Home Blog Page 260

Just a Minute! What a Song & Dance!

0
Bhaje Pandurangam dance - 2026
#Bhaje Pandurangam dance performance

— Narasimhan Vijayaraghavan

Just a Minute. There are nostalgic thoughts flooding  one’s memory, as one enters the IIT campus,  in Chennai. One remembers Debjani Mulherjee and Kalyan Banerjee. They were  the then reigning champions in the JAM sessions Pan India, including in Mardugras. The two of us, rookies, were from Vivekananda College. We were debuting.

No expectations on our side. Neither us nor  the institution. That we had made the grade to qualify for  the finals was akin to an unseeded Boris Becker making it to Wimbledon finals. And as Providence would have it, we won against the odds,  in a repeat of Boris Becker at seventeen! IIT audience did not like it one bit. And that made it sweeter as Chakksrai Pongal in Margazhi!

This piece is not to tomtom my little known exploits on the debating stages. Who cares? Not you, for sure. Not even me, you see. Four decades on,  words poured out, as they did. Sorry. The  campus looks so different. But greener after Michaung havoc. And  one wound down the well laid and better kept roads, to reach the auditorium.

A beautiful setting. It resembled the ancient Greek theatre  which was more than just a venue for entertainment; it was a vibrant hub for civic engagement, religious ritual, and artistic expression. Its unique architectural design fostered an unparalleled intimacy between performers and audience, creating an immersive experience that continues to inspire awe today. And one was Wowed by this IIT ambience!

The occasion was ‘Bhaje Pandurangam’ performance by disciples of Roja Kannan. She is a renowned Bharatanatyam dancer and guru, known for her grace, expressiveness, and innovative approach to the art form. She has received numerous awards, Kalaimamani for one,  and accolades, and her disciples have gone on to become successful dancers themselves. One could see why and how?

A young wife and mother, Sakkubai faced immense hardship and injustice. Yet, her unwavering faith in Panduranga sustained her. Her heartfelt bhajans, often sung while grinding grain or tending to household chores, expressed her pain and devotion with remarkable beauty. Her story  was depicted beautifully with a  poignant presentation and it reminds us that even in the midst of suffering, faith can be a source of strength and solace.

And then the other devotee character non pareil. What a story?

In the village of Teredoki lived a devotee of Lord Vitthal by the name of Gora Kumbhar. A potter by profession, he would always be engrossed in singing bhajans (devotional songs) of Lord Vitthal and chanting the name of Pandurang (Lord Vitthal) even while working.

Once, his wife left her child in the courtyard where Gora Kumbhar was working and went to bring water. Gora Kumbhar was busy in preparing the mud required to make the earthen pots and was as usual engrossed in singing bhajans of Pandurang. His child playing near him, fell in the shallow ditch where the mud for preparing the pots was laid. Gora Kumbhar was churning the mud with his feet. While doing so, he accidentally crushed his child under his feet. He was so lost in singing the bhajans of Pandurang that he didn’t even hear the cries of his child.

On returning back, his wife started searching for the child. As she was unable to find it, she went to Gora Kumbhar to inquire about their child. There, her eyes fell on the churned mud, which had become red with blood. She realised that her child had been crushed under the mud. She started wailing in grief. As an atonement of this mistake, Gora Kumbhar broke off both his hands.

On the auspicious day of Ashadhi ekadashi (11th day of the month of ‘Ashadh’ of the Hindu lunar almanac), the famous saints, Sant Dynaneshwar and Sant Namdev were on their way to Pandharpur. On their way, they came across the village of Teredoki. There, they asked Gora Kumbhar and his wife to accompany them to Pandharpur.

Sant Namdev started delivering a kirtan (Devotional discourse). All the other saints sat down to listen to him. Gora Kumbhar and his wife also sat down to listen the kirtan. During the kirtan, people raised their hands in the air and started clapping and singing praise of Lord Vitthal. Even Gora Kumbhar instinctively raised his broken arms in the air. To everyone’s surprise, hands sprung up from his broken arms. All the saints were glad to see this and they all sung praise of Lord Pandurang.

Gora Kumbhar’s wife realised how merciful Lord Vitthal is. She loudly said, “O Lord, my child was crushed under my husband’s feet. The loss of my child has made me miserable. Lord, please have mercy on me. Give me my child back.” A few seconds later, she saw her child crawling towards her. The merciful Lord Vitthal had heard the prayers of his devotee. She lovingly took the child in her arms. Everyone present there expressed their happiness with a loud applause.

These two stories were  danced and dramatized by the students of Bharatha Natyalaya on 14th Dec,2023. The Panarona of colours  on display and closeness of the performers on the stage, in literal handshaking distance, was a fascinating experience.

Excuse me, one came  here to listen to Prithivi Harish, the upcoming Carnatic musician, or ‘upcome’ already, to be fair to his prowess and now settled nasal  twanged melody. He was on song from Sa pa sa to mangalam. And the involved fervour with which he ‘belted out’ ( the closeness did not make it loud,  but lovely) the numbers, inspired the dancers to be ‘on dance’.

Surprisingly, the hall was half  plus full. One was told that  such classic performances  usually draw far lesser audience. Typically and tragically only a cinematic nexus may fill  such halls. Sad but true. Well, better to have discerning and devoted audience. Numbers matter. Yet, they don’t.

These are passionate amateur artistes. They love what they do. No need to get paid for their performances. Just the joy of gay abandon among themselves,  seemed fulfilling. It is the  discipline, devotion and love of such artistes, on this art form,  which keeps alive  its treasured state  and thanks to Margazhi Music  season, they have huge and welcome traction too.

It was a wonderful and creative production. The accompanists in violin, flautist, keyboard and mridangam,   to the lead singer jelled well to make it a  mellifluously musical  and magical eviening. Thanks.

Ms. N Bhuvaneshwari’s expositions on what was being ‘performed’ to nincompoops  like yours truly, were humorously educative. And she stood out in stage performance too, deserving to be identified by name. Why not?

Yet, it was  Prithivi Harish’s variant by play on Bharathi’s ‘ Kakkai Chiraganile’ that made my day, evening and night of song and dance!


