டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நான்கரை மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத (தனுர்) பூஜைக்காக அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் பகல் 11.30 மணியளவில் நடை அடைக்கப்பட்டு. மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் இரவு பள்ளியறை பூஜை முடிந்தபின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் அதிகாலையில் எழுந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பெண்கள், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.
இதே போல், திருப்பரங்குன்றம் வேயிலுக்குகந்த அம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தனூர் மாத பூஜையை யொட்டி, பக்தர்களுக்கு காலையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரச்சனையை தூண்டிவிட்டு அதை ஆக்கிரமிப்பதற்கு பல்வேறு வழிகளில் திமுக அரசு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என பொது தீட்சிதர்கள் விளம்பர பலகை வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்துள்ளது. அதிகமான கூட்டம் இருக்கும் காலங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தள்ளு முள்ளு ஏற்படாமல் தவிர்க்கவும் கூட்ட நேரத்தில் மட்டும் கனக சபையில் ஏறி தரிசனம் செய்ய ஆலயத்தை நிர்வகிக்கும் தீட்சிதர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் ஆலயத்திற்கு சம்மந்தமில்லாத இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு வேண்டுமென மனு கொடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், இராமேஸ்வரம் ஆகிய ஆலயங்களில் பக்தர்களை காவலர்கள் தாக்கும் போதும் வேடிக்கை பார்த்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சம்மந்தமில்லாத இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தது வேடிக்கையாக உள்ளது.
அறநிலை துறை வசமுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் பராமரிப்பு இன்றி பாதுகாப்பு இன்றி பாலடைந்து வழிபாடு இல்லாமல் இருக்கும் போது அந்தக் கோவில்கள் மீது எல்லாம் இல்லாத அக்கறை சிதம்பரம் நடராஜர் கோவில் மீது எப்படி வருகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இது முழுக்க முழுக்க அறநிலையத்துறைக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் மீது உள்ள வன்மமே காரணம்.
ஆகவே சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அதனை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு காவல் துறையும் அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
மேம்பாலம் கட்டுவதால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்காது. உலகில் வளர்ந்த நாடுகளில் நகரங்களுக்குள் மேம்பாலங்கள் கிடையாது என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச்சினார் அன்புமணி. அப்போது அவர் கூறியதாவது:
பீஹார், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்கள் போல் தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் தயங்குவது ஏன்? சமூக நீதி பேசும் திமுக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? சமூக நீதி பேசும் திமுக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? இல்லையெனில் சமூக நீதி குறித்து திமுக பேச கூடாது.
ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் மாவட்டங்களில் அடுத்த 1 வாரத்திற்கு அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இல்லையெனில் அந்த பணம் டாஸ்மாக் கடைக்குதான் போகும்.
மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தின் பெருமை அதனை பாதுகாக்க வேண்டும். மேம்பாலம் கட்டுவது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடையாது. உலகில் வளர்ந்த நாடுகளில் நகரங்களுக்குள் மேம்பாலங்கள் கிடையாது.
தமிழகத்தில் மது விற்பனையை போல் கஞ்சா விற்பனை உச்சத்திற்கு சென்றுள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நமது கலாச்சாரம் கிடையாது. தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் வணிகமாக மாறிவிட்டது.
சேலத்தில் நிலவி வரும் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதில்லை. மேட்டூர் உபரிநீர் திட்டத்தை தலைவாசல் வரை கொண்டு செல்ல வேண்டும். திருமணிமுத்தாறு, சரபங்கா நதிகளை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.
சேலத்தில் எத்தனையோ மேம்பாலங்கள் கட்டியும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய முடியவில்லை. இரும்பாலையை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது.
மக்கள் நலத்திட்டங்களை செய்ய திமுக அரசு தயங்குகிறது. 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்டும் மாவட்டங்களில் அடுத்த 1 வாரத்திற்கு டாஸ்மாக் கடையை மூட வேண்டும்; இல்லையெனில் அந்த பணம் டாஸ்மாக் கடைக்குதான் போகும்
மேம்பாலங்களை கட்டுவது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகாது. தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க போதை ஒழிப்பு பிரிவில் 20 ஆயிரம் காவலர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் கோடி கணக்கில் இளைஞர்கள் வேலை இன்றி உள்ளது.
டிஎன்பிஎஸ்சியை மூடி விடலாம். ஆளுநருக்கும் அரசுக்கும் உள்ள பிரச்சினையில் மக்கள் ஏன் பாதிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இந்த ஆண்டுதான் குறைந்த எண்ணிக்கையில் அரசு நியமனம் நடைபெற்றுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 1.20 லட்சம் அரசு நியமனம் செய்வோம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு 5 ஆயிரம் பணி நியமனம் கூட இல்லை. தமிழ்நாடு அரசு வாட்டர் மேனேஜ்மென்ட் ஸ்ட்ரக்சருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
டோக்கியோ போன்ற நகரங்களை முன் உதாரணமாக கொண்டு சென்னையில் மழைநீர் வடிகால்வாய்களை அமைக்க வேண்டும். சென்னையில் 10 ஏரிகளை உருவாக்கி வெள்ள நீரை ஏரிக்கு கொண்டு செல்லலாம். லஞ்சம் கொடுத்து ஏரியில் வீடு கட்டியவர்கள் தற்போது அனுபவிக்கிறார்கள். அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இதை விட பெரிய வெள்ளம் சென்னைக்கு வர உள்ளது.
