்தேன். அதையே இந்த கட்டுரையில் தமிழில் தருகிறேன். 

“தமிழ்நாடு மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த மாநிலம். ஆன்மீகச் செழிப்பு நிரம்பிய மாநிலம். ஏனென்றால் ஒரே காலத்தில் உலகப் புகழ்பெற்ற உயர்ந்த மகான்களின் அவதாரம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. அது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த அற்புதமான வரம்.

மகான்கள் அவதரித்த மாநிலம் –

அவர்களுள் ஒருவர் கும்பகோணம் சுவாமி. அவரை மாஸ்டர் ஸி.வி.வி. என்று அழைப்பார்கள். இவர் வாழ்ந்து வந்த காலத்திலேயே காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ. சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமியும் வாழ்ந்து வந்தார். அவரை ‘நடமாடும் தெய்வம்’ என்று போற்றுகிறோம். அடுத்து ஸ்ரீ அரவிந்தர். அரவிந்தர் பூரணயோகத்தை நமக்கு அளித்தார். அடுத்து, மகான் ஸ்ரீ ரமண மகர்ஷி. இவ்விதம் ஒரே காலத்தில் நான்கு மகாத்மாக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது தமிழ்நாடு செய்த புண்ணியம் எனபதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஸ்ரீ அரவிந்தரின் சித்தாந்தம் அமிர்தத்தைப் போன்றது. நான் அதனை நன்றாகப் படித்துப் பயின்றுள்ளேன். பாண்டிச்சேரிக்குப் பலமுறை சென்று வந்துள்ளேன். அடுத்து, திருவண்ணாமலை. துரதிருஷ்டவசமாக ஸ்ரீரமண மகரிஷியை அவர் தேகத்தோடு வாழ்ந்த காலத்தில் தரிசிக்க முடியவில்லை. ஆனால் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தோடு எனக்கு நல்ல பழக்கம் உள்ளது.

தமிழ்நாட்டில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பிறந்தார்கள். திருக்குறளை இயற்றிய  மகான் திருவள்ளுவர் பிறந்தார். நாம் பாராயணம் செய்யும் திருப்பாவை பாசுரங்களை இயற்றிய ஆண்டாள் நாச்சியார் அவதரித்தார். திருவெம்பாவை இயற்றிய மாணிக்கவாசகர் அவதரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த அவ்வையார்  அருளிய செய்யுட்கள் நமக்கு இன்றும் கிடைக்கின்றன. இன்னும் பலப்பல ஆன்மீக இலக்கியங்களை அருளிச் செய்த மகான்கள் அவதரித்த தலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இவ்விதம் தமிழ்நாடு ஆன்மீகத்திலும் இலக்கியத்திலும் செழுமை நிறைந்த மாநிலமாகத் திகழ்கிறது. அதனால் என் மதிப்பில் தமிழ்நாடு வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. உயர்ந்த தீர்த்த யாத்திரைத் தலமும் கூட. நான் அந்த சிறந்த ஆன்மீக பூமியை தலை வணங்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

இன்னுமொரு செய்தி. நம் பாரதத் தாய்நாடு கன்யாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை விரிந்து பரந்துள்ளது. இதில் எந்த ஒரு இடத்தையும் ஃபெடரலிசம் என்ற பெயரால் பிரிப்பதற்கு இடமில்லை. உடலில் இருந்து கால்களையும் கைகளையும் பிரிப்பதற்கு இடமில்லை அல்லவா? அனைத்தும் ஒன்றாக இணைந்திருந்தால்தானே மனித உடல் என்று ஆகிறது? அதே போல் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள தேசம் எல்லாம் சேர்ந்தால்தான் அகண்ட பராத தேசமாகும். இது போன்ற பாரத உணர்வும் தேச பக்தியும்  உடையவரே பாரத தேசக் குடிமகன்.