( Author is practicing advocate in the Madras High Court)


நாராயணீய தினம்… குருவாயூரில் கோலாகலம்!

narayana patathri guruvayur krishnan - 2026
#image_title

வெள்ளிக்கிழமை இன்று, விருச்சிகம் (கார்த்திகை)28ஆம் நாள் நாராயணீய தினம் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

நாராயண பட்டத்ரி, ஸ்ரீ நாராயணீயத்தை நிறைவு செய்த நாளான கார்த்திகை 28ம் நாள், நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் மேப்பத்தூர் என்ற ஊரில் பிறந்த நாராயண பட்டத்ரி யால் இயற்றப்பட்ட ஸ்லோகங்கள் தான்
“ஸ்ரீ நாராயணீயம்” என்ற அற்புதமான, அழகான காவியம்…

பட்டத்ரி, தனது தந்தையிடத்திலும், “அச்சுத பிஷாரடி” என்ற குருவிடத்திலும் தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம் போன்ற சாஸ்திரங்களைக் கற்றார்.

அச்சுத பிஷாரடி வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுவதைக் கண்ட பட்டத்ரி, குரு தக்ஷிணையாக, அந்த வாத ரோகத்தை முன்வந்து ஏற்றுக்கொண்டார்.

உடனே, வாத ரோகம், பட்டத்ரியைப் பீடித்து அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை.

துஞ்சத்தெழுத்தச்சன் என்பவர் கவிஞர், பக்தர், ஜோசியர். அவர், பட்டத்ரியை குருவாயூருக்குச் சென்று “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார்.

அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.

உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார்.

அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”. மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன.

ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்ததும், “ஹே குருவாயூரப்பா, இவ்வாறு நடந்தது உண்மையா? என்று கேட்பாராம். குருவாயூரப்பன் “ஆம்” என்று தலையை ஆட்டினால்தான் அடுத்த ஸ்லோகம் எழுதுவாராம்.

ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் “ஹே கிருஷ்ணா! ஹே குருவாயூரப்பா! உனது மூர்த்திதான் எனக்குக் கதி, என்னை ரோகத்திலிருந்து காக்க வேண்டும்” என்ற வரிகளை நோக்கும்பொழுது, நாராயண பட்டத்ரி தன் ரோகத்தை மட்டுமின்றி பக்தர்கள் எல்லாருடைய ரோகங்களையும் போக்கவே பிரார்த்தித்திருக்கிறார் என்று தெரிகிறது.

“என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும் என்பதால் இதை படிப்போர் யாவருமே இப்படி உச்சரித்து, தமது ரோகத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற அவருடைய விசாலமான எண்ணம் தெரிய வருகிறது.

இப்படி, எல்லா ஸ்லோகங்களுக்கும் ஊகித்துக்கொள்ள வேண்டும். கலியுகத்தில் ஜன்மம் கடைத்தேற பக்தி மார்க்கம் ஒன்றே வழி. நாராயணீயத்தில் பக்தியே பிரதானம். ஆகையால், இதைப் படிக்கும்போது பகவத் தியானமே சிறந்த வழி, பகவானே சிறந்த புகலிடம் என்றும் தெரிய வருகிறது.

இதை எழுதி முடித்ததும், அவருடைய வாதரோகம் நீங்கிவிட்டது. ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய சரிதத்தைக் கூறுவதாலும், நாராயண பட்டத்ரி என்பவர் இயற்றியதாலும் , நாராயணீயம் என்று பெயர் பெற்றது.

நாராயணீயம் படித்தாலோ, பாராயணம் செய்தாலோ, சிரவணம் செய்தாலோ ஐஸ்வர்யம் கூடும், கொடிய ரோகம் நிவர்த்தியடையும், கிரக பீடை நீங்கும். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி, வாதரோக நிவர்த்தி, உத்யோக உயர்வு, சந்தான பாக்கியம், ஆயுள் விருத்தி, ஆரோக்யம் முதலியன கிடைக்கும்….

தினமும் நாராயணீயம் ஒரு ஸ்லோகமாவது பாராயணம் செய்தால் நமது, பிரச்னைகள் , இன்னல்கள், மன அழுத்தம் குறைந்து , நிம்மதியையும், நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என ஆண்மீக அன்பர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீ காஞ்சிமகா சுவாமிகள் தன்னை நாடிவரும் பக்தர்களிடம் ஸ்ரீமந்நாராயணீயத்தைப் பாராயணம் செய்யும்படி அருளாசி வழங்குவது வழக்கம்.

இந்த நாராயணீயம், ஸ்லோகத்தின் கடைசி வரியில் பாராயண பலனாக நமக்கு உடல் நலத்தையும் நிலையான மகிழ்ச்சியையும் அளிக்கட்டும் என ஸ்ரீ குருவாயூரப்பனை நேரில் கண்ட பரவசத்தில் பட்டத்திரி அறுதியிட்டு முடித்துள்ளார்.

ஆகையினால் பட்டத்ரி நிறைவு செய்த நாளான கார்த்திகை 28ந்தேதியான நாளை நாராயணீயம் பாராயணம் செய்து, நம் அனைத்துவிதமான ரோகங்களும் நிவர்த்தியாக குருவாயூரப்பனின் அருளை பெறலாம்.

நாளை நாராயணைய தினத்தை ஒட்டி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பல்வேறு வழிபாடுகள் நடத்தி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அவல் நீ வேத்தியம் பால்பாயாசம் நிவேத்யம் உட்பட பல்வேறு பதார்த்தங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

தற்போது குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் சபரிமலை சீசனை ஒட்டி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் தினத்தை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை குருவாயூர் தேவஸ்தானம் செய்து வருகிறது

சபரிமலையின் புனிதம் கெடுக்க காட்டிய தீவிரத்தை பக்தர் நலனில் காட்டலாமே!

1809855 sabarimala 3 - 2026

சபரிமலையின் புனிதம் கெடுக்க தீவிரம் காட்டிய கம்யூனிஸ்ட் அரசு பக்தர்களின் நலனில் தீவிரம் காட்டலாமே! – என்று இந்து முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

மண்டல பூஜை மற்றும் ஜோதி தரிசனத்துக்காக சபரி மலை நடை திறந்தது முதலாகவே மிக அதிக பக்தர்கள் தரிசனத்துக்காக சென்று கொண்டிருக்கிறார்கள், தரிசன சீட்டுகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் என ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படுகிறது.

ஆனால் ஒரு நாளைக்கு 65 முதல் 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் என்று அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் கேரள அரசும் தேவசம் போர்டும் எவ்வித முன் ஏற்பாடும் திட்டமிடலும் இன்றி பக்தர்களை வெறும் வருவாய் ஆதாரமாக கருதி கணக்கின்றி அனுமதி சீட்டை விநியோகிக்கிறார்கள்.

அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் பகுதியில் நிறுத்தபட்டு அங்கிருந்து கேரள மாநில அரசு பேருந்துகள் மூலமாக பம்பை வரை கொண்டு செல்லப்படுகிறார்கள்.

நிலக்கல் வாகன நிறுத்த பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யபடவில்லை, சுகாதார மையங்கள் இல்லை, தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும் நிலையில் அதற்கேற்ப கழிவறை மற்றும் குளியல் அறை வசதிகள் இல்லை. குறைந்தபட்சம் தார் சாலை கூட இல்லை, நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்களும் முள்ளுமாக சாலைகள் இருக்கிறது.

மேலும் போக்குவரத்து விதிகளின் படி ஒரு பேருந்தில் 45 நபர்களே பயணிக்க அனுமதிக்கபட்டுள்ள நிலையில் காவல்துறையும் போக்குவரத்து துறையும் அனுமதிக்கபட்டதைவிட மும்மடங்காக 150 நபர்களை ஏற்றிசெல்லுமாறு நடத்துனர் ஓட்டுநர்களை கட்டாயப் படுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.

நிலக்கல் முதல் பம்பா வரையிலான மலை பாதையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மும்மடங்கு பக்தர்களை பயணிக்க அனுமதிப்பது பக்தர்களின் பாதுகாப்பை அலட்சியபடுத்துவதாகும், தேவைக்கேற்ப அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும் ஏற்கனவே தேவசம் போர்டு மற்றும் மாநில அரசின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டு பல பக்தர்கள் பலியாகியுள்ள நிலையில் அரசும் போக்குவரத்து துறையும் விபரீத செயல்களில் ஈடுபடுவது கடும் கண்டத்துகுறியது.

மலைப்பாதையில் வாகன போக்குவரத்தை சீர் செய்ய போதிய போக்குவரத்து காவலர்கள் இல்லாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் பக்தர்கள் பம்பா செல்ல முடியாமலும் பம்பாவில் இருந்து நிலக்கல் வரமுடியாமலும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பம்பாவில் இருந்து மலையேறவே 12 மணி நேரம் மலைப்பாதையில் காத்திருக்க வேண்டிய நிலையில் சபரிமலை சன்னிதானத்திற்கு 2 கி.மீ முன்னதாக மரக்கூட்டம் பகுதியில் அவசர கோலத்தில் ஏற்படுத்தபட்ட தகர கொட்டாய் தங்குமிடத்தில் உணவு, குடிநீர் கழிவறை போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் 5 முதல் 6 மணி நேரம் பக்தர்களை அடைத்து வைக்கப்படுகிறார்கள்.

அங்கிருந்து தரிசனத்துக்கு அனுப்பபட்டாலும் மீண்டும் 5 முதல் 6 மணி நேரம் வரிசையில் நிற்கவேண்டியிருப்பதால் பக்தர்களை பெரும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். கேரள மாநில அரசும் தேவசம் போர்டும் சிறு திட்டமிடல் கூட இல்லாமல் பக்தர்களை அலைகழிப்பதை சிறிதும் சகித்துகொள்ள முடியாது.

நிலக்கல், பம்பா, மரக்கூட்டம் காத்திருப்பு தகர கொட்டகைகள் மற்றும் சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்கள் உணவுக்கும் குடிநீருக்கும் அல்லல்பட வேண்டியுள்ளது, அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது அப்படியும் பக்தர்களுக்கு உணவு குடிநீர் போன்ற அத்யாவசிய தேவைகள் கடும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது, கேரள கம்யூனிஸ்ட் அரசின் தோல்வியை அலட்சியத்தை எடுத்துகாட்டுகிறது.

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் வாகன நுழைவு வரி, வாகன நிறுத்த கட்டணம், இதர வரி/கட்டண வருவாய் என பல வகையிலும் மாநில அரசு ஏராளமான வருவாய் பெறுகிறது. மேலும் பக்தர்களிடம் காணிக்கை வசூலிக்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கியூஆர் கோடு முறையை அறிமுகபடுத்த தெரிந்த தேவசம் போர்டுக்கு, பக்தர்களூக்கு வசதி செய்து தர தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரியவில்லையா?

வருஷம் முழுவதும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் திருப்பதி திருமலையில் பக்தர்களுக்கு உணவு,பால், குடிநீர் என அனைத்தும் இலவசமாக நிறைவாக தரமுடிகிற நிலையில், வெறும் 60 நாட்கள் மட்டுமே சீசன் கொண்ட மண்டல பூஜை காலத்தில் எவ்வித திட்டமிடலும் ஏற்பாடும் செய்யாமல் பக்தர்களை வெறும் வருவாய் ஆதாரமாக கருதுவது பினராயி விஜயனின் காம்யூனிஸ்ட் அரசு இந்து விரோத அரசே என்பதை தெளிவாக எடுத்துகாட்டுகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கோவிலின் புனிதம் கெடுக்க மும்முரம் காட்டி பல ஆயிரம் காவல்துறையினரை, ஆயுதபடை காவலர்களை குவித்த கம்யூனிஸ்ட் அரசு தற்போது தினமும் லட்சம் பக்தர்கள் வரும் நிலையில் வெறும் 800 காவல்துறையினரை மட்டுமே பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால் பினராயி விஜயன் நடத்தும் நவ கேரளா யாத்திரைக்கு 3 ஆயிரம் போலிசார் பயன்படுத்தபடுகிறார்கள். அந்த வகையில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு பக்தர்கள் விஷயத்தில் எவ்வளவு மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்படுகிறது என்பதை எடுத்து காட்டுகிறது.

மேலும் தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் அலட்சியத்தால் திருக்கோயில்களில் பக்தர்கள் தாக்கபடுவதும், அலைகழிக்கபடுவதும் நடக்கும் நிலையில் அதற்கு சற்றும் சளைத்ததல்ல பினராயி விஜயனின் காம்ரேட் மாடல் என்பதை நிரூபிக்கிறது கேரள அரசின் செயல்பாடுகள்.

ஆகவே கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு இந்து விரோத போக்கை கைவிட்டு அரசும் தேவசம் போர்டும் உடனடியாக செயல்பட்டு பக்தர்களின் சிரமத்தை களையவேண்டும். உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி தரவேண்டும்.

பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களை கூட்டத்தை காரணம் காட்டி கண் சிமிட்டும் நேரம் கூட ஐயப்பனை காண விடாமல் தள்ளிவிடுகிறது. பக்தர்களின் பக்தியை மதிக்க தெரியாத தேவசம் போர்டும் கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மீது ஏன் குற்றம் சாட்டினாராம் தெரியுமா?!

khalistan singh nijjar - 2026
#image_title

தங்கள் நாட்டில் குடியுரிமை பெற்றவர்களின் கொலையில் இந்திய அரசு அமைப்பு உள்ளதாக திடீர் என நேரடியாகக் குற்றம் சாட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி ஏற்படுத்தினார். அது பெரிய அளவில் இந்திய கனட உறவில் விரிசலை ஏற்படுத்தியது. .

ஏற்கெனவே, இந்திய நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் விஷயத்தில் கனடா புகலிடம் கொடுத்து வருவது குறித்து இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டும் நடவடிக்கை எடுக்காமல் ஆதரவளித்து வந்தார் கனட பிரதமர் ட்ரூடோ.

இந்தியாவின் பஞ்சாப்பிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி தொடங்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார்.

கடந்த ஜூன் மாதம், கனடாவின் வான்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார். இதன் பின், கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.

இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்திய விரோதிகளுக்கு கனடா புகலிடம் அளித்து வருகிறது என்பது நிஜமாகிவிட்டது என்று ஒருதரப்பு சொல்ல, தங்கள் நாட்டு பிரஜையை இன்னொரு நாடு கொல்வதா என்று வேறொரு தரப்பு சொல்ல, இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது.

கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் குடிமக்களுக்கு சில மாதங்களுக்கு இந்தியா விசா வழங்குதலை நிறுத்தி வைத்தது. தொடர்ந்து கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:

இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மட்டத்திலும் அமைதியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது போதாது என நாங்கள் கருதினோம்.

எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற கூடாதென வலியுறுத்தும் விதமாக ஒரு அழுத்தமான நடவடிக்கை எடுக்க விரும்பினோம். இங்கு கனடாவில் பலர் தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் எனும் அச்சத்தில் வாழ்ந்து வந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நாங்கள் செயல்பட வேண்டி இருந்தது.

அதன் காரணமாகவே எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு இது போன்ற சம்பவங்களில் பங்குள்ளது என உரக்க கூறினோம். இதன் மூலம், இது போன்ற சம்பவங்களில் இந்தியா ஈடுபட்டாலோ அல்லது ஈடுபட நினைத்தாலோ அது தடுக்கப்படும் என உறுதி செய்து கொள்ள விரும்பினோம்… என்று கூறியுள்ளார்.

எனினும், அவரது பேச்சு, சர்வதேச உறவுமுறை சட்டங்களுக்கு முரணாக, பயங்கரவாதிகளின் புகலிடம் கண்டா என்பதை பட்டவர்த்தனமாக்கி உள்ளது.

நம்ம நாட்டு சுற்றுலா: கொனார்க் சூரியக் கோயில்!

konark sun temple - 2026
#image_title

10. கொனார்க் சூரியன் கோயில் (தொடர்ச்சி)

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

கட்டடத்தின் சிறப்பு:

          கலிங்க கட்டிடக்கலை அமைப்புப்படி, 7 குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களுடன் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருள்வது போல தேர் வடிவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 7 குதிரைகள் 7 நாட்களையும், 24 சக்கரங்கள் 24 மணி நேரத்தையும் குறிக்கும். நாழிகை, நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சூரியனின் நகர்வுக்கு ஏற்பவும், சூரிய ஒளியானது மூலவரின் சிலை மீது படும் வகையிலும் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.

          இந்தக் கோயிலின் தனித்தன்மையை உணர்ந்து, இதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ. கலிங்க கட்டிடக் கலையில் விமானம், கோபுரம், கற்ப கிரகம், மக்கள் கூடும் மண்டபம், நாடக/நடன மண்டபம், தரிசன மண்டபம், அன்னதான சாலை, கோபுரம்தான் முக்கிய அங்கங்கள். கோயிலின் கோபுரம் 1676ஆம் ஆண்டிலிருந்து கருப்பு நிறமாக உள்ளது. இதனால் இது ‘கருப்பு பகொடா’ என்று அழைக்கப்பட்டது. பிரதான கோயிலில் 229 அடி உயரம் கொண்டது விமானம். இங்குள்ள மண்டபத்தில் ஜகன்மோஹனா எனப்படும் தரிசன அரங்கம் 128 அடி உயரமுடையது.

தேர்ச்சக்கரத்தின் சிறப்பு

          இங்குள்ள தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. இந்த தேரின் சக்கரத்தை நாம் தினமும் கையாளுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 10 ரூபாய் நோட்டின் பின்னால் இருப்பது கொனார்க் சூரிய கோயிலின் தேர்ச்சக்கரமே.

          தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 9 அடி, 9 அங்குலம் என்ற கணக்கில் 8 பெரிய ஆரைகளும், பெரிய ஆரைகளுக்கு இடையில் 8 சிறிய ஆரைகளும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சக்கரம் ஒரு முழு நாளை குறிக்கும். பெரிய 8 ஆரைகள் 24 மணிநேரத்தை 8 ஆகப் பிரிக்கும். அதாவது ஒரு ஆரை 3 மணி நேரக்கணக்கு. இடையில் உள்ள சிறிய ஆரை ஒன்றரை மணி (90 நிமிடங்கள்) நேரக் கணக்கு.

ஒரு பெரிய ஆரைக்கும் ஒரு சிறிய ஆரைக்கும் இடையில் முப்பது முத்துபோன்ற அமைப்புகள் உள்ளது. ஒவ்வொரு முத்தும் 3 நிமிட அளவுகளைக் கொண்டது. இதைக் கொண்டு ஒரு நாளின் நேரத்தை இதில் விழும் சூரிய நிழல் மூலமாகத் துல்லியமாக கணக்கிட முடியும். சக்கரங்கள் முழுவதும் சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளன.