இயற்கை பேரிடர்களை தடுக்க முடியாதுதான், ஆனால் சேதங்களை குறைக்க முடியும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த தெரியாமல் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதில் மட்டுமே குறியாக உள்ளனர்.
4000 கோடியில் மாபெரும் குளறுபடி உள்ளது. கடந்த 2 ஆட்சியிலும் வடிநீர் கால்வாய்க்கு செய்த பணிகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். சிபிசிஎல் ஒன்னும் தெரியாதது போல் நடித்து கொண்டிருக்கிறது.
திமுக அரசின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்தி இல்லை. சில அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் ஆணவமாக பேசினர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தின் பெருமை. 5 முதலமைச்சர் இங்கு பணியாற்றி உள்ளனர். பெருமை மிக்க இந்த அடையாள சின்னத்தை பாதுகாக்க வேண்டும். இதில் அரசியல் திணிக்க கூடாது. இடம் யாரிடம் இருந்தாலும் அதை பாதுகாக்க வேண்டும். யாருக்கும் அச்சுறுத்தலாக இருக்க கூடாது.
சபரிமலை சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேரளாவில் தீவிரமடைந்து வரும் கொரோனாவால் பெரிதும் அச்சம் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் கூட்டணி நிலைபாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக தென் தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு குழு. அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டுச் சென்றன.
தென்காசி : மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தென்காசி குற்றால அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
குற்றாலத்தில் குளிக்க தடை!
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் இடைவிடாத கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் தற்போது குளிக்க தடை விதிக்கப்பட்டது!
தாமிரபரணியில் வெள்ளம் – ஆட்சியர்கள் எச்சரிக்கை
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான உதவி எண்கள் அறிவிக்கப் பட்டிருக்கிறது.
அவசர உதவி எண்கள் அறிவிப்பு
மாவட்ட பேரிடர் கட்டுப்பாடு மையம் – 1077 மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் – 1070 மின்னகம் உதவி மையம் – 94987 94987
தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
குமரியில் படகு போக்குவரத்து நிறுத்தம்
கன்னியாகுமரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சுற்றுலாத்தலமான விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் சுற்றுலாப்பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அணைகளில் தளும்பும் தண்ணீர்
பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
குமரி, நெல்லையில் மழை அதிகம்!
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில், கன்னியாகுமரியில் இயல்பை காட்டிலும் 81 சதவீதமும், நெல்லையில், 61 சதவீதமும் கூடுதல் மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சேவியர் காலனியில் நீரோடையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை மாநகராட்சி அகற்ற நடவடிக்கை எடுக்காததால் தற்போது வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் விநாயகர் கோயில் பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. தாமிரபரணியில் அதிகமாக வெள்ளம் வருவதால் தாமிரபரணி, நம்பியார், கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்ட கால்வாயில் இன்று மாலை 4 மணிக்கு அம்பை சாலை வெள்ளாங்குழியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க வெள்ளோட்டம் பார்க்கும் வகையில் மழை வெள்ள உபரி நீரினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு. அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து வைக்க உள்ளார் என்று நிர்வாகம் சார்பில் தகவல் வெளியிடப் பட்டது.
பெய்த மழை அளவுகள்
தமிழ்நாடு, புதுச்சேரியில் 16-12-2023 காலை 0830 மணி முதல் 17-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்… அதிகாலை நேரத்தில் குவிந்த பக்தர்கள்…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
‘108’ வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமாகவும், ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலமாகவும், திருப்பாவை பாடல்கள் அரங்கேறிய புண்ணிய ஸ்தலமாகவும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிக்கு பூமாலைகளுடன், திருப்பாவை என்ற பாமாலையும் சூட்டி மகிழ்ந்த மார்கழி மாதத்தின் 30 நாட்களும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
கோவிலில் உள்ள குரடு மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள், திருப்பாவை பாடல்களை தங்க இழைகளால் நெய்யப்பட்ட பட்டுப்புடவையுடன் எழுந்தருளி, ஸ்ரீரெங்கமன்னார் சுவாமியுடன் காட்சி கொடுத்தார்.
திருமண வயதை அடைந்துள்ள பெண்கள், தங்களுக்கு சிறப்பான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று, ஸ்ரீஆண்டாள் கோவிலில் பாவை நோன்பிருந்து அம்பாளை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதனை முன்னிட்டும், இன்று மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டும் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அதிகாலை நேரத்தில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் முழுவதும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வரும்.
மார்கழி மாதத்தின் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் 23ம் தேதி (சனி கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை, பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீஆண்டாள் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உதயமான மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் (Modern Theaters Ltd) இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக நெடுஞ்சாலை துறை மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு நெடுஞ்சாலை துறை இடத்தில் உள்ளது என அமைச்சர் ஏ.வா.வேலு சொல்ல உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பரபரப்பான நேரத்தில் இப்போது உள்ள இளைய தலைமுறையினர் மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றி தெரிந்து கொள்ள பெரும் ஆசையில் இருக்க இதோ மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றிய வரலாறு உங்களுக்காக.1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) துவக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்.
தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளி நகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது . மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக் கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘திரௌபதி வஸ்திராபரணம்'(1934), ‘துருவன்'(1935), ‘நல்ல தங்காள்'(1935) ஆகிய படங்களில் பணி புரிந்தார். அக்காலத்தில் தமிழ்ப் படங்களுக்கு மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. டி.ஆர். சுந்தரம் குழுவினரும் கொல்கத்தா நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள். இவ்விரண்டு படங்களும் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்தன. ஒவ்வொரு முறையும் கொல்கத்தா செல்ல வேண்டுமா என நினைத்த சுந்தரம், சேலத்தில் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க எண்ணினார். சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை சுந்தரம் வாங்கினார். வளாகத்தினுள் நுழைந்தால், அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும்” என்று நினைத்தார். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தை போட்டுப்பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935 இல் “மாடர்ன் தியேட்டர்ஸ்” நிறுவனம் உருவானது.
படப்பிடிப்பு குறிப்பிட்ட தியதியில் தொடங்கி, குறிப்பிட்ட தியதியில் முடியவேண்டும் என்பதில் சுந்தரம் கண்டிப்பாக இருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்தினார். நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும். இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள். நடிகர், நடிகைகள் ஒப்பந்த முறையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அங்கு சேர்ந்து அறிமுகமாகி, புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர்களில் எம்.ஆர்.இராதா, எஸ். வி. இரங்கராவ், அஞ்சலி தேவி இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தன்னுடைய படங்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். ஜெர்மனியில் இருந்து ‘வாக்கர்’, ‘பேய்ஸ்’ என்ற இரண்டு ஒளிப்பதிவளர்களை வரவழைத்தார். இவர்கள் தந்திரக்காட்சிகள் எடுப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யு.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகியோர், பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்ந்தனர். படத்தில் நடிகர்_நடிகைகளின் பெயர்களையும், கலைஞர்களின் பெயர்களையும் காண்பிக்கும் முகப்புக் காட்சியில் படத்துக்குப்படம் புதுமையை சுந்தரம் புகுத்தினார். அதற்காக பெரும் பணம் செலவழித்தார்.அமெரிக்க இயக்குனரான எல்லிஸ் ஆர்.டங்கன், இவரது படங்களுக்கு இயக்குநராக அமைந்தார். ஆங்கிலம் பேசும் ஒரு அமெரிக்கர் தமிழில் படம் இயக்கியது அக்காலத்தில் ஓர் அதிசயமாகக் கருதப்பட்டது. டி.ஆர்.எஸ். தயாரிப்பில், எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களை வைத்து எல்லிஸ் ஆர்.டங்கன் 1950 இல் இயக்கிய படம் ‘மந்திரி குமாரி’. அதில் எம்.ஜி.இராமச்சந்திரனின் வாளெடுத்துப் போர் புரியும் அழகு மக்களால் இரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வசனங்கள் புதுமை, வேகம்,விறுவிறுப்பு கொண்டு சிறப்பாக விளங்கியது.
மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்
படத்தயாரிப்பில் தீவிரமாக இறங்கிய சுந்தரம் தனது முதல் தயாரிப்பாக “சதி அகல்யா” என்ற படத்தை தயாரித்தார். பிற்காலத்தில் “கவர்ச்சிக் கன்னி”யாகத் திகழ்ந்த இலங்கைக் குயில் தவமணிதேவி தான் இந்தப்படத்தின் கதாநாயகியாவார்.1937-இல் வெளிவந்த இப்படம் நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து, “பத்மஜோதி” என்ற படத்தையும் “புரந்தரதாஸ்” என்ற கன்னடப் படத்தையும் தயாரித்தார். 1938இல், “பாலன்” என்ற மலையாளப் படத்தைத் தயாரித்தார். மலையாள மொழியின் முதல் பேசும் படம் இதுதான். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் சுந்தரம் தயாரித்த படம் “நாம தேவர்.” இது, தமிழில் வெளியான 100_வது படம் என்ற பெருமையைப் பெற்றது. 1938_ம் ஆண்டில் “மாயா மாயவன்” என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது. இதில், டி.கே.சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகர் கதாநாயகனாக நடித்தார். நொட்டானி என்பவர் இப்படத்தை இயக்கினார். 1950-இல் எம். என். நம்பியார் நடித்து வெளியான துப்பறியும் கதை திகம்பர சாமியார், இந்நிறுவனம் எடுத்த முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகும்.
ஆர்.எஸ்.மனோகரை வைத்து கைதி கண்ணாயிரம் போன்ற படங்களையும் எடுத்தனர் . ஜெய்சங்கரை வைத்து பல 007 மாதிரியான துப்பறியும் படங்களையும் எடுத்திருக்கிறார். இவர்கள் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த நிறுவனத்தின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.
இந்தியாவின் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களை தனது சம்பளப் பட்டியலில் கொண்டிருந்த தனிப்பெருமை கொண்ட நிறுவனம்.
1963 இல் டி. ஆர். சுந்தரம் காலமானார். இப்போது சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் சுந்தரம் கார்டன்ஸ் என்ற குடியிருப்புப் பகுதியாக மாறியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரங்கின் நுழைவு வாயில் மட்டும் தற்போது நிலைபெற்றிருக்கிறது. இன்றைக்கும் சில படப்பிடிப்புக் குழுவினர் சேலம் மாடர்ன் தியேட்டர் வளாகத்தில் தனது முதல் படப்பிடிப்பைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நாட்களில், கடன் கிடைப்பது சுலபம், அதை அடைப்பது கடினம் என்றாகி விட்டது. இணையத்தில் ‘கடன்’ குறித்து நீங்கள் ஏதாவது தேடினால் கூட, உங்களுக்கு தொடர்ச்சியாக கடன் வழங்கும் நிறுவனங்களின் விளம்பரங்கள், செல்போன் மூலம் விடாமல் ‘கால்’ செய்து, “கடன் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று உயிரெடுப்பார்கள். இவற்றில் எல்லாம் மயங்கி கடன் வாங்கிக் கொண்டால், அதன் பின் படும் பாடு திண்டாட்டம்தான்!