சனாதனம் –

‘சனாதனம்’ என்ற சொல்லுக்கான பொருளை ஒரு முறை பார்ப்போம். சனாதனம் என்றால் புராதனம் என்று கூறுகிறார்கள். அது தவறல்ல என்றாலும் சனாதனம் என்றால் ‘எடர்னல்’. சாஸ்வதமானது என்று பொருள். சூரியன் கிழக்கே உதிக்கிறான். இது ஒரு ‘எடர்னல்’ சத்தியம். மா விதை நட்டால் மா மரம் முளைக்கும். இது என்றுமுள்ள  உலகளாவிய உண்மை. இதனை நாம் மாற்ற முடியாது. ‘சனாதனம்’ நேற்று, இன்று, நாளை, மூன்று காலங்களிலும் நித்தியமானது, நிலையானது. முக்காலங்களுக்கும் உரியது. சனாதனம் என்பது அனைத்துலும் வியாபித்துள்ள சத்தியம். நம் பண்டைய  ரிஷிகளின் சிந்தனை முறை அது. சனாதனம் என்பது வேதங்களும் உபனிஷத்துகளும் நமக்கு அளித்த உயர்ந்த தர்மம்.

ஆனால் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலரால் நேர்ந்த சில தீய வழக்கங்களையும் சிறு தவறுகளையும் சனாதன தர்மத்தின் மீது சுமத்துவது கூடாது. இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். இந்த சிறு கருத்தை உங்களோடு பகிந்து கொண்டது குறித்து நான் மகிழ்கிறேன். வணக்கம்”.

ஐபிஎல்., போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!

shikar dawan - 2026
#image_title

ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இருந்தும் கூட தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களம் கண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தவர் ஷிகர் தவான். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தனது சிறப்பான ஆட்டத்தால் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம் பிடித்தார்.

அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் இந்த ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ரன்கள் எடுத்துள்ளார். 68 டி20 போட்டிகளில் 1,759 ரன்னும், 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ரன்னும் குவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 24 சதங்களை அடித்துள்ளார்.

இந்நிலையில் அண்மைக் காலமாக இளம் வீரர்களின் வருகையால் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். கடைசியாக 2022ல் வங்கதேசத்திற்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியிருந்தார்.

உள்ளூர் போட்டிகளான ஐ.பி.எல்.,லிலும் டில்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள தவான், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

இருப்பினும் இந்திய அணியில் இளைஞர்கள் பலரின் வரவால் சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்து அன்பும், ஆதரவும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் ஷிகர் தவான். 2015ல் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களைக் குவித்தவர். ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியின் (2013,2017) இரு தொடர்களில் அதிக ரன்களைக் குவித்து கோல்டன் பேட் விருதை வென்ற ஒரே வீரர். 2021ல் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக, உயரிய விருதான அர்ஜுனா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.

ஷிகர் தவான் ஓய்வை அறிவித்த நிலையில், அவரது நெருங்கிய சகா விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “ஷிகர் தவான், நீங்கள் இந்தியாவின் மிகவும் நம்பகமான தொடக்க வீரர்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் எண்ணற்ற நினைவுகளை எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள். விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம், உங்கள் விளையாட்டுத்திறன் மற்றும் உங்களது அற்புதமான புன்னகையை நாங்கள் தவற விடுவோம். ஆனால் உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் எப்போதும் வாழும்.

நீங்கள் கொடுத்த நினைவுகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகள் மற்றும் எப்போதும் உங்கள் இதயத்திடம் இருந்து வழிநடத்தியதற்காக நன்றி. மைதானத்திற்கு வெளியே உங்களது அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் தனது எக்ஸ் பதிவில், “கிரிக்கெட் ஆடுகளம் நிச்சயம் உங்களது ஆரவாரத்தை இழக்கும். உங்கள் புன்னகை, உங்கள் ஸ்டைல் மற்றும் விளையாட்டின் மீதான உங்கள் அன்பு எப்போதும் மற்றவர்களை ஈர்க்கக் கூடியது. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் பக்கங்களை நீங்கள் புரட்டிப் பார்த்தால் அதில் உங்கள் பாரம்பரியம் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இனி நடக்கப்போவது அனைத்தும் சிறந்ததாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள் ஷிகர் தவான்” என்று பதிவிட்டுள்ளார்.

