Home Blog Page 171

திருவண்ணாமலை: புதுப்பிக்கப்பட்ட பெரிய தோ் 8ம் தேதி வெள்ளோட்டம்!

thiruvannamalai ther inspection - 2026
#image_title

புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது.

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா கார்த்திகை மாதங்களில் நடைபெறும்.

தொடர்ந்து கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருவண்ணாமலையில் குவிந்து அண்ணாமலையாரை தரிசிப்பதுடன் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் பாதையில் கிரிவலம் மேற்கொள்வர்.

இந்த ஆண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 4 ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்படும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாக்களின் முக்கிய விழா நாளாக கருதப்படும். ஏழாம் நாளன்று மாட வீதியில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வரும்.

பராசக்தி அம்மன் தேர் முழுக்க முழுக்க பெண் பக்தர்கள் மட்டுமே மாடவீதி முழுவதும் வடம் பிடித்து இழுத்து வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் பஞ்ச ரதங்களிலும் மராமத்துப் பணிகள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தேருக்கு ரூ.70 லட்சத்தில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோ் மற்றும் தேரில் பொருத்துவதற்காக தயாா் செய்யப்படும் சிற்பங்கள் மற்றும் தீபத் திருவிழாவின்போது சுவாமி வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் சுவாமி சிலைகளுக்கு வா்ணம் பூசும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் பேசியபோது…

59 அடி உயரம் கொண்ட அருணாசலேஸ்வரா் தோ் சுமாா் 200 டன் எடை கொண்டது. இந்தத் தேருக்கு ரூ.70 லட்சத்தில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேரில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் போன்ற அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்தவைகள் மாற்றப்பட்டு உள்ளன. 4 கொடுங்கை நிலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

தேரில் கண்டத்தில் வரும் பழுதடைந்த குத்துக்கால்கள் நீக்கப்பட்டு, புதிதாக குத்துக்கால்கள் மற்றும் ரீப்பா்கள் மாற்றப்பட்டு உள்ளன. தேரில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மா மற்றும் துவாரபாலகா், சிம்மயாழி, கொடியாழி, சிலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. புதிதாக 203 சிற்பங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த புதுப்பிக்கும் பணியால், மேலும், 50 ஆண்டு முதல், 80 ஆண்டுகள் வரை, உறுதி தன்மையோடு ரதம் இருக்கும்.
நவ.8-இல் வெள்ளோட்டம்:

மராமத்துப் பணிகள் நிறைவடைந்து நவம்பா் 8-ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தோ் வெள்ளோட்டம் நடைபெறும். தேரின் உறுதித் தன்மை சான்று பொதுப்பணித்துறை மற்றும் சாலையின் உறுதித் தன்மை குறித்தான சான்று நெடுஞ்சாலை துறையிடம் கோரப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்தார். இந்த வெள்ளோட்ட நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம், கோயில் இணை ஆணையா் ஜோதி, கோயில் அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், பெருமாள், கோமதி குணசேகரன், கோயில் மேலாளர் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஊழல் பேர்வழி!

actor vijay - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

நடிகர் விஜய் தோற்றுவித்த அரசியல் கட்சி, தமிழக வெற்றிக் கழகம். சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பேசும்போது, “ஊழல் மலிந்த அரசியல் கலாசாரமும் நமது எதிரி….. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், கரப்ஷன் கபடதாரிகள் தான் இப்ப நம்ம கூடவே இருந்து நம்மளை ஆண்டுகிட்டு இருக்காங்க” என்று அவர் ஊழலைக் கண்டித்தார்.

ஊழலைப் பொதுவாகக் கண்டிப்பதோடு விஜய் நிற்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை அவர் குறிப்பிடும் ஊழல் அரசியல்வாதிகள் யார், அவர்கள் எந்தக் கட்சி, என்று அவர்களின் பெயரைச் சொல்லாமலே விஜய் அவர் சொல்ல வந்ததைத் தெளிவு படுத்தினார்.

சரி, விஜய் இப்படிப் பேசியதால் அவர் நிஜமாகவே ஊழலுக்கு எதிரானவர், அவருடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் அப்போது அரசு நிர்வாகத்தில் ஊழல் பெரிதும் கட்டுப் படுத்தப் படும், அந்த முனைப்பு அவரிடம் தீவிரமாக இருக்கும் என்று அர்த்தமாகுமா? இல்லை, அப்படி அர்த்தமாகாது.

விஜய் என்னதான் ஊழல் எதிர்ப்பு பேசினாலும், தமிழகத்தின் ஆட்சி அவர் கைக்கு வந்தால் அவரும் ஊழலுடன் கைகோர்ப்பார். ஊழல் பற்றி சிலதைப் புரிந்துகொண்டல் இது தெளிவாகும்.

உங்களுக்குத் தெரிந்த ஊழலற்ற ஒரு அரசியல் தலைவரை, முதல் அமைச்சராக அல்லது நாட்டின் பிரதமராக இருந்த அல்லது இருக்கும் ஒரு அரசியல் தலைவரை, எண்ணிப் பாருங்கள். உதாரணத்திற்கு, காமராஜரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒன்பதரை ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர்.

