Home Blog Page 5594

இஸ்லாமியர்-இந்து பெண் இணைந்து தங்க ஹோட்டலில் ரூம் தர மறுப்பு!

HinduMuslim couple denied room in Bengaluru Hotel - 2026

பெங்களூர்:
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜோடிக்கு தங்கும் விடுதியில் அறை ஒதுக்க மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு தாங்கள் இந்து முஸ்லிம் மதங்களைச் சார்ந்து  பெயர் கேட்டதன் அடிப்படையில் மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஷபீக் சுபைதா- டி.வி. திவ்யா. இவர்கள் இருவரும் வேலை நிமித்தமாக பெங்களூர் வந்தனர்.  பெங்களூரில் உள்ள அண்ணாபுரம் மெயின் ரோட்டில் ஆலிவ் ரெசிடன்சி உள்ளது. இந்த ரெசிடன்சி ஹோட்டலில் தாங்கள் தங்குவதற்கு அறை வேண்டும் என்று ஷபீக், திவ்யா இருவரும் நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால், ரெசிடன்சி நிர்வாகம் அறை தர மறுத்துவிட்டதாம்.

இந்நிலையில், ஷபீக் பெயர் முஸ்லீமாக உள்ளதாலும், திவ்யா பெயர் இந்துவாக உள்ளதாலும் அறை தரமுடியாது என்று மறுத்ததாக முதலில் குற்றம் சாட்டிய இருவரும், பின்னர், ஷபீக் முஸ்லிம் என்பதால் அவருக்கு அறை தர முடியாது என மறுத்து விட்டதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், இதனை குறிப்பிட்டு ஹோட்டல் நிர்வாகத்திடம் சண்டையிட்டபோது, அதனைத் தொடர்ந்து திவ்யாவுக்கு அறை தருவதாக ரெசிடன்சி நிர்வாகம் கூறியதாக ஷபீக் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் வெளியில் கசிந்ததும், இது குறித்து ரெசிடன்சி நிர்வாகம் தரப்பில் கூறியபோது, அவர்கள் இருவரும் அடையாளச் சான்றிதழை வழங்க மறுத்தனர். அதனாலேயே அறையை ஒதுக்க ரெசிடன்சி நிர்வாகம் மறுத்தது. வெவ்வேறு மதத்தின் காரணமாக தம்பதிக்கு அறை மறுக்கப்படவில்லை.  அவர்கள் துவக்கத்தில் அரை மணி நேரம் அறை வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நாங்கள் மறுத்து விட்டோம். பிறகு ஒரு நாளுக்கு அறை வேண்டும் என்று கோரினர். ஷபீக் மற்றும் திவ்யா இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினர். ஆனால், அவர்கள் எங்களுக்கு திருமணம் செய்து கொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என ரெசிடன்சி  தரப்பில் கூறப்பட்டது. இந்த விவகாரம் செய்தி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி, பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 லட்சம் வீடுகள் கட்ட உதவி: 110ல் அறிக்கை வாசித்தார் முதல்வர்

edappadi palanisamy - 2026

சென்னை:

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் வகைப்பாட்டின் கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 1,86,308 தனி வீடுகள் 5,589 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். நடப்பாண்டில் பயனாளிகள் பங்களிப்புடன் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் வகைப்பாட்டின் கீழ் ஒரு குடியிருப்பு 10 இலட்சம் ரூபாய் வீதம் 14,828 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,482 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்று முதலவர்ர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில்,

அம்மா கடந்த 6 ஆண்டுளாக பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்தும் என்பதை இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

1. தமிழ்நாடு அரசு ஒரு புதிய குடியிருப்பு மற்றும் உறைவிடக் கொள்கை உருவாக்கும். வீடு கட்டும் செலவினத்தைக் குறைத்தல், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை உள்ளடக்கிய அனைவருக்கும் போதுமான வீட்டுவசதியினை கிடைக்க செய்தல்; வாங்கத் தக்க விலையில் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்தல்;

