Home Blog Page 5595

சுப.வீரபாண்டியனுக்கு எஸ்.வி.சேகர் எழுதிய பதில் கடிதம்!

sekar subhavee - 2026
திரு சுப.வீ. அவர்களுக்கு,
வணக்கம். இன்று நீங்கள் வெளியிட்ட பகிரங்க கடிதத்தை படித்தேன்.
ஊரறிய நீங்கள் மடல் வரைகிறீர்கள். நான்,  உலக அளவில் தெரிய வேண்டும் என்பதால் என் முகத்துடன் குரல் பதிவுடன் சமூகவலைதளங்களில் பேசினேன்.
உங்கள் பகிரங்க கடிதத்தில் நம்பர் போட்டு பாயிண்ட் பாயிண்ட்டாக எழுதியிருக்கிறீரகள். அதே போல நானும் பாயிண்ட் பாயிண்ட்டாகவே பதில் சொல்கிறேன்.
1.   “எங்களை இழிவுபடுத்தும் சாதி” என்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் பிறந்த செட்டியார் வகுப்பு இழிவு படுத்தும் சாதியா இல்லை இழிவு படுத்தப்படும் சாதியா என்ன சொல்ல வருகிறீர்கள் ??என்னைப் பொறுத்தவரை எந்த சாதியும் இழிவானது இல்லை.  சாதி மதம் என்பது அவரவருக்கு தாய் தந்தைதான். அதாவது தாய், தந்தை இருப்பவர்களும் மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னதாக கூறுகிறீர்களே.. அதே பாரதிதான் “.. காக்கை குருவி எங்கள் சாதி” பாடியிருக்கிறார்.
மகாகவி பாரதியை.. நம் தேசத்தின் சுதந்திர போராட்ட வீரராக பார்க்காமல் அவரை பிராமணன் என்று பார்த்தீர்கள். ஆகவேதான் அவரை  உயர்த்திப் பிடிக்க வக்கில்லாமல் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்தீர்கள்..
ஆக, சாதி வெறி உங்களுக்குத்தான் இருக்கிறதே தவிர, பிராமணர்களுக்கு அல்ல.  அதாவது பிற எந்த ஜாதியையும் வெறுக்கத் தெரியாதவர்கள் நாங்கள்.
இப்பொழுதும் என் வீட்டில் சமையல் வேலை செய்பவர், வீட்டு வேலை செய்பவர்கள், குழந்தைகளை பார்த்துக்கொள்பவர்கள் எவருமே என் ஜாதியினர் அல்லர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
தினசரி பிணம் அடக்கம் செய்யும் வெட்டியான் தொழில் செய்பவர்களை அரசு ஊழியராக்கியவன்  நான். ஆணையிட்டவர் அன்றய துணை முதல்வர் முக ஸ்டாலின். சாக்கடை சுத்தம் செய்யும் தொழிளாளர்களுக்கு ஜெட் ராடிங் யந்திரம் என் எம் எல் ஏ நிதியிலிருந்து வாங்கி கொடுத்துள்ளேன்
இதோ இப்போதுகூட, தமிழகத்தில் இரட்டைக் குவளை முறை இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அங்கு சென்று அதே குவளையில்  டீ குடிக்க நான் தயார். ஆனால் நீங்கள் சொல்லும் சாதியினர் டீ குடிப்பார்களா?
இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்க முடியாத நிலை. இது குறித்து சட்டமன்றத்தில் கூட விவாதிக்கப்பட்டது. ஆனால் இன்றும் அதே அவல நிலைதான் நீடிக்கிறது.  நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்?
சரி.. இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். கடவுள் நம்பிக்கை இல்லை, . சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கிடையாது என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர் நீங்கள்.  அடுத்தவாரம் நடைபெறும் உங்கள் குடும்பத் திருமணத்திற்கு சாதீய பெயருடன்தானே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது?.  அதில் உங்கள் பெயரும் இருக்கிறதே நண்பரே…!
உங்களால் மட்டுமல்ல.. யாராலும் சாதியையும் மதத்தையும் ஒழிக்க முடியாது. இதுதான் யதார்த்தம். ஆனால் நீங்கள், கூட்டத்தினரை குஷிப்படுத்துவதற்காக உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவர்களைப்போல பேசுகிறீர்கள்.  அதனால்தான் தாழ்த்தப்பட்ட சமூகம் அப்பாவியாய்  கைதட்டிக்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்துகொண்டிருக்கிறார்கள்.
2.  எந்த பிராமணன் மீதாவது எப்.ஐ.ஆர். உள்ளதா” என்று நான் கேட்டதாக சொல்லியிருக்கிறீர்கள். “சாதிக்கலவரம் காரணமாக என்த பிராமணன் மீதாவது எப்.ஐ.ஆர். உள்ளதா” என்றுதான் கேட்டேன். அதை்ககூட புரிந்துகொள்ள முடியாமல், உங்கள் மண்டை கொதித்த காரணத்தினால் கூமர் நாராயணனையும் சங்கராசாரியாரையும் ஜெயலலிதாவயும் இழுக்கிறீர்கள்.
மக்களும், “ 2ஜி வழக்கு தீர்ப்புக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள்
.நீதிமன்றமே, விடுதலை செய்துவிட்ட  சங்கராச்சாரியார் பற்றி நீங்கள் பேச வேண்டிய அவசியமே இல்லை.
உங்களைப்போன்றவர்கள் கொடுத்த சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றதால்தான் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனை அளித்தது என்று நாங்கள் நினைக்கிறோம்.
இங்கே இன்னொரு விசயத்தையும் சொல்லிவிடுகிறேன்.  . கடவுள் நம்பிக்கை உள்ள பிராமணர்களுக்கு சங்கரமடமும், மேல்மருத்தூரும் இரண்டுமே ஒன்றுதான். உங்கள் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது
3.  99 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்களுக்கும் படிப்பதற்கு இடம் இல்லை என்று நான் சொன்னதை மறுத்திருக்கிறீர்கள். நான் சொல்வதுதான் உண்மை. யதார்த்த நிலை. 99 சதம் மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்கள், தனியார் கல்லூரிகளில்தான் பல ல்ட்சம் செலவழித்து படிக்கிறார்கள் என்பது உலகுக்கே தெரியும்.  35, 40 மார்க் வாங்கி சட்டத்துக்கு புறம்பாக பஸ் ஸ்டிரைக் மற்றும் பஸ் டே கொண்டாடும்  கல்லூரிகளில் எங்கள் இன மாணவர்களுக்கு இடம் கிடையாது என்பதும் உலகுக்கே தெரியும்.
இதுவும் சமூக நீதிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
4.”மதிமாறன்,  மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம்  வசைபாடும்  நீங்கள், அடுத்தவரை  வெறுக்காமல்  வாழக்  கற்றுக்கொள்ள  வேண்டும்” “  என்று எனக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்கள். நான் அனைவரையும் மதிப்பவன். இது என்னுடன் பழகியவர்களுக்குத் தெரியும்.
அதே நேரம், மரியாதையுடன் நடப்பவர்களுக்குத்தான் மரியாதை அளிக்க முடியும்  பண்போடு பேசுபவர்களுக்குத்தான் பண்பாக பதில் சொல்ல முடியும்.  மூன்றாம் முறை அடித்தால்  புத்தருக்கும் கோபம் வரும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
நாங்கள் என்றுமே ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்போம். அது தேவையில்லை என நினைப்போருடன் ஒத்துப்போக இயலாது.