காமராஜர் பணத்திற்காக அல்லது மற்ற பொருளாதாரப் பலன்களுக்காக, அல்லது வேறு சுய லாபத்துக்காக, அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்ததில்லை. தனது சக அமைச்சர்களையும் அந்தக் காரியங்களைச் செய்ய அவர் அனுமதித்ததில்லை – அவர்களும் அப்படியானவர்கள் அல்ல என்பது வேறு விஷயம்.

காமராஜரின் தூய்மையான நிர்வாகத்திற்குக் காரணம் அவரது நேர்மைச் சிந்தனை, ஒழுக்கம் மற்றும் தேசாபிமானம். இத்தகைய தனிப்பட்ட குணங்கள் ஒன்றோடொன்று தொடர்பு உடையவை. இந்தக் குணங்கள் உள்ளவர்கள்தான் ஊழல் செய்யாமல், ஊழலை அனுமதிக்காமல் இருக்க முடியும்.

லஞ்சம் வாங்குவது, சட்டத்திற்குப் புறம்பாக சொத்து சேர்ப்பது, அரசு கஜானாவுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது, உறவினர்களையும் வேண்டப் பட்டவர்களையும் முறைகேடாக வியாபாரத்தில் கொழிக்க அனுமதிப்பது என்பதெல்லாம் நேர்மைக்கு விரோதானது, ஒழுக்கம் அனுமதிக்காதது, தேசாபிமானமும் பொறுத்துக் கொள்ளாதது. அந்த வகையில் பிரதமர் மோடியும் கமராஜருக்கு இணையான நற்பெயர் கொண்டவர்.

முன்பு பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் தனது ஆட்சியில் ஊழலையும் முறைகேடுகளையும் கண்டு கொள்ளாமல் இருந்தவர் என்ற பெயர் வாங்கியவர். காரணம், அவருக்கு அந்த அளவு ஒழுக்கமும் தேசாபிமானமும் குறைவு. அவரது பாராமுகத்தால் தேசத்திற்கு நஷ்டம் விளைவதைப் பற்றி அவர் கவலைப் படவில்லை. பெரும்பாலும் ஒரு சமர்த்துப் பொம்மையாக நாற்காலியில் அமர்ந்திருந்தால் போதும், நாற்காலியில் அமரும் வாய்ப்புதான் பெரிது, என்றிருந்தவர் அவர்.

இப்போது நடிகர் விஜய் விஷயத்திற்கு வாருங்கள். இதுவரை அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை. ஒரு எம். எல். ஏ. அல்லது எம். பி-யாகவும் இருந்ததில்லை. இப்போதுதான் அரசியலில் நுழைந்திருக்கிறார். இருந்தாலும், அவர் ஆட்சிக்கு வந்தால் ஒரு ஊழல்வாதியாக, அல்லது ஊழலைப் பெரிதும் அனுமதிப்பவராக இருப்பார் (இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை) என்று நாம் சொல்லமுடியும். காரணம் அவரது சொல் செயலில் நேர்மை இல்லை. அவரிடம் ஒழுக்கமும் தேசாபிமானமும் இருப்பதற்கு ஒரு அறிகுறியும் இல்லை – அதற்கு மாறாகத்தான் அவர் தென்படுகிறார்.

விஜய் மாதிரி, சுயநலத்துடன் காரண காரியமாக ஆளும் கட்சியை ஊழல் குற்றச் சாட்டுடன் எதிர்க்கும் வேறு சில கட்சிகளும் தமிழகத்தில் உண்டு. ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர்களுக்கு அதுவும் ஒரு எளிய வழி என்று தோன்றுகிறது. அதுதான் விஷயம்.

ஆள் சரியில்லை என்றால் அவர் பேச்சுக்கு அர்த்தம் இருக்காது. அப்படிப் புதிதாக வந்திருப்பவர்தானே விஜய்? ஊழலுக்கு எதிராக அவர் என்ன முழங்கினால் என்ன? எத்தனை முறை அவர் தோழா, தோழி, ப்ரோ என்ற ஏமாற்றுப் பிரியங்களுடன் கூட்டத்தினரை அழைத்துப் பேசினால் என்ன?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)

மதுரை ஆலயங்களில் கந்த சஷ்டி விழா!

chozhavanthan temple kandha sasthi - 2026
#image_title

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில் உள்ள கோவில்களில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் கரையில் அமைந்துள்ள பிரளயநாத சிவன் ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, இத்திருக்கோவில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷே வழிபாடுகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, விநாயகர் மற்றும் பாலமுருகன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, தொழில் அதிபர் எம் .வி. எம் .மணி கவுன்சிலர்கள் வள்ளி மயில், எம். மருதுபாண்டியன், கணக்கர் சி பூபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதே போல, சோழவந்தான் அருகே உள்ள தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் அர்ச்சனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் விழா கமிட்டியின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், கந்த சஷ்டி முன்னிட்டு, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது. தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், கோமதிபுரம் ஜூபிலி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும், அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், மதுரை அண்ணாநகர் பூங்கா முருகன் ஆலயத்திலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஸ்தோத்திரம்: ஸ்ரீசுப்ரமண்ய கவசம்!

murugan - 2026

முருகப் பெருமானை முழு மனத்துடன் தியானித்துக் கொண்டே, இந்தத் துதியை பக்தியுடன் சொல்லுங்கள். தடைகள் விலகி உங்கள் வாழ்வில் சிறப்புகள் பலவும் வந்து சேரும்.

