Home Blog Page 259

தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளிய ஆண்டாள்!

andal srivilliputhur

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளினார்…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

நாளை மார்கழி மாதம் பிறப்பதை முன்னிட்டு, நேற்றிரவு ஸ்ரீஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் அனுசரித்த பாவை நோன்பு விரதத்தை கொண்டாடும் வகையில், மார்கழி நீராட்ட உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

பகல் பத்து உற்சவத்தின் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியான, ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தங்கத்தால் இழைக்கப்பட்ட திருப்பாவை பட்டுடுத்தி, ஸ்ரீரெங்கமன்னார் சுவாமியுடன் பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதனையடுத்து ஸ்ரீபெரிய பெருமாள் சுவாமி, ஸ்ரீதேவி – ஸ்ரீபூதேவியுடன் எழுந்தருளினார். மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.

மார்கழி மாதப் பிறப்பு தமிழ் பஞ்சாக்கத்தின் படி இன்று இரவு பிறக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று இரவு ஸ்ரீஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

மார்கழி மாதத்தின் சிறப்பு வாய்ந்த பரமபதம் என்ற சொர்க்க வாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் 23ம் தேதி (சனி கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.30 மணியளவில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை!

madurai srirama paduka from srilanka - 2026
#image_title

இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பு!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் சாவந்.
அயோத்தியில் வரும் ஜனவரி மாதம் இருபத்திரண்டாம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி,
பல்வேறு நகரங்களில் இருந்து ராமர் கோவிலுக்கு சிறப்பு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இதனையொட்டி, ராவணனால் இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க ராமர் இலங்கை சென்ற நிகழ்வை முன்னிட்டு இலங்கையிலிருந்து ஸ்ரீ ராமர் பாதுகையை எடுத்து விமானம் மூலம் மதுரை வந்தனர்.

மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஸ்ரீராமர் பாதுகையை பாஜகவினர் ஹிந்து முன்னணி பரிசத் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளக்கப்பட்டது.

ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து மாலைகள் அணிவித்து வணங்கி சென்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் முடித்து நாளை ராமேஸ்வரம் கோவிலில் ஸ்ரீ ராமர் பாதுகைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பின்னர் அதைத் தொடர்ந்து, ராமர் பாதுகை யாத்திரையாக புறப்பட்டு எட்டு மாநிலங்கள் வழியாக அயோத்தி சென்றடையும் என நிர்வாகிகள் கூறினர்.

சுரேஷ் சவான் கடந்த பத்து தினங்களுக்கு முன் இலங்கை சென்று ராமர் பாதுகையுடன் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

மார்கழித் திங்கள்; ஆண்டாள் வழிகாட்டிய பாவை நோன்பு!

andal srivilliputhur

திங்கள் மும்மாரி பெய்ய… திகழட்டும் பாவை நோன்பு

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் 
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து
.- என்றார் வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள்.

பிஞ்சிலே பழுத்த பழம் என்பதற்கு தற்கால வழக்கில் நாம் கொள்ளும் பொருள் வேறு! ஆனால், இங்கே சொல்லப்பட்ட ஆண்டாளின் தன்மையோ, எவரும் எட்டிப் பார்க்காத உச்சம்! பக்தி புக வேண்டிய இள வயதில் கண்ணனின் பக்தி ஆழமாகப் புகுந்து, அதனால் தமிழுக்கும் தமிழினத்துக்கும் பக்தி இலக்கியத்துக்கும் ஒருசேரப் பெருமையும் வளமையும் தந்தவர் ஸ்ரீஆண்டாள். 

பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது காத்யாயனி விரதம். மார்கழி மாதத்தில் இளம் பெண்களால் விரதம் கைக்கொள்ளப் பட்டது. பனி மிகுந்த இம்மாதத்தில் இறைச் சிந்தனையில் காலம் கழித்து, ஊன் மறுத்து, உடலுக்கு உரமூட்டும் பாலும் தயிரும் நெய்யும் விலக்கி விரதம் கொண்டனர் இளம் பெண்கள்.   

இதனையே செய்துகாட்டினார் ஸ்ரீஆண்டாள். தோழியருடன் சேர்ந்து கண்ணனை நினைந்து அவர் கொண்ட விரதமே பாவை நோன்பாக வெளிப்பட்டது. முப்பது நாளும் நாளொரு பாட்டாக முப்பதாகி திருப்பாவை மலர்ந்தது. பாவைப் பாட்டுடன், பூவைச் சூடி அழகுபார்த்து அரங்கனுக்கு மாலையிட்ட ஆண்டாளின் நோன்பு, அன்பர்களின் ஆன்மிக சாதனைக்கு ஒரு கருவியாகப் போனது. 

மார்கழித் திங்கள் பிறந்தால், மனதில் திருப்பாவையும் குடிகொள்ளும். பாவை நோன்பின் மூலம் கண்ணனை அடைந்த விதத்தைப் படிப்படியாகச் சொல்லி அந்த அனுபவத்தை ஊட்டிய ஆண்டாள் அன்றோ இந்த மாதத்தின் நாயகியாகத் திகழ்கிறார்!

இந்த மண்ணின் ஆன்மிகம், இறைவனை அன்பரோடு ஒருவராக இருத்தி அழகு பார்த்தது. நண்பனாக, தலைவனாக, தம்பியாக, அண்ணனாக, தந்தையாக, ஏன் வேலைக்காரனாகக்கூட இறைவன், தன் அடியாரோடு கைகோத்து வந்த சங்கதிகள் ஏராளம். அப்படி அந்தக் கடவுளைக் காதலனாகக் கண்டு பாடிய உள்ளங்களும் அநேகம். அவர்களில் ஆண்டாள் இயல்பாகவே பெண் ஆனதால், காதல் ரசம் பொங்க கண்ணனைப் பற்றும் உபாயத்தைத் தன் பாசுரங்களில் வெளிப்படுத்தினார்.