ஒரு கன்னத்தில் அறைந்தால் அந்த கன்னத்தை தடவிக்கொண்டு நிற்பவன் பிராமணன் அல்ல. அதையும் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். புரிந்து கொள்வீர்கள்
உங்கள் கோபம் பிராமண சமுதாயத்தின் மீதா அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயததை அடக்கி ஆளும் பிராமணர் அல்லாத மற்ற சமுதாயத்தின் மீதா? தைரியமாகச் சொல்லுங்கள்.
அப்படிப் பார்த்தால் நீங்களும் அப்படியான சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
“மதிமாறனின் புத்தி கூர்மையான கேள்விகள்” (சிரிப்பை அடக்கிக்கொண்டு நீங்கள் இதை எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.) என்று நீங்கள் எழுதியிருப்பதன் மூலம் உங்கள் புத்தி கூர்மை மீதே எனக்கு சந்தேகம் வருகிறது நண்பரே.
மதிமாறன் தரக்குறைவாக பேசியதற்கு சான்று வேண்டும் என்கிறீர்களே…  பார்ப்பான் என்ற வார்த்தை பிரயோகமே தவறு என்று நாங்கள் சொல்கிறோம். பிராமணர் என்று பொது வெளியில் நாகரீகமாக அழைக்க விருப்பம் இல்லாத மதியில்லாதவர்தான் உங்கள் மதிமாறன். வேறென்ன சான்று வேண்டும்?
அன்றைய விவாதத்தில் நாராயணன் செய்தது மகிச் சரி. அன்று . விதண்டாவாதத்தை ஆரம்பித்தது வைத்தது உங்கள் மதிமாறன் அதற்கு நியாயமான எதிர்வினை ஆற்றியது எங்கள் நாராயணன்.  இதையெல்லாம் வேடிக்கை பார்த்து பல் இளித்து அதனால், தான் வேலை செய்யும் முதலாளியிடம் திட்டு வாங்கியது  குறுக்கு புத்தி நெறியாளர் நெல்சன்.
“சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவஅறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ளவேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா”   என்று மதிமாறன் கேட்டதாக சொல்கிறீர்கள். இது  அறிவார்ந்த கேள்வி அல்ல. அடிவருடித்தனமான கேள்வி. யாருக்கு அடிவருடி என்பதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இந்த கேள்வியை தென் வட மாவட்டங்களில் நீங்கள் நேரில் போய் கேட்க துணிச்சல் உள்ளதா நண்பரே?
காயத்திரி மந்திரம் சொன்னால்கூடத்தான் மூளை வளரும். அவங்களை சொல்லச் சொல்வீர்களா அவர்கள்தான் சொல்வார்களா..
5 பதட்டத்திலும், ஆவேசத்திலும் பாவம்…  ஐந்தாம் நம்பர் கேள்வி கேட்க  மறந்துவிட்டீர்கள்.
6. என் புத்தி கூர்மையை பாராட்டியிருக்கிறீர்கள்.  இதிலாவது உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. என் புத்தி கூர்மைக்கு காரணம் இருக்கிது…  என்னுடைய பத்து வயதில் இருந்து திரு. சோ அவர்களுடன் பழகியிருக்கிறேன்.   1980களில் இருந்து கலைஞர் எனக்குப் பழக்கம். 83லிருந்து ஸ்டாலின் எனது நண்பர். 2010 இல் இருந்து மோடி அவர்களும்.
நான் இன்றைக்கு எந்த கட்சியையும் தாஜா செய்து பிழைக்கவேண்டிய அவசியம் இல்லை.   காரணம், நான் சாராய பேக்டரி வைத்திருக்கவில்லை, ரோடு காண்ட்ராக்ட் எடுப்பதில்லை,  மணல் வியாபாரம் செய்வதில்லை.  ஏன் எம் எல் ஏ நிதியில் ஒரு பைசா கூட கமிஷன் வாங்கியதில்லை.
ஒட்டு வங்கி பற்றித் தெரியாத உங்களாலும் திராவிடர் கழக வீரமணி போன்றவர்களாலும்தான்  திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. மூன்று முறை திமுக வெற்றி பெற்றதற்குக் காரணம் பிராமணர்களும்கூட என்பதை மறந்துவிடாதீர்கள்.
எங்கள் மூதறிஞர் ராஜதந்திரி  ராஜாஜி அவர்கள் சொன்னதால்தான் பிராமணர்கள் ஓட்டு போட்டு, முதன் முதலாக திமுக ஆட்சி அமைத்தது என்ற  சரித்திரத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
என் நண்பர் திரு ஸ்டாலின் அவர்களது தொடர் உழைப்பால்  வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில்  உங்களைப்போன்ற மற்றும் திராவிடர் கழக  வீரமணி போன்றவர்களுடைய உளறலான கடவுள் மறுப்பு கொள்கைகளும் பிராமண எதிர்ப்பு பேச்சும் திமுகவின் வாக்கு வங்கியை சிதைக்கவே உதவும். ஒரு சதவிகிதம்கூட உங்களால் திமுகவுக்கு உதவியாக இருக்க முடியாது என்பது நிதர்சனம். இதை செயல் தலைவரும் உணர்ந்துள்ளார் என்பதை உணர்வீர்கள்
ஆகவே என் போன்றவர்களுடைய நியாயமான பேச்சை ஸ்டாலின் அவர்கள் கேட்பார்களா, அல்லது சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வது போல் உங்களைப்போன்றவர்களுடைய பேச்சை ஸ்டாலின் அவர்கள் கேட்பார்களா என்பதை காலம் உங்களுக்கு தெளிவு படுத்தும்.
அடுத்ததாக, ஆள்வைத்து வெட்டுவேன் என்பதாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கையில் அரிவாள் கொடுத்து வெட்டும் அளவிற்கு உங்கள் யார் மேலும் எனக்கு கோபம் இல்லை. தவிரவும் நீங்களே உங்கள் முதுகிலும் மனதிலும் அரிவாளை சுமந்து கொண்டு யாரை வெட்டலாம் என அலையும் போது எங்களுக்கு பேப்பரில் நியூஸ் படிக்கும் வேலை மட்டும்தான்.
அப்புறம்… அடுத்த வாரம் நடக்க இருக்கும் உங்கள் இல்ல திருமணத்தில் சாதிப் பெயருடன் அழைப்பிதழ் அச்சடித்திருப்பதை ஏற்கெனவே சொன்னேன் அல்லவா..
இன்னும் சில தகவல்களை வாட்ஸ்அப்பில் பார்த்தேன்.
“சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர். எதிர்பாராத விதமாக அவர் தன் சாதிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.
எதிர்பாராத விதமாக அவரது மூத்த மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று.
எதிர்பாராத விதமாக அவரது இரண்டாம் மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று.
எதிர்பாராத விதமாக வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்க வேண்டியதாயிற்று.. மற்றபடி சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர்.” என்பதுதான் அந்த வாட்ஸ் அப் பதிவு.
ஊருக்கு மட்டுமே உபதேசமோ?
இதுதான் தங்களின் சாதி மறுப்பு கொள்கையென்றால் நானும் சாதி மறுப்பாளன்தான்.  வாழ்க சாதீய மறுப்பு. . ஹிஹிஹி..
பி கு
தாங்கள் எனக்கெழுதிய கடிதத்தை  ரஜினிகாந்தை வைத்து 29 படங்களை இயக்கிய தங்களுடைய சகோதரர் எஸ்.பி. முத்துராமன் படித்தால் கூட தங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்.
இன்னொரு பி.கு:  மீண்டும் உங்களிடமிருந்து கடிதம் எப்போதும் வந்தாலும் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.
உங்களுக்கு மட்டுமல்ல பிரான்ஸ் தமிழச்சிக்கும் சேர்த்துதான் இந்த பதில்.
என்றும் அன்புடன்
எதிர் துருவமான தங்களின் நண்பன்
எஸ்.வி.சேகர்