அங்கந்யாச கரந்யாச:

அஸ்ய ஸ்ரீசுப்ரமண்ய கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ருஷி: அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீசுப்ரமண்யோ தேவதா
ஓம் நமோ இதி பீஜம், பகவத் இதி சக்தி:
சுப்ரமண்யேதி கீலகம்
ஸ்ரீசுப்ரமண்ய ப்ரசாத சித்யர்த்தே ஜபே விநியோக:

சாம் இத்யாதி ஷடங்கன்யாஸ

ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்

ஸிந்தூராருணம் இந்து காந்தி வதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைர் ஆபரணைர் விபூஷித தனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் |
அம்போஜபய சக்தி குக்குடதரம் ரக்தாங்க ராகோத்ஜ்வலம்
ஸுப்ரமண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம் பீதி ப்ரணாசோத்பவம் ||

சிந்தூரம் போல சிவந்த நிறமுள்ளவரும், சந்திரன் போல் அழகான முகமுள்ளவரும், தோள் வளை, முத்தாரம் முதலிய திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உடலழகு உள்ளவரும், சொர்க்க போகத்தை அளிக்கக் கூடியவரும், தாமரைப்பூ, சக்திவேல், சேவல் ஆகியவற்றைத் தாங்கி அபயக் கரம் நீட்டுபவரும், சிவந்த வாசனைப் பொடிகளால் பிரகாசிக்கின்றவரும், அடியார்களின் பயத்தைப் போக்குவதிலேயே கருத்துள்ளவருமான ஸ்ரீசுப்ரமண்யரை வணங்குகின்றோம்.

ஸுப்ரஹ்மண்யோ க்ரத: பாது ஸேனாநீ: பாதுப்ருஷ்டத:|
குஹோ மாம் தக்ஷிணே பாத வஹ்னிஜ: பாது வாமத:||

முன் பக்கம் ஸ்ரீ சுப்ரமண்யர் காக்கட்டும். தேவ சேனாபதியானவர் பின்பக்கம் காக்கட்டும். தென் பாகத்தில் குஹன் காக்கட்டும். இடது பாகத்தில் அக்னி பூ: (அக்கினியிலிருந்து தோன்றியவன்) என்கிற முருகன் துணை நிற்கட்டும்.

சிர: பாது மஹா ஸேன: ஸ்கந்தோ ரக்ஷேல்ல லாடகம் |
நேத்ரே மே த்வாத சாதச்ச ச்ரோத்ரே ரக்ஷத விச்வ ப்ரீத் ||

பெரும் சேனையை உடையவர் தலையைக் காக்கட்டும். ஸ்கந்தன் நெற்றியைப் பாதுகாக்கட்டும். பன்னிரண்டு கண்களை உடையவர் எனது கண்களை ரட்சிக்கட்டும். உலகத்தை வகிக்கின்றவர் என் காதுகளை ரட்சிக்கட்டும்.

முகம் மே ஷண்முக: பாத நாசிகாம் சங்கராத்மஜ: |
ஓஷ்டௌ வல்லிபதி: பாது ஜிஹ்வாம் பாதஷாடானன: ||

ஆறுமுகன் எனது முகத்தைக் காக்கட்டும். மூக்கை சிவமைந்தன் காக்கட்டும். உதடுகளை வள்ளி மணாளன் காக்கட்டும். நாவை ஆறுமுகங்களை உடையவன் காக்கட்டும்!

தேவசேனாபதிர் தந்தான் சிபுகம் பாஹித்வாத ச பாஹுச:|
கண்டம் தாரகா ஜித் பாஹு பாஹு த்வாதச பாஹுச |
|

தேவசேனாவின் கணவன் பற்களைக் காக்கட்டும். பன்னிரு கையன் முகவாய்க் கட்டையைக் காக்கட்டும். தாருகனை ஜயித்தவர் எனது கழுத்தை ரட்சிக்கட்டும். பன்னிரண்டு கைகளை உடையவர் எனது கைகளைக் காக்கட்டும்!

ஹஸ்தௌ சக்திதர: பாது வக்ஷ: பாதுச்ரோத பவ:
ஹ்ருதயம் வஹ்னிபூ: பாது குதாம் பாது அம்பிகாஸுத ||

வேலாயுதத்தைத் தரித்தவர் எனது உள்ளங் கைகளைக் காக்கட்டும். நாணற்காட்டில் உண்டானவர் எனது மார்பைக் காக்கட்டும். அக்னியிலிருந்து உண்டானவர் எனது இருதயத்தைக் காக்கட்டும். அம்பிகை பாலன் எனது வயிற்றைக் காக்கட்டும்!