Pluti – the leap and Tāl Fry – A Rhythmic Celebration!

0
plut newsi - 2026
#image_title

The prestigious Bhavaarpanam festival returns with a celebration of Indian classical arts that blends tradition with innovation. This year, the festival is highlighted by two exceptional presentations: “Pluti,” a philosophical dance narrative, and “Tāl Fry,” an exploration of rhythmic traditions across classical and folk music.

The Bhavaarpanam festival, a tribute to the legacy of Guru Mangudi Dorairaja Iyer, has long been a platform for showcasing both traditional and contemporary expressions of Indian classical music and dance. It is hosted by Kala Sadhanalaya and curated by Revathi Ramachandran. With its roots firmly anchored in classical traditions, this year’s festival promises to push the boundaries of artistic expression while honoring the rich cultural heritage of India.

Pluti: the leap

On August 28th, 2024, at 6:15 PM, “Pluti” takes the stage with a captivating narrative that explores the evolution of human consciousness. Conceptualized and choreographed by Manasvini K.R., the solo- thematic dance performance is an allegorical journey depicted through the stories of five animals—the frog, deer, earthworm, parrot, and cow—each representing a phase of human consciousness.

Drawing inspiration from Advaita Vedanta, “Pluti” uses these animals as metaphors for different states of awareness: from ignorance and illusion to restraint, renunciation, and finally, spiritual realization. The performance is enhanced by a stirring musical score composed by violin Vidwan Lalgudi GJR Krishnan, creating a multisensory experience that delves deep into the quest for truth and happiness.

Through evocative choreography and symbolic storytelling, “Pluti” offers a unique blend of philosophical depth and artistic beauty, inviting the audience to reflect on the journey of self-discovery. Sri Madhusudhan Sai who is the founder of SSSUHE will be presiding over the event.

Tāl Fry: A Rhythmic Celebration

The following evening, on August 29th, 2024, at 6:30 PM, “Tāl Fry” brings rhythm to the forefront with a performance that fuses classical and folk traditions. This innovative ensemble consists of six artists—Varun Rajashekaran (Ghatam), Soumendra Goswami (Sitar), Saptak Sharma (Tabla), Ravindra Rajput (Cajon/Flute), Manohar Balachandirane (Mridangam), and Mahavir Chandrawal (Dhol/Naal)—each contributing their unique expertise.

“Tāl Fry” delves into the limitless possibilities of rhythm, creating a soundscape that ranges from the intricate patterns of Carnatic and Hindustani classical music to the spontaneous vibrancy of folk traditions. The ensemble’s eclectic mix of instruments, combined with visually engaging light design, offers an immersive experience that connects with the audience on a primal level.

Having debuted to acclaim in July 2024, “Tāl Fry” is a celebration of rhythm’s power to bridge the gap between tradition and modernity. The performance invites everyone—whether a classical music enthusiast or a curious newcomer—to enjoy the universal language of rhythm.

Bhavaarpanam

Over the years, Bhavaarpanam has honored the life and contributions of Guru Mangudi Dorairaja Iyer while providing a stage for evolving artistic expressions. From traditional Bharatanatyam recitals to contemporary dance-theatre productions, the festival has continually embraced both preservation and innovation. This year’s performances of “Pluti” and “Tāl Fry” embody that spirit of growth and transformation, offering audiences a chance to experience art that is both timeless and relevant. 