மனநலன் பாதித்தவர் போல் கோயிலில் இருந்த ‘காதல்’ நடிகருக்கு மீண்டும் வாய்ப்பு!

abi saravanan viruchikakanth - 2026

‘விருச்சக காந்த்’ எனும் நடிகருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் நடிகர் அபி சரவணன்.

கடந்த ஒரு வாரமாக ‘காதல்’ படத்தில் நடித்த ‘விருச்சககாந்த்’ சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார் என்றும், அவரை திரையுலகம் கண்டு கொள்ளுமா என்றும் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ‘வேகத்தடை ‘ குறும்பட நிகழ்ச்சித் திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன், தன்னுடன் நடிகர் ‘விருச்சககாந்த்’தையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான உதவிகளைச் செய்தார். நேற்றும் ‘உறுதிகொள்’ ஆடியோ விழாவில் ‘விருச்சககாந்த்’துக்கு ஒரு காசோலையை அளித்தார்.

இதுகுறித்து கருத்து கூறிய அபி சரவணன், முதலில் இதற்கு காரணமான சாய் தீனா, மோகன் ஆகியோருக்கு நன்றி. என் மனதை ஒரு வாரமாக உறுத்திக் கொண்டிருந்த செய்தி, கோயிலில் பிச்சை எடுத்த நடிகர் ‘விருச்சககாந்த்” என்பதுதான்!

அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் இயலாத நிலையில் வாட்ஸ்அப்பில் சாய்தீனாவுடன் வீடியோவாகக் கண்டேன். உடனே அவரைத் தொடர்புகொண்டேன். மோகன் உதவியுடன்! அவரிடம் பேசி என்ன மாதிரியான உதவிகள் செய்யலாம் எனக் கேட்டேன். அவருக்கு மனத் தளர்ச்சி காரணமாக இவ்வாறு ஆனதாகத் தெரியவந்தது. அவருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பும், தங்குவதற்கு இடமும், அவரைத் தொடர்புகொள்ள ஒரு மொபைல்போனும் நல்ல உடையும் போதும் என்றார். பின் மாலை ஆர்.கேவி யில் ஒரு குறும்பட வெளியீடுக்காக செல்ல வேண்டியிருந்தது. எனவே விழா நடைபெறும் இடத்துக்கு விருச்சிககாந்த்தை வரவழைத்தேன். அந்த விழா மேடையில் உடனடி அவருக்கு தேவையான ஒரு புதிய ஆண்ட்ராய்டு மொபைல் போனும், ஒரு செட் ஷர்ட் ஜீன்ஸ்ஸும் கொடுத்தோம். ‘ஓவியா’ படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான காண்டீபனும் இணைந்து கொண்டார்.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் எனது படத்தின் இயக்குனரைத் தொடர்பு கொண்டு தகவல் சொன்னதும், மறு நாளே அவர் நடிப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கினார். அடுத்த வாரம் தொடங்க இருக்கும் என் புதுப் படமான ‘சூறாவளி’யின் இயக்குனர் குமார்நந்தாவும் விருச்சிகாந்த் நடிக்க வாய்ப்பு வழங்கினார். மன்சூர் அலிகானும் அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பேஷன் டிசைனர் ‘கிரிஷ்’, விருச்சிககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதோடு அவரை மாடலாகவும் பயன்படுத்தி கொள்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.