நாபிம் சம்புஸுத: பாது கடிம் பாது ஹராத்மஜ |
ஊருபாது: கஜாரூடோ ஜாநு மே ஜான்ஹவீ ஸுதா ||

சம்புகுமாரன் எனது தொப்புளைக் காக்கட்டும். சிவ புத்ரன் எனது இடுப்பைக் காக்கட்டும். யானையின் மீது அமர்ந்திருப்பவர் எனது தொடைகளைக் காக்கட்டும். கங்காசுதனான காங்கேயன் எனது முழங்கால்களைக் காக்கட்டும்.

ஜங்கே விசாகோ மே பாது பாதௌ மே சிகி வாஹன: |
ஸர்வாண் அங்கானி பூதேச ஸர்வதாதும் ச பாவகி ||

விசாகன் எனது கணுக்கால்களைக் காக்கட்டும். மயில்வாகனன் எனது கால்களைக் காக்கட்டும். எல்லா பூதகணங்களுக்கும் தலைவர் எனது எல்லா அவயவங்களையும் காக்கட்டும். அக்னி குமாரன் எனது உடலிலுள்ள எல்லா தாதுக்களையும் காக்கட்டும்!

ஸந்த்யா காலே நிசீதின்யாம் திவா ப்ராதர் ஜலேக்னிஷு
துர்கமே ச மஹாரண்யே ராஜத்வாரே மஹாபயே
துமுபே ரணமத்யே ச சர்வ துஷ்டம் ருகாதிஷு
கோராதிஸாத்வஸே அபேத்யே ஜ்வராதிவ்யாதி பீடனே
துஷ்ட க்ரஹாதி பீதௌ ச துர்நிமித்தானி பீஷணே
அஸ்த்ர சஸ்த்ர நிபாதே ச பாதுமாம் க்ரௌஞ்சரந்த்ர க்ருத்||

சந்தியா காலத்திலும், நடு இரவிலும், பகலிலும், காலையிலும், நீரின் மத்தியிலும், நெருப்பிலும், பயங்கரக் காட்டிலும், அரண்மனை வாயிலிலும், கோரமான போரின் மத்தியிலும் கொடூரமான மிருகங்களின் நடுவிலும், திருட்டு பயத்திலும், தடுக்க முடியாத ஜுரம் முதலிய நோய்களின் பாதிப்பிலும், தீய கிரகங்களின் தோஷங்களினால் பாதிக்கப்படும்போதும் கெட்ட சகுனங்கள் தோன்றிடும் சமயத்திலும், அஸ்திரங்கள், சஸ்திரங்கள் இவை விழும் பொழுதும் கிரௌஞ்ச மலையை தூள்தூளாக்கிய ஸ்ரீ சுப்ரமண்யர் என்னைக் காக்க வேண்டும்.

ய:ஸுப்ரமண்ய கவசம் இஷ்டஸித்திப்ரதம் படேத்|
தஸ்ய தாபத்ரயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்||

இஷ்ட சித்தியை அளிக்கவல்ல இந்த ஸ்ரீசுப்ரமண்ய கவசத்தை எவன் படிக்கிறானோ அவனுக்கு மூன்று வித தாபங்கள் கிடையாது. இது உண்மை. உண்மை. சத்தியம் உரைப்போம்!

தர்மார்த்திலபதே தர்மம் அர்த்தார்த்தி ச அர்த்த மாப்னுயாத்|
காமாத்திலபதே காமம் மோக்ஷார்த்தி மோக்ஷ மாப்னுயாத்||

தர்மத்தை விரும்புபவன் தர்மத்தையும், பொருளை விரும்புபவன் பொருளையும், நியாயமான பொருளுக்கு ஆசைப்படுபவன் விரும்பும் பொருளையும் மோட்சத்தை விரும்புபவன் மோட்சத்தையும் அடைவான்.

யத்ரயத்ர ஜபேத் பக்த்யா தத்ர ஸன்னிஹிதோகுஹ:
பூஜா ப்ரதிஷ்டா காலே ச ஜப காலே படேதிதம்||

எங்கெங்கெல்லாம் இந்த சுப்ரமண்ய கவசம் படிக்கப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் முருகன் அருகிருந்து கேட்டு அருளுவான். பூஜை காலத்திலும் ஜபம் செய்யும்போதும் இந்தத் துதியினைப் படிப்பதால் பூஜையின் பலன் பன் மடங்கு அதிகரிக்கும். மஹா பாவங்கள் விலகும்.

ய: படேத் ச்ருணுயாத் பக்த்யா நித்யம் தேவஸ்ய ஸன்னிதெளெ:|
ஸர்வான் காமான் இஹப்ராப்ய ஸோந்தே ஸகந்தபுரம் வ்ரஜேத்||

இதை கந்தவேளின் சந்நிதியில் எவன் படிக்கிறானோ, எவன் கேட்கிறானோ அவன் இவ்வுலகில் எல்லா விருப்பங்களையும் அடைந்து முடிவில் கயிலையில் உள்ள ஸ்ரீஸ்கந்தபுரத்தை அடைவான்.

