Home Blog Page 179

பாரீஸ் ஒலிம்பிக் 2024: 12ம் நாளில் இந்தியக் குழுவின் நிலை!

paris olympics 2024 - 2026
#image_title

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பனிரெண்டாம் நாள் – 07.08.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தடகளம்

          கலப்பு மராத்தான் நடை ஓட்டம்: பிரியங்கா கோஸ்வாமி மற்றும் சூரஜ் பன்வார் இருவரும் நடக்கும்போது கால் வளைந்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆண்கள் உயரம் தாண்டுதல் (தகுதிச் சுற்று)

          சர்வேஷ் குஷாரே தனது குழுவில் 13ஆக வந்ததால் போட்டியிலிருந்து வெளியேறினார்.

பெண்களுக்கான ஈட்டி எறிதல் (தகுதிச் சுற்று)

          அன்னு ராணி தனது குழுவில் 15ஆவதாக வந்ததால் பொட்டியில் இருந்து வெளியேறினார்.

பெண்களுக்கான 100 மீ தடை ஓட்டம் (முதல் சுற்று)

          ஜோதி யர்ராஜி தனது குழுவில் எட்டாவதாக வந்ததால் போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (தகுதிச் சுற்று)

          பிரவீன் சித்திரவேல் மற்றும் அப்துல்லா அபூபக்கர் நாரங்கொலிந்தேவிட இருவரும் இரண்டு முறை டிரிபிள் ஜம்ப் செய்திருக்கிறார்கள். பிரவீன் 16.25 மீட்டர் மற்றும் அப்துல்லா 16.19 மீட்டர் தாண்டியிருக்கிறார்கள். தகுதி பெற 17.10 மீட்டர் தாண்டவேண்டும்.

ஆண்களுக்கான 3,000மீ ஸ்டீபிள்சேஸ் இறுதிச் சுற்று

          அவினாஷ் சேபிள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டி  நாளை அதிகாலை 1.13 மணிக்கு நடைபெறும்.

கோல்ஃப் மகளிர் தனிநபர் (இறுதிப் போட்டி)

          அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் கலந்துகொள்ளும் போட்டி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும்.

டேபிள் டென்னிஸ் மகளிர் அணி (கால்-இறுதி)

          இந்தியா (ஸ்ரீஜா அகுலா, மனிகா பத்ரா மற்றும் அர்ச்சனா கிரிஷ் காமத்) எதிராக ஜெர்மனி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தொல்வியுற்றது.

மல்யுத்த பெண்கள் ஃப்ரீஸ்டைல் ​​53 கிலோ (1/8 இறுதிப் போட்டி)

ஆன்டிம் பங்கல் vs சைனெப் யெட்கில் ஆண்டிம் பங்கள் 0-10 என்ற புள்ளிக் கணக்கில் தொல்வியடைந்தார்..

பளு தூக்குதல் பெண்கள் 49 கிலோ (பதக்கம் சுற்று)

          சாய்கோம் மீராபாய் சானு போட்டி நடந்துகொண்டிருக்கிறது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!

jenagai mariamman adipuram - 2026
#image_title

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப் பூரம் விழா சிறப்பாக நடந்தது .

இவ்விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. வளையல்,ஜாக்கெட் துணி மற்றும் சீர்வரிசை வைத்து , ஆடிப்பூர நிகழ்ச்சியை நடத்தினர் சண்முகவேல்
பூசாரி பூஜைகள் செய்தார்.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருகை புரிந்து அம்மனை தரிசித்தனர். திருக்கோவில் சார்பாக வழங்கப்பட்ட வளையல், ஜாக்கெட்துணி மற்றும் பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் அர்ச்சகர் சண்முகவேல் பூபதி,கவிதா, வசந்த் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோல், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் கோவிலை சுற்றி வந்தது. இதைத்
தொடர்ந்து, அம்மன் சன்னதியில் ஆடிப்புரம் படி ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அர்ச்சகர் செந்தில் ஆடிப்பூர நிகழ்ச்சிகளை நடத்தி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள், அகிலாண்டஈஸ்வரிஅம்மன் மகளிர்குழு ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளும் உலா வந்தது. உச்சி மகாகாளியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாவித்தார். சோழவந்தான் திரௌபதி அம்மன்
கோவில், பத்ரகாளியம்மன் கோவில் காடுபட்டி,
திரௌபதி அம்மன்கோவில் மேலக்கால் காளியம்மன் கோவில்உள்பட இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிபூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்து பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இங்குள்ள ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரவு கேடயத்தில் ஆண்டாள் அலங்காரமாகி வீதி உலா நடந்தது. அர்ச்சகர் பார்த்தசாரதி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். செயல் அலுவலர் சுதா,கோவில் பணியாளர் முரளிதரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் மற்றும் காடுபட்டி
போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

paris olympics 2024 - 2026
#image_title

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

          ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் என்ற செய்தி இன்று பல இந்தியர்களுக்கு இதயத் துடிப்பை சில விநாடிகள் நிறுத்தியிருக்கலாம். தனது தங்கப் பதக்கப் போட்டி நடைபெறவிருக்கின்ற இன்றைய தினத்தின் காலையில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் அதிக எடையுடன் இருந்ததற்காக பாரீஸ் 2024 ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

          ஒவ்வொரு எடைப் பிரிவும் இரண்டு போட்டி நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் மருத்துவக் கட்டுப்பாடு மற்றும் எடையை முதல் போட்டி நாளின் காலையில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி நாளில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மல்யுத்த வீரர்கள் மீண்டும் எடைபோடப்படுகிறார்கள்.