சக நடிகரான ‘விருச்சிககாந்த்’துக்கு என்னால் இயன்றதைச் செய்ய உதவிய இறைவனுக்கு நன்றி என்றார் அபி சரவணன்!

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆள்திரட்டியவரைக் கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்

isis terrorist - 2026

சென்னை:
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக சென்னை முத்தையால் பேட்டையைச் சேர்ந்த ஆரூண் என்பவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஆரூண் என்பவர் சென்னை முத்தையால் பேட்டையில் வசித்து வந்தார். பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த இவர் ஈராக் நாட்டில் செயல்படும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு, இந்தியாவில் நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

இதை யடுத்து, இன்று காலை ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், முத்தையால்பேட்டையில் ஹாரூணைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆரூண் ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுகிறார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அத்தகைய தகவல்களின் பேரில் உளவு அமைப்பினரும் பல்வேறு மாநில காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டு, பலரைக் கைது செய்து வருகின்றனர்.

மத்திய அரசு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டும், தமிழக காவல் துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அமைதி காத்து வருவது குறித்து பலராலும் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு ஆள் மற்றும் நிதி திரட்டியவரை சென்னை முத்தயால்பேட்டையில் துப்புத் துலக்கி கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்.

தமிழகத்திருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்பவர்கள் பெரும்பாலும் பிற மாநில போலீஸார் மற்றும் மத்திய என்.ஐ.எ அமைப்புதான். தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளையும் , பயங்கரவாத அமைப்புக்களையும் தமிழக காவல் துறை வளர விடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஜுன் 22 அன்று ராமநாதபுரத்தில் கலவரம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைக் குறிக்கும் டி.ஷர்ட் அணிந்திருந்தனர். 2014 ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் டி சர்ட் அணிந்து சூறாவளி கிளம்புகிறது என்று அறிவுப்பு செய்தனர் தொண்டியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர். இவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் சர்வதேச பயங்கரவாதம் நாடு முழுவதும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது கண்கூடாகத் தெரிந்தும், தமிழக காவல் துறை பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

பட்டயக் கணக்காளர் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த மோடியின் முழுமையான உரை

modi icai speech - 2026

சென்னை:
ஜூலை 1 ஆம் தேதி, ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தப் பட்ட நாளில், பட்டயக் கணக்காளர் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து பிரதமர் மோடி ஆற்றிய முழுமையான உரையின் தமிழ் வடிவம் இது. சென்னை வானொலியில் ஒலிபரப்பான வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையில் இருந்து….

வணக்கம்!

Institute of Chartered Accountant of India ICAIயின் தலைவர் நிலேஷ் விக்ரம்சே அவர்களே, நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி அவர்களே, மத்திய அரசு அமைச்சரவையின் எனது அனைத்து சக அமைச்சர்களே! நாடுமுழுவதிலும் சுமார் 200 இடங்களில் இருக்கும் பட்டயக் கணக்காளர்கள் துறையைச் சார்ந்த அனைத்து பெரியோர்களே, மாநிலங்களின் மதிப்பிற்குரிய முதல்வர்களே, தில்லியின் இந்த மழையைப் பொருட்படுத்தாது, உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

இன்றைய மங்கலமான தருணத்தில் பலருக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று இந்த அரங்கில் நிறைந்திருப்பவர்களே, தொழில்துறையோடும் வணிகத்தோடும் தொடர்புடைய பெரியோரே, நாட்டின் பல்வேறு இடங்களிலும், தொலைக்காட்சியிலும் வானொலியிலும் பார்க்கவும் கேட்கவும் பெருந்திரளாக திரண்டிருக்கும் என் நாட்டு மக்களே, இளைய நண்பர்களே, சகோதர சகோதரிகளே.

இன்று Institute of Chartered Accountants of India, ICAIயின் நிறுவன நாள். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இன்று உங்கள் நிறுவன நாள், பாரதத்தின் நிதித் துறை ஒரு புதிய பாதையில் பயணிக்கும் ஒரு புதிய தொடக்கம் என்பது எத்தனை சுபமான தற்செயல் நிகழ்வு! இன்றிலிருந்து தான் பாரதத்தில் ஜி.எஸ்.டி. அதாவது சரக்கு மற்றும் சேவை வரியின் தொடக்கம் ஏற்பட்டிருக்கிறது.

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்

images - 2026

நெல்லை மாவட்டம் , புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை
முன்னிட்டு வரும் – 7 ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்க்கு உள்ளூர்
விடுமுறை. இதற்கு ப்பதில் ஜூலை
15 – சனிக்கிழமை பணி நாள் என மாவட்ட நிர்வாகம்அறிவிப்பு .

Search jannat ends death 10 Malayali ISIS recruits killed last one year

isis malayali Dead use - 2026

Men, women and children had left their homes to join and fight for the ISIS, in search of ‘heaven on earth’.

Over the past few years, various investigating agencies have probed the links between certain groups and sects in Kerala and terrorist organisations.

These suspicions were strengthened as a group of Keralites went missing from various Gulf countries between December 2016 and January 2017, and after that 21 people went missing from various districts of Kerala. (Primarily from Kasargod).

According to various reports, at least ten people from both the groups, who went to fight for the ISIS in Syria and Afghanistan, have been killed.