பிராமணர்களின் உரிமைக் குரல்!

brahmins protest in chennai - 2026
#image_title

உண்மையில், திராவிடரால் ஒடுக்ப்பட்ட, நசுக்கப்பட்ட , பிதுக்கப்பட்டுள்ள பிராமணர்களின் பேரணியின்- உரிமைக்குரல்!

எழும்பூரில் இன்று ஏறக்குறைய இருபதாயிரம் – முப்பதாயிரம் பிராமணர்கள் கூடி உரிமைக்குரல் எழுப்பினர். கணிசமாக பெண்கள். பல மாவட்டங்கள் ஊர்களிலிருந்து வந்திருந்தனர்.

அனைத்து சமுதாயத்தை சார்ந்தவர்களும், சமுதாய தலைவர்களும் வந்து ஆதரவு தந்து பேசினார்கள்

பாமக தலைவர் ராமதாஸ் தனது பிரதிநிதியை அனுப்பி பேச வைத்தார். காங், பாஜக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பறையர் பேரவை, அம்பேத்கர் ஜனசக்தி, வீரவன்னியர் பேரவை, நாடார் சமூகத்தலைவர், சிங்கமாக கர்ஜிக்கும் ஃபார்வர்ட் ப்ளாக் திருமாறன், இஸ்லாமியரான வேலூர் இப்ராஹிம் இன்னும் பல சமூகத்தலைவர்கள் ஆதரவு குரல் எழுப்பினர்

பிராமணர் சமூகத்தின் மீது தீண்டாமை கடைபிடிக்கும் திராவிடம் என் கால் செருப்புக்குச் சமானம். நான் இன்று சென்னை வந்து தொழுகை நடத்தி கூட்டத்திற்கு வர வீடு தந்தது ராம்குமார் என்ற பிராமணர். நான் தேசிய இனத்தால் ஹிந்து, வழிபாட்டால் இஸ்லாமியன், மொழியால் தமிழன் – வேலூர் இப்ராஹீம்

PCR சட்டம் போல பிராமணர்களை இழிவு படுத்துவோரை தண்டிக்க சட்டம் வேண்டும். ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த சமுதாயமான பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் போன்ற கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் 6 வது மிகப்பெரிய சமூகம் பிராமணர்கள். தேர்தல் சக்தியாக ஒன்றுபட வலியுறுத்தப்பட்டது

வேலூர் இப்ராஹிமுக்கு அடுத்து அதிக வரவேற்பை பெற்ற ஸ்டார் பேச்சாளர் கஸ்தூரி. பிராமணர்களை இழிவு படுத்தி பேசுவோர், சினிமா எடுப்போர் மீது வழக்கு தொடுக்கும் அமைப்பு உருவாக்கப்படும் என்றார்.

தண்ணீர் பாட்டில் சப்ளை செய்து கொண்டே ஒரு க்ரூப். காலி பாட்டில்களை collect பண்ணியபடி பின்னாடியே ஒரு க்ரூப். நாற்காலிகள் உடைக்கப்படவில்லை. வீட்டிற்கு யாரும் தூக்கி கொண்டு போகவில்லை. சரக்கு பாட்டில் இல்லை. சாராய நெடி இல்லை. கெட்டவார்த்தை வசவுகள் இல்லை

பிராமணர்களில் எளிய அடித்தட்டு மனிதர்கள் மட்டும் பேசினார். பிரமாதமாக பேசக்கூடிய intellectuals க்கு பேச வாய்ப்பளிக்க வில்லை. பாண்டே, கோலாஹல ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் அழைக்கப்படவில்லை போலும்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி. charector assassination செய்து கொண்ட SV சேகர் அழைக்கப்படவில்லை. மதுவந்தி உளராமல் பேசினார். அமெரிக்கை நாராயணனின் நாராச பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப பாதியில் பேச்சை முடிக்கவேண்டிய நிலை

ஈவெராமசாமி, திராவிடம், விடியல் ஆட்சி அடித்து தோய்த்து கிழித்து க்ளிப் போட்டு மாட்டப்பட்டன.

பலவண்ண நூல்களையும், பூணூல் களையும் ஒருங்கிணைத்தவர் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத். All credits to him only.

பொழுதுபோக்கிற்காக முகநூலில் கம்பு சுத்தும் பிராமண போராளிகளும் வந்திருந்தால் லட்சம் தாண்டியிருக்கும்.

  • D.V. Sivakumar

மதுரை நகரில் சிட்டி பஸ்களாக செயல்படும் ஆட்டோக்கள்!

madurai auto - 2026
#image_title

மதுரை மாவட்டத்தில் ஆட்டோக்கள் சிட்டி பஸ்களாக செயல்படுவதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசாருக்கு தெரிந்தே, ஆட்டோக்கள் அதிகளவில் அரசு விதியை மீறி இயக்கப்
படுவதாக சமூக ஆர்வலர்கள் குறை சொல்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், அலங்காநல்லூர், அழகர் கோவில், ஊர்மெச்சி குளம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், குருவித்துறை, சோழவந்தான், காடுபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆட்டோக்கள் அதிகளவில் பயனிகளை ஏற்றிக்கொண்டு , அரசு சிட்டி பஸ்கள் போக செயல்படுவதாக சமூக அறிவியல் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக, மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மதுரை போலீஸ் போக்குவரத்து துணை ஆணையர், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும்,
அரசு பெர்மிட் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த போலீஸார்கள் ஆர்வம் காட்டி வில்லை என, கூறப்படுகிறது.