திருப்பாவை முதல் பாசுரத்தில் கண்ணபிரானே உபாயம் என்பதால், இந்த நோன்பைக் காரணமாக வைத்து கிருஷ்ணானுபவம் பெற வாருங்கள் என திருவாய்ப்பாடிப் பெண்களை அழைக்கிறார். இரண்டாம் பாசுரத்தில், பாற்கடலில் பையத் துயின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவதும், சாதுக்களுக்கு அவர்கள் வேண்டும் அளவு பொருட்களையும், பிட்சையையும் கொடுப்பதும் நோன்பு நோற்பவர்கள் செய்யக்கூடிய செயல்கள்… நெய், பால் போன்றவற்றை அமுது செய்தல், கண்களில் மையிட்டுக் கொள்ளல், பூக்கள் சூடிக் கொள்ளல், பெரியோர்கள் செய்யக் கூடாதென விலக்கியவற்றை செய்தல், தவறான சொற்களை சொல்லுதல் போன்றவை நோன்பு நோற்பவர்கள் செய்யக் கூடாத காரியங்கள் என தெளிவிக்கிறார்.

‘ஓங்கி உலகளந்த’ பாசுரத்தில், தங்கள் நோன்பினாலே இவ்வுலகத்துக்குக் கிடைக்கும் பலன்களை அடுக்குகிறார். நாட்டுக்கு ஒரு குறையும் இல்லாமல் மாதம் மும்மாரி மழை பெய்யும், அதனால் உயர்ந்து பருத்த செந்நெற் பயிர்களின் அளவுக்கு கயல்மீன்கள் துள்ளும், அழகிய வண்டுகள் குவளை மலர்களில் கண் உறங்கும், பசுக்கள் குடங்கள் நிறைய பால் சொரியும்… என்கிறார்.

‘ஆழிமழைக் கண்ணா’ பாசுரத்தில், மழைக்குத் தலைவனான வருண தேவனை அழைத்து, கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, மேகமாகி, ஊழி முதல்வன் உருவம் போலே கறுத்து, ராமபிரானின் சார்ங்கமெனும் வில்லில் இருந்து புறப்படும் பாணங்களைப் போலே, உலகத்தார் அனைவரும் வாழும் படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடும் படியாகவும் மழையைப் பொழியச் செய்வாயாக” என்று வேண்டுகிறார்கள் கோபியர்கள்.

அப்போது ஒருத்தி, “நாம் இப்படி நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறோம். நம் பாவங்களால் இடையூறு ஏதுமில்லாமல் நோன்பு நிறைவேற வேண்டுமே” என்று கவலையோடு கேட்கிறாள். அதற்கு, வடமதுரை மைந்தனை யமுனைத் துறைவனை தூய்மையுடன் நல்ல மலர்கள் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனத்தாலே தியானித்தால், எல்லாப் பாவங்களும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்து போகும் என்று பதில் சொல்கிறார் ஆண்டாள். 

இப்படி, முதல் ஐந்து பாசுரங்களாலே கிருஷ்ணானுபவம் கிடைப்பதற்கு வேண்டியதைச் சொன்னவர்கள், அடுத்த பத்து பாசுரங்களில் அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்காக தோழிகளை எழுப்புகிறார்கள்.

“உடமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உள்ள கடமை அல்லவா”, என்று “தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும் பாவையே உடனே எழுந்து வா” என்று கண்மூடிக் கிடக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

ராமபிரானை விட்டு கண நேரமும் பிரியாது கைங்கர்யம் செய்யும் லட்சுமணனைப்போல் கண்ணனின் கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருப்பவனான நற்செல்வனின் தங்கையை எழுப்புகிறார்கள்!

“நாமே மிகச் சிறந்த கண்ணழகியாக இருக்கும்போது, அந்தக் கண்ணன்தான் நம்மைத் தேடி வரவேண்டுமே அன்றி, நாம் அவன் இடம் தேடிச் செல்ல வேண்டியதில்லை” என்று செருக்கோடு கண்மூடிப் படுத்திருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

இவர்களின் செயல்களுக்கெல்லாம் முன் நிற்பவளாகச் சொல்லி, எல்லோரையும் தானே முதல் ஆளாகச் சென்று எழுப்பி அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு, ஆனால் அதை மறந்து உறங்குபவளை “நாணாதாய்! நாவுடையாய்!” என்று கூறி எழுப்புகிறார்கள்.

இவ்வாறாக எல்லாப் பெண்களையும் எழுப்பி, ஸ்ரீநந்தகோபர் திருமாளிகை வாசலுக்குச் சென்று நிற்கிறார்கள். கதவு அடைத்திருப்பது கண்டு, கோயில் காப்பானையும், திருவாசல் காக்கும் முதலிகளையும், நேய நிலைக்கதவம் நீக்குமாறு வேண்டுகிறார்கள். 

இவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்த அவர்களும் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கிறார்கள். அங்கே நந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணபிரானையும், பலராமனையும் துயில் எழுப்புகிறார்கள் இந்தப் பெண்கள்.

எல்லோரும் எழுந்திடினும் கண்ணன் விழிக்காதது கண்டு, நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் என்று பிராட்டியை எழுப்புகிறார்கள்.