Event Details:

Pluti: August 28th, 2024, 6:15 PM

Tāl Fry: August 29th, 2024, 6:30 PM

Venue: Rasika Ranjani sabha, 30/1, Sundareswarar St, near Lady Sivaswamy School, Girija Garden, Mylapore, Chennai, Tamil Nadu 600004
Tickets available at : mdnd.in

Join us at Bhavaarpanam 2024 to witness this confluence of tradition, rhythm, music, dance, and storytelling in a festival that celebrates the legacy of legendary Guru, Mangudi Dorairaja Iyer

Link for ticket
https://www.mdnd.in/newevent/viewevent/OTg0NCMzNSMxMDEjMg==

உலகின் கவனம் பெற்ற பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்!

pm modi with ukrain pres - 2026
#image_title

இன்று உலகில் கவனத்தை ஈர்த்திருக்கும் விஷயம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம்தான்! போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அவர் மேற்கொண்ட பயணம், இன்று உலக நாடுகளால் உன்னிப்பாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வெளிநாடு சென்று வருவது குறிப்பிடப் பட வேண்டிய விஷயமல்ல என்றாலும், மிக மிக உக்கிரமான போர்ப் பதற்றமான சூழலில், தனது பாதுகாப்பையும் கருத்திற்கொள்ளாமல், அந்நாட்டின் நலனை நாடி அவர் உக்ரைன் செல்வதுதான் முக்கியமான விஷயம்!

சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, அதில் இருந்து பல நாடுகள் உருவாகின. அதில் மிகப் பெரும் பகுதி ரஷ்யா என்று மாறியது. இதைத் தவிர பல நாடுகளும் உருவாகின. இவ்வாறு ரஷ்யாவை ஒட்டியுள்ள பகுதி, உக்ரைனாக மாறியது.

கடந்த 1991, அக்., 24ல் அந்த நாடு சுதந்திரம் பெற்றது. ஆனாலும், அதை தன்னுடன் இணைப்பதற்கு ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டது. இதன்படி, 2014ல் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போது, உக்ரைனின் கிரீமியா உள்ளிட்ட சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. டான்பாஸ் போர் என்று அழைக்கப்படும் இந்தப் போர், 2022 வரை அடிக்கடி மோதல்களாகவே இருந்து வந்தது. ஆனால், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தீவிர போரைத் தொடங்கியது; அது தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளாக உக்கிரமான போர் நடக்கும் உக்ரைனில், ரஷ்யா உள்புகுந்த நிலையில், தற்போது ஒரு திருப்பமாக, ரஷ்யாவுக்குள் உக்ரைன் புகுந்துள்ளது. இப்போது ரஷ்யாவிடம் உக்ரைனின் அணு உலை ஒன்றும், உக்ரைனிடம் ரஷ்ய அணு உலை ஒன்றுமாக சிக்கி, சர்வதேச அணுசக்தி கமிஷன் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், நிலைமை மோசமாகித்தான் போயிருக்கிறது. ரஷ்ய அதிபர் புடினுக்கும் வேறுவழி தெரியவில்லை! உக்ரைன் ரஷ்யாவை விட்டு விலகினால் ரஷ்யா உக்ரைனில் இருந்து வெளியேறும் என்றவாறு உலக நாடுகள் கணிக்கின்றன.

இருப்பினும் இன்றைய நிலையில், உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளுமே தங்களுக்கான நம்பகத்தன்மை வாய்ந்த நபர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நடுவுநிலையுடன் வரவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றன. இந்த நடுவுநிலை வகித்தல், சமாதானம் பேசுதல் ஆகியவற்றில் சீனா எப்போதுமே உள்வரும். ஆனால், இந்த முறை உக்ரைனுக்கு அமெரிக்காவும் மேற்கு உலக நாடுகளும் அணி சேர்ந்துவிட்டதால், ரஷ்யாவிடம் சீனா, கொரியா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள் கைகோத்துவிட்டதால், இரு தரப்பிலுமே இந்த நாடுகளை சமாதானம் பேச நாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், உலக நாடுகளின் கவனம் எல்லாம், பாரதப் பிரதமர் மோடியின் மீதே குவிந்திருக்கின்றன. காரணம், பிரதமர் மோடி எவர் பக்கத்திலும் நின்று ஆதரவு கொடுக்காவிட்டாலும், இரு தரப்புக்கும் சமூக பொருளாதார, மருத்துவ உதவிகளைச் செய்து தன்னை நம்பிக்கைக்கு உரியவராக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்போது, மோடி உலக அரங்கில் மிக மிக வலுவானவரும் மதிக்கப் படுபவருமான தலைவராக உருவாகியிருக்கிறார். அவர் சொல்லுக்கு பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவால் தவிர்க்க முடியாத நாடு இந்தியா. புடின் புன்னகையுடன் ஆரத் தழுவ விரும்பும் ஒரே தலைவர் மோடி எனும் வகையில் ரஷ்யாவும் மோடியின் மத்தியஸ்தத்தை விரும்பியே நிற்கிறது. உக்ரைனைப் பொறுத்தவரை அதன் தேர்வும் இந்தியாவாகவே உள்ளது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டுக்கும் அந்த சக்தியும், சந்தர்ப்பமும் இல்லை என்பதையும் அந்த நாடு உணர்ந்திருக்கின்றது!