The ones who fled from Gulf

Twenty one people, including six women and children, had left Kerala in search of Jannat (heaven on earth) in May 2016.

On Sunday, The Times of India reported that five Keralites who had gone missing from the Gulf to join the Islamic terror outfit ISIS last year, were killed in a span of the last four months.

Siby from Palakkad, Muhadis from Vandoor in Malappuram, one person from Kannur and two from Kozhikode, are among the people reported to have been killed in the recent past.

Siby, from Kanjikode in Palakkad, had left his join in Bahrain to join ISIS and was killed while fighting for the terror outfit in Syria. His relatives received the information regarding the death as a text message on June 13 but it came to light only on Sunday.

According to reports, his family members didn’t share the information as it was the month of Ramzan.

The 32-year-old left home on June 2 last year. He had told his family members that he was going to Oman to study religion.

His last communication to the family was during the last Ramzan. But even at that time, he had given no clue about his location. The relatives had later informed the police that he was missing.

Similarly, another person called Muhadis was reportedly killed in Aleppo, Syria in military operations. A source told Prashanth MP of TOI that Muhadis’s brother Manaf, who works in Bahrain, brought the news of the death to the family a month ago.

The 21 who went missing from Kerala

Twenty one people, including six women and children, had left Kerala in search of Jannat (heaven on earth) in May 2016.

Of these 21 people, four have died during combat and US attacks on Afghanistan.

In June 2017, the death of Shajeer Mangalasseri Abdulla, a native of Kasargod in Afghanistan was reported. Shaheer, a civil engineering graduate from NIT in Kozhikode, was one of the first in this group to leave the country.

Prior to this, there were reports on the death of another Keralite, Bestin Vincent aka Yahiya, who was part of this group.

Murshid and Hafeesudheen from Padne in Kasargod, were also killed this year.

The Al Qaeda link

In April this year, Abu Tahir, a native of Palakkad who had gone missing in 2013 and had joined the terror outfit Al-Qeada, was killed in Syria.

“The news cannot be fully authenticated. This is all based on reports and messaged received by family circles,” a senior Kerala Intelligence official said.

Source: The News Minute

ஆட்சித் தலைமையை சிறைக்கு அன்று குன்ஹா அனுப்பினார்; இன்று குட்கா அனுப்பும்: ஸ்டாலின்!

MK Stalin warns BJP - 2026

காஞ்சிபுரம்:

ஆட்சித் தலைமையை அன்று குன்ஹா சிறைக்கு அனுப்பி வைத்தார், இன்று குட்கா அனுப்பி வைக்கப் போகிறது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.  காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மண்ணிவாக்கத்தை அடுத்த கரசங்கால் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டுப் பேசினார்.

அப்போது அவர்,  தமிழகத்தில் நடைபெறுவதை ஆட்சியாகக் கருதவில்லை, காட்சிப் பொருளாக தான் கருதுகிறோம். ஜெயலலிதா மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது அல்ல. குதிரை பேர ஆட்சி. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையே 1.1 சதவீதம் வாக்குகள்தான் வித்தியாசம். தி.மு.க. ஆட்சியில் இல்லை என்றாலும் மக்கள் பிரச்னைகளை கவனித்து வருகிறது. மக்களோடு சேர்ந்து போராடுகிறது. ஏரி, குளங்களை அரசு தான் தூர்வார வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியான தி.மு.க. அதை செய்து வருகிறது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படங்களை நாம் முறையாக வெளியிட்டு வருகிறோம். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவர்களின் சிகிச்சை முறைகள் குறித்து தினமும் மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. ஓ.பன்னீர்செல்வம் பதவி பறிக்கப்பட்ட பிறகுதான் ஜெயலலிதா இறப்பு குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கூறுகிறார். இந்த ஆட்சியின் தலைமையை அன்று குன்கா சிறைக்கு அனுப்பினார். ஆனால் தற்போது குட்கா இந்த ஆட்சியை ஜெயிலுக்கு அனுப்பிவைக்கப்போகிறது. டி.ஜி.பி. மீது இதுவரை லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தது இல்லை. தற்போது முதல் முறையாக வந்துள்ளது. ஆட்சியை நாங்கள் கவிழ்க்க தேவை இல்லை. அ.தி.மு.க.வினரே ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தானாகவே இந்த ஆட்சி கவிழும் என்று பேசினார்.

“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? “-பெரியவா

10482143 599228513527816 46027082804070919 n - 2026

“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே?
பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன்.
இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா

(மலைப்பாதை படிகள் வழியே பெரியவாளை அழைத்து
சென்ற வித்யார்த்தி “படி படி’ என்று எச்சரிக்கை விட்டுண்டே
போனபோது-பெரியவா சொன்னது மேலே)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (179)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஏழுமலையான் சந்நிதியை நோக்கி நடைப்பயணம்
மலைப்பாதை வழியாக -பெரியவாள்.

கண்பார்வை மங்கியிருந்தது.

சமவெளியாக இருந்தால்,கால்களை நீட்டி வைத்துப்
போய்விடலாம்.ஆனால், இங்கே பாதையே படிகளால்
ஆனது.தொண்டர் வித்யார்த்தி நாராயணன் என்பவர்,
மகாப் பெரியவாளைக் கையை பிடித்து அழைத்துச்
செல்வது போல்,மிக அருகிலிருந்தபடி,’படி,படி’ என்று
உரத்த குரலில் சொல்லிக் கொண்டே வந்தார்.பெரியவாள்
கவனமாக காலை உயரத் தூக்கி மேலேயிருந்த படியில்
வைத்து நடந்து கொண்டிருந்தார்கள்.

வித்யார்த்தியின் குரல், மலைகளில்,’படி,படி’ என்று
எதிரொலித்தது.பெரியவாள் ஒரு படியில் நின்றுவிட்டார்கள்.

“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே?
பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன்.
இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா

வித்யார்த்தி நடுங்கிப் போய் விட்டான்.