இது தனிநபர் படும் திண்டாட்டம் என்று நாம் கவலைப்படுவதை விட, இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் சர்வதேச சதி, குறிப்பாக சீனாவின் சதிவலை இருப்பதை நினைத்தே அதிக கவலை ஏற்படுகிறது. நம் நாட்டின் பொருளாதாரத்தை, ஒரு புறம் பாகிஸ்தான், கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, சீரழித்து வந்தது. பிரதமர் மோடி புழக்கத்தில் இருந்த ரூ 500, ரூ.1000 உயர் நோட்டுகள் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம், இப்போது பாகிஸ்தான் வழியே நம் நாட்டிற்குள் வரும் கள்ள நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.
ஆனால் இன்னொரு அச்சுறுத்தலாக சீனாவின் மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் சுரண்டப்பட்டு வருவது, தேசத்தை நேசிப்பவர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சீனா எந்த விதத்தில் எல்லாம் நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து சுரண்டி கொழுக்கிறது என்பது, நம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. காரணம் இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு புழக்கத்தில் இருப்பவை. அவை பல நேரங்களில் சீனாவின் உளவு சாதனங்களாக இருந்து விடுவது அதிர்ச்சிகரமான உண்மை.
அண்மைய செய்தி ஒன்று, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணம் அனுப்பப்பட்டதாக சீன தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதும், கடந்தாண்டு, இந்த நிறுவனங்களில் நடத்திய சோதனையில், இந்தியாவில் வரி கட்டுவதை தவிர்க்க விவோ நிறுவனம் சீனாவிற்கு ரூ.62,476 கோடியை சட்ட விரோதமாக அனுப்பியதாக அமலாக்கத்துறை கூறியிருந்ததும் நம் கவனத்தை ஈர்த்திருக்கக் கூடும்.
ஒருபுறம் வரி ஏய்ப்பு மூலம் பாரதத்தின் வளத்தை சீனா கடத்திக் கொண்டு செல்கிறதென்றால், மறு புறம், விளையாட்டு கேம் செயலிகள், கடன் வழங்கும் செயலிகள் இவை மூலமாக, பாரத நாட்டு நடுத்தர ஏழைக் குடிமகனின் சிறுக சிறுக சேமிக்கும் செல்வத்தையும் சீனா, ஏதோ வழிகளில் தன் நாட்டுக்கு கொண்டு செல்கிறது. பாரத அரசும் அதனால் தான் அபாயகரமான சீன செயலிகளை நம் நாட்டுக்குள் செயல்பட அனுமதிக்காமல் தடை கொண்டு வந்தது.
அரசு சார்பில் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவை தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் தங்களுக்கென வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டெலகிராம் கணக்குகளைக் கொண்டுள்ளன. அவர்களது சமூகத் தளப் பக்கங்களை அதிகமானோர் பின்தொடரவும் செய்கின்றனர்.
அண்மையில் மகாதேவ் ஆன்லைன் சட்டவிரோத சூதாட்ட செயலி சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைய வழி வகுத்ததை நாம் அறிவோம். வெட்ட வெட்ட வளரும் விஷ மரங்களைப் போல வளர்ந்து கிளை பரப்பிக் கொண்டிருக்கின்றன ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள்! இப்படி சூதாட்ட இணையதளங்கள், கேமிங் ஆப்கள், கடன் செயலிகள், முக்கியமாக சீன தயாரிப்பு ஸ்மார்ட் ஃபோன்களிடம் அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருந்து கொள்வது, நமக்கும் நாட்டுக்கும் நற்பயனைத் தரும்!
இந்த வருடத்தின் தொடக்கத்தில் வந்த ஒரு செய்தியை நாம் புரிந்து கொண்டால், வருடத்தின் முடிவில் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற பார்வையை நாம் பலப்படுத்தலாம். ரூ.300 கோடி மோசடியில், 15 போலி சீன ஆப்கள் குறைந்த வட்டியில் கடன்களை வழங்குகின்றன என்றும், அவை குறித்த எச்சரிக்கையையும் அரசு வெளியிட்டது. இவ்வகையில், சுமார் 600 சீன லோன் ஆப்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.
குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதாகக் கூறி, அழைப்புகளை விடுத்து மக்களைச் சுரண்டிய, 15 போலி சீன ஆப்ஸ் மூலம் ₹ 300 கோடி மோசடி செய்ததை, உத்தரகாண்ட் காவல்துறை சைபர் பிரிவு கண்டறிந்து, குற்றவாளிகளின் கூட்டுக் கொள்ளையை தடுத்தது.
இது நடந்த விதமும் நாம் அனுதினம் சந்திப்பது போல்தான்! “சைபர் குண்டர்கள்” இந்த செயலிகளால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் குடும்பங்களுக்கு ஆபாசமான படங்களை அனுப்புவதன் மூலம் அச்சுறுத்துவார்கள், அதை அவர்கள் தொலைதூரத்தில் தங்கள் தொலைபேசிகளை இயக்கி, பதிவிறக்கம் செய்வார்கள்.