கடந்த வருடம் முதலே இந்தியா தங்களுக்கு இடையிலான போரில் மத்தியஸ்தம் செய்யவேண்டும் என உக்ரைன் கேட்டுக்கொண்டது. உக்ரைனின் குரலை மேலும் பல நாடுகள் எதிரொலித்தன. இந்த நிலையில்தான் கடந்த மாதம் ரஷ்யா சென்றுவந்தார் மோடி. உலக நாடுகள் எதிர்பார்க்காத திடீர் பயணம் அது. அவ்வகையில் புடினிடம் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அவர் நேற்று உக்ரைன் பயணம் மேற்கொண்டார். முதலில் போலந்து சென்றுவிட்டு, அங்கிருந்து உக்ரைன் சென்று செலன்ஸ்கியினை சந்தித்துப் பேசினார்.

அவ்வகையில் உக்ரைனுக்குச் சென்ற முதல் சமாதானத் தலைவர் மோடி என்பதுதான் இன்றைய செய்தி! அது நாளைய வரலாறு! ஓர் இந்தியத் தலைவன் உலக அரங்கில் நடக்கும் போரில் சமாதானம் பேசச் செல்வதும் உலக வரலாற்றில் இதுதான் முதல்முறை!

சமாதானம் பேசுவது என்பது எளிதில் நடக்காதுதான்! சமாதானம் பேசச் செல்பவன் சண்டையிடும் இருவரை விட பலம் கொண்டவனாக, இருவரையும் அடக்கும் சக்தி கொண்டவனாக இருக்க வேண்டும். பலவானே இரு தரப்புக்கு இடையே சமாதானம் செய்துவைக்க முடியும்! அந்த வகையில் பாரதம் முழு பலத்தோடு இன்று உலக அரங்கில் தனிப்பெரும் சக்தியாக எழுந்து நிற்கிறது! மோடியின் உக்ரைன் பயணம் அதை அறுதியிட்டுச் சொல்கிறது.

இத்தகைய சூழலில், வரலாற்றின் ஒரு பக்கத்தை நாம் திருப்பிப் பார்க்க வேண்டியுள்ளது. 1965ல் உக்ரைனும் ரஷ்யாவும் சோவியத் என ஒன்றாக இருந்த போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் இந்தியப் படைகள் லாகூரைக் கடந்து இஸ்லாமாபாத்தைக் கைபற்ற நெருங்கின‌. அதில், பாகிஸ்தானை முறியடித்து காஷ்மீரை முழுதாய்க் கைப்பற்றி கிழக்கு பாகிஸ்தானை உடைக்கும் திட்டமும் லால் பகதூர் சாஸ்திரிக்கு இருந்துள்ளது. ஆனால் சோவியத் யூனியன் அதை விரும்பவில்லை. காரணம் அது சீன நலனை விரும்பியது. சாஸ்திரியின் செயலால் சீனா பாதிக்கப்படும் என்று கருதியது. அதனால் சாஸ்திரி சோவியத்துக்கு அழைக்கப்பட்டார். பேச்சுவார்த்தைக்காகச் சென்ற அவர், தாஷ்கண்ட் நகரில் மர்மமாக இறந்தார். அப்போது சோவியத் அதிபராக இருந்த கோசிஜின் சாஸ்திரியின் மரணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை!