‘செந்தாமரைக் கையால் சீரார் வளையலிப்ப வந்து திறவாய்’, திறந்தால் மகிழ்வோம் என்று இவர்கள் வேண்டியவுடன், நம்பின்னைப் பிராட்டி கதவு திறக்க எண்ணி துயில் கலைந்து எழுந்தாள். நாமல்லவா நம் பிரியமானவர்களுக்கு கதவு திறந்து விட வேண்டும் என்று நினைத்த கண்ணன், அவள் கதவைத் திறக்க முடியாதபடி அணைத்துக் கொண்டான். இதை அறிந்த பெண்கள், “குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் உறங்கும் மலர்மார்பா, வாய்திறவாய், மைத் தடங்கண்ணினாய் உன் மணாளனை துயில் எழ ஒட்டாயோ?” என்று நப்பின்னையையும் கேட்டவாறே கண்ணனைத் துயில் எழுப்புகிறார்கள்.

“கணநேரமும் கண்ணனை எழ சம்மதியாமலும், ஒரு சிறிதும் அவனைப் பிரிந்திருப்பதைப் பொறுக்கமாட்டாமலும் இருப்பது உன் இயற்கையான குணத்துக்குத் தகுந்ததன்று” என்று நப்பின்னைப் பிராட்டியை இவர்கள் கோபிக்கிறார்கள். அவளும், “தக்க நேரம் பார்த்து விண்ணப்பிக்கலாம்” என்று சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். நாம் கோபித்துக் கொண்டதால்தான் பிராட்டி பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து, கண்ணனை எழுப்ப, அவன் வாய் திறவாமையாலே, “பிராட்டியை நாம் பேசின பேச்சைக் கேட்டு கண்ணன் திருவுள்ளம் கலங்கினானோ” என்று எண்ணி அவளுடைய பெருமைகளைப் பேசி, அவளிடம் தங்கள் விருப்பத்தை மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள்.

நப்பின்னைப் பிராட்டி, “என்னைச் சரணடைந்த பின் உங்களுக்கு ஒரு குறைவும் உண்டாகக் கூடுமோ? ஆகையால் நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்… கண்ணனை எழுப்புவோம்” என்றாள்.

“உலகில் மிகப் பெரும் தேசங்களை ஆட்சிசெய்யும் அரசர்களும்கூட, தங்களுடைய அகங்காரம் கரைந்து, உன் பள்ளிக் கட்டிலின் கீழே திரளாகக் கூடியிருக்கிறார்கள். அதைப் போலே, நாங்களும் அகதிகளாக வந்துள்ளோம், உன் தாமரைக் கண்கள் எங்கள் மீது பதியும் வண்ணம், சிறிது எங்கள் மேலும் விழிக்க மாட்டாயா?” என வேண்டுகிறார்கள் இப்பெண்கள்!

இப்படி இவர்கள் நெஞ்சுருக நெக்குருக விண்ணப்பித்தவுடன், கண்ணன், பிராட்டியை அண்டினவர்களான இவர்களை இவ்வளவு பாடு படுத்திவிட்டோமே! என்று தன்னைத் தானே நொந்து கொண்டு, இவர்களுக்கு நல்வார்த்தைகள் சொன்னான். இவர்களும் கண்ணனின் நடையழகைக் காணும்படி செய்யுமாறு வேண்ட, கண்ணனும் அதனை ஏற்றான். சீரிய சிங்காசனம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த நடையழகிலே இவர்கள் தம்மை மறந்தார்கள். உலகமளந்த அவன் திருவடிகளுக்கும், இலங்கையை அழித்த அவன் பலத்துக்கும், சகடாசுரன் அழியும்படி உதைத்த அவன் புகழுக்கும், கோவர்த்தனக் குன்றை குடையாக எடுத்த அவனுடைய குணத்துக்கும், அவனுடைய பகை கெடுக்கும் வேலுக்கும் அவர்கள் மங்களாசாசனம் செய்தார்கள். 

பின், “நாங்கள் உன்னிடம் பறை கொள்வதற்காக வந்தோம்; எங்கள் மீது இரக்கம் காட்டவேணும்” என்று வேண்டுகிறார்கள்.

“மங்களாசாசனம் செய்யும் நீங்கள், பறைகொள்ளுதற்காக வந்ததாகச் சொல்கிறீர்களே; இரண்டும் பொருத்தமானதாக இல்லையே!” என்று கண்ணன் கேட்கிறான். “பறை என்பது ஒரு காரணமே! உண்மையில் உன்னிடம் உன்னையே யாசித்து வந்தவர்கள் நாங்கள்” என்று இவர்கள் உரைக்கிறார்கள்…!

“சரி! என்னை வேண்டும் நீங்கள், ஏன் பறையை வேண்ட வேண்டும்?” என்று கண்ணன் கேட்கிறான். அதற்கு இவர்கள், “உன்னைக் காண்பதற்கு வாய்ப்பாக ஒரு நோன்பை நோற்கச் சொன்னார்கள். அந்த நோன்புக்கு மார்கழி நீராட்டம் என்கிற அனுஷ்டானத்தை முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். அந்நீராட்டத்தை முடிக்க வேண்டுமாயின், சங்கங்கள், பெரும் பறைகள், பல்லாண்டை இசைப்பவர்கள், கோல விளக்காகிய மங்கல தீபங்கள், கொடிகள், விதானங்கள் ஆகியன தந்தருள வேண்டும்” எனப் பிரார்த்திக்கிறார்கள் ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தில்!