“உத்தரகாண்ட் காவல்துறை ஒரு கூட்டுச் சதியை முறியடித்தது. அங்கு சைபர் குண்டர்கள் மக்களுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள், அவர்களின் மொபைல் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து, குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவார்கள். இந்த செயல்பாட்டில், அவர்கள் தங்கள் புகைப்படத் தொகுப்பு மற்றும் ஆவணங்களை அணுகலாம். மிரட்டி பணம் பறிப்பதற்காக அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள்” என்றார் உத்தராகண்ட் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் தெரிவித்தார்.
அதாவது இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்வதென்றால், உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகச் சொல்லி, உங்கள் விவரங்களைக் கேட்பார்கள். பின்னர் ஒரு செயலியை அனுப்பி அதனை நிறுவச் செய்வார்கள். அதன் மூலம் நீங்கள் கடன் குறித்த விவரங்களை அப்டேட் செய்வதற்காக என்பார்கள். ஆனால், அந்த செயலி உங்கள் மொபைல் போனின் அனைத்து வித தகவல்களையும் திருடும். அதில் உள்ள புகைப்படங்கள், குறிஞ்செய்திகள் அனைத்தும். பின் உங்களுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி, வலையில் விழ வைத்து, மிரட்டிப் பணம் பறிப்பார்கள். இது ஒரு வகை.
இவ்வாறு செயல்பட்ட ஹெக்டர் லெண்ட்காரோ பிரைவேட் லிமிடெட் என்ற ஷெல் நிறுவனத்தைத் தொடங்கிய தில்லியைச் சேர்ந்த அங்கூர் திங்ரா உத்தராகண்ட் காவல்துறையால் இந்த வருட தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்த ஷெல் நிறுவனம், சீன லோன் ஆப்ஸ் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி வந்தது; ரூபாகோ, ரூபாய் ஹியர், லோன்யூ, குயிக்ரூபே, பஞ்ச் மணி, கிராண்ட் லோன், டிரீம்லோன், கேஷ்எம்ஓ, ரூபே எம்ஓ, கிரெடிட்லோன், லென்ட்கார், ராக்ஆன், ஹோப்லோன், லெண்ட் நவ், கேஷ்ஃபுல் இப்படி பல பெயர்களில் இந்த ஆப்கள் இயங்கின. இந்த லோன் ஆப்-கள், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தன.
இதை அடுத்து, வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களை அடிக்கடி குறிவைக்கும் சீன கடன் செயலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சட்ட அமலாக்க நிறுவனங்களை பாரத அரசு கேட்டுக் கொண்டது.
இவ்வாறு கடன் செயலிகள் வழங்கும் கடன்களைப் பெறும் பலரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் புரிந்து கொள்வதில்லை. அதிக வட்டி விகிதங்களைப் பற்றி அறிந்திருப்பதில்லை. சீன கடன் செயலி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கடன்களை வசூலிக்க சட்டவிரோத மற்றும் கொள்ளையடிக்கும் நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன. அந்த நிறுவனங்கள் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் தொடர்புகள் உட்பட ஒரு பயனரின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகின்றன. அதனை வைத்து, பணம் செலுத்த அவர்களை கட்டாயப்படுத்துகின்றன.
கடன் வாங்கியவர்களின் தொடர்பில் உள்ளவர்களையும் அழைத்து அச்சுறுத்துகின்றனர். அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக எஃப்ஐஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை எடுத்து அவற்றின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அரசு எவ்வளவுதான் முயன்றாலும், புதிது புதிதாக முளைக்கும் செயலிகள் அப்பாவி மக்களை ஏமாற்றவே செய்கின்றன. இதைத் தடுக்க ஒரே வழி, நாம் எச்சரிக்கையாக இருப்பதே!
சாம்சங் ஃபோன் வைத்திருப்போருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
சாம்சங் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான இந்திய கணினி அவசரநிலைப் மீட்புக் குழு (சிஇஆர்டி-இன்), ஆண்ட்ராய்டு பதிப்பு 11, 12, 13 மற்றும் 14ஐக் கொண்ட சாம்சங் காலக்ஸி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த வகை மாடல் செல்போன்களில், பல்வேறு வகையான பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதாக புகார்கள் வந்திருப்பதாகவும், செல்போனில் இருக்கும் பாதுகாப்பு வளையங்களை, ஊடுருவல்காரர்கள் எளிதாகக் கடந்துசெல்ல இந்த வகை மாடல் செல்போன்களில் வசதி இருப்பதாகவும், இதனால், செல்போனில் இருக்கும் மிக முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயமிருப்பதாகவும் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதாகவும் சிஇஆர்டி-இன் தெரிவித்துள்ளது.
சாம்சங் மொபைல் ஃபோன் பயனர்களுக்கு அரசு அதிக ஆபத்துள்ள எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது:
கணினி அவசர பதில் குழு (CERT-ல்), பாரத அரசின் நோடல் சைபர் செக்யூரிட்டி பிரிவு, பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள். CIVN-2023-0360 குறிப்புடன், 11, 12, 13 மற்றும் 14 ஆண்ட்ராய்டு பதிப்புகளில் இயங்கும் ஃபோன்களில் முக்கியமான பாதுகாப்புச் சிக்கல்களை முன்னிலைப்படுத்தி, பல பாதிப்புகள் குறித்து பயனர்களுக்கு CERT-In அதிக ஆபத்துள்ள எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், பாதிப்புகள் பதிவாகியுள்ளதால், ஊடுருவல்காரர்களைத் தவிர்க்க அனுமதிக்கிறது. இதில், தன்னிச்சையான குறியீட்டை இயக்குதல், ஹீப் ஓவர்ஃப்ளோவைத் தூண்டுதல், சிம் பின்னை அணுகுதல், சாண்ட்பாக்ஸ் தரவைப் படித்தல், நாக்ஸ் செக்யூரிடி லாக்கைப் புறக்கணித்தல் மற்றும் பல அம்சங்கள் இதில் குறைவுபட்டுள்ளன.