அனைவருக்கும் அடிப்படை வசதிகளான மின் சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய வீடு வழங்குதலை உறுதி செய்தல்; நகர்ப்புற மக்களின் மாறி வரும் சமூகப் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு நகர்ப் புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; நீடித்த நிலையான சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறையினை நகர்ப்புறங்களில் உறுதி செய்தல்; நிலையான நகரமயமாக்குதலை ஊக்குவித்தல்;

சட்டம் மற்றும் ஒழுங்கு முறை அமைப்புகளில் பொருத்தமான திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல்; பெருந்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் திருத்தங்கள் கொண்டு வருதல்; ஒற்றைச் சாளர முறையை உருவாக்குதல்; மனை வரைபடம் ஒப்புதல் மற்றும் கட்டட அனுமதி பெற காலக்கெடு நிர்ணயித்தல்; மூத்த குடிமக்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, வீடுகள் கட்டுதல் மற்றும் அதற்குரிய உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்; இடரற்ற வாடகை வீடு வழங்கும் முறையினை உருவாக்குதல் போன்றவை இக்கொள்கையின் சிறப்பம்சங்களாகும்.

2. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்ட நிதி, சிறப்பு மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் மூலம் திரட்டப்படும் நிதி, பயனாளிகளின் பங்களிப்புத் தொகை மற்றும் தமிழக அரசால் அளிக்கப்படும் பற்றாக்குறை நிதி ஆகியவற்றை பயன்படுத்தி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம், எர்ணாவூரில் 676 கோடியே 61 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6,874 வீடுகள் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு கட்டித் தரப்படும்.

3. பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தில் பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் வகைப்பாட்டின் கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 1,86,308 தனி வீடுகள் 5 ஆயிரத்து 589 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். மேலும், நடப்பாண்டில் பயனாளிகள் பங்களிப்புடன் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் வகைப்பாட்டின் கீழ் ஒரு குடியிருப்பு 10 இலட்சம் ரூபாய் வீதம் 14,828 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,482 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். மேற்கண்ட இரண்டு வகைபாட்டின் கீழ் கட்டடப்படும் குடியிருப்புகளுக்கு மாநில அரசின் மானியமாக 2,007 கோடியே 53 இலட்சம் ரூபாய் அளிக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாடே எதிர்பார்க்கும் 2ஜி ஊழல் விவகாரத்தில் ஆகஸ்டில் தீர்ப்பு!

Rajakanni - 2026

கடந்த 2007ஆம் ஆண்டில், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்பனைக்கு விடப்பட்டது. அந்த நடவடிக்கையில் பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக சிஏஜி – மத்திய கணக்காய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து சிபிஐ 2009 அக்டோபர் 21ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. பின், இது தொடர்பாக  விசாரணையைத் தொடங்கியது. இது அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக.,வுக்கு மிகப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியதுடன்,மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் ஆர். ராசா 2010 நவம்பரில் விலகினார்.

இதை அடுத்து, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க, சிபிஐ தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, ஓ.பி.ஷைனி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆ.ராசா, தி.மு.க எம்பி., கனிமொழி, தயாளுஅம்மாள் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இவர்கள் மீது மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், இரண்டை சிபிஐ-யும், ஒன்றை அமலாக்கப் பிரிவும் தாக்கல்செய்தது. இந்த வழக்கின் இறுதி வாதம் முடிந்ததையடுத்து, தற்போது தீர்ப்பு குறித்த அறிவிப்பை நீதிபதி ஓ.பி.ஷைனி வெளியிட்டுள்ளார்.

‘2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்படும். ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால், அடுத்த 10 நாள்களில் தீர்ப்பு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு மீதான 5% ஜி.எஸ்.டி-ஐ திரும்பப் பெற வைகோ கோரிக்கை

vaiko - 2026sa

சென்னை:
சமையல் எரிவாயு மீதான 5% ஜி.எஸ்.டி-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