மார்கழி நீராட்ட நோன்புக்காக அவர்கள் கேட்ட அனைத்தையும் கண்ணபிரான் கொடுக்கிறான். பின்னர், “உங்களுக்கு வேண்டியது இவ்வளவுதானே, போதுமா?” என்க, அதற்கு, “நோன்புக்கு வேண்டுபவை இவையே, அது போதும்…நோன்பு நோற்ற பிறகு உன்னிடம் பரிசாக சிலவற்றைப் பெற விரும்புகிறோம்” என்றார்கள். “அது என்ன?” என்று அவனும் கேட்க, “நீயும் பிராட்டியும் ஆபரணங்களாகிய சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ ஆகியவற்றையும், ஆடைகளையும் அணிந்து கொண்டு வரவேண்டும். அதன் பின் உங்களுடன் ஒன்றாக அமர்ந்து, ‘மூட நெய் பெய்து முழங்கை வழிவார’ பால் அமுது செய்ய வேண்டும்” என்ற தங்கள் விருப்பத்தைச் சொல்கிறார்கள்.

கண்ணனும் அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கிறான். பின் மனத்தில் இப்படி நினைத்தான்…“ஊருக்கு வேண்டிய பறையை நம்மிடமிருந்து பெற்றுவிட்டார்கள். இனி தங்களுக்கான பறையை (அதாவது, தம்மைத்தான்) கேட்கப் போகிறார்கள்” என்பதை அறிந்து கொள்கிறான். பிறகு, “நீங்கள் விரும்பும் பறையைப் பெற ஏதாவது சாதனங்களை அனுஷ்டானம் செய்ததுண்டா? எதையும் அனுஷ்டிக்காமல் என்னைப் பெற முடியாதே” என்றான். அதற்கு அவர்கள் “நாங்கள் எந்த சாதனமும் செய்ய அருகதையற்ற அஞ்ஞானிகளல்லவா? பசுக்களின் பின்னே சென்று காடுகளை அடைந்து உண்டு திரிவோம். அறிவொன்றும் இல்லாத எங்கள் ஆயர் குலத்தில் உன்னைப் பிறக்கப் பெறுவதற்கு ஏற்ற புண்ணியங்கள் செய்தவர்களாக இருக்கிறோம். எம்பிரானே! உன்னோடு எங்களுக்குள்ள உறவு ஒழிக்க ஒழியாது. அன்பினாலே கட்டுண்டோம். அந்த அன்பினால் உன்னை ஏதாவது விபரீதமாகச் சொல்லியிருந்தாலும் பொறுத்துக்கொள்… இந்த அன்பால் நாங்கள் விரும்பும் பறையை எங்களுக்கு அருள வேண்டும்” என்கிறார்கள்.

“காலம் உள்ளளவும் உனக்கே அடிமை செய்வோம்” என்று ‘தாங்கள் பறை என்று சொல்லுவது கண்ணனின் திருவடிகளில் செய்யும் கைங்கர்யமே’ என்று முடிவாக நிர்ணயிக்கிறார்கள். அந்தக் கைங்கர்யமும் அவன் உகப்புக்காகவே அன்றி, தங்கள் ஆனந்தத்துக்காக அன்று என்னும் அரும்பொருளை அறிவிக்கிறார்கள். இதைக் கேட்ட கண்ணன் அதை உகந்து அருளினான். அதற்கு இவர்கள், “கண்ணனே, இவ்வாறு நாங்கள் உன்னருள் பெற்ற வைபவத்தை ஆண்டாள் அருளிய சங்கத்தமிழ் மாலையாகிய திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் தப்பாமல் ஓதுபவர்கள், செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலாகிய கண்ணபிரானால் எல்லாவிடத்திலும் அவனுடைய திருவருளைப் பெற்று இன்புறுவர்கள்” என்று கூறி திருப்பாவை பாடினால் கிடைக்கும் புண்ணிய பலனைச் சொல்கிறார் ஸ்ரீஆண்டாள்.

  • செங்கோட்டை ஸ்ரீராம்

திருப்பாவை – பாடல் 2 (வையத்து வாழ்வீர்காள்..)

thiruppavai 2 - 2026

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
திருப்பாவை முதல் பாட்டில், நோன்பு யாரை முன்னிட்டு நோற்பது என்று கூறி தோழியரைத் துயில் எழுப்பி அழைத்த ஆண்டாள், இந்தப் பாட்டில் நோன்பு நோற்பவர் செய்யக் கூடியவற்றையும் விலக்க வேண்டியவற்றையும் கூறுகிறாள்.

இந்த வையத்தில் வாழும் பேறு பெற்றவர்களே! வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி வாழ, வாழ்வில் கடைத்தேற வேண்டிய வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் கள்ளத் துயில் கொண்டு கண்வளரும் பரமனின் திருவடியைப் போற்றிப் பாடி, நம் ஆசார்யர்களாகிற பெரியோர்களுக்கு இடுகின்றதான ஐயத்தையும், துன்பத்தே உழல்வார்க்கு இடும் பிட்சையையும் நம் சக்தி உள்ளளவும் இட்டு மகிழ்வோம். இப்போது, நமது நோன்புக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கூறுகிறேன்… காது கொடுத்துக் கேளுங்கள்.

நோன்பு நோற்கத் தொடங்கிய பிறகு நாம் உடலுக்கு ஊட்டமும் உரமும் தரும் நெய் உண்ணக்கூடாது. பாலை உண்ணக் கூடாது. விடியற் காலத்தே உடற்தூய்மை பேண நன்னீரால் குளித்து வர வேண்டும். பின்னர் வழக்கமாக நாம் மேற்கொள்ளும் கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் செய்தல், கருங்கூந்தலிலே மலர் சூடி அழகு சேர்த்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தே விலக்குவோம். இவ்வாறு நம் முன்னோர்கள் எதைச் செய்யக்கூடாது என்று வைத்தார்களோ அவற்றை செய்யாதிருப்போம்.