கட்டிட நுணுக்கங்கள்

          இக்கோயில் சிவப்பு மணற்பாறை கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள பெரும்பாலான கற்கள் அனைத்தும் நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களைக் கொண்டுள்ளன. இது மூன்று வகை கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இதில், கோண்டலைட் பாறைகள் எனப்படும் பாறை அமைப்புகள் திடம் குறைவானவை. எளிதில் அரிக்கக்கூடியது. இதனை எழிலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டிடம் சிதைந்ததற்கு இந்த பாறைகூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை வடிவமைத்த கலைஞர்கள் ‘ஆஷ்லார்’ (Ashlar Technique) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டிடத்தில் கற்கள் சேருமிடம் தெரியாத அளவு இதை வடிவமைத்துள்ளனர். மிகவும் சிறிய இடங்களில் கூட இதை வைத்து அலங்கரித்துள்ளனர். சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்ற விதிப்படி கொனார்க் கோயில் கிழக்கு – மேற்கு வாயில்கள் திட்டவரைவைக் கொண்டது. சூரியன் என்றாலே சமஸ்கிருத முறைப்படி 7 குதிரைகள் (காயத்ரி, திருஷ்டுப், அனுஷ்டுப், பிரகதி, பங்க்தி, ஜகதி, உஷ்ணிக்) பூட்டிய ஒரு தேரில் வருவதாய் தான் உருவங்கள் இருக்கும். அந்த அமைப்பையே அடிப்படையாகக் கொண்டு ஒரு தேர் அமைப்பிலான கோயிலையே கட்டியுள்ளனர்.

          கொனார்க் சூரிய கோயிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோயில்கள் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. அதிலொரு கோயில் சூரிய பகவானின் மனைவியான சாயாதேவியுடையது.

          கொனார்க் கோயிலின் முகப்பில் உள்ள சிலையே சிறப்புமிக்கது. ஏனெனில், பேய்களை அடக்கி ஒரு யானை அதன் மீது படுத்திருக்கும். அந்த யானையை அடக்கி ஒரு சிங்கம் அமர்ந்திருக்கும். இந்த கம்பீர தோற்றமே நம்மைப் புல்லரிக்கச் செய்து நம்மை வரவேற்கும்.

          சூரிய பகவான் சிலை அருகில் உஷா மற்றும் பிரத்யுஷா என்ற இரண்டு பெண் தெய்வங்களின் சிலைகள் உள்ளன. உஷா என்றால் காலை; பிரத்யுஷா என்றால் மாலை. மண்டபத்திலிருந்து வெளியே வரும் படிக்கட்டின் இருபுறமும் பைரவர், யாளி போன்ற சிலைகள் கம்பீரமாய் நிற்கும். பிரதான மண்டபத்தின் வலப்புறம் குதிரையும், இடப்புறம் யானை சிலைகளும் உண்டு. அது தவிர்த்து வலப்புறத்தில் மகாதேவி கோயிலும், சிறிய வைஷ்ணவ கோயிலும் அமைந்திருக்கும். போஜன மண்டபத்தில் சமையலறை, கிணறு போன்ற அமைப்புகளும் உள்ளது.

வியக்கவைக்கும் சிலைகள்

          “இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியைத் தாண்டிச் செல்கிறது” என்று வியந்து கூறியிருக்கிறார் ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரிய கோயிலின் சிற்பங்கள். இந்தக் கோயிலுக்கு வரும் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று பருவத்தினருக்கும் மகிழ்ச்சி சேர்க்கும் வகையில் தனித்தனியாகச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

          சிறுவர்களுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக ஊடல், கூடல், ஆடல் போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் கண்டுகளிக்க ஆன்மிக சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கோயிலின் அடிவாரம் முதல் கிரீடம் வரை உள்ள சுவர்கள் அழகிய சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மொட்டை மாடிகளில் வீணை, மார்டலா போன்ற பல்வேறு இசைக்கருவிகளை வைத்திருக்கும் ஆண் மற்றும் பெண் இசைக் கலைஞர்களின் கற்சிலைகள் உள்ளன. இதுபோன்ற மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் கல்லிலே காட்சியோட்டம் காட்டுவது போல் ஏராளமான சிற்பங்கள் அமைந்துள்ளன.

          கொனார்க் சூரிய கோயிலைச் சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

மீண்டும் அத்துமீறும் சீனா: பூடான் பள்ளத்தாக்கில் கட்டிடம் கட்டுகிறது!

china construction in bhutan - 2026
#image_title

ஒருபுறம் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டு, உலகத்துக்கு உத்தம வேடம் போட்டுக் கொண்டிருக்கும் சீனா, மறுபுறம், தனது வழக்கமான ஆக்கிரமிப்பு வேலையையும் காட்டிக் கொண்டிருக்கிறது.

அருணாச்சலப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள பூடான் பள்ளத்தாக்கில் அத்துமீறி கட்டிடம் கட்டி வருகிறது சீனா. இது குறித்த சாட்டிலைட் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பூடானின் ஜகுர்லாங் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி நுழைந்து கட்டிடங்கள் கட்டுகிறது. இது, மேற்குவங்கத்தின் சிலுகுரி பாதையை ஆக்கிரமிக்கும் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பூடான் நாட்டின் கிழக்கு எல்லையில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் அமைந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பூடானுக்கு சொந்தமான ஜாகர்லாங் என்ற பள்ளத்தாக்குப் பகுதி உள்ளது.

இந்தப் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இப்பகுதியை தங்களது மேய்ச்சல் பகுதி என்று கூறுகிறது சீனா. இந்த நிலையில் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளின் பேராசிரியர் ராபர்ட் பார்னெட் அளித்த பேட்டியில், ‘ஜாகர்லாங் பகுதியை கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது’ என்று கூறினார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜாகர்லாங் பகுதியில் 192க்கும் மேற்பட்ட குடியிருப்பு வளாகங்களை சீனா கட்டமைத்து வருகிறது. அமெரிக்காவின் மேக்சர் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கட்டுமானப் பணிகள் நடப்பதை உறுதி செய்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இப்பகுதியில் சீன அரசு கட்டிடங்களைக் கட்டி வருவதாகத் தெரிகிறது. பூடான் – சீனா இடையிலான எல்லைப் பேச்சுவார்த்தை ஒருபுறம் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, மறுபுறம் சீனாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு இருப்பதாக பூடான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பூடானுக்குச் சொந்தமான பகுதியில் சீனா கட்டுமானங்களை நிறுவுவதற்கு முக்கியக் காரணம், மேற்குவங்க மாநிலம் சிலுகுரி வழியாகச் செல்லும் இந்தியாவின் பாதையைக் கைப்பற்றுவதற்காக இருக்கலாம் என்கின்றனர்.