“பெரியவா மன்னிக்கணும். பெரியவா சரஸ்வதி ஸ்வரூபம்..”
அவசரப்பட்டு விட்டவனைப் போல உடைந்த குரலில்
கெஞ்சினான், வித்யார்த்தி.

“அப்போ…நான் இன்னும் பிரம்மஸ்வரூபம் ஆகலே..
என்கிறாயா?”

வித்யார்த்திக்குத் தொண்டையை அடைத்துக்கொண்டது.

பெரியவாள் லிமிட்டைத் தாண்ட மாட்டார்கள்.

“இனிமேல், படி வந்தால், “கோவிந்தா…கோவிந்தா..ன்னு
சொல்லு…புண்ணியமாவது கிடைக்கும்.

குன்றுகள் வித்யார்த்தியின் குரலை எதிரொலித்தன.
காற்றின் ஒவ்வொரு வீச்சிலும் ‘கோவிந்தா’க்கள்.

பெரியவாள் ஓர் இளஞரைப் போல, வேகமாகப்
படிகளில் ஏறினார்கள்.

கண் சிகிச்சையால் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் ஆஜர்; சட்டசபையில் ஆப்செண்ட்!

Stalin-DMK

சென்னை:
தி.மு.க செயல் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மு.க.ஸ்டாலினுக்குக் கடந்த சில தினங்களாகக் கண்ணில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கண்ணில் புரை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின், கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வந்தார். இங்கு அவருக்கு மதியம் 12.30 மணி வரை சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்ணில் சில இடர்ப்பாடுகள் இருந்ததாகவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் முழு நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.

கண் சிகிச்சை காரணமாக அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இதனால் சட்டசபையில் குட்கா, பான்மசாலா தொடர்பான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

குலமகளைத் தேடி கழியும் காலம்!

kukaiyur

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.. குறைகூறும் அதிமேதாவிதனமும் இல்லை ..அறிவுரைகூறும் அளவிற்கு பெரியவனும்நான் இல்லை..அனைவரும் அறிவுஜீவியே..இருப்பினும் உண்மைநிலையை பகிரங்கமாக தெரியபடுத்தி மாற்ற முயற்ச்சித்துதானே ஆகவேண்டும் ..இப்பதிவால் என்மீது நமது சக சொந்தங்களால் கடுமையாக விமர்சனங்கள் வைக்கபடும்.தெரிந்தே எழுதுகிறேன். விமர்சனங்களை ஏற்க்க தயார்..

இன்று காலை எங்கள் நடக்கவே சிரமபட்டுகொண்டு வயதான அய்யங்கார் மாமி வந்தார்.யார் என தெங்களுக்கு தெரியவில்லை இருப்பினும் உள்ளே அழைத்து காபி கொடுத்து நீங்கள் யார் எண்ணவேண்டும் எனதுபெற்றோர் விசாரித்துகொண்டிருந்தனர்.அந்த வயதானமாமி விஷயத்தை சொல்லகூட முடியவில்லை கண்ணீர்பெருக்கெடுத்துஓடியது .. தாங்கள் அய்யங்கார் என்றும் தனக்கு வயது 65 என்றும் கணவருக்கு வயது 75 என்றும் தங்களுக்கு ஒரேமகன் 40 வயது என்றும் தனது மகன் பள்ளிபடிப்பே முடித்துள்ளதாகவும் கிராமத்தில் வைதீகம் பார்ப்பதாகவும் தங்களுக்கு வயதாகிவிட்டது வீட்டுவேலைசெய்ய சமைக்ககூடமுடியவில்லை. எங்களது மகனுக்கு பத்துவருடமாக பெண்தேடுகிறோம். மேட்ரிமோனியல் புரோக்கர் என்று இதுவரை ஒருலட்சம் வரைசெலவுசெய்துள்ளதாகவும், காசு பிடுங்குகிறார்களே தவிற ஒருவரனும் வரவில்லை. சுயம்வரம் ஜாதகபரிவர்த்தனை என்று கேள்விபட்டால் தமிழ்நாட்டில் எங்குநடந்தாலும் மகனையும் வயதான கணவரையும் அழைத்துகொண்டு சென்றுவிடுவேன் என்றும், எல்லாமேட்டிமோனியலும் பணபறிக்கிறார்கள் தவிற வரன்கிடைக்கவில்லையென்றும்,நம் வீட்டுபெண்களும், பெற்றோர்களும்,ஜயர் ,ஜயங்கார், மாத்வா உட்பிரிவு பார்ப்பதாகவும், பெண்களும் பெற்றோர்களும், மாப்பிள்ளை, BE, ME. MBBS, படித்திருக்கவேண்டும்,மிகவும் அழகாக இருக்கவேண்டும், வெளிநாட்டில் பணிபுரியவேண்டும், உள்ளூர் என்றால் IT யில் 50000 -முதல் 100000 -ஊதியம்வேண்டும் என்கிறார்கள் .பெற்றோர்களே மகளை இதுபோன்று ஊக்குவிக்கிறார்கள் .