          “50 கிலோ மகளிர் மல்யுத்தப் பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது” என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இரவு முழுவதும் குழுவின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை 50 கிலோவுக்கு மேல் சில கிராம் (100 கிராம்) எடையுடன் இருந்தார்.

          “இந்த நேரத்தில் குழுவால் மேலும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறு இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. கையில் இருக்கும் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது.

          மல்யுத்த விதிகளின்படி, ஒரு மல்யுத்த வீரர் போட்டியின் இரண்டு நாளிலும் (முதற்கட்ட போட்டிகள், மற்றும் மறுபரிசீலனை மற்றும் இறுதிச் சுற்றுகள்) எடையிடுவதில் தோல்வியுற்றால், அவர்கள் நிகழ்விலிருந்து வெளியேற்றப்படுவார்கள். தரவரிசையில் இடம் பெறாத வினேஷ், செவ்வாயன்று நடந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

          மூன்று முறை காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியனான இவர், முதல் சுற்றில் முதல் நிலை வீரரும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யுய் சுசாகியை தோற்கடித்தார். காலிறுதிப் போட்டியில், முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதியில் பான் அமெரிக்கன் கேம்ஸ் சாம்பியனான கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை வீழ்த்தினார்.

          வினேஷ் போகட் இறுதிப் போட்டியில் ஆறாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்டை எதிர்கொள்ள இருந்தார். ஹில்டெப்ராண்ட் இப்போது தங்கப் பதக்கத்திற்காக யுஸ்னிலிஸ் குஸ்மானுடன் போராடுவார், அதே நேரத்தில் யுய் சுசாகி மற்றும் ஒக்ஸானா லிவாச் வெண்கலத்திற்காக போட்டியிடுவார்கள்.

SL Vs Ind ODI: படுதோல்வி கண்ட இந்திய அணி!

ind vs sl odi - 2026

மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் படுதோல்வி

இந்திய அணி இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது

-முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

இலங்கை அணி (248/7, பதும் நிசாங்கா 45, அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96, குசல் மெண்டிஸ் 59, ரியன் பராக் 3/54) இந்திய அணியை ( 26.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 138, ரோஹித் ஷர்மா 35, வாஷிங்க்டன் சுந்தர் 30, விராட் கோலி 20, ரியன் பராக் 15, துனித் வெல்லகே 5/27, வெண்டர்சே 2/34, தீக்ஷனா 2/45) 110 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

துனித் வெல்லலகே 5.1-0-27-5, இலங்கை vs இந்தியா, 3வது ODI, கொழும்பு, ஆகஸ்ட் 7, 2024 இல் சிறந்த வாழ்க்கைப் புள்ளிகளுடன் முடித்தார்.

துனித் வெல்லலகே 5.1-0-27-5 தொழில் வாழ்க்கையின் சிறந்த புள்ளிகளுடன் முடித்தார் • அசோசியேட்டட் பிரஸ்

          பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாடத்தீர்மானித்தது. தொடக்க வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 96 ரன்கள் எடுத்தார். இது இந்தத் தொடரில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர். மற்றும் துனித் வெல்லலகே ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார், இலங்கை 27 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் இருதரப்பு தொடரை வென்றது, மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          இந்தியாவைப் பொறுத்தவரை, இது கடந்த வாரத்தில் சுழற்பந்து வீச்சுக்கு எதிரான அவர்களின் திறமையற்ற ஆட்டத்தின் உச்சமாக இருந்தது, மூன்றாவது ஆட்டத்தில் ஸ்பின்னர்களிடம் ஒன்பது விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. தொடரில் மொத்தமாக 27 விக்கட்டுகள் ஸ்பின்னர்களிடம் இழந்திருக்கிறது.

          வெல்லலகே இம்முறை 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் தொடரின் பல்வேறு நேரங்களில் அது வனிந்து ஹசரங்க, ஜெஃப்ரி வான்டர்சே அல்லது சரித் அசலங்காவாகவும் இருந்தது. ரோஹித் ஷர்மா வழக்கம்போல அதிரடியாக ஆடினார். இருப்பினும் இம்முறை, ரோஹித்தின் தாக்கம் கூட வெறும் கேமியோவாகத் தள்ளப்பட்டது. 20 பந்துகளில் 35 ரன். வெல்லலகே இலங்கையின் மொத்த எண்ணிக்கையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு அவரை ஸ்வீப் செய்ய முயன்றபோது அவரைப் பிடித்தார்.

          அவரைத் தவிர, விராட் கோலி, ரியான் பராக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் – 20, 15, 30 – மட்டுமே இரட்டை இலக்கங்களை எட்டினர், மேலும் வாஷிங்டனின் இன்னிங்ஸ் மட்டுமே இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு எந்த வித அழுத்தத்தையும் கொடுக்க முயன்றது.

          அவிஷ்காவின் 102 பந்தில் 96 ரன்கள் இலங்கைக்கு  அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியது, இது இலங்கையை மிகவும் சிறப்பாக ஆட வைத்தது. அவர்களது இன்னிங்க்சின் நடுவில் ஐந்து விக்கெட்டுக்கு 28 ரன்களை இழந்த ஒரு சரிவு கூட அவர்களின் இன்னிங்ஸை எந்த குறிப்பிடத்தக்க முடிவுக்கும் தடங்கலடையச் செய்யவில்லை.