பாரதத்தின் வடகிழக்கு மாநிலங்களை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் பாதையாக சிலுகுரி பாதை அமைந்துள்ளது. எனவே சீனாவின் பூடான் ஆக்கிரமிப்பானது, சிலுகுரி பாதையை ஆக்கிரமிக்க திட்டமிட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இனி… பார்வையாளர் அனுமதிச் சீட்டு கிடையாது! ஓம் பிர்லா முடிவு!

attack on parliament day - 2026
#image_title

மக்களவையில் இன்று நடைபெற்ற புகைப் பொருள் வீச்சு சம்பவத்தை அடுத்து இனி பார்வையாளர் மாடத்துக்கான அனுமதிச்சீட்டு வழங்குவதை நிறுத்தப் போவதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று மதியம், சபை நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென கீழே குதித்த இருவர் கோஷமிட்டு கொண்டே மக்களவைத் தலைவரை நோக்கிச் சென்றனர். அவர்கள் தங்கள் ஷூவில் மறைத்து வைத்திருந்த காஸ் சிலிண்டரில் இருந்து வண்ணப் புகை வெளியேறச் செய்தனர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிப்பட்டது.

அவை உறுப்பினர்களை பீதிக்கு உள்ளாக்குவதுதான் அவர்களின் நோக்கம் என்று தெரிகிறது. இச்சம்பவத்தில் சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தாலும், வேறு சில உறுப்பினர்கள் அந்த இருவரையும் துணிந்து மடக்கிப் பிடித்து அங்கு விரைந்து வந்த சபை காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் நடந்த அதே நேரம் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷமிட்டபடி புகை குண்டுகளை வீசினர். அவர்களும் காவல்துறையால் பிடிக்கப்பட்டனர். நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் புதுதில்லி துணை ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.

மக்களவையின் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயன்ற, சாகர் சர்மா, மனோரஞ்சன் எனப்படும் இரு நபர்களும் பார்வையாளர்களாக உள்ளே சென்று சபை நடவடிக்கைகளை காண, எம்.பி.க்களின் பரிந்துரையில் வழங்கப்படும் அனுமதிச்சீட்டுக்களைப் பெற்றிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, பார்வையாளர் மாடத்தில் செல்பவர்களுக்கான அனுமதிச் சீட்டு வழங்குதலை நிறுத்த அவைத்தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட புதுதில்லியில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவைத்தலைவர் ஓம்பிர்லா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்து உரிய அறிக்கையாக தர வேண்டும் என அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனி நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலில் எம்பி.க்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும் . எம்பி.,களின் உதவியாளர்கள் யாரும் பிரதான நுழைவு வாயிலில் வர அனுமதியில்லை.

சோதனையிட ஸ்கேன் மிஷன் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் பொருத்தப்படும். பார்வையாளர்கள் மாடத்தில் கண்ணாடி தடுப்புகள் பொருத்தப்படும்.

நாடாளுமன்ற அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் தனி பாதையில் வர வேண்டும். பார்வையாளர்கள் கால தாமத்துடன் வந்தால் அவர்கள் அதற்கான தனி பாதை வழியாக வரவேண்டும்.

மக்களவை மற்றும், மாநிலங்களவையில் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்

எட்டையபுரம் பாரதி விழா: எழுத்தாளர்கள் ஆனந்தன், சரவணபாரதி உள்ளிட்டோருக்கு பாரதி இலக்கிய விருதுகள்!

bharathi award for journalist saravanan - 2026
#image_title

எட்டையபுரத்தில் பாரதி பிறந்த நாள் விழா டிச.11 அன்று கொண்டாடப்பட்டது. இதில், எழுத்தாளர்கள் ‘ஆணைவாரி’ ஆனந்தன், ‘தமிழ்நண்பன்’ சரவணபாரதி உள்ளிட்டோருக்கு பாரதி இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.

பாரதியார் மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் தமிழ்நண்பன் தி. சரவணபாரதிக்கு பாரதி பணிச்செல்வர் விருதையும், கவிஞர் ஆணைவாரி ஆனந்தனுக்கு பாரதி இலக்கியச்செம்மல் விருதையும் வழங்கினார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் முனைவர் மாலினி அனந்தகிருஷ்ணன். அப்போது, எழுத்தாளர் சங்கத் தலைவர் கோ, பெரியண்ணன், பொதுச்செயலர் இதயகீதம் ராமானுஜம் ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் (டிசம்பர் 11) மகாகவி பாரதியின் 142 வது பிறந்தநாள் பெருவிழா அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.

பன்னாட்டு கருத்தரங்கம்: கலசலிங்கம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் ஆஸ்திரேலியாவில் உள்ள அகில உலகத் தமிழ் முழக்க களம் அமைப்பின் நிறுவனர் முனைவர் மாலினி ஆனந்தகிருஷ்ணன், இலண்டன் ஐக்கிய ராஜ்ய தமிழ் துறை, எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த எழுத்தாளர் கல்யாணி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு திசை காட்டும் பாரதி எனும் தலைப்பில் பன்னாட்டு உரை நிகழ்த்தினர்.

கலசலிங்க பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் சங்கீதா வரவேற்றார். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இதய கீதம் ராமானுஜம் நோக்க உரையாற்றினார். தேசிய தலைவர் முனைவர் கோ. பெரியண்ணன் தொடக்க உரையாற்றினார்.

கலசலிங்க பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் ஸ்ரீதரன், இணை வேந்தர் முனைவர் அறிவழகி ஆகியோர் தலைமை உரையாற்றினர். பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இளம் பாரதி மற்றும் மகாகவி பாரதி விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகிகள் புலவர் நாக சொக்கலிங்கம் , அக்கினி பாரதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசைக்கவி சண்டமாருதம் நன்றியுரையாற்றினார். விழாவில் கலசலிங்க பல்கலைக்கழக தமிழ் துறை மாணவர்கள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பாரதியார் ஊர்வலம் : இவ்விழாவிற்கு முன்னதாக பாரதியார் பிறந்த எட்டையபுரம் இல்லத்தில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன் தொடர்ச்சியாக பாரதியார் நினைவு ஊர்வலம் நடைபெற்றது.

விருதுகள் வழங்கல் : இதைத்தொடர்ந்து பாரதியார் மணி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பாரதி அன்பர்களுக்கு பாரதியார் இலக்கிய விருது மற்றும் பாரதி பணிச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன.