பெருமான் பக்கலில் நின்று, கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள் ஆண்டாள் இந்தப் பாடலில்!

விளக்கம்: செந்தமிழன் சீராமன் (செங்கோட்டை ஸ்ரீராம்)

ஸ்ரீராமர் 108 போற்றிகள் (தமிழில்)

lord shri rama - 2026

ஸ்ரீ ராமர் 108 போற்றிகள்

ஆக்கியோன்: குச்சனூர் கோவிந்தராஜ்

  1. அயோத்தியில் உதித்தாய் போற்றி
  2. ஆஞ்சநேயரை ஆட்கொண்டவரே போற்றி.
  3. இல் ஒன்றானவனே போற்றி.
  4. ஈகையின் பிறப்பிடமே போற்றி.
  5. உதாரண புருஷனே போற்றி.
  6. ஊழி முதல்வனே போற்றி.
  7. எளிமையின் நாயகனே போற்றி.
  8. ஏழ்பிறப்பு அறுப்பவனே போற்றி .
  9. ஐம்புலன் காப்பவனே போற்றி.
  10. ஒப்பில்லா வீரனே போற்றி.
  11. ஓம் கார மானவனே போற்றி.
  12. ஔதர்யம் மிக்கவனே போற்றி.
  13. கருணாகர மூர்த்தியே போற்றி.
  14. காண்டீபக் கையோனே போற்றி.
  15. கிரகங்களின் தலைவா போற்றி.
  16. கீர்த்திகள் மிக்கவனே போற்றி.
  17. குகனின் தோழனே போற்றி.
  18. கூர்மதி கொண்டோனே போற்றி.
  19. கெடுமதியோரை அழித்தவனே போற்றி.
  20. கேன்மையின் இலக்கணமே போற்றி. .
  21. கைகேயி பிரியனே போற்றி.
  22. கொடையின் கோவலனே போற்றி .
  23. கோள்களின் தலைவனே போற்றி.
  24. கௌசல்யா குமாரனே போற்றி.
  25. சக்கரக் கையோனே போற்றி.
  26. சாந்தி தருபவனே போற்றி. சாரங்கபாணியே போற்றி.
  27. சிவ தனுஷை முறித்தோனே போற்றி.
  28. சீதையின் மனாளனே போற்றி.
  29. சுயம்புவாய் ஆனவனே போற்றி.
  30. சொர்க்கம் தருவோனே போற்றி.
  31. சூரியகுலத் தோன்றலே போற்றி.
  32. செங்கோல் காத்தவனே போற்றி.
  33. சேதுபந்தனம் படைத்தவனே போற்றி.
  34. சைவப் பிரியனே போற்றி.
  35. சொல்லின் செல்வனே போற்றி.
  36. சோதனைகள் தீர்ப்பவனே போற்றி.
  37. சௌந்தர்யம் மிக்கவனே போற்றி.
  38. ஞானிகள் அடிபணிவோனே போற்றி.
  39. தசரத குமாரனே போற்றி.
  40. தாமரைக் கண்ணனை போற்றி .
  41. திருமால் அவதாரமே போற்றி.
  42. தீமைகள் அழிப்பாய் போற்றி.
  43. திருவடி தந்தவனே போற்றி.
  44. தீயவரை அழிப்பவனே போற்றி.
  45. துறவிகளின் அடைக்கலமே போற்றி .
  46. தூய்மையின் பிறப்பிடமே போற்றி.
  47. தெவிட்டாத அழகனே போற்றி
  48. தேவர்கள் தலைவனே போற்றி.
  49. தைரியத்தின் உருவமே போற்றி
  50. தொடக்கமும் முடிவுமற்றவனே போற்றி.
  51. தோள் வலியோனே போற்றி.
  52. நவமியில் உதித்தோனே போற்றி.
  53. நாராயணன் அவதாரமே போற்றி .
  54. நித்தியமானவனே போற்றி.
  55. நீதியில் நிலைப்பவனே போற்றி.
  56. நுணங்கியோன் தலைவனே போற்றி .
  57. நூலோர் புகழ்போனே போற்றி .
  58. நெடுநீர் கடந்தோனே போற்றி.
  59. நேர்மையின் வடிவே போற்றி
  60. பகைவனுக்கும் அருள்பவனே போற்றி .
  61. பாத தூளியால் உயிர்ப்பித்தவனே போற்றி .
  62. பிரணவப் பொருளே போற்றி.
  63. புனர்பூசத்தில் பிறந்தவனே போற்றி .
  64. பூரண அவதாரமே போற்றி .
  65. பெரிய திருவடி வாகனனே போற்றி.
  66. பேரின்பம் தருபவனை போற்றி.
  67. பொதிகை முனி போற்றியவனே போற்றி.
  68. போது போன்றவனே போற்றி.
  69. பௌருஷம் மிக்கவனே போற்றி.
  70. மனதிற்கு இனியா போற்றி.
  71. மாயை அழிப்பவரே போற்றி.
  72. மிதிலையின் நாயகனே போற்றி .
  73. மீன் கண்ணனே போற்றி .
  74. முதலில் பேசுபவரே போற்றி.
  75. மூவரில் முதல்வனே போற்றி.
  76. மெய்ஞானம் உரைப்பவனே போற்றி .
  77. மேக வண்ணனே போற்றி .
  78. மை வண்ணனே போற்றி.
  79. மோட்சம் தருபவனே போற்றி .
  80. மௌலி துறந்தவனே போற்றி .
  81. யக்ஞப் பிரியனே போற்றி .
  82. யாகம் காத்தவனே போற்றி .
  83. யுக புருஷனே போற்றி .
  84. யோகம் தருபவனே போற்றி.
  85. யௌவன நாயகனே போற்றி .
  86. ரம்மிக்கச் செய்பவனே போற்றி.
  87. ராவணனை வென்றவரே போற்றி.
  88. ரிஷிகளின் நாயகனே போற்றி.
  89. ரௌத்திரம் அற்றவனே போற்றி.
  90. லட்சுமணப் பிரியனே போற்றி .
  91. லாவண்யம் மிக்கவனே போற்றி.
  92. லீலைகள் புரிபவனே போற்றி.
  93. வசிஷ்டரின் சீடனே போற்றி.
  94. வாலியை வதைத்தவரே போற்றி.
  95. விஷ்ணுவின் வடிவே போற்றி.
  96. வீடனனை ஏற்றவனே போற்றி.
  97. வேத நாயகனே போற்றி.
  98. வைணவர் காவலனே போற்றி .
  99. வௌவியைத் (மான்) தேடியவனே போற்றி.
  100. க்ஷீர சாகரனே போற்றி
  101. ஜடாயுவிற்கு அருளியவனே போற்றி.
  102. ஜாம்பவானுக்கு அருளியவனே போற்றி.
  103. ஜீவகாருண்யம் மிக்கவனே போற்றி
  104. ஜேஷ்ட குமாரனே போற்றி .
  105. ஸ்ரீமன் நாராயணனே போற்றி.
  106. ஸ்ரீயின் நாயகனே போற்றி.
  107. ஸௌபாக்கியம் தருபவனை போற்றி.
  108. ஹனுமனின் நாயகனே போற்றி.