சில முக்கியமான அம்சங்கள்

  • ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் இந்த ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை.
  • இந்த ஆட்டத்தில் முதன்முறையாக ஆடிய ரியான் பராக் மூன்று விக்கட்டுகள் ஏடுத்தார்.
  • இலங்கை அணியின் மொத்த ஸ்கோரான 248இல் பதும் நிசாங்கா (45 ரன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ (96 ரன்), குசல் மெண்டிஸ் (59 ரன்) ஆகியோர் மொத்தம் 200 ரன் எடுத்தனர்.
  • ரோஹித் ஷர்மா இன்று ஒருநாள் ஆட்டங்களில் 331ஆவர் சிக்சரை அடித்து சாதனை நிகழ்த்தினார்.

ஆங்கிலத்திலேயே பேசினா தான் தமிழ்ப் பொண்ணு!: கலாய்த்த தியாகராஜன்

andhagan prasanth simran - 2026
#image_title

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரிலான இப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார், பிரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.  

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் ஞாயிறு அன்று நடைபெற்ற விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், “நீண்ட நாள் கழித்து நண்பர்கள் தினத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.‌ சிம்ரனை ‘நட்புக்காக’ படத்தில் பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் நடித்ததில் சந்தோஷம். ஜாலியான படப்பிடிப்பு அனுபவம். கண்டிப்பான இயக்குநர். படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் தியாகராஜன் வந்துவிட்டால், மகனாக இருந்தாலும் பிரசாந்த் அமைதி ஆகிவிடுவார். அவருடைய மனதில் பயபக்தி வந்துவிடும். இப்போதெல்லாம் யாரும் இயக்குநரைப் பார்த்து பயப்படுவதில்லை. இயக்குநர்கள் தான் பயப்படுகிறார்கள்.‌ இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு-ஊர்வசி ஆகியோருடன் இணைந்து நடித்த காட்சிகள் சிறப்பாக இருந்தன. ஆனால் ‘அந்தகன்’ சிறப்பு முன்னோட்டத்தில் இயக்குநர் தியாகராஜனின் தோற்றம் அனைவரையும் மிரட்டி விட்டது. சந்தோஷமாக தொடரும் இந்த அனுபவம் படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் தொடர வேண்டும் என விரும்புகிறேன். படத்தின் வெற்றி விழாவில் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.‌ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடன இயக்குநர் கலா பேசுகையில், ”நண்பர்கள் தின வாழ்த்து. தியாகராஜனுடன் ஏற்பட்ட நட்பு கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக நீடிக்கிறது. இந்த திரைப்படத்தில் பாடல்கள் மிக நன்றாக இருக்கின்றன.‌ கலை இயக்குநர் மிக நேர்த்தியாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார். பாடலுக்கான நடன காட்சிகளை எட்டு மணி நேரத்தில் நிறைவு செய்தோம்.  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை சுடச்சுட வழங்கினார். அதாவது நான்கு மணிக்கு படப்பிடிப்பு என்றால்.. இரண்டு மணிக்கு பாடல்கள் எங்களை வந்தடையும்.  எல்லா பாடல்களும் நன்றாக இருக்கின்றன, படமும் சிறப்பாக இருக்கிறது.

டாப் ஸ்டார் பிரசாத்தை பற்றி சொல்ல வேண்டும்… அவர் பியானோ வாசிக்க தெரிந்ததால் படப்பிடிப்பு தளத்தில் பாடல்களை பாடுவதுடன் அந்தப் பாடலை பியானோவிலும் வாசித்துக் கொண்டே பாடினார். அது  வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் ரவி யாதவ்… நான் நடன உதவியாளராக பணியாற்றும் போதே அறிமுகம் ஆகி, அவருடன் பணியாற்று இருக்கிறேன். அவரும் திறமையான கலைஞர்.

தியாகராஜன் மிகத் திறமையான இயக்குநர். இந்த திரைப்படம் அதனை உறுதிப்படுத்தும். அழகான கதை.

சிம்ரன் – பேரழகி. பிரசாந்த் – எப்போதும் டாப் ஸ்டார் தான். அனைவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் வெற்றி பெறும்,” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ”அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். ‘அந்தகன்’ படத்தைப் பற்றி நிறைய பேசியிருக்கிறேன். படத்தினை பற்றிய எனது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். இருந்தாலும் அது போதாது. ஏனெனில் இந்த படத்திலும், படப்பிடிப்பு தளத்திலும் ஏராளமான அன்பினை உணர்ந்தேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரிடத்திலும் தியாகராஜன், பிரசாந்த் இருவரும் மிகுந்த அன்பை காட்டினர்.  

அண்மையில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ஆங்கில தொடரில் இடம் பெறும் வாசகத்தை போல் ‘எவ்ரிபடி லவ்ஸ் பிரசாந்த்…’ பிரசாந்த் மீது அன்பு செலுத்தாதவர்கள் யாரும் இல்லை.

சிம்ரனை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இப்போதும் அழகாகவும், இளமையாகவும், துடிப்பாகவும் இருக்கிறார்கள்.  

‘அந்தகன்’ திரைப்படம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். நானும் இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.  இத்திரைப்படம் ஆகஸ்டு ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், ”இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் இயக்குநர் தியாகராஜனை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் அவர்களது வீட்டில் இருவர் இருக்கிறார்கள். பிரீத்தி மற்றும் பிரசாந்தின் அம்மா. இவர்கள் இருவரும் இப்படி இருப்பதற்கு அவர்கள் தான் காரணம்.  

படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் என மூன்று நாட்கள் பயணித்தோம். மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும் வெற்றி விழாவில் சந்திப்போம்.‌ இப்படம் விஷுவலாக பிரம்மாண்டமாக இருக்கிறது. இதற்காக ஒளிப்பதிவாளர் ரவி மற்றும் இயக்குநர் தியாகராஜன்  உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை சிம்ரன் பேசுகையில், ”அந்தகன் படத்தின் கதை, திரைக்கதை நன்றாக இருக்கிறது. தியாகராஜனின் இயக்கத்தில் இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரசாத்துடன் நான் நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன்.‌

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று அனைவரும் ‘அந்தகன்’ திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், ”இறைவனுக்கு நன்றி. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். மிகவும் சந்தோஷமான நிகழ்வு இது.

நண்பன் சசியை பல இடங்களில் நண்பன் பிரசாந்த் நினைவு படுத்தினார். ஒரு முறை சசிக்குமார் கையில் வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், ‘வா’ என்று அழைத்துக் கொண்டு ஒரு கடிகார கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு என்னிடம், ‘நீ என் வாட்ச்சை பார்த்தாய் அல்லவா..! அதனால் உனக்கு பிடித்த வாட்சை வாங்கிக்கொள்’ என்றார்.  அவரிடம் உரிமையாக, ‘எனக்கு அந்த வாட்ச் தான் பிடித்திருக்கிறது.‌ அதனால் தான் அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன்’ என்றேன். உடனே அவர், ‘சரி அதை நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது ஒன்றை புதிதாக தேர்ந்தெடுத்து கொடு” என்றார். அதேபோல் நண்பர் பிரசாந்த் ஒரு கண்ணாடியை அணிந்திருந்தார். அந்த கண்ணாடியை எடுத்து நன்றாக இருக்கிறதே..! என சொன்னேன்.‌ அன்று மாலையில் என்னை தேடி மூன்று கண்ணாடிகள் வந்தன. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.‌ அப்போது பிரசாந்திடம் இது போன்ற விசயங்களை நண்பர் சசிதான் எனக்கு செய்திருக்கிறார். அதற்குப் பிறகு இப்படி ஒரு நண்பராக நீ எனக்கு கிடைத்திருக்கிறாய் என்றேன். உன் பேரன்பிற்கு நான் என்ன செய்யப் போகிறேன்?.

எப்போதும் பிரசாந்த்தை நினைத்துக் கொண்டே இருப்பேன். அப்போது திடீரென்று காரணமே இல்லாமல் அவர் எனக்கு போன் செய்து பேசுவார்.‌ அப்போது நாங்கள் இருவரும் ஐயா ஐயா என்று தான் பேசிக் கொள்வோம். இதில் ஆழ்ந்த அன்பு உள்ளது. அந்தப் பேச்சில் காரணமே இருக்காது. அன்பு மட்டுமே இருக்கும்.‌ இப்போதெல்லாம் யாராவது போன் செய்தால், எதோ ஒரு விஷயத்திற்காகவே போன் செய்து பேசுவது என பழகி விட்டோம்.

ஆனால் காரணமே இல்லாமல் போன் செய்து நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று அன்புடன் பேசுவது குறைந்துவிட்டது. ஆனால் இது போன்ற போன் பிரசாந்திடமிருந்து எனக்கு வரும். இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் எங்கேயோ ஏதோ ஒரு விஷயத்தை செய்திருப்பேன். அதை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பாராட்டுவார்.‌ அதுதான் எனக்கு அவர் மீது ஒரு பற்றை உருவாக்கியது.‌

எனக்கு இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பானது.‌ இதன் தொடக்கப்புள்ளி எப்படி என்றால்.. இந்தத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இதே கேரக்டருக்காக என்னிடம் நடிக்க கேட்டனர், மறுத்துவிட்டேன். இதை தமிழில் ரீமேக் செய்யும் போது தம்பி கிஷோர் மூலமாக என்னை தொடர்பு கொண்டனர்.  

எனக்கு தியாகராஜனை பார்த்தாலே பயம். எப்படி என்றால் நான் திரையரங்கத்தில் ஆப்பரேட்டராக பணியாற்றிய போது ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தை ஓட்டி இருக்கிறேன். ‘கொம்பேறி மூக்கன்’ படத்தை திரையில் பார்க்கும்போதே எனக்குள் பதட்டம் வந்துவிடும்.

அவர் போனில் வணக்கம் என்று சொன்னவுடன், நான் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று பதில் அளித்து விட்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நேரில் அவருடன் பழகும் போது தான் அவரின் பேரன்பினை உணர்ந்தேன்.‌

அவருடைய தோற்றம், ஆளுமை… அதை பார்த்துவிட்டு நாமும் இந்த வயதில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது.‌ அவருடைய அன்பிற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.‌

படப்பிடிப்பு தளத்தில் வனிதா விஜயகுமார் வந்தார்.‌ படப்பிடிப்பின் போது இதுவரை யாரும் என்னை திட்டிராத வகையில் கெட்ட வார்த்தையால் திட்டினார். அந்தக் காட்சியில் அவர் என்னை திட்டிக் கொண்டே இருந்தார். நான் இயக்குநரை பார்க்கிறேன். அவர் என்னிடம் வந்து நான் சொல்லியதை கடந்தும் அவர் திட்டிக் கொண்டிருக்கிறார் என விளக்கம் அளித்தார்.‌

அதன் பிறகு வனிதா விஜயகுமாரை பார்த்தபோது… இயக்குநர் தான் உங்களை இப்படி எல்லாம் திட்ட சொன்னார் என தியாகராஜனை கை காட்டினார்.