மதுரை அண்ணா பஸ் நிலையத்தில், ஆட்டோக்கள் அரசு பஸ்ஸில் பயணிகள் , பயணம் செய்யாதபடி, பஸ் நிறுத்தங்களில் சாலையிலே குறுக்க நிறுத்தி பயணிகளை ஆட்களை ஏற்றுவதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றனர். இதை அப்பகுதி உள்ள போக்குவரத்து போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மதுரை ,வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்து அரசு பெரிமீட்டின்றி இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை நகரில் அண்ணா நகர், அண்ணா நிலையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், கோரிப்பாளையம், புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் வரிசையாக நடத்தப்படுவதால், பொதுமக்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இடையூறாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆட்டோ கட்டுப்படுத்த வேண்டுமென, பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை பெரியார் நிலையத்திலிருந்து, மாட்டுத்தாவணி, வண்டியூர், அண்ணாநகர், வரிச்சூர், பூவந்தி செல்கின்ற அரசு சிட்டி பஸ்களும், மதுரை அண்ணாநகர், மாட்டுத்தாவணி, அண்ணா நிலையம் உள்ளே வந்து செல்ல வேண்டும் எனவும், அண்ணா பஸ்நிலையம் வெளியே, சிட்டி பஸ்களை இயக்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளுக்கு ஆட்டோக்கள் தொல்லை உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.

மதுரை காவல் ஆணையர், தனி கவனம் செலுத்தி, மதுரை அண்ணா
நிலையம் உள்ளே பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை அவசியம்: அர்ஜூன் சம்பத் கோரிக்கை

brahmins protest in chennai - 2026
#image_title

பிராமணர்களை இழித்து பேசும் தி.மு.க., வினர் மீது முதல்வர் ஸ்டாலின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி உள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், பிராமண சமூகத்தின் மீதான அவதூறு பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சமுதாய தலைவர்கள், தமிழக பிராமண சமூகத்தினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஒய்.ஜி.மதுவந்தி பேசியதாவது: பிராமண சமுதாயம் ஒரு பெரிய சமுதாயம். எல்லாரும் ஒன்று சேர வேண்டும். இந்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேச வேண்டியது கிடையாது. ஒரு படம் எடுத்தால் அதில் ஒருத்தர் ஒரு சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்றால் அதை தைரியமாக சித்தரித்து சொல்ல வேண்டும்.

அவ்வளவு பெரிய ராணுவ அதிகாரியை பற்றி படம் (அமரன்) எடுக்கிறீர்கள். அவர் ஒரு பிராமணர் என்று காட்டுவதில் உங்களுக்கு என்ன கேடு? யாரை பார்த்து பயப்படுகிறீர்கள்? திரைத்துறையில் நான் இருந்து கொண்டே தான் இதை கேட்கிறேன். மற்ற சமுதாயத்தை பற்றி நேரிடையாக சொல்கிறீர்கள்? பிராமணர் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? பயத்தை போக்கி தைரியமாக களத்தில் இறங்குங்கள்.

நடிகை கஸ்தூரி: காஷ்மீரில் நடப்பது மட்டும் இனப்படுகொலை அல்ல. ஒருத்தர் உணர்வை, சமுதாயத்தை அழிப்பதும் இனப்படுகொலை தான். பிறப்பில் இருந்து இறப்பு வரை முக்கியமான அங்கமாக இருக்க வேண்டியது இந்த குலம். கைபர் கணவாய் வழியாக வந்தவர்களை பற்றி பேசினால் உங்கள் ஓட்டு தான் குறையும்.

தமிழ்நாடு பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) மாநில தலைவர் என். நாராயணன்: சமீபகாலமாக பிராமண துவேஷம் என்பதை நாம் பொறுத்துக் கொண்டு வந்தோம், சகித்துக் கொண்டு வந்தோம். இப்போது லக்ஷமண் ரேகை என்ற எல்லை கோட்டை அது தாண்டிவிட்டதால் நாமும் களம் இறங்கி இருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 400க்கும் அதிகமான கிளைகளை நிறுவியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் பிராமணர்கள் ஒற்றுமை அருமையாக இருக்கிறது. பிராமணர்களை கோழை என்றோ பலஹீனம் ஆனவர்கள் என்றோ நினைத்துவிடக்கூடாது. தமிழகத்தில் 6வது பெரிய சமூகம் பிராமணர்கள். பிராமணர்கள் மனத்தை குலைக்க முயற்சிக்கின்றனர். குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது.

அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி தலைவர்: அந்தணர்களை அந்நியர்கள் என்றும், கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்றும் ஒருசில இனவெறி குழுக்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் திராவிட மாடல் என்ற போர்வையில் தொடர்ந்து அந்தணர்களை இழிவுப்படுத்தும் அக்கிரமம் நடக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அந்தணர் சமுதாயம் தமிழ் சமூகத்தில் பிரிக்க முடியாத சமூகம்.