ராமரின் பாதம் பணியும்
குச்சனூர் கோவிந்தராஜ்.

குமரி – பனாரஸ் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ வாராந்திர ரயிலுக்கு ஒப்புதல்!

train - 2026
#image_title

விருதுநகர் தஞ்சாவூர் வழியாக கன்னியாகுமரி – காசி இடையே காசி தமிழ்ச்சங்கம் வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது.

வண்டி எண் 16367 கன்னியாகுமரி – பனாராஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை தோறும் கன்னியாகுமரியில் இரவு 8:55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை தோறும் இரவு 11.35 க்கு சென்று சேரும்.

வண்டி எண் 16368 பனாரஸ் கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4:20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 8:55 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

இந்த வண்டி பெட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக எல்ஹஎச்பி யாக இருக்கும்.

இந்த ரயில் தமிழகத்தில் நாகர்கோவில் திருநெல்வேலி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சீர்காழி கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தற்போது ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் இந்த ரயில் இயக்கப்படும்.பயணிகள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது இந்த ரயில் தினசரி ரயிலாக இயக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ரயில் தமிழகத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூர், மற்றும் நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், சிர்பூர், ககாஸ்நகர், பால்ஹர்ஷா, கோண்டியா, பாலகாட், நைன்பூர், ஜபல்பூர், கட்னி, மைஹர், சத்னா, மாணிக்பூர், பிரக்யாராஜ் மற்றும் வாரணாசி வழியாக செல்கிறது

இந்த ரயிலில் 1st AC – 1, 2nd AC – 2, 3rd AC – 3, 3rd Economic AC – 3, sleeper – 6, UR – 4, SLRD – 1, pantry coach -1, generator – 1 என 22 எல்.எச்.பி வகை பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் தொடங்கி வைக்கப்படும் தேதி விரைவில் வெளியிடப்படும் என ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

திருப்பாவை – பாடல் 1: மார்கழித் திங்கள்…!

thiruppavai 1 - 2026

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
திருப்பாவையின் முதல் பாசுரமான இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு, யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வெளியிடுகிறார் ஆண்டாள்.

செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில், இறைவனுக்கு கைங்கரியம் செய்யக்கூடிய பெருஞ் செல்வத்தைப் பெற்ற இளம் பருவத்தை உடைய பெண்களே! அழகான ஆபரணங்களை அணிந்தவர்களே! மாதங்களில் சிறந்த இந்த மார்கழி மாதத்தில் முழு நிலவு திகழும் நல்ல நாளாக இன்று நமக்கு வாய்த்திருக்கின்றது.

கூர்மையான வேல் ஆயுதம் கொண்டு, கண்ணனாகிய குழந்தைக்கு தீங்கு செய்வதற்காக வரும் அரக்கர் மீது சீறி அவர்களை அழிக்கும் கொடுந் தொழிலைப் புரிபவனான நந்தனகோபனுக்கு பிள்ளையாகப் பிறந்தவனும், அழகு நிறைந்த கண்களை உடைய யசோதைப் பிராட்டிக்கு சிங்கக் குட்டியைப் போன்று திகழ்பவனும், கருமையான மேகக் கூட்டம் போலே திரண்ட மேனி அழகு பெற்றவனும், செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும் சூரிய சந்திரர்களைப் போன்ற திருமுகத்தையும் உடையவனான அவனே ஸ்ரீமந் நாராயணன்.

அந்த நாராயணனே நமக்கு கைங்கரியம் என்னும் பறையைக் கொடுக்கும் நிலையில் நின்றான். அவனாலே நாம் பேறு பெற்றோம் என்ற சிறப்பைக் கொடுக்கும்படியாக நிற்கின்றான். எனவே இந்த உலகத்தினர் கொண்டாடும்படியாக இந்த நோன்பிலே ஊன்றி, நீராட விருப்பம் கொண்டவர்களாகத் திகழும் பெண்களே! வாருங்கள். வாருங்கள்… என்று ஆண்டாள் தோழியரைத் துயிலெழுப்பி நோன்பு நோற்க அழைக்கிறாள்.