உதவி இயக்குநராக பணியாற்றிய போது சிம்ரனை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த போது உண்மையில் மறக்க இயலாது அனுபவமாக இருந்தது.

இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாந்த் இந்த படத்திற்குப் பிறகு இன்னும் மும்மடங்கு வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், ”இன்றைய தினம் அனைவரையும் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இன்று நண்பர்கள் தினம்.‌ உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள்.  படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும்.  திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம்.

சமுத்திரக்கனி… அந்த காலகட்டத்திய என்னை நினைவுபடுத்துபவர். தோற்றம் ஆகட்டும், உடல் மொழியாகட்டும், உடற்கட்டு ஆகட்டும், ஸ்டைல் ஆகட்டும், நடை ஆகட்டும்… ஆக்ஷன் என்று சொல்லிவிட்டால், நடிப்பில் சிங்கம் தான். இந்த படத்தில் அவர் மிரட்டி இருக்கிறார் அதிலும் சிம்ரனை மிரட்டி இருக்கிறார். வனிதா விஜயகுமாரை மிரட்டி இருக்கிறார்.

அந்த குறிப்பிட்ட காட்சியில் எமோஷன் வேண்டும் என்பதற்காகத்தான் வனிதாவை அழைத்து, ‘உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் திட்டு’ என சொன்னேன். அந்தத் தருணத்தில் சொல்லத் தகாத  வார்த்தைகளை எல்லாம் பேசினார்.‌  இந்தப் படத்தில் வனிதா விஜயகுமாருக்கு குறிப்பிடத்தக்க அளவிலான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் அற்புதமான நடிகை என்ற அங்கீகாரமும் கிடைக்கும்.

பிரியா ஆனந்த் – அழகான தமிழ் பெண். தமிழ்த் திரையுலகில் பயன்படுத்தவில்லை என்று என்னிடம் சொன்னார். ஆனால் அவர் இங்கு பேசியதெல்லாம் ஆங்கிலத்தில் தான்.  அதனால் தான் சொல்கிறேன். இனி எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் ஆங்கிலத்தில் பேசு. அப்போதுதான் தமிழ் பெண் என தெரியும்.

இந்தப் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்வது என்பது குழப்பமாக இருந்தது.‌ அப்போது என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த பிரியா ஆனந்த் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன்.

முன்னோட்டத்திலும் அவர் அழகாக இருக்கிறார். நடனமாடி இருக்கிறார். தேர்ந்த நடிப்பையும் வழங்கி இருக்கிறார்.  இந்த படத்தின் மூலம் அவருக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

சிம்ரன்,vபிரசாந்துடன் இதற்கு முன் ஆறு படங்கள் நடித்திருக்கிறார். இந்த படத்தின் உரிமையை வாங்கிய பிறகு ஏன் இந்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க கூடாது என யோசித்தேன். இது தொடர்பாக நான் அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, நான் இந்தி படத்தை பார்த்து விட்டேன். அதனால் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.  இந்தப் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவமிக்க நடிப்பை வழங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் அவர் சற்று உணர்ச்சி மிகுந்த தொனியில் நடித்திருக்கிறார்.  படப்பிடிப்பு தளத்தில் ஏன் இப்படி நடிக்க வேண்டும் என கேட்டார். அப்போது இந்த கதாபாத்திரம் எப்படி நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று நான் சொன்னேன். அதை ஏற்றுக் கொண்டு அவர் ஆக்ரோஷமாக நடித்தார். அவருடைய பேச்சு, வன்முறை எல்லாம் ஒரு ஆணை போல் இருக்கும்.‌ படம் வெளியான பிறகு சிம்ரனுக்கு விருது கிடைக்கும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் விட சிம்ரனுக்கு சிறப்பான பெயரும், புகழும் கிடைக்கும்.

பிரசாந்த் – பியானோ வாசிக்கும் கலைஞர். இந்தத் திரைப்படத்தை வாங்குவதற்கு முக்கிய காரணமே கதையின் நாயகன் பியானோ இசைக்கலைஞர் என்பதால் தான். நான் இந்த திரைப்படத்தின் உரிமையை வாங்கி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்கள் யார் என்பதனை நிதானமாக யோசித்து தேர்வு செய்ய தொடங்கினேன். அதன் பிறகு படத்தின் பணிகளை தொடங்கினோம். இடையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் இரண்டு ஆண்டுகள் சென்றன. அதன் பிறகு எதிர்பாராத சில சிக்கல்கள் ஏற்பட்டது. அதன் பிறகு படத்தை நிறைவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டோம். பிரபுதேவா அதற்கான காட்சிகளை உருவாக்க சாண்டி மாஸ்டர் நடனத்தை அமைத்தார். அந்தப் பாடலை அனிருத்-விஜய் சேதுபதி பாடினர், விஜய் வெளியிட்டார். இப்பாடல் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.‌  இந்தப் பாடலில் பிரசாந்தின் நடனத்தை பலரும் நடனமாடி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.

இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக பயணித்த போது பிரசாந்தின் ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதனால் பிரசாந்த் மனவருத்தம் அடைந்தார்.  உடனே இது தொடர்பாக தமிழகம் முழுவதும் வாகனத்தில் பயணிக்கும் போது தலைகவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்தக் கூடாது என சிந்தித்தார். அத்துடன் நில்லாமல் பிரசாந்தின் பிறந்த நாளின் போது தமிழகம் முழுவதும் 5000 தலை கவசத்தினை அவரது ரசிகர்களுக்கு வழங்கினார்.