மத்திய பா.ஜ.க. அரசு, ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை என்பதைச் செயல்படுத்த பொருட்கள் மற்றும் சேவை வரியை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தால் விலையேற்றம் மக்களைப் பாதிக்காது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், மானிய விலை சமையல் எரிவாயு உருளைக்கு 5 விழுக்காடு, ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதால், உருளையின் விலை 32 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மானிய உருளையின் விலை 592 ரூபாயாக உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயு உருளையின் விலையேற்றம் மக்கள் மீது ஜி.எஸ்.டி ஏற்றி உள்ள சுமைக்கு ஒரு உதாரணமாகும்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் மாநில அரசுகள் முன்மொழிந்த பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. மாநிலங்களின் உரிமைகளை நசுக்கும் வகையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மத்திய அரசின் கையே ஓங்கி இருக்கின்றது. மாநில அரசுகள் வரிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் ஒப்புதல் பெறவேண்டும். மத்திய அரசின் ஆதிக்கம் மேலோங்கி உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலில், மாநிலங்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படும் நிலைமைதான் இருக்கிறது. ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி முறைக்கும் எதிராக, மாநிலங்களை நகராட்சிகளைவிட மோசமாக நடத்தும் வகையில்தான் ஜி.எஸ்.டி. நடைமுறைகள் இருக்கின்றன.

மாநிலங்களின் பொருளாதார இறைமை நொறுக்கப்பட்டு இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மாநில அரசுகளின் வரி விதிப்பு அதிகாரம் பறிபோனதுடன், வரி வருவாயும் பெருமளவு குறையும் நிலை ஏற்படும். இதனால் மாநிலங்கள் தமது விருப்பப்படி செலவினங்கள் குறித்தும சுதந்திரமாக செயல்பட முடியாது.

ஏனெனில் ஏற்கனவே நிதி ஒழுங்கு மற்றும் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால், மாநில அரசுகள் வரம்புக்கு உட்பட்டே செலவினங்களில் ஈடுபட முடியும். மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வருவாய் இழப்புக்கு ஆளாகும் என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். மாநில சுயாட்சி தேவை எனும் குரல்கள் பலமாக ஒலிக்கின்றபோது, பா.ஜ.க. அரசு மாநிலங்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவதற்கு ஜி.எஸ்.டி. ஒரு கருவியாகி இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநில அரசுகளுடன் விரிவான கலந்தாய்வு செய்யவும் மத்திய அரசு தயாராக இல்லை என்பது கண்டனத்துக்கு உரியது.

கோடிக்கணக்கான மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் சமையல் எரிவாயு உருளைக்கு விதிக்கப்பட்டுள்ள 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் பாரதப் பிரதமர் வருகைக்கு 70 ஆண்டுகள் காத்திருந்தது: நெதன்யாஹு பெருமிதம்

modi nethanyahu - 2026
புது தில்லி:

இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்தியப் பிரதமர் ஒருவரை வரவேற்க தாங்கள் 70 ஆண்டுகள் காத்திருந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு நெகிழ்சியுடன் குறிப்பிட்டார்.

3 நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார் பிரதமர் மோடி. இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். தொடர்ந்து மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமெரிக்க அதிபர், போப் ஆகியோருக்கு இணையாக பிரதமர் மோடிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல்-இந்தியா இடையேயான தூதரக உறவின் 25 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது.

பயங்கரவாதம் குறித்து இருவரும் பேசினர். பின் இரு பிரதமர்களும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி, “பயங்ரவாதம், வன்முறைக்கு எதிராக போராட ஒவ்வொரு நாடும் முன்வர வேண்டும். அதற்கான சரியான நேரம் இது. உலத்தையே உலுக்கி வரும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். 6 லட்சம் யூதர்கள் பலியான யெட் வாஷம், பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதாரணம். இத்தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதத்துக்கு எதிராக போராட நாம் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

பின் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு விருந்தளித்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிரதமர் மோடி நினைவு பரிவு வழங்கினார். கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட, 9-10ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகளையும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான தோரா சுருள் மற்றும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடத்தையும் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