அப்படி நம் நாட்டின் பிரதமர் சாஸ்திரி மர்மமாக மரணிக்க, இந்தியாவைப் பெரும் குழப்பத்தில் தள்ளியது ரஷ்யா!

இப்போது காலம் மாறியிருக்கிறது. அதே ரஷ்யாவின் சிக்கலைத் தீர்க்க, இந்தியா சமாதானத் தூது செல்ல வேண்டியிருக்கிறது. தர்மசக்கரம் சுழல்கின்றது! உக்ரைனும் ரஷ்யாவும் தங்களுக்குள் மோதிக் கொள்ள பாரதம் சமாதானம் செய்யத் தயார் என்கிறது! பாரதம் தர்மமும் அறமும் கொண்ட தேசம். பாரதத்தின் சநாதன தர்மம் தன் இனம், தன் மதம், தன் நாடு , தன் மொழி எனக் குறுகியது அல்ல! அது வானம் போல கடல் போல விரிவானது! “வசுதைவ குடும்பம், லோகா சமஸ்தாஸ் சுகினோ பவந்து, சர்வே ஜனா சுகினோ பவந்து என்பவை எல்லாம் சனாதனத்தின் அடிப்படைக் கருத்துகள். இப்படி, எல்லா உலக மக்களும் நன்றாக இருக்க‌ட்டும, எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும், உலகம் வாசுதேவனாகிய இறைவனின் ஒரே குடும்பம் என்ற சிந்தையில் செயல்படும் சனாதனத்தின் வழிவந்த பிரதமர் மோடியால் இதனை சாதிக்க முடியும் என்பதால் தான், அவரை உலக நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வருமாறு விரும்பி அழைக்கின்றன.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, எண்ணெய், அணு மின்சக்தி, ராணுவம் உட்பட பல துறைகளில் மிக நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. கொரோனா தொற்றின்போது, வளைகுடா நாடுகளை மட்டுமே எண்ணெய் தேவைக்காக சார்ந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்நேரம், உக்ரைனுடனான போர் தீவிரமடைந்த நிலையில், ரஷ்யா பல சலுகைகளுடன் எண்ணெய் விற்பனைக்கு முன்வந்தது. இதை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. இதனால், ரஷ்யாவுக்கு ஆதரவும் தெரிவிக்காமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்த அதே நேரத்தில், போரை நிறுத்தி, அமைதிக்கான பேச்சைத் துவங்கும்படி, இரு நாடுகளுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த ஜூலை மாதம், ரஷ்யாவுக்குச் சென்றபோதும், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் மோடி இதை வலியுறுத்தினார்.

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில், சமரசம் செய்ய இந்தியாவால் மட்டுமே முடியும் என, பல நாடுகள் கூறின. ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் சமநிலையில் நட்பு வைத்துள்ளதால், இந்தியா மீது அந்த நாடுகள் நம்பிக்கை தெரிவித்தன. 

முதலில், ஐரோப்பிய நாடான போலந்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து, 10 மணி நேர ரயில் பயணம் செய்து, உக்ரைனின் கீவ் நகரை நேற்று காலை சென்றடைந்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். கட்டித் தழுவி அவரை ஜெலன்ஸ்கி வரவேற்றார். உணர்ச்சி பெருக்கில் இருந்த ஜெலன்ஸ்கியின் தோளில் கைகளை போட்டு, பிரதமர் மோடி தேற்றினார். தொடர்ந்து, இருவரும், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து பேசினர். குறிப்பாக இந்தப் பேச்சில், ரஷ்யா போர் குறித்தே அதிக நேரம் பேசப்பட்டது. 

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை, வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை என்பதை மோடி சுட்டிக் காட்டினார். அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டார். போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

தூதரக பேச்சு மற்றும் அமைதி பேச்சின் வாயிலாகவே, பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்திய அவர், இரு நாடுகளும் இதற்கு முன் வர வேண்டும் என்பதை முன்மொழிந்தார். போரால், இளம் குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் துர்பார்க்கியம் என்பதை ரஷ்யா, உக்ரைன் தலைவர்களுக்கு கோடிட்டு காட்டினார்.