இதன் மூலம், ஸ்ரீமந்நாராயணனே கண்ணனாக அவதரித்தான், அவனே நாம் வேண்டும் பேற்றினை அளிக்க வல்லான் என்று கூறி உலகத்தார் மெச்ச உடன் வருமாறு நோன்பு நோற்க தோழியரை அழைக்கிறார் ஆண்டாள்.

  • விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

சபரிமலை பிரச்னை; கேரள அரசு, தேவஸம் போர்டுக்கு அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை!

sabarimala - 2026
#image_title

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால், உரிய ஏற்பாடுகள் இல்லாமல் பக்தர்கள் தவித்து, தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், நெருக்கடி இன்றி பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், கேரள அரசும்- திருவிதாங்கூர் தேவசம் போர்டும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை:

உலக புகழ் பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை சீசன் தொடங்கியதில் இருந்தே அதிகஅளவில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் சராசரியாக 80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தையும் கடந்து விடுவதாக தெரிகிறது. இதனால் பக்தர்கள் 12 மணிநேரம் முதல் 20 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

நீண்டநேரம் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களில் பலர் வரிசையில் காத்திருக்க முடியாமல்  மயக்கமடைந்த தகவல்கள் வருகின்றன. நெய்யபிஷேகம் செய்வதற்கும் பக்தர்கள் பல மணிநேரம்  காத்திருக்கின்றனர்.

நெரிசலில் குழந்தைகள் உள்பட சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. சபரிமலையில் இதுவரை இல்லாத அளவு கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. நிலக்கல், எரிமேலி, பம்பை என எங்கு பார்த்தாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இங்கு வரும் அரசு பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 200 பக்தர்கள் ஏற்றப்பட்டு திக்கு முக்காடி போகும் நிலை காணப்படுகிறது.

பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யவும் உரிய வசதிகள் ஏற்படுத்தவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, காவல்துறையினருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே  உத்தரவிட்டுள்ளது.

எனினும் நிலைமை சீரடைந்ததாக தெரியவில்லை. பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் போதிய ஏற்பாடுகள் இல்லாமல் பக்தர்கள் அவதியுறும் நிலை தொடர்கிறது.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாமலேயே ஊர் திரும்பும் வருத்தமான செய்திகளும் வருகின்றன. சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக பல நாட்கள் மாலையணிந்து, விரதமிருந்து சென்ற பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய முடியாமல் ஊர் திரும்புவது  அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  அவர்களை மட்டுமல்ல ஆன்மீக நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இந்த செய்தியை கேட்டு பெரும் வருத்தம் கொள்கின்றனர். 

எனவே இந்த சூழ்நிலையை சரி செய்ய கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் வரும் வாகனங்கள் கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. எனவே நிலக்கல்லில் கூடுதல் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.

அதிகமான பக்தர்கள் வந்ததால் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்ற கேரள அரசின் வாதம் ஏற்க தக்கதாக இல்லை. ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை முறைப்படுத்தி அவர்கள் எந்த  இடையூறும் இன்றி தரிசனம் செய்ய ஏதுவான சூழலை உருவாக்க  வேண்டியது திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசின் கடமையாகும்.

அதுபோலவே வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் முறையில் ஏற்படும் குளறுபடிகளும் பக்தர்கள் கூட்டம் அலைமோத காரணமாகி விடுகிறது. எனவே இதனையும் கேரள அரசு உடனடியாக முறைப்படுத்த வேண்டும். சபரிமலைக்கு வரும் வாகனங்களையும் முறைப்படுத்தி அவற்றை நிறுத்த உரிய பார்க்கிங் வசதியையும் செய்து தர வேண்டும்.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் மயக்கமடைந்து விடுகின்றனர்.எனவே முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. கூடுதலாக வரிசைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27 ம் தேதி நடக்கிறது. மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த காலத்தில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். எனவே இப்போதே அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை கேரள அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் இதுவரை  சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை முடியும்போது தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 40 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப கேரள அரசு முன்னேற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் மஹா வாராஹி பிரதிஷ்டை!

mahavarahi in pdk - 2026
#image_title

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மன் பிரதிஷ்டை ஸம்ப்ரோக்ஷ்ணம் வைபவ விழா!

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மன் பிரதிஷ்டை ஸம்ப்ரோக்ஷ்ணம் வைபவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் விக்னேஷ்வர பூஜை,மகா கணபதி ஹோமம் கோ பூஜை லட்சுமிபூஜை நவகிரக ஹோமம் ,புனித நீர் குடங்களுக்கு,பூர்ணாஹூ தி மஹா தீபாரதனை சிறப்பாக மணி குருக்கள் மற்றும் ரவி குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் , மஹா தீபராதனை நடைபெற்றது

நிகழ்வில் திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் சொக்கலிங்கம் தி மு.க நகர செயலாளர் செந்தில் ,நகர்மன்ற உறுப்பினர் சேட்டு உள்ளிட்ட பிரமுகர்கள் உபயதார்கள் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் மற்றும் அனுமன் திருச்சபை நிர்வாகிகள் செய்தனர்.

  • செய்தி: டீலக்ஸ் சேகர்

Just a Minute! What a Song & Dance!

0
Bhaje Pandurangam dance - 2026
#Bhaje Pandurangam dance performance

— Narasimhan Vijayaraghavan

Just a Minute. There are nostalgic thoughts flooding  one’s memory, as one enters the IIT campus,  in Chennai. One remembers Debjani Mulherjee and Kalyan Banerjee. They were  the then reigning champions in the JAM sessions Pan India, including in Mardugras. The two of us, rookies, were from Vivekananda College. We were debuting.