ஒருகோடி இந்துகள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். எல்லோருக்குமான திராவிட மாடல் என்று கூறுகிறீர்கள். பிராமணர்களை இழித்து பேசும் உங்கள் கட்சியினரை கண்டிக்க மாட்டீர்கள். இதை முதல்வர் ஸ்டாலின் கண்டித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த சமுதாயத்தை யார் பழித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில், பிராமணர்களை பாதுகாக்க பி.சி.ஆர். சட்டம் போன்ற சட்டத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 03.11.2024, மூன்றாவது நாள்

இந்தியா-நியூசிலாந்துமூன்றாவது டெஸ்ட், மும்பை, 03.11.2024, மூன்றாவது நாள்

முனைவர்கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 65.4 ஓவர்களில் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம்28, கிளன் பிலிப்ஸ் 17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81; இரண்டாவது இன்னிங்க்ஸ்45.5 ஓவர்களில் 174, வில் யங் 51, கிளன் பிலிப்ஸ் 26, தேவன் கான்வே 22, ஜதேஜா 5/55,அஷ்வின் 3/63) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 59.4 ஓவர்களில் 86/4, ஷுப்மன் கில் 90,ரிஷப் பந்த் 60, வாஷிங்க்டன் சுந்தர் 38, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ் படேல்5/103; இரண்டாவது இன்னிங்க்ஸ் 29.1 ஓவர்களில் 121, ரிஷப் பந்த் 64, வாஷிங்க்டன் சுந்தர்12, ரொஹித் ஷர்மா 11, அஜாஸ் படேல் 6/57, கிளன் பிலிப்ஸ் 3/42) நியூசிலாந்து அணி 25ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

          மூன்றாவது நாளான இன்று நியூசிலாந்து அணிதனது இரண்டாவது இன்னிங்க்ஸை 171/9 என்ற நிலையில் தொடங்கியது. கடைசி விக்கட்டை ஜதேஜாஎடுத்தார். இதன்மூலம் அவர் 5 விக்கட்டுகள் பெற்றார். பின்னர் இந்திய அணி தனது இரண்டாவதுஇன்னிங்க்சை தொடங்கியது. ரோஹித் ஷர்மா இரண்டு ஃபோர் அடித்தபின்னர் மூன்றாவதுஓவரில் ஆட்டமிழந்தார். நான்காவது ஓவரில் ஷுப்மன் கில் (1 ரன்), ஆறாவது ஓவரில்விராட் கோலி (1 ரன்), ஏழாவது ஓவரில் ஜெய்ஸ்வால் (5 ரன்), எட்டாவது ஓவரில்சர்ஃப்ராஸ் கான் (1 ரன்) என இந்திய அணியின் சிறப்பு பேட்ஸ்மென்கள் வரிசையாகஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். சர்ஃப்ராஸ் கான் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர்29/5. 16ஆவது ஓவரில் ரவீந்தர ஜதேஜா (6 ரன்) ஆட்டமிழந்தார். அப்போது அனியின்ஸ்கோர் 71/6. இருப்பினும் இந்திய அணி வெற்றி அடையக்கூடும் என்ற நம்பிக்கையை ரிஷப்பந்த் தந்துகொண்டிருந்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு அவரும் (64 ரன்) 22ஆவது ஓவரில்ஆட்டமிழக்க, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. அஷ்வினும் வாஷிங்க்டன் சுந்தரும்அடுத்த ஆறு ஓவர்களைச் சமாளித்தனர். எனினும் அஜாஸ் படேல் சிறப்பாக பந்துவீசினார்.அவரது பந்துகளை ஆடமுடியவில்லை. இறுதியில் 29.1 ஓவர்களில் 121 ரன் எடுத்து இந்திய அணிதோவியைத் தழுவியது.

          ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும்தாங்கள் அணியில் தொடரவேண்டுமா என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். சர்ஃப்ராஸ்கான்அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள இன்னமும் துடிப்போடு ஆடவேண்டும். கடந்த25 வருடங்களில் இல்லாத தொடரில் அனைத்து டெஸ்டுகளிலும் தோல்வி என்பது இந்திய அணிக்குஒரு பேரதிர்ச்சி. இதனால் உலக டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

          ஆட்ட நாயகனாக அஜாஸ் படேலும் தொடர்நாயகனாக வில் யங்கும் அறிவிக்கப்பட்டனர்.

 

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்,ஓய்வு பெற்ற வானிலையாளர்,எண் 2, முதல் மாடி, கண்ணபிரான் கோயில் தெரு, பெரம்பூர், சென்னை 11
Dr.K.V.Balasubramanian,M. Sc.(Physics), M.A. (Tamil &History), M. Phil.,Ph. D.Meteorologist (retd.),
No. 2, I Floor, Kannabiran Koil Street, Perambur, Chennai-11Mobile: +919884715004

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விழா தொடக்கம்!

thiruparankundram murugan temple sasthti vizha - 2026
#image_title
  • மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்:
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கந்தசஷ்டி விழா விரதத்தை தொடங்கினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

திருப்பரங்குன்றம் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா இன்று தொடங்கியது.