சேத்தியாதோப்பு தமிழ்ச் சங்கத் தலைவர்
கவிஞர் ஆணைவாரி ஆனந்தனுக்கு பாரதி இலக்கிய விருதும், எழுத்தாளர், தமிழ்நண்பன் தி. சரவணபாரதிக்கு பாரதி பணிச்செல்வர் விருதும் வழங்கப்பட்டன.


தகவல் : கவிஞர் அக்னிபாரதி, (மக்கள் தொடர்பாளர், எழுத்தாளர் சங்கம்)


டிச.13: தீபம் நா. பார்த்தசாரதி நினைவு தினம்

na parthasarathy - 2026
#image_title

தீபம் நா.பா.வின் ஒளிவீசும் பொன்மொழிகள்!
(நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை.)

திருப்பூர் கிருஷ்ணன்

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்தத் தனித்தன்மை காரணமாகவே அவர்கள் இலக்கிய உலகில் நிலைபெற்று இன்றளவும் பேசப்படுகிறார்கள்.

தி. ஜானகிராமன் என்றால் அழகியல், ராஜம் கிருஷ்ணன் என்றால் கள ஆய்வு, ஆர். சூடாமணி என்றால் உளவியல், ஜெயகாந்தன் என்றால் விவாதக் கோணம், லா.ச.ரா. என்றால் தத்துவப் பார்வை, கி.ராஜநாராயணன் என்றால் வட்டார வழக்கு…என்றிப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படிப் பார்த்தால் மாபெரும் சாதனையாளராக விளங்கிய தீபம் நா.பார்த்தசாரதி படைத்த இலக்கியத்தின் தனித்தன்மை என்ன?

அவரது தனித்தன்மை மொழியின் சொல்நயங்கள் அனைத்தும் துலங்கும் வகையில் அமைந்த அவரது நடைதான். காலில் சலங்கை கட்டிக்கொண்டு தமிழ்ச் சொற்கள் ஜல்ஜல் எனக் கொஞ்சுகிற அழகை நா.பா. நடையில் நாம் மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கலாம்.

`அவள் பார்வையே ஒரு பேச்சாய் இருந்ததென்றால் அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது` என்றெல்லாம் சொற்களை மடக்கிப் போட்டு எழுதும் ஆற்றல் அவருக்கே உரியது. கையெழுத்தைப் பற்றிச் சொல்லும்போது `தேர்ந்து பழகிய கை பூத்தொடுத்த மாதிரி இருந்த கையெழுத்து` என எழுதுவார். (அவர் கையெழுத்தே அப்படித்தான்.)

அத்தகைய எழில் நிறைந்த வரிகள் நம்மைக் கவரும். படித்து நெடுநாள் ஆனாலும் நம் மனத்தில் அந்த வரிகள் மின்னிக் கொண்டே இருக்கும். சில வரிகள் மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கும். சில வரிகள் நம் வாழ்க்கைக்கே வழிகாட்டும்.

இந்த வரிகள் பலதரப்பட்டவை. இன்றைய அரசியல், இன்றைய சினிமா, இன்றைய வாழ்வியல், இன்றைய கலை எனப் பற்பல துறைசார்ந்து அவர் தம் சிந்தனைகளை அழகழகான தமிழ்ச் சொற்களில் பொதிந்து வைத்திருக்கிறார்.

நா.பா.வின் படைப்புகளில் இருக்கும் இத்தகைய வரிகளில் பல, படைப்பிலிருந்து தனியே எடுத்தாலும் உயிரோட்டத்துடன் இருப்பவை. அவற்றைப் படைப்போடு சேர்க்காமல் தனி வரிகளாகக் கூட நம்மால் படித்து வியந்து ரசிக்க முடியும்.

உண்மையில் அவரது படைப்புகளைச் சிறப்பாக்குவதே இத்தகைய முத்து முத்தான வரிகள் தான். நாவலின் அத்தியாயங்களின் முகப்பிலும் சிறுகதைகளின் முகப்பிலும் உள்ளிருக்கும் அத்தகைய வரிகளைத் தனியே எடுத்துக் கட்டம்கட்டி வெளியிடும் வழக்கத்தை நா.பா. கையாண்டார்.

தொடராக வரும்போது மட்டுமல்லாமல் புத்தகமாக உருவாகும்போதும் அந்த வரிகள் படைப்பின் உள்ளே வருவதோடு கூட, தனியே படைப்பின் முகப்பிலும் வரவேண்டும் என்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.

நா.பா. தரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கையிலும் நிறைய எழுதிக் குவித்த படைப்பாளி.

ஐம்பத்து நான்கு வயதே வாழ்ந்த அவர், தன் குறுகிய வாழ்நாளில் எப்படி எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான படைப்புகளை எழுதினார் என்பது பெரும் ஆச்சரியம்.

படைப்புகள் அவரிடமிருந்து பொங்கிப் பிரவகித்தன என்பதே உண்மை. நாள்தோறும் எழுதியவர் நா.பா.

நா.பா.வின் மாபெரும் இலக்கியக் கடலில் உள்ள அழகிய பொன்மொழி முத்துக்களைத் தேடி எடுத்துத் தொகுத்துப் புத்தகமாக்கினால், அது ஒரு பெரிய இலக்கியச் சேவையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சுலபத்தில் சாத்தியப்படாத ஒரு சவாலான பணி அல்லவா அது ? நா.பா.வின் படைப்புகளிலிருந்து பொன்மொழிகளைத் தொகுக்கும் பணியை நா.பா.வின் படைப்பே மேற்கொண்டால்? அது இன்னும் விசேஷம்தான்.

நா.பா.வின் படைப்பான அவரது புதல்வி செல்வி நா.பா. மீரா, நா.பா. படைப்புகளிலிருந்து அரிய முத்துக்களைத் தேடித் தேடித் தொகுக்கலானார். அவர் தொகுத்த பொன்மொழிகளில் பல தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமே பொருந்துவதாக இருந்ததை மீரா எண்ணிப் பார்த்தார்.

திருக்குறள் எந்தச் சார்புமற்ற உலகப் பொதுமறையாக இருப்பதைப் போல, நா.பா.வின் பொன்மொழித் தொகுப்பும் கூட அனைவர்க்குமான உலகப் பொதுமறைதான் என அவர் கருதினார். அப்படியானால் இந்தத் தொகுப்பு தமிழில் மட்டும் இருந்தால் போதுமா, ஆங்கிலத்திலும் இருக்க வேண்டியது அவசியமல்லவா எனவும் சிந்தித்தார்.