மோடியின் பயணம் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, இந்தியப் பிரதமர் எங்கள் நாட்டுக்கு வருவதற்காக நாங்கள் 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என பெருமிதமாகப் பேசினார். மோடியை வரவேற்றுப் பேசிய நெதன்யாஹு, “இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். இந்தியக் கலாச்சாரம், வரலாறு, ஜனநாயகம், எங்களுக்குப் பிடிக்கும். பிரதமர் மோடி எம் நண்பர், அவரை வரவேற்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். 70 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது. மிகச்சிறந்த நல்ல தலைவர்களில் ஒருவர் மோடி. மேக் இன் இந்தியா என்பதுடன் நாங்கள் மேக் வித் இந்தியா என இருக்கிறோம். நமது உறவுக்கு வானமே எல்லை என்று மோடி கூறியிருந்தார். நமது உறவுக்கு வானமும் எல்லை இல்லை என்பதை நான் கூறுகிறேன். இன்னும் நமது உறவுகள் விரிவடையும் என்று பேசினார்.

வரவேற்பில் பேசிய மோடி, “எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது இஸ்ரேல் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரேல் பழைமையான கலாசார நாடாக இருந்த போதிலும் இளைஞர்களுக்கான முக்கியத்துவத்தைக் கொண்டது. இளம் நாடு இந்தியா. இஸ்ரேல் வந்தது குறித்து பெருமை அடைகிறேன். பயங்கரவாதம் உள்ளிட்ட சவால்களிலிருந்து நம் நாடுகளைப் பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்ரேல் முக்கியப் பங்காற்றுகிறது. இஸ்ரேல் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளி நாடு. நாம் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தில், அவர் இஸ்ரேல் பிரதமர், அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். இஸ்ரேல் பிரதமருடனான பேச்சுவார்த்தையின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவத்துறையில் ஒத்துழைப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மோடி, டேன்சிகர் பூ பண்ணை, யெட் வாஷம் ஹோலோகாஸ்ட் நினைவிடம், தியோடர் ஹெர்சல் நினைவகம் இடங்களுக்குச் சென்றார். இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ள மோடி, ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவுகளில் இவற்றை அவ்வப்போது குறிப்பிட்டார். அவரது பதிவுகளில் இருந்து…

 

 

இஸ்ரேல் சென்றார் பிரதமர் மோடி

modi pib 1 - 2026

மூன்று நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.

அமெரிக்க அதிபர் மற்றும் போப் ஆண்டவருக்கு இணையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

இந்திய இஸ்ரேல் தூதரக உறவின் 25 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் பிரதமர் சென்றுள்ளார்.மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்திய பிரதமரின் இஸ்ரேல் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பெண்கள் 37 பேரை கடத்தி 9பேர் கழுத்தை அறுத்த போகோ ஹராம் தீவிரவாதிகள்

isis terrorist - 2026

அபுஜா:

கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். கடந்த எட்டாண்டுகளாக இவர்களின் கொலை வெறிக்கு சுமார் 20 ஆயிரம் மனித உயிர்கள் பலியாகியுள்ளன.

இதுதவிர, இவர்களின் வெறியாட்டத்தால் வீடுகள் மற்றும் இதர சொத்துக்களை பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அந்நாட்டு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் அமைத்துள்ள தற்காலிக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நைஜீரியாவின் தென்கிழக்கு எல்லையோரப் பகுதியான டிஃபா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அங்கிருந்த 37 பெண்களை கடத்திச் சென்றனர்.

மேலும், அவர்களை தடுக்க முயன்ற ஒன்பது பேரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்று விட்டனர் என டிஃபா மாகாண கவர்னர் லாவ்அலி மஹாமனே டன் டானோ இன்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஜெஸி கேரக்டரில் த்ரிஷா

vinnaithaandi_varuvaaya_trisha

த்ரிஷாவின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத கேரக்டர் என்றால் அது ‘விண்ணை தாண்டி வருவாயோ’ படத்தின் ஜெஸி கேரக்டர்தான். இதேபோன்ற கேரக்டரில் மீண்டும் நடிக்க மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருந்த த்ரிஷாவுக்கு மீண்டும் கிட்டத்தட்ட அதே போன்ற கேரக்டர் கிடைத்துள்ளது.