அமைதி திரும்புவதற்கு, இரு நாட்டுத் தலைவர்களும் முன்வந்தால், அதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்பதை தீர்க்கமாக குறிப்பிட்டார். பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இந்தியா வரும்படி பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஜெலன்ஸ்கியுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், தீர்வை நோக்கியதாகவும் இருந்தது என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். புடினுடனான தன் சமீபத்தில் சந்திப்பின்போது பேசிய விபரங்களையும் ஜெலன்ஸ்கியுடன் மோடி பகிர்ந்து கொண்டார்.

தோளில் கை போட்டபடி…

pm modi with ukrain pres - 2026
#image_title

தோள்மீது கை போடவில்லை.- யுத்த
துயர்தீர உயிர்வாழ
மீள்பாதை உருவாக
மவுனத்தில் தைரியம் சொன்னாய்- நீ
தோள்மீது கை போடவில்லை. 01

தோள்மீது கை போடவில்லை- பேர்
அமைதியும் சாந்தமும்
வாள்முனையில். வாராது
உடன்பேசி தீர்த்திடச் சொன்னாய்- நீ
தோள்மீது கை போடவில்லை. 02

தோள்மீது கை போடவில்லை – ரஷ்ய
“புடினு”க்கும் “ஜெலன்ஸ்கி”க்கும்
ஆள் முகம் பார்க்காமல்
உயர்தீர்வை உன்தீர்வு என்றாய்- நீ
தோள்மீது கை போடவில்லை. 03

தோள்மீது கை போடவில்லை – என்றும்
மாறாத வெளிநாட்டு
கொள்கையை பறைசாற்றி
பாரத முகங்காட்டி. வந்தாய் – நீ
தோள்மீது கை போடவில்லை 04

தோள்மீது கை போடவில்லை – ஜெய
ராமனின்நல் வழிநின்று
தாளிலா உறவுக்கு
தூய்மையின் மனிதத்தை சொன்னாய் – நீ
தோள்மீது கை போடவில்லை. 05

தோள்மீது கை போடவில்லை – கடை
வெறுப்புக்கும் இழப்பிற்க்கும்
தெளிவற்ற கொள்கைக்கும்
மாமருந்து சனாதனம் என்றாய் -,நீ
தோள்மீது கை
போட்டு நின்றாய் 06.வ

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய படம் இதுதான்!

nithyamenon vijay sethupathi - 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க இந்த குடும்பம் முதல் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறது. இத்திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்

கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் பிரதமர் மோடி! உலகை ஆச்சரியப்படுத்திய தருணம்!

pm modi with ukrain zelensky - 2026
#image_title

30 ஆண்டுகள் கழித்து உக்ரைன் சென்றுள்ள முதல் பாரதப் பிரமதர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்! இந்த முறை, தனது ஐரோப்பிய பயணத்தில், போலந்து, பின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்தார் பிரதமர் மோடி. 

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள அதிபர் மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கை போட்டபடி, தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். இது உலகின் கவனத்தைக் கவர்ந்திருந்தது.

அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் போரினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைக் குறிப்பிட்டு, ரஷ்யாவுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது.

உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணிப்பது எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொண்டு உன்னிப்பாகப் பார்க்கப்படும். அவர் தங்கள் நாடுகளுக்கு வர வேண்டும் என்ற ஆவலில், உலக நாடுகள் பலவும் ஆர்வமுடன் அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளன.

பிரதமர் மோடியின் முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு பயணங்களில் தற்போது ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக, உலக நாடுகளின் பார்வையில் உற்று நோக்கப்படுவது உக்ரைன் பயணம்! போரினால் சகஜ நிலையில் இல்லாமல் தத்தளித்து வரும் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் செய்தார். 