நா.பா. பொன்மொழிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியைச் செய்ய நா.பா.வின் மூத்த புதல்வி திருமதி பூரணியின் கணவர் திரு சம்பத்குமார் முன்வந்தார்.

நா.பா.வின் புதல்வர் நாராயணன், தன் ஒரு சகோதரிக்கும் இன்னொரு சகோதரி கணவருக்கும் அவரவர் பணிகளில் உதவி செய்தார். கொஞ்ச காலக் கடின உழைப்பில் இதோ `பொன்மொழிப் புதையல்` நூல் உருவாகிவிட்டது.

நா.பா.வின் தீவிர வாசகர்கள் மட்டுமல்ல, நா.பா. குடும்பத்திலுள்ள அனைவரும் நா.பா. எழுத்தின்மேல் பெரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்கும் இந்த நூல் சான்றாகிறது.

ஓர் எழுத்தாளரைச் சமூகம் மதிப்பதோடு கூட, அவரது குடும்பத்தினரும் மதிக்கிறார்கள் என்றால், அந்த எழுத்தாளர் தனிமனித ஒழுக்கத்தோடும் சமுதாய ஒழுக்கத்தோடும் வாழ்ந்து குடும்பத்தினர் மேல் அளவற்ற பாசம் செலுத்தி குடும்பத்தினரையும் கவர்ந்திருக்கிறார் என்றுதானே பொருள்?

நா.பா. இலக்கியத்தில் சகோதரி கமலம்சங்கர், கே.ஆர். லதா உள்பட எத்தனையோ பேர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். நா.பா. காலமான பிறகு அவரது எழுத்தின் தகுதி காரணமாக அவர் எழுத்து நாட்டுடைமை ஆகியிருக்கிறது.

நா.பா. காலத்திற்குப் பின் அவர் எழுத்தை ஏராளமான பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன. இவையெல்லாம் நா.பா. இலக்கியத்தைக் கொண்டாடும் வகையிலான உயர்தரப் பணிகள்தான்.

இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியாகியுள்ள `பொன்மொழிப் புதையல்` என்ற புத்தகம், நா.பா. இலக்கியம் தொடர்பாக நிகழ்ந்துள்ள பணிகளில் ஒரு மணிமகுடம் எனலாம்.

அவ்வகையில் தந்தையின் புகழுக்கு மகுடம் சூட்டியிருக்கும் அவர் மகளான நா.பா. மீராவையும் திருமதி பூரணியின் கணவரும் நா.பா.வின் மாப்பிள்ளையுமான திரு சம்பத்குமார் அவர்களையும் நா.பா.வின் புதல்வரான என் அன்பிற்குரிய திரு நாராயணனையும் மனமார வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். வாசகர்கள் இந்த அரிய நூலை வாசித்துப் பயனடைவார்களாக.

(புத்தகத்தின் தொகுப்பாளர்: முனைவர் நா.பா. மீரா, புத்தகம் கிடைக்குமிடம்: எண் 8. மேற்கு சாலை, மேற்கு சிஐடி நகர், சென்னை – 600 035, விலை ரூ 110. அலைபேசி: 99622 95876)

சிறுவன் கழுவிய அறுவை சிகிச்சைக் கருவிகள்; வீடியோ வெளியிட்ட நிருபர் கைது!

Dhinasari Home page

உண்மையை சொல்லும் தைரியம் யாருக்கும் வரக் கூடாது! அடக்குமுறையால் பத்திரிக்கையாளர் கைது! – என்று, அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் சிறுவனால் கழுவப்பட்ட வீடியோ வைரலான விவகாரத்தில், இந்துமுன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனது தந்தை காலில் உள்ள விரலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதித்திருந்த நிலையில், அவரது காலில் அறுவை சிகிச்சை செய்து முடித்த பின்பு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய உபகரணங்களான கத்திரிக்கோல் போன்றவற்றை அவரது மகனிடம் (சுமார் 9 வயது மதிக்கத்தக்க சிறுவனிடம்) கொடுத்து கழிவறை அருகே உள்ள கை கழுவும் கோப்பையில் கழுவி வர சொல்லி உள்ளனர்.

(பொதுவாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கத்தி கத்திரிக்கோல் போன்ற அனைத்து பொருட்களையும் கொதி நீரில் நன்றாக சுத்தம் செய்த பின்பு(Sterilize) பயன்படுத்துவது தான் மருத்துவமனையின் வழக்கம்).

அந்த சிறுவன் கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு கழிவறை அருகே உள்ள இடத்தில் அதனை கழுவும் போது அந்த மருத்துவமனைக்கு தனது உறவினரை பார்ப்பதற்கு எதிர்ச்சையாக வந்திருந்த செய்தியாளர் இன்பராஜ் என்பவர் இந்த அவலத்தை கண்டு உடனடியாக தனது செல்போனில் படம் பிடித்து, செய்தியாளர் குழுவில் பதிவிட்டுள்ளார். அது சமூக ஊடகங்களில் விரைவாக பரவியது.

இந்த நிலையில் நேற்று மதியம் மருத்துவமனை முதல்வர் சிவகுமார் தவறு நடந்துள்ளது என்பதாக ஒத்துக் கொண்டு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று மாலை 5:30 மணி அளவில் அதே முதல்வர் அந்த நோயாளியிடம் வற்புறுத்தி ஒரு புகார் கம்ப்ளைன்ட் தயார் செய்து தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்து செய்தியாளர் இன்பராஜ் மீது வழக்கு பதிவு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இதன் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ள தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் செய்தியாளர் இன்பராஜ் மீது பொய் வழக்கு பதிவு செய்து இன்று காலை அவரை கைது செய்து பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின் ஸ்டேஷன் ஜாமீனில் விடிவித்துள்ளனர்.

வீடியோவின் உண்மைத்தன்மையை விசாரித்து கண்டறியாமல் நடந்த தவறை மூடி மறைக்கும் வண்ணம் அதனை வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

உண்மையான நிகழ்வுகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்து முன்னணி என்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு உண்மை சம்பவங்களை இது போல் வெளிக்கொண்டுவரும் நபர்களின் மீது அடக்கு முறையை பயன்படுத்தும் தமிழக அரசை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.