நிவின்பாலி நடிக்கும் மலையாள படமான ஹே ஜூட்’ என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கேரள கிறிஸ்துவ பெண்ணாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விடிடி படம் போலவே ரொமான்ஸ் மற்றும் உணர்ச்சி மிகுந்த காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இருப்பதால் இந்த படத்தில் தன்னுடைய நடிப்புத்திறமையை முழு அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக த்ரிஷா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

யூடியூபில் கசிந்த பிக்பாஸ் ஜூலியின் ரொமான்ஸ் பாடல்

julie-big-bossஜல்லிக்கட்டு மூலம் புகழ்பெற்ற ஜூலி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் தன்னை மிகைப்படுத்தி நடித்து வருவதாக அனைவரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூலி நடித்த ரொமான்ஸ் பாடல் ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்தில் இளைஞர் ஒருவருடன் ஜூலி ஆடி டூயட் பாடியுள்ளார்.

இந்த வீடியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இப்போதுதான் வெள்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவில் ஜூலியின் நடிப்பை பார்க்கும்போது மிக விரைவில் அவர் சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது

சாஸ்திரத்துல மந்திர ஸ்நானம்னு ஒண்ணு இருக்கு!

04fr periyava8 jpg 1319562g - 2026

சாஸ்திரத்துல மந்திர ஸ்நானம்னு ஒண்ணு இருக்கு!

“பெரியவாளின் கேட்ராக்ட் ஆபரேஷனும்-கிரகண புண்யகால ஸ்நானமும்”

கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
புத்தகம்-மகாபெரியவர்.

அது 1974-ஆம் ஆண்டு… காஞ்சி மகா பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வை
பழுதுபட்டது. கிட்டத்தட்ட ஒரு கண்ணின் பார்வை இன்றியே தன் நித்ய
அனுஷ்டானங்களைத் தொடர்ந்து வந்தார். தேகத்தில் ஏற்படும் மாற்றங்கள்
மகான்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கேற்றாற்போல் அவரது செயல்பாடுகளில் எந்த ஒரு
மாறுதலும் இல்லை. இருந்தாலும் சில அன்பர்களது வற்புறுத்தலுக்குப் பிறகு
பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ஒரு கட்டத்தில் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அது போதிய பலன் தரவில்லை. அத்தோடு, பாதிக்கப்பட்ட அந்த கண்ணில்
மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்ய இயலாது… அது பலன் தராது என்கிற நிலையும்
ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொரு கண்ணின் உதவியுடனேயே இருந்து வந்தார் மஹா
பெரியவா.

நாளடைவில் நன்றாகச் செயல்பட்ட அந்த இன்னொரு கண்ணிலும் கேட்ராக்ட் (புரை)
ஏற்பட்டது. இதை அறிந்த பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களும் ஸ்ரீமடத்து
விசுவாசிகள் பலரும் பெரியவாளை அணுகி, ‘கேட்ராக்ட்டுக்குப் பெரியவா ஏதாவது
சிகிச்சை எடுத்துக்கணும்’ என்று விக்ஞாபித்துக் கொண்டனர்.

புன்னகையுடன் அந்தக் கோரிக்கையை மறுத்து விட்டார் பெரியவா. ‘போதும்டா…இந்த
ஒரு கண்ணை வெச்சுண்டே நான் சந்திரமௌலீஸ்வரர் பூஜையை நடத்திக்கிறேன். இந்தப்
பார்வையே எனக்குப் போதும்’ என்று அன்புடன் மறுத்துவிட்டார். ஆனால் மஹா
பெரியவாளின் இந்த சமாதானமான பதிலை ஸ்ரீஜயேந்திரர் ஏற்கவில்லை.
கேட்ராக்ட்டுக்கு அவசியம் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவாளிடம்
வற்புறுத்துக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் பெரியவாளும் இதற்கு
சம்மதித்தார்.

அப்போது மயிலாப்பூரில் பிரபல வக்கீலாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம்
டாக்டர் பத்ரிநாத் மஹாபெரியவாளுக்கு அறிமுகம் ஆனது இந்த நேரத்தில் தான்.
சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்தார் பத்ரிநாத். இவரது
சேவை மனப்பான்மை பற்றியும், தொழில் நேர்த்தி குறித்தும் ஸ்ரீமடத்துக்கு
சிபாரிசு செய்யப்பட்டது. ஸ்ரீமடத்து அதிகாரிகள் கலந்தாலோசித்த பிறகு
பத்ரிநாத்தைக் கொண்டே மஹாபெரியவாளுக்கு கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்யலாம் என்று
முடிவு செய்யப்பட்டது.