மாப்பிளைவீட்டு குடும்பம் நல்லகுடும்பமா, கெட்டபழக்கங்கள் இல்லாத நல்ல மாப்பிள்ளையா , ஆசாரஅனுஷ்டானமான, போதிய வருமானமுள்ள மாப்பிள்ளைகளுக்கு( வைதீகம் புரோகிதம் அர்ச்சகர்) பெண்களை கொடுப்பதில்லை. மாற்று ஜாதியில் மாற்றுமததில் காதல் என்ற பெயரில் ஓடுவதற்கு வழிவகுப்பது பெற்றோர்கள் என்றார். உட்பிரிவு சம்மதம் கூனோ குருடோ விதவையோ பிராமிண்பெண்இருந்தால் கூறுங்கள் என்றார். எங்கெல்லாம் அக்ரஹாரம் மற்றும் பிராமிண் உள்ளார்களோ சுற்றுவட்டாரத்தில் 100 கிலோமீட்டருக்கு உள்ளதோ அங்கே விசாரித்து வீடுதேடி சென்று வரன்விசாரித்து வருவதாகவும் அதுபோல் உங்கள்ஊரில் அக்ரஹாரம் இருப்பதாகவும் பிராம்மணவீடு இருப்பதாகவும் கூறியதால் வந்தேன் என்றார். தனது மகனுக்கு பெண் கிடைக்கவில்லையே என்று கண்ணீர்விடாத அழுதுபுழம்பாத இறைவனிடம் வேண்டாத நாள் இல்லை என்றும்,. தனது
நிலையறிந்து விரக்தியில் தன்தாயிடாம் அம்மா வயதான காலத்தில் நீ ஊர் ஊராக வரன்தேடி போகாதே.. நாம் பிராம்மணகுலத்தில் பிறந்ததால் நமக்கு இந்த சாபம்.. எனக்கு திருமணம் ஆகாது.பெண் பார்க்கவேண்டாம். இருக்கும்வரை சந்தோசமாக இருந்துவிட்டது மூவரும் தற்கொலைபண்ணி இறந்துவிடலாம் என்றுகூறுவதாகவும் அந்த தாய்கூறினார்.எங்கள் வாம்சம் அழிந்துவிடகூடாது அதனால் நாம்மவா பெண் கிடைக்காவிடினும் பரவாயில்லை.நாங்கள் இறப்பதள்குள் எனது மகனுக்கு திருமணம் செய்துவைத்து கண்குளிர பார்க்கவேண்டும்.இந்த நிலை எந்த பிராம்மணருக்கும் வரகூடாது என்றார். என் மகனுக்கு அசைவம் சாப்பிடாத சைவ செட்டியார்,சைவ வெள்ளாளர் வீட்டு பெண் இருந்தால் சொல்லுங்கள் என்று அவர்கண்ணீர் வடித்து கூறியபோது நமது பிராம்மண சமுதாய அழிவிற்கு பிரச்சனைகளுக்கு நமது சமுதாய எதிரிகளைவிட நமது சமுதாய மக்களே நமது சமுதாய அழிவிற்கு ஒரு காரணம் என்றே உணர்கிறேன் .

பிராம்மணகுலத்தில் பிறந்ததால் ஆண்பிள்ளையை பெற்றதால் கண்ணீர்விட்டு கதறும் அந்த தாயை பார்க்கும்போது என்னால் வேதனையை துக்கத்தை நமது சமுதாய பெண்பிள்ளை பெற்ற சில பெற்றோர்களின் செயலை நினைக்கும்போது கோபம் கொப்பளிக்கிறது..

பெண்பிள்ளை பெற்ற பெற்றோர்களே, பிராம்மண சமுதாயம் அழிந்து கொண்டு வருவது தங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா..நமது பெண்களுக்கு ஆசார அனுஷ்டடானத்தை நமது குலபெருமையை சொல்லிகொடுங்கள். உறவினர்களோடு பழக உறவினர்கள் இல்ல விசேசத்திற்கு செல்லும்போது உடன் அழைத்து செல்லுங்கள். நமது கலாசாரம் பண்பாட்டை பார்க்கும்போதும் உறவினர்களோடு பழகும்போது நமது சமுதாயம் பழக்கவழக்கங்கள் ஆசார அனுஷ்டானங்கள் தெரிந்துகொள்ள உறவினர்களோடு அன்போடுபழக நம்வீட்டு பெண்கள் பாதைமாறி போய்விடாமல் நல்லவிசயங்களை கற்றுகொள்ளும் வாய்ப்புகிடைக்கும்.

மாப்பிளை பார்க்கும்போது நல்ல குடும்பமா, ஓரலவேனும் ஆசார அனுஷ்டானம் உள்ள குடும்பமா, மாப்பிள்ளை நல்ல பையனா, தீய பழக்க வழக்கங்கள் இல்லாத பையனா, குடும்த்தை அன்போடு மகிழ்ச்சியோடு நடத்தகூடிய வருமானம் உள்ளவனா என்றுபாருங்கள் . வைதீகம் அர்ச்சகர் புரோகிதர் கிராமம் என்று ஒதுக்கி சமுதாயஅழிவிற்கு காரணமாகி ஜென்ப பாபத்தை அனுபவிக்காதீர்கள்.உங்களின் செயல்பாட்டால் குணத்தால் பெண்களை சுதந்திரம் அதிகம்கொடுத்து மற்ற சமுதாய மத நபர்களிடம் பழக சுதந்த
திரம் கொடுப்பதும் முதலில் நட்பு பிரண்ட்ஸ் என்ற பெயரில் வீட்டிற்கு வருவதை பெண்கள் அங்கு செல்வதை அனுமதிப்பதும் அவரேகளுக்கு வசதியாகபோய்விடுகிறது.பெற்றோருக்கு சில விசயங்கள் ஆரம்பத்தில் தெரியும்போதே கண்டிக்கவேண்டும். எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .சிலகும்பல் பிராம்மணவீட்டு பெண்களை திட்டமிட்டு காதல்என்ற பெயரில் திட்டமிட்ட போலிநாடககாதல் செய்து நம்பெண்களின் மனதைமாற்றி வசியம்செய்து ஏமாற்றி மிரட்டி திருமணம்செய்கின்றனர்.இந்நிலை மாறவேண்டும் நமது சமுதாய பெண்களே பெண்ணை பெற்ற பெற்றோர்களே தயவுசெய்து நமது சமுதாய அழிவிற்கு நீங்கள் காரணமாகிவிடாதீர்கள்.