கே. எஸ். ரவிக்குமார் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்தப் படத்தில் அவர் சட்டிலான வில்லனிக் கேரக்டரில் நடித்திருப்பார்.  

இந்தப் படத்தில் ஒவ்வொரு போர்ஷனுக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். பிறகு மற்றொரு சஸ்பென்ஸ் வரும். இதையெல்லாம் கடந்து என்ன நடக்கிறது? என்ன ஆச்சு? இது உண்மையா? பொய்யா?  என பல கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழும்.

நானே அந்த இந்தி படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். அதே போன்றதொரு உணர்வு தமிழ் திரைப்படத்தை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு வரும். அதனால் இந்த திரைப்படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவார்கள்.

பெசன்ட் ரவி- பிரசாந்த் நடிக்கும் படத்தில் அவர் இருக்க வேண்டும் என விரும்புவேன். இந்த திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார்.

ஊர்வசி- என்னுடன் ‘கொம்பேறி மூக்கன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நான் தயாரித்து பிரசாந்த் நடித்த ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன்.  சொன்னவுடன் வந்து நடித்துக் கொடுத்தார். அவரும், யோகி பாபுவும், கே.எஸ். ரவிகுமாரும், பிரசாந்த்தும் இணைந்து தோன்றும் காட்சிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். சுவாரசியமானதாகவும் இருக்கும்.

மறைந்த நடிகர் மனோபாலா, ஜெயம் கோபி, விஜேந்தர், பூவையார், லீலா சாம்சன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

‘அந்தகன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவே எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே ஆரோக்கியமான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நானூறு திரையரங்குகளில் ‘அந்தகன்’ திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம். இதற்கும் கூடுதலாக வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பமுடன் இருக்கிறார்கள்.‌ ‌இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை என கருதுகிறேன்.

இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் பிரசாந்த் பேசுகையில், ”அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

‘அந்தகன்’ அருமையான படைப்பு.‌ இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.‌ திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது.

இதில் ஐயா கனி சாரை மறக்க முடியாது. அவரை நான் ஐயா என்று தான் அழைப்பேன். அவரையும் சசிகுமாரையும் அலுவலகத்தில் இருக்கும் போது நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன்.‌ அந்தத் தருணத்திலிருந்து இருவரையும் பின் தொடர்கிறேன்.  

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தேர்வு நடைபெறும் போது இயக்குநரின் பட்டியலில் கனி ஐயாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.‌  அதன் பிறகு இயக்குநர் கனி சாருடன் பேசினார். அவரும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு வருகை தந்தார். அவர் ஒரு நேர்த்தியான தொழில்முறை நடிகர்.‌

இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டவுடன், ‘எனக்கு மூன்று வார கால அவகாசம் கொடுங்கள். நான் தற்போது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதனை நிறைவு செய்துவிட்டு, உங்கள் படத்தில் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு அவர் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இப்படி ஒரு தீவிர பற்றுள்ள நடிகரா என நான் அவரை வியந்து பார்த்தேன்.‌

நான் ஒவ்வொரு நேர்காணலிலும் தவறாது குறிப்பிடும் விஷயம் ஒவ்வொரு படப்பிடிப்பின் போதும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வேன், கற்றுக் கொண்டே இருக்கிறேன் எனக் குறிப்பிடுவேன். அந்த வகையில் சமுத்திரக்கனி ஐயாவிடமிருந்து நடிப்பின் மீதான தொழில்முறையிலான பெரு விருப்பத்தை கற்றுக் கொண்டேன்.‌

இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக  நான், சிம்ரன், பிரியா, பெசன்ட் ரவி  ஆகியோர் இணைந்து பயணித்தோம்.‌ அப்போது என் போனில் ஒரு குரல் ஒலித்தது.‌ எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டார்.‌  நாங்கள் இந்த ஊரில் இருக்கிறோம் என சொன்னேன் நீங்கள் மட்டும் ஏன் தனியாக பயணிக்கிறீர்கள் நானும் உங்களுடன் இணைகிறேன் என சொன்னார் அந்த குரலுக்கு சொந்தக்காரர் சமுத்திரக்கனி. அவருக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இந்த ஆதரவிற்காகவும்,, எங்கள் மீது அன்பு செலுத்துவதற்காகவும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் சிம்ரனும் இதுவரை ஆறு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். திரையுலகில் எனக்கு கிடைத்த அற்புதமான சக நடிகை. எனக்கு உற்ற நண்பி.  அற்புதமான நடனக் கலைஞர். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.‌ என்னுடைய கதாபாத்திரத்திற்கும் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நிறைய முரண்கள் இருக்கும். அதை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.‌

இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். இதுதான் இந்த படத்தில் சிறப்பம்சம் எனக் குறிப்பிடலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் நடிகர்கள் திறமையாக நடித்திருப்பார்கள். இதை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்கும் போது நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.  

பிரியா ஆனந்த்- திறமையான சக நடிகை படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் உற்சாகமாக வைத்திருப்பார். படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியை பரவச் செய்வார்.  