முதலில் ஸ்ரீஜயேந்திரரைச் சந்தித்த பத்ரிநாத் பெரியவாளுக்கு எப்படி ஆப்ரேஷன்
மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை விளக்கினார். ‘ஒரு சந்நியாசிக்கு
மருத்துவமனையில் வைத்தெல்லாம் சிகிச்சை செய்யக் கூடாது. அது போல் நர்ஸ்,
மருத்துவ உதவியாளர்கள் போன்றோரின் ஸ்பரிசம் பெரியவாளின் மேல் படவே கூடாது’
என்றெல்லாம் சில விஷயங்கள் ஸ்ரீமடத்தின் சார்பில் பத்ரிநாத் முன்
வைக்கப்பட்டது. அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அவர், ‘நானும் மகா
ஸ்வாமிகளின் பக்தன் தான். அவரது துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு பங்கமும்
ஏற்படாதவாறு இதைப் பார்த்துக் கொள்கிறேன்.’ என்றார் மென்மையாக.

ஆப்ரேஷன் சமயத்தில் பத்ரிநாத் மட்டுமே மருத்துவர் என்ற முறையில் இருந்தார்.
இவரைத் தவிர, மருத்துவமனை சிப்பந்திகள் எவரும் இந்த சிகிச்சையின் போது உடன்
இல்லை. அப்படி என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு ஆப்ரேஷன் நேரத்தில்
உதவியவர்கள் யார்?

மஹா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்கள் சிலருக்கே தேவையான மருத்துவப் பயிற்சி
கொடுத்து, அவர்களைத் தன் உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார் பத்ரிநாத்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபம், ஆப்ரேஷன் தியேட்டராக மாற்றப்பட்டது.
ஆப்ரேஷனுக்கு தேவையான அனைத்து விதமான உபகரணங்களும் சென்னையில் இருந்தே கொண்டு
வரப்பட்டன. எல்லாம் தயார் ஆன பின், மிகக் கச்சிதமாக மஹாபெரியவாளுக்கு ஆப்ரேஷன்
முடிந்தது.

ஆப்ரேஷன் முடிந்து விட்டாலும் மஹாபெரியவாளின் (ஆப்ரேஷன் செய்த) அந்தக் கண்ணைத்
தினமும் கண்காணிக்க வேண்டுமே! இதற்காக தினமும் அதிகாலை வேளையில் சென்னையில்
இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் வந்து மஹாபெரியவளின் கண்ணைப்
பரிசோதித்துவிட்டு வேண்டிய மருந்துகளை அப்ளை செய்து டிரஸ்ஸிங் செய்து விட்டு
சென்னைக்குத் திரும்புவார் டாக்டர் பத்ரிநாத். இது தினசரி நடந்து
கொண்டிருந்தது.

அன்றைய தினம் கிரஹணம். யதேச்சையாக இது தெரிய வந்ததும், டாக்டர் பத்ர்நாத்
பதறிவிட்டார். பொதுவாக கிரகண காலம் முடிந்ததும், ஸ்நானம் செய்வது இந்துக்களின்
வழக்கம். அதுவும் சந்நியாசிகள் இன்னும் அனுஷ்டானமாக இருப்பார்கள். ‘ஒரு வேளை
பெரியவா கிரஹண காலம் முடிந்ததும், கண் ஆப்ரேஷன் செய்ததைக் கருத்தில் கொள்ளாமல்
குளிக்கப் போய்விட்டால்….? என்று சுளீரென உறைத்தது பத்ரிநாத்துக்கு. அவ்வளவு
தான்… இயல்பாகத் தான் காஞ்சிபுரம் புறப்படும் வேளைக்கு முன்பாகவே ஒரு காரில்
காஞ்சியை நோக்கி அரக்கப் பரக்கப் பயணித்தார்.