பாதுகாப்பு புதுப்பிப்புகள், பேட்ச் மென்பொருளை நிறுவ வேண்டும், பயன்பாடுகள், இணைப்புகள் மற்றும் அறியப்படாத இணையதளங்களை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த வகை போன் பயனர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
சாம்சங்கின் முதன்மை ஸ்மார்ட்போன் தொடர், தி Galaxy 23, ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைத்துள்ளது. சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி CERT-IN ஒரு குறிப்பில் சாம்சங் தயாரிப்புகளில் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் இது தாக்குபவர் செயல்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தாண்டி, அவர்களுக்கு முக்கியமான தகவல்களை அணுக அனுமதிக்கும். இலக்கு அமைப்பில் சமரசம் செய்ய அவர்கள் தன்னிச்சையான குறியீட்டை இயக்கலாம்.
பயனர்கள் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பாதுகாப்பு புதுப்பிப்புகளை நிறுவ அறிவுறுத்தப்படுகிறது. எதிர்காலத்தில், பயனர்கள் அவ்வப்போது விற்பனையாளர்களால் வெளியிடப்படும் பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் தங்கள் தொலைபேசிகளை இணைக்க வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பாதிப்புகளை அடைக்க நிறுவனங்கள் விரைவாக இணைப்புகளை வழங்குகின்றன. மேலும், உங்கள் மொபைலின் மென்பொருளை நீங்கள் பேட்ச் செய்யவில்லை என்றால், ஆப்ஸை நிறுவும் போதும், இணைப்புகளைக் கிளிக் செய்யும் போதும், தெரியாத இணையதளங்களைப் பார்வையிடும் போதும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீசிய நாட்டின் விரோதிகளையும் பேசவும் வேண்டும்… அதில் என்ன எதிர் கட்சிகளுக்கு தயக்கம்? இரு சார்பு மீதும் இவர்கள் எதிர் வினை ஆற்றினால் அதில் நேர்மை உண்டு!
நாடாளுமன்றத்தில் நடந்த புகை குண்டு வீச்சு அதன் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியாகச் சொல்லி எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள்.
நாடாளுமன்றம் என்பது எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் பொதுவானதுதான். நாடாளுமன்றத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அது அத்தனை மன்ற உறுப்பினர்களையும் சார்ந்தது தானே ஒழிய, நாடாளுமன்றத்தை ஆளுகிற அமைப்பின் மீது மட்டும்குறை சொல்லக்கூடாது.
பாதுகாப்பில் ஏற்படுகிற குளறுபடி என்பது அசம்பாவிதமாகவும் இருக்கலாம். அந்த வகையில் நாடாளுமன்றத்தின் மீது நடந்த அந்த புகைக்குண்டு வீச்சை நாங்களும் கண்டிக்கிறோம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லியிருக்க வேண்டும்.
அவையில் இருந்து எம்பிக்கள் நீக்க பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், நாட்டின் விரோதிகள் அமைதியின்மையை ஏற்படுத்தி தியாக தீபம் பகத்சிங் பெயரை சொல்லி திரிவதை பற்றி இந்த எதிர் கட்சிகள் பேசவும் இல்லை…ஏன்?
உலகின் வலிமைமிக்க இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அனைவரும் சேர்ந்து அதன் மாண்பை காப்பாற்ற வேண்டுமே ஒழிய, ஏதாவது நடக்கட்டும் இந்த ஆளுங்கட்சி பாஜக மட்டுமே அவப்பெயர் வரட்டும் அதையே சந்தர்ப்பசமாகக் கொண்டு எதிர்க்கட்சிகளாகிய நாம் போராட்டத்தை தொடங்கலாம் என்பது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல; எந்த விதத்திலும் அது ஒரு அரசியல் சரித்தன்மையுமாகாது.
இரு சார்பு மீதும் இவர்கள் எதிர் வினை ஆற்றினால் அதில் நேர்மை உண்டு. அதே போல புகை குண்டு வீசிய நாட்டின் விரோதிகளையும் பேசவும் வேண்டும் அதில் என்ன எதிர் கட்சிகளுக்கு தயக்கம்.
பொறுப்புணர்ச்சியும் தேசப்பற்றும் முதலில் முக்கியம்! தேசத்திலோ வெளியிலிருந்தோ எங்கு தீவிரவாதம் தென்பட்டாலும் அதைக் கூட்டிணைந்து அடியோடு ஒழிப்பது என்பதற்கு பெயர்தான் தேச இறையாண்மை. அந்த விஷயத்தில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்றெல்லாம் பேதம் கிடையாது.
இதற்கிடையே நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அவர்கள் பிளான் ஏ மற்றும் பிளான் பி என இரண்டு திட்டங்களை வைத்திருந்தார்களாம்.