எனக்கு வரகூடிய பெரும்பாலான தொலைபேசி அழைப்புகள என்னிடம் பேசகூடிய. நமது சமுதாய பெற்றோர்கள் இளைஞர்கள் JP. என் பையனுக்கு வரன்சொல்லுங்க வரனைகிடைக்கலை எனக்கு முதல்ல திருமணத்திற்கு பெண்இருந்தா சொல்லுங்க ஜாதகபரிவர்த்தனை புரோக்கர்னு காசைபுடுங்கறதுதான் மிச்சம்.ஜாதி ஜாதின்னு சொல்ரீங்க நம்ம ஜாதிகாரனை முதல்ல நம்ம ஜாதிகாரனுக்கு பிரிவினைபார்க்காம பொன்னுதர சொல்லுங்க அண்ணே அப்புறம் நீங்க. எதிரிகளை எதிர்த்து போராடலாம் துரோகிகளை திருத்துங்க ஜாதியே இல்லாம போயிட்டுஇருக்கு முதல்ல இதுமாறினாலே நம்ம சமுதாயம் வளர்ச்சிபெறும் என்கிறார்கள்.முதல்ல இந்த உண்மையை தயங்காம யோசிக்காம எழுதுங்க அண்ணா என்கின்றனர். உண்மை பிரச்சனை இதுதான் என்று தெரிந்தும் எதிர்ப்புகளுக்காக உண்மையை கூறாமல் இருப்பது சரியில்ல. இந்த பிரச்சனை எனது குடும்பம் உறவினர்கள் குடும்பம் நமது சமுதாய மக்கள் அனைவரும் அனுபவித்த அனுபவிக்கும் பிரச்சனை. ஒற்றுமைன்னு ஒன்றுபடுத்துறேன்னு சொல்லிட்டு பிராம்மண சமுதாய கட்சி தலைவர் சக பிராம்மணர்களை பொதுதளத்தில் குற்றம்சாட்டலமா என்ற விமர்சனத்தை பற்றி கவலையில்லை.இதை பார்த்து உணர்ந்து ஒருசிலர் மாறினாலே சந்தோசம்தான் எனக்கு..

நமது சமுதாய இளைஞர்கள் நல்ல படிச்ச பட்டதாரி இளைஞர்கள் போன்பன்னி அண்ணா எனக்கு வேலை இருந்தா சொல்லுங்க உங்கள் பதிவுல நிறைய நம்மாளுங்க ஐசப்போர்ட் உதவுறோம் அப்படி இப்படின்னு போடுறாங்க எல்லாருமே VIPயா இருக்காங்க நம்ம சமுதாய பெரியவர்கள் தனியார் நிறுவனத்தில் உயர்அதிகாரியா இருப்பது 75./. நம்மாளுங்கதான்.ஆனால் உதவின்னுகேட்டா செய்யவிதில்லை. வேலைக்குரெகமண்டபண்ணமாட்ராங்க நாம அரசை எதிர்பார்க்ககூடவேண்டியதில்லை. சக பிராம்மணன் சக பிராம்மணருக்கு உதவினா ..சக பிராம்மணன்,சகபிராம்மணனை ஏழை,பணக்காரன், உட்பிரிவு பாகுபாடு பார்க்காமல் மதிச்சா..உதவினா..நம் சமுதாயத்திற்கு ஏன் இந்த நிலைமை.ஆயிரம் பிராம்மண விரோதிகள் வந்தாலும் நம் இனத்தை அழிக்கமுடியாது(பிராம்மண சொந்தங்களே உடனே சண்டைக்குவராதீங்க சிலர் உதவலாம் பலர் உதவுவதில்லை) இதுவே உண்மையென எனது கருத்து நீங்கள் பேசுவது தவறு எவ்வாறு இப்படிகுற்றசாட்டலாம் என எவ்வளவு பேசினாலும் இதுவே உண்மைநிலை மாறவேண்டும் என்பதே என்கருத்து.நாங்களும் மனிதன்தானே எங்களுக்கும் ஆசை பாசம் உணர்வு இருக்காதா இல்லறம் திருமணம் என்பிராம்மண சமுதாய இளைஞர்களுக்கு கனவோடு சரியா!! இறைவா என் சமுதாயத்திற்கு இத்துனை கஷ்டங்கள்.ஒரு பக்கம் அரசு அரசியல்வாதிகள் உரிமை சலுகைகளை பறித்ததோடு இல்லாமல் பிராம்மண சமுதாயத்தை அழிக்க திட்டமிட்டசதி கேளி கிண்டல் தாக்குதல் .உரிமை சலுகை மறுக்கபட்டு பாதுகாப்பற்ற சூழலில் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தமிழக பிராம்மணர்கள்.

பிராம்மணவிரோத கும்பல் பிராம்மண பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி வசியம்செய்து மிரட்டி நாடக காதல்செய்து பிராம்மண பெண்களை அபகரித்துவருகிறார்கள்.ஒரு பக்கம் சக பிராம்மணர்களே பெண்தராமல் ஆயிரம்குறைகூறி பிராம்மண இளைஞர்களின் குடும்பவாழ்க்கையை சீரழித்துவருகிறார்கள்.

என் பிராம்மண சமுதாய இளைஞர்கள் திருமணத்திற்கு பெண்கிடைக்காமல் தங்களது இல்லற வாழ்க்கை திருமண வாழ்க்கை கிடைக்காமல் லட்சகணக்கானபிராம்மண இளைஞர்கள் வாழ்க்கை சீரழிந்து வருகிறது.தனக்கு திருமணம் ஆகவில்லையே தனது மகனுக்கு பெண்கிடைக்கவில்லையே என்று பெற்றோரும் .தனது சகோதரனுக்கு பெண்கிடைக்கவில்லையே என்று சகோதர சகோதரிகளும். இறைவனிடம் வேண்டி கண்ணீர்விட்டு அழுகின்ற நிலை பார்க்கின்றபோது நம்இனம் விருத்திஆகாமல், வளர்ச்சிஅடையாமல்,இனம் அழிவைநோக்கி சென்று கொண்டுள்ளதே , அதனை தடுக்க இயலாத பிராம்மணணாய் உள்ளோமோ, என்கிற வேதனை துக்கம் ,ஏக்கம் ஆதங்கம் கோபம் கண்ணீராய் பெருக்கெடுத்து ஓடுகிறது

ராஜாளி. சீ .ஜெயபிரகாஷ்
வழக்கறிஞர் .
நிறுவனர் -தலைவர் .
அந்தணர் முன்னேற்ற கழகம்.9842044227.