ஸ்ரீமடத்தின் வாசலில் போய்த்தான் கார் நின்றது. ‘சாதாரணமாக வரும் நேரத்தை விட
இன்று இவர் ஏன் இத்தனை சீக்கிரமாக ஸ்ரீமடத்துக்கு வந்திருக்கிறார்? அதுவும்
பொழுது இன்னும் புலராத வேளையில் இவ்வளவு அவசரமாக வரவேண்டியதன் அவசியம் என்ன?
என்று ஸ்ரீமடத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் குழம்பினார்கள்.

ஸ்ரீமடத்து அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு மகாபெரியவா முன்
படபடப்புடன் போய் நின்றார் பத்ரிநாத். சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார்.
பிறகு பெரியவாளையே பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றார்.தான் எதற்காக இப்படி
பதைபதைத்து வந்தேன் என்பதற்கான காரணத்தை இன்னும் அவர் சொல்லக் கூட இல்லை.

அதற்கு முன்னதாக பெரியவா அவரை ஆசிர்வதித்து விட்டுப் புன்னகையுடன் திருவாய்
மலர்ந்தார். ‘என்ன குளிச்சிடுவேன்னு பயந்தியா?”

பத்ரிநாத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. எதை நினைத்துக் கொண்டு சென்னையில்
இருந்து ஓடி வந்தாரோ அதைப் பட்டென்று உடைத்து விட்டார் பெரியவா. ‘ஆமா பெரியவா.
இப்பதான் கண் ஆபரேஷன் ஆகி இருக்கு. இந்த நிலைல கிரஹண காலத்தை உத்தேசிக்க
ஸ்நானம் பண்ணினா, ஆபரேஷன் ஆன கண்ணுக்கு ஏதேனும் ப்ராப்ளம் வந்துடுமோன்னு
கவலையா இருந்தது. அதான், ஸ்நானம் பண்ண வேண்டாம்னு பெரியவாகிட்ட
பிரார்த்திக்கிறதுக்க்காக அவசர அவசரமா ஓடோடி வந்தேன்’ என்றார் படபடப்பு
இன்னும் அடங்காமல்.

பத்ரிநாத்தை அர்த்த புஷ்டியுடன் கூர்ந்து பார்த்த மஹாபெரியவா ‘கிரஹணம்
கழிந்தவுடனே ஸ்நானம் பண்ணனும்னு தான் சாஸ்திரம் சொல்றது. ஆனா நான் ஸ்நானம்
செய்யலை. அப்படின்னா அந்த கிரஹணத் தீட்டு எப்படிப் போச்சுன்னு யோசிக்கிறயா?

சாஸ்திரத்துல மந்திர ஸ்நானம்னு ஒண்ணு இருக்கு. அந்த முறைப்படி நான் ஸ்நானம்
பண்ணிக்கிறேன். என் கண் பார்வை போயிடுமோங்கிற பயத்துல நான் ஸ்நானம் பண்ணாம
இல்லை. யூ ஆர் எ பட்டிங் டாக்டர் (வளர்ந்து வருகிற மருத்துவர்). உன்னோட
வளர்ச்சி எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. அதுக்காகத்தான் நான்
மந்திர ஸ்நானத்தை ஏத்துண்டேன்’… என்று சொல்ல…..கண்கள் கலங்கி, அந்த
மகானின் திருப்பாதங்களுக்கு இன்னொரு முறை சாஷ்டங்க நமஸ்காரம் செய்தார் டாக்டர்
பத்ரிநாத்.

மஹாபெரியவாளின் தரிசனம் பெற்றாலே பெரும் பாக்கியம். அதுவும் அவருடைய
திருமேனியைத் தீண்டி, கண் ஆப்ரேஷன் செய்தார் என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு
எப்பேர்ப்பட்ட பாக்கியம் அமைந்திருக்க வேண்டும்?!

பின்னாளில் காஞ்சி ஸ்ரீசங்கரமடத்தின் மூலம் ‘மெடிக்கல் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’
(சங்கர நேத்ராலயா) என்கிற அமைப்பு துவங்கும் போது டாக்டர் பத்ரிநாத் இதன்
தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அமைப்பின் தலைவராகவும்
நிறுவனராகவும் தற்போது இருந்து வருபவர் இவர்