வழக்கமாக மேற்கொள்ளும் விமான பயணமாக இல்லாமல், இம்முறை ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவுக்கு பயணித்தார் பிரதமர் மோடி. இதற்காக அவருக்கு என சிறப்பு ரயில் ஒன்றும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. Force One எனப் பெயர் கொண்ட அந்த ரயிலில் பாதுகாப்பு வசதிகள் பல உண்டு. சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன்,  அதிக சொகுசு வசதிகளும் கொண்ட ரயிலாக Force One உள்ளது.  

Force One ரயிலில் பிரதமர் மோடிக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் ஆகியோர் உக்ரைன் சென்றுள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு என்றே 10 ஆண்டுக்கு முன்பு இந்த ரயில் உருவாக்கப்பட்டது.  அதன் பின்னர் போர்க்கள பூமியாக உக்ரைன் நாடு மாறிய நிலையில், அங்கு வி.வி.ஐ.பி.க்கள் செல்வதற்காக பயன்படுத்தப்படும் ரயிலாக மாறிவிட்டது!

உக்ரைனில் இரு தரப்பு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இந்தியா சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இதனை பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஒப்படைத்தார்.

உக்ரைனில் கால் பதித்து இறங்கிய தொடக்கம் முதலே அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நெருக்கம் காட்டி தோளில் கைபோட்டபடி, வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டு, சமாதானப் பேச்சுகளைத் தொடங்கும்படி அவர் உக்ரைன் அதிபரிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதனால் தான் காந்தி சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அடுத்து போரினால் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார் மோடி.

பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நெருக்கம் காட்டியுள்ள படங்கள் சமூகத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதனிடையே பிரதமர் மோடி உக்ரைனில் இருப்பதால், ரஷ்யா தனது தாக்குதல்களை இன்று நிறுத்தி வைத்தது.

3 லட்சம் குடும்பங்கள் அவதி; ரேஷன் அட்டை உடனே வழங்குக: பாமக., ராமதாஸ்!

Ration card - 2026

ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படாததால் 3 லட்சம் குடும்பங்கள் அவதி அடைந்துள்ளன. எனவே நியாயவிலைக்கடை ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை உடனே வழங்கவேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில்  உணவுப் பொருட்களை வாங்குவதற்கான  ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த  சுமார் 3 லட்சம் பேருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக  அவை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன.  ஆதாருக்கு அடுத்தபடியாக மிக முக்கிய ஆவணமான குடும்ப அட்டைகளை வழங்குவதில் தமிழக அரசின்  சார்பில் செய்யப்படும் காலதாமதம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பன்முக பயன்பாடு கொண்டவை ஆகும். நியாயவிலைக்கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் அவை பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு  தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும்.  இவற்றுக்கெல்லாம் மேலாக மாதம் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும் குடும்ப அட்டை கட்டாயம். ஆனால், புதிய குடும்ப அட்டைகள்  வழங்கப்படாததால்  லட்சக்கணக்கான மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளையும்,  உரிமைகளையும் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களின் தவிப்பை  தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய மின்னணு  குடும்ப அட்டைகளை வழங்குவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆதாரை அடிப்படையாக வைத்து தான் புதிய குடும்ப அட்டை கோருவோரின் விவரங்களை மிகவும் எளிதாக சரிபார்த்து வழங்கி விட முடியும்.  2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு குடும்ப அட்டை எண்ணும் வழங்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகும்  ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை  வழங்காமல் தமிழக அரசு காலதாமதம் செய்வது  ஏன்? என்பது தான் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்  ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  அதைப் பெறும் நோக்குடன் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகைக்கு  அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் வினியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. இது பெரும் தவறாகும்.

ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் பெறுவது தமிழ்நாட்டு மக்களின் உரிமை ஆகும். எந்தக் காரணத்தைக் கூறியும் அதை தமிழக அரசு தட்டிக்கழிக்க முடியாது. எனவே, புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க  தமிழக  அரசு முன்வர வேண்டும்.