இதனையொட்டி, காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிக்கு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரி யார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில், மதுரை மாவட்டம் மட்டுமல்லாது சிவகங்கை விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினார்கள்.

காப்புகட்டிய பக்தர்கள் பால்,மிளகு,துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு உணவு வருவர். காப்புக் கட்டிய பக்தர்கள் தினமும் காலை, மாலை சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர்.

விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும்,மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதேபோல, வரும் 7 ம் தேதி வரை சுவாமி உற்சவர் சன்னதி யிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருள்வார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சூரபத்மனை அழிக்க அன்னை தோவர்த்தனம்பி கைவிடம் முருகன் “சக்தி வேல்வாங்கும் ” நிகழ்ச்சி வரும் 6 ம் தேதியும், மறுநாள் 7 ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹாரம் நடைபெறும்.

8 ம் தேதி காலை சிறிய சட்டத் தேரோட்டமும்,மாலை 3 மணியளவில் பாவாடை தரிசனமும் மதுரை பகுதியில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் 7 நாட்களும் திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பர். மேலும், கோயிலுக்குள் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

கோவில் சார்பில் பக்தர்களுக்கு தங்க வசதியாக கோவில் வளாகத்தில் மின்விளக்கு, மின்விசிறி, பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி சார்பில் கிரிவலப்பாதை பகுதி, பேருந்து நிலையம், கோவில் வாசல் முன்பு மற்றும் மலைக்கு பின்புறம் குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 02.11.2024, இரண்டாவது நாள்

ind vs nz test series - 2026
#image_title

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 02.11.2024, இரண்டாவது நாள்

முனைவர்கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 65.4 ஓவர்களில் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம்28, கிளன் பிலிப்ஸ் 17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81; இரண்டாவது இன்னிங்க்ஸ்43.3 ஓவர்களில் 171/9, வில் யங் 51, கிளன் பிலிப்ஸ் 26, தேவன் கான்வே 22, ஜதேஜா4/52, அஷ்வின் 3/63) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 59.4 ஓவர்களில் 86/4, ஷுப்மன் கில்90, ரிஷப் பந்த் 60, வாஷிங்க்டன் சுந்தர் 38, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ்படேல் 5/103) நியூசிலாந்து அணி 143 ரன் கள் முன்னிலையில் இருக்கிறது.

          இரண்டாம் நாளான இன்று, நாலு விக்கட் இழப்பிற்கு86 ரன் என்ற நிலையில் ஷுப்மன் கில் 31 ரன்னோடும் ரிஷப் பந்த் ஒரு ரன்னோடும்ஆடவந்தனர். முதல் ஓவரிலேயே பந்த் மூன்று ஃபோர் அடித்து அவரது மனநிலையைக் காட்டினார்.சுழல் பந்து வீச்சாளர்களை அடித்து ஆடியும், வேகப்பட்ந்து வீச்சாளர்களைத் தடுத்து ஆடியும்கில்லும் பந்தும் ரன் சேர்த்தனர். பந்த் 60 ரன் சேர்த்திருந்த நிலையில் இஷ் சோதியின்சுழல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

          ஸ்பைடர் கேமிராவில் ஏதோ பிரச்சனை ஏர்பட்டதால்ஆட்டம் உணவு இடைவேளைக்காக சற்று முன்னதாக நிறுத்தப்பட்டது. அச்சமயம் ஜதேஜா 10 ரன்னுடனும்கில் 70 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 195 ரன்எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர் ஜதேஜா 14 ரன்னிற்கு ஆட்டமிழந்தார்.சர்ஃப்ராஸ் கான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள்எவரும் சரியாக ஆடவில்லை. வாஷிங்க்டன் சுந்தர் மட்டும் 4 ஃபோர், 2 சிஸ்க்சர்களுடன்38 ரன் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை 263 ரன்னுக்குக் கொண்டுவந்தார். இந்திய 28 ரன்முன்னிலையில் இருந்தது.

          நியூசிலாந்தின் இரண்டாவ்து இன்னிங்க்சில்டாம் லேதம் 1 ரன்னுக்கு ஆகாஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வாஷிங்க்டன்சுந்தர் 1 விக்கட், அஷ்வின் 3 விக்கட்டுகள், ஜதேஜா 4 விக்கட்டுகள்என எடுத்து ஆட்டநேர இறுதியில் நியூசிலாந்து அணி 9 விக்கட்டு இழப்பிற்கு 171 ரன் எடுத்திருந்தது.

          நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலையில்உள்ளது. இன்னமும் ஒரு விக்கட் கையில் உள்ளது. இன்னமும் மூன்று நாட்கள் ஆட்டம் உள்ளது.அதிக பட்சம் 160 ரன் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்படலாம். இந்திய அணியின் மட்டையாளர்கள்அதனை எடுப்பார்களா? வெற்றியா? தோல்வியா? நாளை வரை காத்திருங்கள்.