No expectations on our side. Neither us nor  the institution. That we had made the grade to qualify for  the finals was akin to an unseeded Boris Becker making it to Wimbledon finals. And as Providence would have it, we won against the odds,  in a repeat of Boris Becker at seventeen! IIT audience did not like it one bit. And that made it sweeter as Chakksrai Pongal in Margazhi!

This piece is not to tomtom my little known exploits on the debating stages. Who cares? Not you, for sure. Not even me, you see. Four decades on,  words poured out, as they did. Sorry. The  campus looks so different. But greener after Michaung havoc. And  one wound down the well laid and better kept roads, to reach the auditorium.

A beautiful setting. It resembled the ancient Greek theatre  which was more than just a venue for entertainment; it was a vibrant hub for civic engagement, religious ritual, and artistic expression. Its unique architectural design fostered an unparalleled intimacy between performers and audience, creating an immersive experience that continues to inspire awe today. And one was Wowed by this IIT ambience!

The occasion was ‘Bhaje Pandurangam’ performance by disciples of Roja Kannan. She is a renowned Bharatanatyam dancer and guru, known for her grace, expressiveness, and innovative approach to the art form. She has received numerous awards, Kalaimamani for one,  and accolades, and her disciples have gone on to become successful dancers themselves. One could see why and how?

A young wife and mother, Sakkubai faced immense hardship and injustice. Yet, her unwavering faith in Panduranga sustained her. Her heartfelt bhajans, often sung while grinding grain or tending to household chores, expressed her pain and devotion with remarkable beauty. Her story  was depicted beautifully with a  poignant presentation and it reminds us that even in the midst of suffering, faith can be a source of strength and solace.

And then the other devotee character non pareil. What a story?

In the village of Teredoki lived a devotee of Lord Vitthal by the name of Gora Kumbhar. A potter by profession, he would always be engrossed in singing bhajans (devotional songs) of Lord Vitthal and chanting the name of Pandurang (Lord Vitthal) even while working.

Once, his wife left her child in the courtyard where Gora Kumbhar was working and went to bring water. Gora Kumbhar was busy in preparing the mud required to make the earthen pots and was as usual engrossed in singing bhajans of Pandurang. His child playing near him, fell in the shallow ditch where the mud for preparing the pots was laid. Gora Kumbhar was churning the mud with his feet. While doing so, he accidentally crushed his child under his feet. He was so lost in singing the bhajans of Pandurang that he didn’t even hear the cries of his child.

On returning back, his wife started searching for the child. As she was unable to find it, she went to Gora Kumbhar to inquire about their child. There, her eyes fell on the churned mud, which had become red with blood. She realised that her child had been crushed under the mud. She started wailing in grief. As an atonement of this mistake, Gora Kumbhar broke off both his hands.

On the auspicious day of Ashadhi ekadashi (11th day of the month of ‘Ashadh’ of the Hindu lunar almanac), the famous saints, Sant Dynaneshwar and Sant Namdev were on their way to Pandharpur. On their way, they came across the village of Teredoki. There, they asked Gora Kumbhar and his wife to accompany them to Pandharpur.

Sant Namdev started delivering a kirtan (Devotional discourse). All the other saints sat down to listen to him. Gora Kumbhar and his wife also sat down to listen the kirtan. During the kirtan, people raised their hands in the air and started clapping and singing praise of Lord Vitthal. Even Gora Kumbhar instinctively raised his broken arms in the air. To everyone’s surprise, hands sprung up from his broken arms. All the saints were glad to see this and they all sung praise of Lord Pandurang.

Gora Kumbhar’s wife realised how merciful Lord Vitthal is. She loudly said, “O Lord, my child was crushed under my husband’s feet. The loss of my child has made me miserable. Lord, please have mercy on me. Give me my child back.” A few seconds later, she saw her child crawling towards her. The merciful Lord Vitthal had heard the prayers of his devotee. She lovingly took the child in her arms. Everyone present there expressed their happiness with a loud applause.

These two stories were  danced and dramatized by the students of Bharatha Natyalaya on 14th Dec,2023. The Panarona of colours  on display and closeness of the performers on the stage, in literal handshaking distance, was a fascinating experience.

Excuse me, one came  here to listen to Prithivi Harish, the upcoming Carnatic musician, or ‘upcome’ already, to be fair to his prowess and now settled nasal  twanged melody. He was on song from Sa pa sa to mangalam. And the involved fervour with which he ‘belted out’ ( the closeness did not make it loud,  but lovely) the numbers, inspired the dancers to be ‘on dance’.

Surprisingly, the hall was half  plus full. One was told that  such classic performances  usually draw far lesser audience. Typically and tragically only a cinematic nexus may fill  such halls. Sad but true. Well, better to have discerning and devoted audience. Numbers matter. Yet, they don’t.

These are passionate amateur artistes. They love what they do. No need to get paid for their performances. Just the joy of gay abandon among themselves,  seemed fulfilling. It is the  discipline, devotion and love of such artistes, on this art form,  which keeps alive  its treasured state  and thanks to Margazhi Music  season, they have huge and welcome traction too.

It was a wonderful and creative production. The accompanists in violin, flautist, keyboard and mridangam,   to the lead singer jelled well to make it a  mellifluously musical  and magical eviening. Thanks.

Ms. N Bhuvaneshwari’s expositions on what was being ‘performed’ to nincompoops  like yours truly, were humorously educative. And she stood out in stage performance too, deserving to be identified by name. Why not?

Yet, it was  Prithivi Harish’s variant by play on Bharathi’s ‘ Kakkai Chiraganile’ that made my day, evening and night of song and dance!


( Author is practicing advocate in the Madras High Court)