வனிதா விஜயகுமார்- என் உடன் பிறந்த சகோதரி போன்றவர்.  எப்போதுமே உற்சாகமாக இருப்பார். இந்த படத்தை எப்படி எல்லாம் விளம்பரப் படுத்த வேண்டும் என்பதில் நிறைய ஆலோசனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.‌ அவர் இந்த படத்தில் நடித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.‌

நடிகர்களை கடந்து ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், கலை இயக்குநர் செந்தில் ராகவன்… இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அமைதியாகவே இருப்பார்கள் ஆனால் அவர்களது செயல் பேசும்.

யோகி பாபு, மோகன் வைத்யா, ஊர்வசி என பலருடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது.‌

அருமையான மனிதரை இந்த படத்தில் சந்தித்தேன்.‌ அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். முழு படத்தையும் அவர்தான் உயர்த்தி பிடித்திருக்கிறார்.‌ அவர்தான் கார்த்திக். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன்.‌ அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதற்கும், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகியதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர் வருகை தந்தாலே உற்சாகம் பீறிடும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. இந்த நண்பர்கள் தினத்தின் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என்னுடைய தந்தையார் தியாகராஜன்.‌ மிகச் சிறந்த மனிதர். தயாரிப்பாளர் சாந்தி  தியாகராஜனுக்கும், எனது தங்கை பிரீத்தி தியாகராஜனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று ‘அந்தகன்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை வழங்கும், அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

செப்.5ல் வெளியாகிறது விஜய்யின் ‘கோட்’

goat single september - 2026
#image_title

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட்’

இதயங்களையும் இணையங்களையும் வென்று மூன்று பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ‘கோட்’ இறுதி கட்ட பணிகள் மும்முரம்

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 வெளியாகிறது ‘கோட்’

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான ‘கோட்’ (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது ‘கோட்’.

இப்படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் தளபதி விஜய் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை, துனிசியா, தில்லி, ஹைதராபாத், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில் தளபதி விஜய் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

பிரபல நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாக்ஷி சௌத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், விடிவி கணேஷ், யுகேந்திரன் வாசுதேவன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், பார்வதி நாயர், அபியுக்தா மணிகண்டன் (அறிமுகம்) உள்ளிட்டோர் நடிக்கும் ‘கோட்’ படத்தில் மோகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு மற்றும் இரண்டாவது பாடலான சின்ன சின்ன கண்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது பாடலான ஸ்பார்க் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டு லைக்குகளையும் இதயங்களையும் இணையத்தில் அள்ளி வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி இசை ரசிகர்கள் அனைவரையும் இப்பாடல்கள் கவர்ந்துள்ளன.  ‘கோட்’ திரைப்படத்திற்காக முதல் இரண்டு பாடல்களை பாடி உள்ளார் தளபதி விஜய்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் தளபதி விஜய் நடித்துள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற அவர், அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது உடல் அமைப்பு, தோற்றம், அசைவுகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்தார். ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் செய்த லோலா நிறுவனம் ‘கோட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பங்காற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். ‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படமான ‘கோட்’ திரைப்படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்துள்ளது. இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான வகையில் ‘கோட்’ உருவாகி உள்ளது.

அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக சர்வதேச தரத்தில் உருவாகி உள்ள ‘கோட்’ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சித்தார்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். ‘ஜவான்’, ‘புஷ்பா’ மற்றும் ‘கல்கி’ ஆகிய படங்களில் பணியாற்றிய ப்ரீத்தி ஷீல் சிங் டிசோசா மற்றும் குழுவினர் ‘கோட்’ திரைப்படத்தின் கேரக்டர் வடிவமைப்பு மற்றும் ஒப்பனையை செய்துள்ளனர். உடைகளை பல்லவி சிங் மற்றும் வாசுகி பாஸ்கர் வடிவமைத்துள்ளனர். பாடல் வரிகளை மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் மற்றும் கங்கை அமரன் எழுதியுள்ளனர். ராஜு சுந்தரம், சதீஷ், சேகர் உல்லி வி ஜே நடனம் அமைத்துள்ளனர்.

நிர்வாக தயாரிப்பு: எஸ். எம். வெங்கட் மாணிக்கம். அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆவார்.

A WAR FOR A BAR சாலா டிரைலர் வெளியீடு!

saalaa official trailer - 2026
#image_title

தீரன் நடிக்கும் ‘சாலா’ டிரைலரை அல்லு அர்ஜுன் வெளியிட்டார்; டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு

பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில் விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் ‘சாலா’; S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல  மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் விறுவிறுப்பான திரைப்படம்

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 சாலா வெளியாகிறது

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, ‘சாலா’ எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது.

சமீபத்தில் வெளியாக இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து ‘சாலா’ டிரைலரை ஆகஸ்ட் 3 அன்று ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெளியிட்டார். இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 ‘சாலா’ வெளியாகிறது

‘சாலா’ படத்தில் தீரன் (அறிமுகம்), ரேஷ்மா வெங்கடேசன் (அறிமுகம்),  ‘மெட்ராஸ்’ புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சாலா’ படப்பிடிப்பு நிறைவடைந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் மணிபால், “வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கூடம் (பார்) தான் ‘சாலா’ படத்தின் மையக்கரு. இந்த பாரை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர் ஒருவர் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரமும் சாரமும் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்,” என்றார்.