பிளான் பி: அதாவது நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தத் திட்டம் தோல்வி அடைந்தால் பிளான் பி ஒன்றையும் வைத்திருந்தார்களாம். அதாவது திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை அடைய முடியாமல் போனால், பிளான் பி ஒன்றை வைத்திருந்ததாக இந்தத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜா விசாரணையின் போது போலீசாரிடம் கூறியிருக்கிறர்.
சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவர் நாடாளுமன்றத்தின் உள்ளே புகை குப்பிகளைப் போட்டு ரகளையில் ஈடுபட்ட நிலையில், நீலம் மற்றும் அமோல் ஆகிய இருவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வளாகத்தில் ரகளை செய்தவர்கள். இதுதான் அவர்களின் பிளான் ஏ…
ஒருவேளை நீலம் மற்றும் அமோலால் சில காரணங்களால் நாடாளுமன்றத்தை அடைய முடியாமல் போனால், அவர்களுக்குப் பதிலாக மகேஷும் கைலாஷும் நாடாளுமன்றம் நோக்கி வருவார்கள் என சதி செய்துள்ளனர்.
கலர் புகைக் குண்டுகளை வீசி, ஊடகங்கள் முன் முழக்கங்களை எழுப்புவார்கள். இதுதான் அவர்கள் பிளான் பி ஆக இருந்துள்ளது. இருப்பினும், மகேஷ் மற்றும் கைலாஷ் ஆகியோரால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கியிருந்த குருகிராமில் உள்ள விஷால் சர்மா என்ற விக்கியின் வீட்டிற்கு வர முடியவில்லை. இதன் காரணமாகவே அமோல், நீலம் என்ன ஆனாலும் நாடாளுமன்ற வளாகத்தில் பிரச்சினை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த மிக மோசமான சம்பவம் அரங்கேறியது. 2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில், லோக்சபா நடந்து கொண்டிருந்த போது சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் கேலரியில் இருந்து லோக்சபாவில் குதித்துப் புகைக் குண்டுகளை வீசி, முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த சில எம்பிக்களே அவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் ரகளையில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் குற்றம் இடைஞ்சலாக இந்த போராட்டத்தை அதில் இணைத்துக் கொள்கிறார்கள் என்றால் எதிர்கட்சிகளின் நோக்கம் நாட்டின் பொது அமைதிக்கு பங்கமாகத்தான் இருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்க காரணங்கள் தேடுபவர்கள் எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலையக்கூடாது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் கூட்டாகவும் ஏதேனும் இம்மாதிரி இடைஞ்சல்கள் ஏற்படுகிற போது தேசிய நலனை கருத்திலும் கொள்ள வேண்டும்.
#தங்க ஜரிகை திருப்பாவை புடவையுடன் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார்
இன்று டிச 16 இரவு 9.35 க்கு மார்கழி பிறந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸர்வ அலங்காரத்தில் தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட திருப்பாவை புடவையுடன் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார்….. ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம்.மார்கழி திங்களில் ஒருமுறையாவது ஸ்ரீ ஆண்டாளை சேவித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
ஸ்ரீ ஆண்டாள் வரலாறு:
பல நூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நந்தவனம் அமைத்து, வடபத்ரசாயி எனப்படும் வடபெருங் கோயிலுடையானுக்குப் பூ மாலைகள் சமர்ப்பித்துக் கைங்கரியம் செய்து வந்தவர் பட்டர் பிரான் என்றும், விஷ்ணு சித்தர் என்றும் வழங்கப்பட்ட பெரியாழ்வார் .
குழந்தைப் பேறு இல்லாத அவருக்கு, அவரது நந்தவனத்திலே, ஒரு துளசிச் செடியின் கீழ், ஏர்முனையில் ஜனகருக்கு சீதை கிடைத்தது போல, ஒரு பெண் குழந்தை கிடைத்தது.
அன்று திருவாடிப்பூரம். அக்குழந்தைக்குக் கோதை எனப் பெயரிட்டு, சீரும் சிறப்புமாய் வளர்த்து வந்தார் பெரியாழ்வார்.
கோதை என்றால் தமிழில் மாலை.
வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.
கோதை சிறு வயதிலேயே கண்ணன்பால் பிரேமை கொண்டு காதல் வசப்பட்டாள்.
தினந்தோறும் பெருமாளுக்குப் பெரியாழ்வார் தொடுக்கும் மாலையைத் தன் கூந்தலில் சூடி அழகு பார்த்து, இப்படிச் சூட்டினால் பெருமாளுக்கு அழகாக இருக்குமா என்று பார்த்து விட்டு, அந்த மாலையைக் கழற்றி வைத்து விடுவாள்.
தினந்தோறும் இவ்வாறு நடந்து வந்தது.
ஒரு நாள் பெரியாழ்வார் இதைப் பார்த்து விட்டார்.
“இதென்ன அபசாரம், அபத்தம்” எனக் கோதையைக் கடிந்து கொண்டு, அன்றைக்குச் சந்நிதிக்குப் போகாமலும், எம்பெருமானுக்கு மாலை சூட்டாமலும், துயரத்தில் தூங்கி விட்டார்.
அவரது கனவில் பெருமாள் தோன்றி, ‘உன் மகள் சூடிக்களைந்த மாலையே எனக்கு உவப்பானது’ எனக் கூறி மறைந்தார்.
பெரியாழ்வார் வியந்து, தன் மகள், பிராட்டியின் அம்சம் என்று உணர்ந்து போற்றினார்.