இயக்குநர் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவமுள்ள மணிபால் மேலும் கூறுகையில், “வட சென்னை எனக்கு மிகவும் பிடித்த பகுதி. அங்குள்ள மக்களை பற்றியும், அவர்களது வாழ்க்கை குறித்தும் சினிமாவில் பதிவு செய்ய வேன்டும் என்ற ஆசை எனது முதல் படத்திலேயே நிறைவேறி உள்ளது மிக்க மகிழ்ச்சி. வட சென்னை மக்கள் மட்டுமில்லாமல், அனைத்து ரசிகர்களாலும் ‘சாலா’ பாராட்டப்படும் என நம்புகிறேன்,” என்றார்.

‘சாலா’ திரைப்படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வி. ஸ்ரீ நடராஜும், நிர்வாக தயாரிப்பாளராக விஜயா ராஜேஷும் பங்காற்றியுள்ளனர். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார். கலை இயக்கத்தை வைரபாலன் கவனிக்க, படத்தொகுப்பை புவன், சண்டை பயிற்சியை மகேஷ் மேத்யூ மற்றும் ரக்கர் ராம், நடன இயக்கத்தை  நோபுள் கையாண்டுள்ளனர். சவுண்ட் மிக்ஸிங்: லட்சுமி நாராயணன். அந்தோணி தாசன் மற்றும் சைந்தவி பாடல்களை பாடியுள்ளனர். புடொடக்ஷன் எக்சிக்கியூட்டிவ்: வி கே துரைசாமி

ஆகஸ்ட் 23 அன்று பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில், S.D. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள‌ ‘சாலா’ திரையரங்குகளில் வெளியாகிறது.

மக்களுடன் முதல்வர் வெறும் கண் துடைப்பு திட்டம்; அலைக்கழிக்கப் பட்ட மக்கள் குற்றச்சாட்டு!

madurai makkalutan muthalvar prg - 2026
#image_title
  • மதுரை அலங்காநல்லூர் அருகே கண் துடைப்பிற்காக நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம்
  • முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால், மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தி
  • மனுக்களை எங்கே கொடுப்பது என, தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்த பொதுமக்கள் !

சோழவந்தான்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கொண்டையம்பட்டி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது .

இத்திட்டத்தில், கொண்டையம்பட்டி, அழகாபுரி , சின்ன இலந்தைகுளம், கல்வேலிபட்டி மேல சின்னனம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

இந்த முகாமின் நோக்கமானது அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அந்த மனுக்களுக்காக உடனடி தீர்வு காண்பதே மக்களுடன் முதல்வர் திட்டம் ஆகும்.

ஆனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில், இன்று நடைபெற்ற முகாமில் , பல அரசு துறைகளில் அதிகாரிகள் வராததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனுக்களை கையில் வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக அலைந்தது பரிதாபமாக இருந்தது.

மனுக்களை வாங்க உரிய அதிகாரிகள் இல்லாததால், நேரம் ஆக ஆக மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் குழந்தையுடன் வந்த பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

குறிப்பாக, இந்த முகாமில், பொதுப்பணித்துறை , மாசுக்
கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத்துறை போன் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால், அது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காண மனுவை எழுதி கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை யாரிடம் வழங்க வேண்டும் என்று தெரியாமல், மனுவுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என, பொதுமக்களும் விவசாயிகளும் கூறினர்.

மக்களை தேடி மருத்துவம் எல்லாம் தேடி கல்வி போன்ற அரசின் எந்த ஒரு திட்டங்களும் பொதுமக்களுக்கு முறையாக பயனளிக்காத நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டமும் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது, மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கியதாக, அங்கிருந்த பொதுமக்கள் பேசிச் சென்றனர்.

மதுரை கோயில்களில் ஆடிப்பூர விழா!

adipura vizha in madurai - 2026
#image_title

மதுரை மாவட்டத்தில், ஆடிப்பூர விழா கோவில்களில் கொண்டாடப் பட்டது.

மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம், சௌபாக்கிய விநாயகர் கோவில், கோமதிபுரம் ஞான சித்தி விநாயகர் ஆலயம், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம் ,வைகை காலனி வைகை விநாயக ஆலயம், மதுரை யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, துர்க்கை, மீனாட்சி, மகாலட்சுமி, வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது.

இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, அம்பிகை வழிபட்டனர். இதை அடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப் பூர தேரோட்டம் கோலாகலம்!

srivilliputhur therottam 1 - 2026
#image_title

பிரபலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் புதன்கிழமை ஆடி பூரம் நட்சத்திரத்தில் கோலாகலமாக .நடைபெற்றது .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நூற்றிஎட்டு திவ்யதேசங்களில் ஒன்றாகும், பன்னிரெண்டு ஆழ்வார்களில். இரண்டு ஆழ்வார்கள் – பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிறந்த புண்ணியபூமி ஸ்ரீவில்லிபுத்தூராகும். இங்கு உள்ள பெரிய கோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது.

இங்குள்ள ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டாள் பிறந்த திரு நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, தினமும் காலை ஆண்டாள் ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளல் இரவு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தேரோட்டம் , இதற்காக அதிகாலையில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, பிரம்மமுகூர்த்தத்தில் திருத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களப்பொருட்கள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு தேரோடத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வடம்பிடித்து இழுத்து ஆரம்பித்து வைத்தனர்.

srivilliputhur therottam 2 - 2026
#image_title

ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ‘கோாவிந்தா… கோபாலா ‘ என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். தேர் ஆடி அசைந்து மக்கள் கடலில் நீந்திவந்த காட்சி பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தியது. .

ஆடிவரும் தேரோட்டத்தைக்கான ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்களின் வசதிக்காக குடிநீர், அன்ன தானம், பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.