கோதை மணப் பருவம் எய்த, “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று கூறி விட்டாள்.
அத்துடன், திருவரங்கத்துப் பெருமாளையே மணக்க விரும்புவதாகவும் சொல்லி விட்டாள்.
ஶ்ரீமத் பாகவத காலத்தில் விரதம் இருந்து, ஆயர் பெண்கள் கண்ணனை அடைந்ததை எண்ணியும், தமிழர் மரபுப்படி பாவை நோன்பு இருத்தலையும், கருத்தில் கொண்டு திருப்பாவைப் பாடல்களாலேயே பாவை நோன்பு நோற்றார் ஆண்டாள்.
நாச்சியார் திருமொழிப் பாடல்களால் பெருமானுக்குத் தூது விட்டார்.
சூடிக்கொடுத்த நாச்சியார் பாடிக் கொடுத்த நாச்சியாராகவும் ஆனார்.
ஆழ்வாரின் கனவில் மீண்டும் தோன்றிய திருவரங்கத்துப் பெருமான், கோதையைத் தம்மிடம் அழைத்து வரக் கூறினான்.
அதேபோல, பாண்டிய மன்னன் வல்லவதேவனும், தன்னிடமும் இறைவன் கனவில் கூறியபடி, ஆண்டாளின் பயணத்துக்கு ஏற்பாடு செய்ய, பெரியாழ்வார் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் சென்றார்.
எல்லோரும் பிரமிப்புடன் பார்த்திருக்க, அரங்கனின் கருவறையை அடைந்து, நேராக உள்ளே சென்று பெருமானின் திருவடி பற்றி அமர்ந்ததும், ஆண்டாள் மறைந்து பகவானுடன் கலந்தாள்.
இங்கே, “ஒரு மகள் தன்னையுடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான்” என்னும் பெரியாழ்வார் திருமொழி (3-8-4) பாசுரம் நினைவு கூறத் தக்கது.
இது தான் ஆண்டாளின் திருக்கல்யாணம்.
ஆன்மாவான உயிர், இறைவனின் திருவடிகளில் இணைவதைக் குறிப்பதே இது.
வைணவத்தில் ஆண்டாளுக்கும், திருப்பாணாழ்வாருக்கும் மட்டுமே கிடைத்த பேறு இது.
பின்னர், பெரியாழ்வார் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமக்கள் வேண்ட, “வாரணம் ஆயிரம்” என்ற அன்னையின் கனவுத் திருமணத்தை நனவாக்கி, முறைப்படி திருமணம் புரிந்து கொண்டான் அரங்கன் என்பது வழி வழியான கதை.
இன்றும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாருடன் ஶ்ரீரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களைக் காத்தருளுகிறான்.
ஆண்டாளின் பாடல்களின் அகச்சான்றுகளை வைத்து டாக்டர் மு. இராகவையங்கார், இவரது காலத்தை ஆராய்ந்திருக்கிறார்.
திருப்பாவை 13-ம் பாசுரத்தில் வரும் ‘வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று’ எனும் சொற்றொடரில் இருக்கும் வானவியல் சம்பவத்தை நிபுணர்களுடன் ஆராய்ந்து, அது கி.பி. 885, நவம்பர் மாதம் 25ஆம் தேதி என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் இராகவையங்கார் தமது ‘ஆழ்வார்கள் கால நிலை’ எனும் புத்தகத்தில்.
எனவே ஆண்டாளின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
ஆண்டாளின் பாடல்களின் அமைப்பு, சொல்லாட்சி, பாவை நோன்பு, காதல் முதலியவற்றை ஆராய்ந்தால், இரண்டு விஷயங்கள் தெளிவாகும்.
ஒரு பெண்ணால்தான் இத்தனை நளினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்.
ஆண்டாள் நிஜமானவர் என்பதை அவரது பெண்மை மிளிரும் பாடல்களே அறிவிக்கின்றன.
“அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த தட முலைகள்
ஆண்டாள் தமிழில் மிகுந்த புலமை பெற்றிருந்திருக்கிறார்; அவர் தம் தந்தை பெரியாழ்வாரிடம் கற்றிருக்கவேண்டும்.
திருப்பாவை எளிமையானது. ஆனால் அதன் யாப்பு கடினமானது. ’இயற்றரவினை கொச்சக் கலிப்பா’ என அதனை வகைப் படுத்துகிறார்கள். கடுமையான பா அமைப்பு அது. கடுமையானதொரு யாப்பில், மிக எளிய பாடல்கள் அமைக்கும் திறமை ஒரு சிறிய அறியாத பேதைப் பெண்ணிடம் இருந்தது என்பது ஒரு மிகப் பெரிய விஷயம்.
இன்றைக்கு நம்மிடம் உள்ள நம் சிறந்த கவிஞர்கள் கூட, திருப்பாவையின் யாப்பமைதியில் பாட்டு எழுதினால், இத்தனை எளிமையாக, அத்துனை அழகாக, கருத்தாளமிக்கதாக அமைப்பது கடினம்.
அவரது நாச்சியார் திருமொழியில், அறுசீர், எழுசீர், ஆசிரிய விருத்தங்கள், கலி விருத்தங்கள், கலிநிலை விருத்தங்கள், கலிநலத்துறை பாடல்கள் என்று எடுத்து, வரிக்கு வரி அதில் உள்ள எழுத்துக்களை, ஒற்றெழுத்து இல்லாமல் எண்ணிப் பார்த்தால், ஒரே எண்ணிக்கையில் வரும்.